Jump to content

ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா..? பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்..

Ranil-4.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும்.

இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதுபெரும் பாக்கியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது  கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்கிரமசிங்க தற்போது வழங்கியுள்ளார்

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/14847

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும்.

 எந்த பதவிக்கு போட்டியிடுகிறார் ? வெற்றிடம் இல்லாத ஐ  நா பொதுச் செயலாளர் பதவிக்கா ?
இன்றைய ஐ  நா பொதுச் செயலாளர் பதவி முடிய இன்னும் 3 வருடங்கள் உண்டு. அப்படியானால் 2021ல் தான் பெயர்கள் முன்மொழியப்படும் . அதோடு இன்றைய ஐ  நா பொதுச் செயலாளரின் முதல் பதிவிக்கலாம் இது. வழமையாக அவர்கள் 2 பதிவிக்காலம் வழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா.வே வாயால வடை சுடுது இதுக்கு இஅணில் இருந்தால் என்ன இல்லாட்டால் என்ன ஐ. நா வல்லரசுகளின் கதைக்கு சோப்பு தடவ மட்டுமே லாயக்கு  

Link to comment
Share on other sites

பாவம் அந்த மனுஷன். அவரை ஏச வேண்டாம். இங்கேதான் ஒழுங்கா அவருடைய பதவிக்காலத்தை முடிக்க விடையில்லை. எங்கேயாவது மனுஷன் போய் அதிலயாவது பதவிக்காலத்தை முடிக்கட்டும். அவருடைய கனவை கலைத்து விட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த un  பதவியானாலும்,, இந்த செய்தியை, தனிமைப்பட்டு, ரணிலுக்கு மட்டுமே உரித்தான செய்தியாக நோக்கப்படக்கூடாது.

ரணிலும், மங்கள சமரவீரவும் தமது வரலாற்றுக் கடமைகளை, சிங்கள அரசுக்கு, ஆகக்  குறைந்தது 42 பெயர்களை ஆகக்  குறைந்தது போர்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை UNHRC பிரகடனம் செய்வதை தடுத்ததுடன்,  அதற்கான விசநரணையை உள்நாட்டுக்கு கொண்டவந்து விட்டதன் மூலம் ஆற்றி உள்ளனர்.

இந்த திட்டபப்டி, இப்பொது அந்த 42 நபர்களும், கோத்தாவின் அதிர் பதவி உடன் அரசாங்கத்திற்குள் வந்த விட்டார்கள்.

கோத்தாவை கைது செய்வதற்கு, எத்தனையோ சட்ட இடை வெளிகள், வாய்ப்புக்கள் இருந்தும், john  kerry (us vice president) நேரடியாக ரணிலுக்கு உதவி செய்வதற்கு முனைப்புடன் இருந்தும்,   ரணில் அதை செய்யவில்லை. 

கோத்தாவும், ரணிலின் இந்த கடனை தீர்ப்பதற்கு, பாராளுமன்ரத்தை  கலைத்து, அடுத்த நாள் தொடங்கவிருந்த பிணைமுறி ஊழல் பற்றிய பாராளுமன்றக் குழுவின்     விசாரணையை நிறுத்தியதுடன், அந்த குழு கலைக்கப்பட்டது. இந்த பாராளுமன்ற குழு 2007 இல் இருந்து நடந்த ஊழல்களை விசாரிப்பதற்கு ஆணை கொண்டது.

கோத்த, இனி 19ம் சட்டத்தை நீக்கி, ரஃஜபக்ச குடும்பம் நீண்ட கால ஆட்சியில் இருபதற்கு வலி சமைப்பார்.  

ரணில் இந்த பதவி மூலம், சொறி சிங்களத்துக்கு un இல் என்ன நடைபெறுகிறது, மற்றும் செல்வாக்கை கட்டி எழுப்புதல் மூலம், unhrc in சொறி சிங்களத்துக்கான நிகழ்ச்சி நிரலை குறைபாடு, குலைப்பது, மற்றும் நீர்த்து போகச் செய்யும் முயற்சிக்கு உகந்த பதவி, US dollar வருமானத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

போகத்துக்கு போகம் இனப்படு கொலை........ஒரு நாட்டுக்குள் வாழும் மக்களுக்குள் சம் உரிமை இல்லை.....மொழிக்கு சம உரிமை இல்லை.....திட்டமிட்டு நடத்தப்பட்ட 2009 போர்க்குற்றங்கள்.....சொந்த நாட்டுக்குள் அகதிகள்.....

இப்படிப்பட்ட ஒரு நாட்டிலிருந்து ஒருவர் ஐநா சபைக்கு செயலாளரா?
 அல்லது 
அவ்வாறான செயல்கள்தான் தகுதிகளா?

Link to comment
Share on other sites

7 hours ago, puthalvan said:

எந்த பதவிக்கு போட்டியிடுகிறார் ? வெற்றிடம் இல்லாத ஐ  நா பொதுச் செயலாளர் பதவிக்கா ?
இன்றைய ஐ  நா பொதுச் செயலாளர் பதவி முடிய இன்னும் 3 வருடங்கள் உண்டு. அப்படியானால் 2021ல் தான் பெயர்கள் முன்மொழியப்படும் . அதோடு இன்றைய ஐ  நா பொதுச் செயலாளரின் முதல் பதிவிக்கலாம் இது. வழமையாக அவர்கள் 2 பதிவிக்காலம் வழங்குவார்கள்.

இது பொய்செய்தியாக இருக்கலாம். ஆனாலும், இதில் சிங்களவருக்கு அரசியல் இலாபங்கள் உண்டு சஜித்தை பிரச்சனைகள் அற்ற ஐ.தே.க. வாக்கலாம்.  கடஞ்சா கூறுவது வருங்காலத்தில் ஒரு இராதிகா குமாரசாமி போன்று ஒரு சிங்கள உளவாளி இருப்பார், தமிழர் தரப்பை பலமிழக்க செய்வதற்கு 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.