Jump to content

சுவிஸ்ஸுடன் இராஜதந்திர முறுகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சுவிட்­ஸர்­லாந்து தூதர­கத்தின் பெண் பணி­யாளர் ஒருவர் கடத்­தப்­பட்டு, அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம், அர­சியல் மற்றும் இரா­ஜ­தந்­திர மட்­டங்­களில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கின்­றது.

swiss__embassy.jpg

இந்த விவ­கா­ரத்தை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்­ளாமல், உயர்­மட்­டத்­துக்குக் கொண்டு சென்­றி­ருந்­தது சுவிட்­ஸர்­லாந்து.

அதே­போ­லவே, இந்த விவ­கா­ரத்தில் சிக்கிக் கொள்­ளாமல் – குற்­றச்­சாட்­டுகள் அத்­த­னையும் பொய் என்று நிரூ­பிப்­பதில் இலங்கை அர­சாங்­கமும் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.

மஹிந்த ராஜபக்ஷவின், 2005–-2014 ஆட்­சிக்­காலகட்­டத்தில் இடம்­பெற்ற மிக முக்­கி­ய­மான பல குற்­றச்­செ­யல்கள் தொடர்­பான புலன் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்த, குற்ற விசா­ரணைப் பிரிவு அதி­காரி நிசாந்த சில்வா, கடந்த 24ஆம் திகதி குடும்­பத்­துடன் நாட்டை விட்டு வெளி­யே­றி­யதை அடுத்து, தொடங்­கி­யி­ருக்­கி­றது இந்த சர்ச்சை நிசாந்த சில்வா சுவிட்­ஸர்­லாந்தின் சூரிச் நக­ருக்கே தப்பிச் சென்றார். அவ­ருக்கு அங்கு அர­சியல் தஞ்சம் அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

முக்­கி­ய­மான வழக்­குகள் தொடர்­பாக செய்த, புல­னாய்வு அறிக்­கைகள், தக­வல்­க­ளுடன் தான் அவர் சுவிஸ் சென்­றி­ருப்­ப­தாக கூறப்படு­கி­றது. அவர் நாட்டை விட்டு வெளி­யே­றி­ய­தாக அறிந்­த­வு­ட­னேயே ஜெனீ­வா­வுக்கு சென்­றி­ருக்­கலாம் என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு சந்­திப்பில் கூறி­யி­ருந்தார்.

அவ­ரது இந்தக் கருத்தில் இருந்தே, தனது அர­சாங்­கத்­துக்­கான தலை­வலி ஒன்று ஆரம்­பித்து விட்­டது என்­பதை அவர் உணர்ந்து கொண்­டி­ருக்­கிறார் என்­பது தெரிந்து விட்­டது.

அதற்கு முன்­ன­தாக, 11 இளை­ஞர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட வழக்கில், அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வர்த்­த­ன­வுக்கு எதி­ராக சாட்­சியம் அளித்த கடற்­படை அதி­காரி ஒரு­வ­ருக்கும் சுவிட்­ஸர்­லாந்து அர­சியல் தஞ்சம் அளித்­தி­ருந்­தது.

முத­லா­வது ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பான ஆதா­ரங்­களும், சாட்­சி­களும் நாட்­டுக்கு வெளியே ஒன்று திர­ளு­வது அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை ஆபத்­தா­னது.அதுவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்­வுகள் இடம்­பெறும் சுவிட்­ஸர்­லாந்து நாட்­டி­லேயே அவர்கள் அடைக்­கலம் பெறு­வது இன்னமும் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும்.

இதனால் தான், கொழும்பில் சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்தப்பட்டதாக சொல்­லப்­படும் சம்­பவம் குறித்து அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்­து­கி­றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி நண்பகல் தூத­ரக அதி­காரி அலுவலகத்திலிருந்து தனது பிள்ளையின் பாடசாலைக்கு சென்ற போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.உட­ன­டி­யாக இந்த விவ­காரம் குறித்து சுவிஸ் தூத­ரக அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­ற­தா­கவும் சுவிஸ் அதி­கா­ரிகள் தரப்பில் சொல்­லப்­ப­டு­கி­றது.

ஆனால், அடுத்த சில தினங்­களின் பின்­னரே, இந்த விவ­காரம் வெளிச்­சத்­துக்கு வந்­தது. அதுவும் நியூயோர்க் ரைம்ஸ் அந்தச் செய்­தியை வெளி­யிட்ட பின்னர் தான், அது­பற்றி கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் அமைச்சர் பந்­துல குண­வர்த்­த­ன­விடம் அது­பற்றி கேள்வி எழுப்­பப்­பட்ட போது, அர­சாங்­கத்­துக்கு இது­பற்றி எதுவும் தெரி­யாது என்று கூறி­யி­ருந்தார்.

சுவிஸ் தூத­ரக அதி­கா­ரிகள் முறை­யிட்­ட­வுடன், இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்தால், நிலை­மைகள் இந்­த­ள­வுக்கு சென்­றி­ருக்­காது என்றே தெரி­கி­றது,உட­ன­டி­யாக விசா­ர­ணை­களைத் தொடங்­காமல், இழுத்­த­டிக்க, சுவிஸ் தூத­ரக அதி­கா­ரிகள் இதனை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

கடத்­தப்­பட்ட பெண் பணி­யா­ளர் வாக­னத்­துக்குள் கண்கள், கைகள் கட்­டப்­பட்ட நிலையில், விசா­ரிக்­கப்­பட்­ட­தா­கவும், பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தா­கவும் சில தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.எனினும், பாதிக்­கப்­பட்ட பெண் இன்­னமும் தம்­மிடம் முறைப்­பாடு செய்­ய­வில்லை என்று கூறு­கி­றது அர­சாங்கம்.

அடுத்து, பாதிக்­கப்­பட்ட பெண் இது­வ­ரையில் வாக்­கு­மூலம் அளிக்க முன்­வ­ர­வில்லை என்றும் குற்­றம்­சாட்­டு­கி­றது.பாதிக்­கப்­பட்ட பெண் சுவிஸ் தூத­ர­கத்­தி­லேயே இருக்­கிறார். தூத­ரக அதி­கா­ரி­களின் பாது­காப்பில் உள்ள அவர், அச்­சத்­தினால் உடல் நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.அவரை சிகிச்­சைக்­கா­கவும், அவ­ரது பாது­காப்­புக்­கா­கவும், அம்­பி­யூலன்ஸ் விமானம் மூலம் வெளி­நாட்­டுக்கு கொண்டு செல்ல, சுவிஸ் தூத­ரகம் முயற்­சித்த போதும், அர­சாங்கம் அதனை தடுத்து நிறுத்­தி­யுள்­ளது.

குற்ற விசா­ரணைப் பிரிவில் சாட்­சியம் அளித்த பின்­னரே, அவரை வெளி­நாட்­டுக்கு செல்ல அனு­ம­திக்க முடியும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­தன கூறி­யி­ருக்­கிறார்.ஆனால் அந்த பணி­யாளர் சாட்­சியம் அளிக்­கக்­கூ­டிய நிலையில் இல்லை என்று வாதி­டு­கி­றது சுவிஸ் தூத­ரகம். இதனால் இரண்டு தரப்­பு­க­ளுக்கும் இடையில் ஒரு இரா­ஜ­தந்­திர முறுகல் நிலை தோன்­றி­யி­ருக்­கி­றது,சுவிற்­சர்­லாந்து தனது பணி­யா­ளரின் பாது­காப்பை முக்­கி­ய­மா­ன­தாக கரு­து­கி­றது. அதே­வேளை அர­சாங்கம் அந்த பெண் பணி­யா­ளரை எப்­ப­டி­யா­வது மடக்கி தன் மீது விழுந்­துள்ள கறையை கழுவி விட வேண்டும் என்று எதிர்­பார்க்­கி­றது.

முறைப்­பா­டுகள் செய்­யா­வி­டினும், சுவிஸ் துத­ரகம் கொடுத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில், மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் இருந்து, தூத­ரகப் பணி­யாளர் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் அப்­பட்­ட­மான பொய் என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூறி­யி­ருக்­கிறார். பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும், வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­த­னவும் அவ்­வாறே கூறி­யி­ருக்­கின்­றனர்.இதி­லி­ருந்து அர­சாங்கம் ஒரு முடிவை எடுத்து விட்­டது என்­பதை உணர முடி­கி­றது.

எப்­ப­டி­யா­வது இந்தச் சம்­பவம் பொய்­யா­னது, திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்ட நாடகம், அல்­லது சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு என்று நிரூ­பித்து விட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றது.ஏற்­க­னவே, ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில், கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளை வான் வரும் என்று ஐ.தே.க.வினர் பிர­சாரம் செய்­தி­ருந்­தார்கள். கோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்புச் செய­ல­ராக இருந்த முத­லா­வது ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், தான் வெள்ளை வான் பிர­ப­ல­மாக இருந்­தது.

ஆனால் வெள்ளை வான் யுகத்தை தான் உரு­வாக்­க­வில்லை என்று தேர்தல் பிர­சார காலத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ மறுப்பு வெளி­யிட்­டி­ருந்தார்.ஆனாலும் அவர் மீது வெள்ளை வான் என்ற படிமம் உள்­நாட்டில் மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச அள­விலும் உரு­வாகி விட்­டது.

சுவிஸ் தூத­ரக பெண் பணி­யாளர் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்ட சம்­பவம் பற்­றிய தக­வல்கள் வெளி­யான போது, ஐ.தே.க, ஜே.வி.பி போன்ற கட்­சிகள், மீண்டும் வெள்ளை வான் யுகம் ஆரம்­ப­மாகி விட்­டது என்றே குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தன.புதிய ஆட்­சியை அமைத்­த­வுடன் வெள்ளை வாக­னத்தில் – அதுவும் வெளி­நாட்டுத் தூத­ர­கத்தில் பணி­யாற்றும் ஒருவர் கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்ட சம்­பவம் என்­பது, சாதா­ர­ண­மான விட­ய­மாக பார்க்­கப்­ப­டாது என்­பது அர­சாங்­கத்­துக்குத் தெரியும்.

இது தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு மிகப்­பெ­ரிய இழுக்கை ஏற்­ப­டுத்தும் என்றும், சர்­வ­தேச அளவில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நகர்­வு­க­ளுக்கு வழி­கோலும் என்றும் எதிர்­பார்க்­கி­றது அர­சாங்கம்.எனவே தான், இந்தச் சம்­ப­வத்தின் உண்மை பொய் என்று ஆராய்­வ­தற்கு அப்பால், இதனை பொய்­யா­னது என்று நிரூ­பித்து விட வேண்டும் என்­பதில்  அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்த்­தன, இது ஜனா­தி­ப­தியின் பெயரைக் கெடுக்­கின்ற ஒரு சூழ்ச்சி எனக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.உதய கம்­மன்­பில, ஜி.எல்.பீரிஸ் போன்­ற­வர்கள் இதனை சர்­வ­தேச சதி என்று கூற­கி­றார்கள்.இந்த விவ­கா­ரத்­தினால் சுவிஸ் அர­சாங்­கத்­துக்கும், இலங்­கைக்கும் இடையில் தோன்­றி­யி­ருக்­கின்ற இரா­ஜ­தந்­திர முறுகல் நிலை இப்­போ­தைக்கு தீரும் போல தெரி­ய­வில்லை.

எவ்­வா­றா­யினும், இலங்­கைக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கோ, அல்­லது வீண் பழி சுமத்­து­வ­தற்கோ சுவிட்­ஸர்­லாந்து அர­சாங்­கத்­துக்கு எந்த தேவை­களும் இல்லை.இது ஒரு சேறு பூசும் நட­வ­டிக்­கை­யாக இருந்தால், எதற்­காக சுவிஸ் இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் இறங்க வேண்டும் என்ற கேள்வி இருக்­கி­றது.

ஏனென்றால் அமெ­ரிக்கா அல்­லது ஏனைய ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களைப் போன்று இலங்­கைக்கு எதி­ரான  நகர்­வு­களை சுவிஸ் மேற்­கொண்­ட­தில்லை.சுவிஸ் தூத­ரக பெண் பணி­யாளர் கடத்­தப்­பட்ட சம்பவம் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நீதியான முறையில் விசாரிக்குமா என்ற உத்தரவாதம் கிடைத்தால், அதற்கு சுவிஸ் தூதரகம் ஒத்துழைக்கும் என்றே தெரிகிறது.

ஆனால் அரசாங்கம், எடுத்த எடுப்பிலேயே இதனை தன் மீது சேறு பூசுகின்ற ஒரு நடவடிக்கையாக காட்டிக் கொள்ள முற்படுகின்ற நிலையில் தான், பாதிக்கப்பட்ட பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் சுவிஸ் இருப்பதாகத் தெரிகிறது.

சுவிஸ் போன்ற சர்வதேச நாடுகள், இவ்வாறான ஒரு முன்னெச்சரிக்கை நிலையில் இருப்பதற்குக் காரணம், முதலாவது ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் தான் என்பதை மறந்து விடலாகாது.

இந்த விவகாரத்தை இரண்டு நாடுகளும் எவ்வாறு தீர்த்துக் கொள்ளப் போகின்றன- பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் தூதரகப் பணியாளரின் எதிர்காலம், பாதுகாப்பு என்பன இப்போதைக்கு விடைதெரியாத வினாக்களாகவே இருக்கின்றன.

-கார்வண்ணன்

https://www.virakesari.lk/article/70731

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.