Jump to content

ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா..? பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்..

Ranil-4.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும்.

இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதுபெரும் பாக்கியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது  கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்கிரமசிங்க தற்போது வழங்கியுள்ளார்

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/14847

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும்.

 எந்த பதவிக்கு போட்டியிடுகிறார் ? வெற்றிடம் இல்லாத ஐ  நா பொதுச் செயலாளர் பதவிக்கா ?
இன்றைய ஐ  நா பொதுச் செயலாளர் பதவி முடிய இன்னும் 3 வருடங்கள் உண்டு. அப்படியானால் 2021ல் தான் பெயர்கள் முன்மொழியப்படும் . அதோடு இன்றைய ஐ  நா பொதுச் செயலாளரின் முதல் பதிவிக்கலாம் இது. வழமையாக அவர்கள் 2 பதிவிக்காலம் வழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா.வே வாயால வடை சுடுது இதுக்கு இஅணில் இருந்தால் என்ன இல்லாட்டால் என்ன ஐ. நா வல்லரசுகளின் கதைக்கு சோப்பு தடவ மட்டுமே லாயக்கு  

Link to comment
Share on other sites

பாவம் அந்த மனுஷன். அவரை ஏச வேண்டாம். இங்கேதான் ஒழுங்கா அவருடைய பதவிக்காலத்தை முடிக்க விடையில்லை. எங்கேயாவது மனுஷன் போய் அதிலயாவது பதவிக்காலத்தை முடிக்கட்டும். அவருடைய கனவை கலைத்து விட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த un  பதவியானாலும்,, இந்த செய்தியை, தனிமைப்பட்டு, ரணிலுக்கு மட்டுமே உரித்தான செய்தியாக நோக்கப்படக்கூடாது.

ரணிலும், மங்கள சமரவீரவும் தமது வரலாற்றுக் கடமைகளை, சிங்கள அரசுக்கு, ஆகக்  குறைந்தது 42 பெயர்களை ஆகக்  குறைந்தது போர்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை UNHRC பிரகடனம் செய்வதை தடுத்ததுடன்,  அதற்கான விசநரணையை உள்நாட்டுக்கு கொண்டவந்து விட்டதன் மூலம் ஆற்றி உள்ளனர்.

இந்த திட்டபப்டி, இப்பொது அந்த 42 நபர்களும், கோத்தாவின் அதிர் பதவி உடன் அரசாங்கத்திற்குள் வந்த விட்டார்கள்.

கோத்தாவை கைது செய்வதற்கு, எத்தனையோ சட்ட இடை வெளிகள், வாய்ப்புக்கள் இருந்தும், john  kerry (us vice president) நேரடியாக ரணிலுக்கு உதவி செய்வதற்கு முனைப்புடன் இருந்தும்,   ரணில் அதை செய்யவில்லை. 

கோத்தாவும், ரணிலின் இந்த கடனை தீர்ப்பதற்கு, பாராளுமன்ரத்தை  கலைத்து, அடுத்த நாள் தொடங்கவிருந்த பிணைமுறி ஊழல் பற்றிய பாராளுமன்றக் குழுவின்     விசாரணையை நிறுத்தியதுடன், அந்த குழு கலைக்கப்பட்டது. இந்த பாராளுமன்ற குழு 2007 இல் இருந்து நடந்த ஊழல்களை விசாரிப்பதற்கு ஆணை கொண்டது.

கோத்த, இனி 19ம் சட்டத்தை நீக்கி, ரஃஜபக்ச குடும்பம் நீண்ட கால ஆட்சியில் இருபதற்கு வலி சமைப்பார்.  

ரணில் இந்த பதவி மூலம், சொறி சிங்களத்துக்கு un இல் என்ன நடைபெறுகிறது, மற்றும் செல்வாக்கை கட்டி எழுப்புதல் மூலம், unhrc in சொறி சிங்களத்துக்கான நிகழ்ச்சி நிரலை குறைபாடு, குலைப்பது, மற்றும் நீர்த்து போகச் செய்யும் முயற்சிக்கு உகந்த பதவி, US dollar வருமானத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

போகத்துக்கு போகம் இனப்படு கொலை........ஒரு நாட்டுக்குள் வாழும் மக்களுக்குள் சம் உரிமை இல்லை.....மொழிக்கு சம உரிமை இல்லை.....திட்டமிட்டு நடத்தப்பட்ட 2009 போர்க்குற்றங்கள்.....சொந்த நாட்டுக்குள் அகதிகள்.....

இப்படிப்பட்ட ஒரு நாட்டிலிருந்து ஒருவர் ஐநா சபைக்கு செயலாளரா?
 அல்லது 
அவ்வாறான செயல்கள்தான் தகுதிகளா?

Link to comment
Share on other sites

7 hours ago, puthalvan said:

எந்த பதவிக்கு போட்டியிடுகிறார் ? வெற்றிடம் இல்லாத ஐ  நா பொதுச் செயலாளர் பதவிக்கா ?
இன்றைய ஐ  நா பொதுச் செயலாளர் பதவி முடிய இன்னும் 3 வருடங்கள் உண்டு. அப்படியானால் 2021ல் தான் பெயர்கள் முன்மொழியப்படும் . அதோடு இன்றைய ஐ  நா பொதுச் செயலாளரின் முதல் பதிவிக்கலாம் இது. வழமையாக அவர்கள் 2 பதிவிக்காலம் வழங்குவார்கள்.

இது பொய்செய்தியாக இருக்கலாம். ஆனாலும், இதில் சிங்களவருக்கு அரசியல் இலாபங்கள் உண்டு சஜித்தை பிரச்சனைகள் அற்ற ஐ.தே.க. வாக்கலாம்.  கடஞ்சா கூறுவது வருங்காலத்தில் ஒரு இராதிகா குமாரசாமி போன்று ஒரு சிங்கள உளவாளி இருப்பார், தமிழர் தரப்பை பலமிழக்க செய்வதற்கு 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.