Jump to content

அரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்


Recommended Posts

(நா.தனுஜா)

நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பின் பிர­காரம், நான்கில் ஒரு­ப­கு­தி­யினர் அரச சேவையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்கும் அதே­வேளை அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வைகள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்­படும் நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

virakesari.jpg

இலங்­கையின் 9 மாகா­ணங்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 18–80 வயது வரை­யான 1300 பிர­ஜை­க­ளிடம் ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்­பினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இலஞ்சம், ஊழல் அனு­பவம் தொடர்­பான கருத்­துக்­க­ணிப்பு தொடர்­பான இறுதி அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அது­கு­றித்துத் தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அந்த சந்­திப்பின் போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,

ஊழல் கார­ண­மாக தனி­நபர் ஒரு­வரின் வாழ்க்கை எவ்­வாறு பாதிப்­ப­டை­கின்­றது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­துடன், தேசிய மட்­டத்தில் ஊழலை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து பொது­மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தையும் நோக்­காகக் கொண்டே இலஞ்சம் ஊழல் அனு­பவம் தொடர்பில் மக்கள் மத்­தியில் இக்­க­ருத்­துக்­க­ணிப்பு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில் நாட்­டு­மக்கள் நீதித்­துறை, அர­சாங்கம் மற்றும் பொலிஸ் ஆகி­ய­வற்றில் எந்தக் கட்­ட­மைப்பைப் பெரிதும் நம்­பு­கின்­றார்கள் என்ற கேள்­விக்கு கருத்­துக்­க­ணிப்பு முடி­வு­களின் பிர­காரம் 73 சத­வீ­த­மானோர் நீதி­மன்­றத்தின் மீது பெரிதும் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­துடன், அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை 47 சத­வீ­த­மா­கவும், பொலிஸார் மீதான நம்­பிக்கை 57 சத­வீ­த­மா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது.

அதே­வேளை இக்­க­ருத்­துக் ­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் நான்கில் ஒரு­ப­குதி மக்கள், தாம் அர­ச­சே­வையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனினும் அவர்­களில் மூன்­றி­லொரு பிரி­வினர் இவ்­வாறு இலஞ்சம் வழங்­கு­வது ஏற்­பு­டை­ய­தல்ல என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

நாட்டின் 9 மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­ பட்ட கருத்­துக்­க­ணிப்பில் பதி­ல­ளித்­த­வர்­களில் அரைப்­பங்­கினர் ஊழல் மற்றும் இலஞ்­சத்தின் ஒரு வடி­வ­மாக பாலியல் இலஞ்­சமும் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்­ளனர். அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வை கள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி ­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்­ப­டு­கின்­றது. பாலியல் இலஞ் சம் கோரப்­படும் நிலை­மை­யா­னது கிரா­மப்­பு­றங்­களை விடவும் நகர்ப்­பு­றங்­களில் அதி­க­மாக உள்­ள­போ­திலும் அதனால் தோட்­டப்­புற மக்­களே இல­குவில் பாதிப்­ப­டையக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர் என்று கருத்­ துக்­க­ணிப்பு முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள் ­ளன. மேலும் இக்­க­ருத்­துக்­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 86 சத­வீ­மானோர் இலங்­கையில் இலஞ்சம், ஊழல் தொடர்­பான குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கென ஆணைக்­கு­ழு­வொன்று இயங்­கு­கின்­றது என்­பதை அறிந்­தி­ருக்­கின்ற போதிலும் 72 சத­வீ­த­மானோர் இக்­குற்­றங்கள் குறித்து முறை­யி­டக்­கூ­டிய பொறி­முறை பற்­றிய தெளி­வற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளனர்.

இந்­நி­லையில் இக்­க­ருத்­துக்­க­ணிப்பு முடி­வு கள் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அரசு மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய தேவை ­யொன்­றையும் அதற்­கான சந்தர்ப்பத்­தை யும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது என்று நேற்­றைய தினம் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர சுட்டிக்காட் டினார். 

அதேவேளை அரசாங்கமும் பொலிஸா ரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற் படுத்தக்கூடிய விதமாக செயற்பட வேண் டும் என்று வலியுறுத்திய அவர், பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலை யையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதன் செயற்பாடு களை விரைவுபடுத்த வேண்டியதன் அவ சியத்தையும் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/70772

Link to comment
Share on other sites

இது காலா காலமாக நடக்குது. பொதுவாக உயர் பதவி வகிப்பவர்கள் இதை இலகுவாக பெற்றுக்கொள்ளுவார்கள். நல்ல ஒழுக்கமானவர்களும் இல்லாமலில்லை. இப்படியான ஊழல்களை மக்கள் இலகுவில் வெளிப்படுத்தமாடடார்கள். இதனால் இந்த ஊழலை செய்பவர்கள் இதை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். மக்கள் விழிப்படையமட்டும் இதை ஒழிப்பது சிரமம்.

Link to comment
Share on other sites

பாலியல் இலஞ்சம் கோரிய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

யுவதியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் நுகேகொடை பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் குறித்த யுவதி முறைப்பாடு செய்துள்ள நிலையில், அவருக்கு சாதகமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து இவ்வாறு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த பொலிஸ் உயரதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பலயல-இலஞசம-கரய-பறபபதகர-இடநறததம/175-242323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

பாலியல் லஞ்சம் என்றால் என்ன? 😆

உங்களுக்கு எப்படியான விளக்கம் தந்தால் திருப்தியடைவீர்கள்?

அ) புகைப்படங்கள் மூலமாக..
ஆ) அசையும் படங்கள் மூலமாக....
இ) கட்டுரைகள் மூலமாக....
ஈ) செல்லிடப்பேசி மூலமாக....

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எப்படியான விளக்கம் தந்தால் திருப்தியடைவீர்கள்?

அ) புகைப்படங்கள் மூலமாக..
ஆ) அசையும் படங்கள் மூலமாக....
இ) கட்டுரைகள் மூலமாக....
ஈ) செல்லிடப்பேசி மூலமாக....

மேற்கூறிய அனைத்தும். 

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு எப்படியான விளக்கம் தந்தால் திருப்தியடைவீர்கள்?

அ) புகைப்படங்கள் மூலமாக..
ஆ) அசையும் படங்கள் மூலமாக....
இ) கட்டுரைகள் மூலமாக....
ஈ) செல்லிடப்பேசி மூலமாக....

இவை எதுவும் எனக்கு புரியாது. செய்து பார்த்தால் தான் எனக்கு புரியும் 😋.

வழி சொல்வீர்களா? 😎

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.