Jump to content

அம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது - கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது. அத்­துடன் இத்­து­றை­மு­க­மா­னது இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் 'கரு' ஆகும். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது ஆதிக்­கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்­பார்ப்­பது ஏமாற்­றத்­தி­லேயே முடியும் என்று இந்­திய இரா­ணு­வத்தின் ஓய்வு நிலை மூத்த அதி­கா­ரி­யான கேர்ணல் ஆர்.ஹரி­கரன் வீர­கே­சரிக்கு தொலை­பேசி மூலம் வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு,

hambanthota.jpg

கேள்வி:- இலங்கை ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது, முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்ட விட­யங்­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- எனது பார்­வையில், இரு தலை­வர்­க­ளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்­தையின் முக்­கிய தொனி­யாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான கடந்த கால ஆட்­சியில் இரு நாடு­க­ளுக்கும் இடையே ஏற்­பட்ட கசப்­பான உணர்­வு­க­ளையும், அனு­ப­வங்­க­ளையும் மறந்து, புதிய பாதையில் நல்­லு­றவு ஏற்­ப­டுத்­து­வதை மையப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக, மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுடன் கொண்­டி­ருந்த காழ்ப்­பு­ணர்ச்­சியால் சீனா­விடம் காட்­டிய விசேட கரி­ச­னையும் உள்­ள­டங்­கு­கின்­றது. அதன் பிர­தி­ப­லிப்­பா­கவே ஜனா­தி­பதி கோத்­தா­பய இலங்கை இந்­தியா, சீனா ஆகிய இரு வல்­ல­ர­சு­க­ளுக்கும் இடையே நடு­நி­லை­யாக செயல்­படும் என வெளிப்­ப­டை­யாக கூறி­யுள்ளார்.

அத்­துடன் இரு நாடு­களும் பிராந்­திய மற்றும் பாது­காப்பு அமைப்­பு­களை எவ்­வாறு மேம்­ப­டுத்தி செயல்­ப­டு­வது, அதற்கு இலங்­கைக்கு வேண்­டிய தேவை­களை நிறை­வேற்­று­வதில் இந்­தியா எவ்­வாறு  உத­வலாம் என்­ப­­வற்­றுக்கும் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியா நெடுங்­கா­ல­மாக பல்­வேறு தீவி­ர­வாத அமைப்­பு­களை உள்­நாட்டில் பிர­வே­சிப்­ப­தற்கோ, காலூன்­று­வ­தற்கோ அனு­ம­திக்­காது உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வெற்றி கண்­டுள்­ளது.  அவ்­வா­றான நிலையில், இலங்­கையில் புதி­தாகத் தோன்­றி­யுள்ள இஸ்­லா­மிய தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலை ஒடுக்­கு­வ­தற்­காக இந்­தி­யாவின் உத­வியை பிர­தமர் மோடி­யு­ட­னான பேச்­சு­வார்த்­தையின்போது ஜனா­தி­பதி கோத்­தா­பய நாடி­யுள்ளார்.

பிர­தமர் மோடி இலங்­கைக்கு இந்த விட­யத்தில் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தற்கு ஒப்­புதல் அளித்­துள்ளார். இதன் ஓர் அங்­க­மா­கவே இலங்­கையின் பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­களை வலுப்­ப­டுத்தி 50மில்­லியன் டொலர் உதவித் தொகையை   இந்­தியா முதற்­கட்­ட­மாக வழங்­கு­கின்­றது.

கேள்வி:- இச்­சந்­திப்பில் இலங்­கையின் தேசிய பாது­காப்பு, பிராந்­திய பாது­காப்பு தொடர்பில் அதி­க­ளவு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்­தி­யாவின் நிதி­யு­த­வியை இலங்கை எவ்­வாறு பயன்­ப­டுத்த முடியும்?

பதில்:- குறிப்­பாக இலங்கை புல­னாய்­வுத்­து­றையை மேம்­ப­டுத்­து­வதே இந்த நிதி­யு­த­வியின் பிர­தான நோக்­காக இருக்­கின்­றது. இந்­நி­லையில் இரு நாடு­களின்  புல­னாய்வு அமைப்­புக்­க­ளுக்கு இடை­யே­யான  செய்திப் பரி­மாற்­றத்தை உட­னுக்­குடன் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக உப­யோ­கிக்­கலாம். வினைத்­தி­ற­னான செயற்­பா­டு­க­ளுக்­காக, கண்­கா­ணிப்பு கரு­வி­க­ளையும், அதற்­கான மென்­பொ­ருட்­க­ளையும் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக இந்த நிதியை பயன்­ப­டுத்த முடியும்.  இரு­நா­டு­களும் இந்த விட­யத்தில் ஆராய்ந்து அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்றே கரு­து­கின்றேன்.

கேள்வி:- இந்­தியா உட்­பட இந்து சமுத்­திர பிராந்­திய நாடு­க­ளுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்தல் தொடர்ந்தும் காணப்­ப­டு­வ­தாக கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- இந்து மற்றும் பசுபிக் பெருங்­க­டல்­களில் பாரிய அளவில் பாது­காப்பு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­மையால் அதன் பாதிப்­புகள் எதிர்­வ­ரும்­கா­லத்தில் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே உள்­ளன. இவ்­வா­றான மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு முக்­கிய கார­ண­மாக இருப்­பது சீனாவின் இரா­ணுவ வலிமை மற்றும் பண பலம் தான்.  இந்த இரண்டு விட­யங்­க­ளையும் தன்­வசம் வைத்­தி­ருக்கும் சீனா உலக அளவில் தனது வல்­லா­திக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சீனாவின் பிர­வே­சத்தால் இந்து- பசுபிக் பெருங்­க­டலில் வல்­ல­ர­சாக உலாவி வரும் அமெ­ரிக்கா மற்றும் அதைச் சார்ந்த நாடு­க­ளுக்கும், இந்­தி­யா­வுக்கும் அந்­நாட்டைச் சார்ந்த நாடு­க­ளுக்கும் பாரிய சந்­தே­கங்­களை அதி­க­ரிக்கச் செய்து வரு­கின்­றது. ஆகவே இந்த பிரச்­சினை உட­ன­டி­யாக தீர்க்­கப்­ப­டாது நீடித்தால்  ஓர­ள­வுக்கு பதட்­ட­மான சூழ்­நிலை இப்­பி­ராந்­தி­யத்தில் அவ்­வப்­போது இருந்­து­கொண்டே இருக்கும் என்­பதே எனது கணிப்­பாக  இருக்­கின்­றது. அந்த அடிப்­ப­டையில் இந்தப் பிராந்­தி­யங்­களின் பாது­காப்பு என்­பது இன்­றி­ய­மை­யா­த­தாக இருக்­கின்­றது.

கேள்வி:- பிர­தமர் மோடியின் வெற்­றிக்கு புல்­வாமா தாக்­கு­தலும், ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் வெற்­றிக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலும் கார­ணி­க­ளாக அமைந்­துள்­ளன என்ற கருத்­தினை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இந்தக் கருத்தை முழு­மை­யாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பிர­தமர் மோடியின் வெற்­றிக்கு முக்­கிய காரணம் அவர் அரசின் செயல்­பாட்டில் மேற்­கொண்ட சீர்­தி­ருத்­தங்­களே ஆகும். அவற்றில் இலஞ்ச ஒழிப்பு, பொது­வி­நி­யோகம் மற்றும் அரசு உத­வியை நேர­டி­யாக பெற எடுக்கப்பட்ட முயற்­சிகள் மற்றும் மக்­க­ளி­டையே அவர் ஒரு செயல்­பாட்டு வீரர் என்று பெற்ற பெரு­ம­திப்பு ஆகி­யவை அடங்கும். இந்தக் கருத்­துக்கள் மக்­க­ளி­டையே புல்­வாமா தாக்­கு­த­லுக்கு முன்பே பர­வி­யி­ருந்­தன.

இலங்­கையில் 2015இல் ஆட்­சிப்­பொ­றுப்­பினை ஏற்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல-­ – பி­ர­தமர் ரணில் கூட்டு ஆட்­சியின் இரண்­டாண்டு செயல்­பாட்­டுக்கு பின்னர், மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை அவர்கள் மறந்­தார்கள். இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் உட்­பூ­சல்கள் மேலோங்­கின. அத­னை­ய­டுத்து, ஆட்­சியை முன்­ன­கர்த்த முடி­யாத அரசின் கையா­லா­காத நிலை­மைகள் உரு­வா­கின.  அதனால் மக்கள் அந்த ஆட்­சியின் மீது வைத்­தி­ருந்த மதிப்பு குலைந்­தது.

அத்­துடன் மிக முக்­கி­ய­மாக ஈஸ்டர் தினத்தில் நடை­பெற்ற தாக்­கு­த­லுக்கு முன்பும் பின்பும் அரசு பாது­காப்­புத்­து­றையில் காட்­டிய மெத்­த­ன­மான போக்கு வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கி­யது.  ஆகவே மக்­க­ளி­டையே நாட்டின் பாது­காப்பு மற்றும் பயங்­க­ர­வாதம் பற்­றிய அச்சம் அதி­க­மா­யிற்று. ஏற்­க­னவே கோத்­தா­பய சிங்­களப் பொது­மக்­க­ளி­டையே ஈழப்­போரில் வெற்றி கண்ட பெரு­ம­திப்­பினை பெற்­றி­ருந்தார்.

அவ்­வா­றான ஒரு­வ­ரி­டத்தில் நாடு ஒப்­ப­டைக்­கப்­பட்டால் பாது­காப்பு உறு­தி­யாகும் என்ற மன­நி­லைக்கு மக்கள் மாறி­னார்கள். அத்­துடன் அவ­ருக்கு உட­னுக்­குடன் முடி­வெ­டுத்து செய­லாக்கத் திறமை உள்­ளவர் என்ற கருத்து மக்­க­ளி­டையே நில­வி­யது. அதுவே அவர் வெற்றி பெற கார­ண­மாக அமைந்து விட்­டது.

கேள்வி:- ராஜ­பக் ஷ தரப்­பினர் சீன சார்பு நிலை கொண்­ட­வர்கள் என்ற பொது­வான கணிப்­புக்­களே இருக்­கின்ற நிலையில் அவர்கள் மீண்டும் ஆட்­சிக்கு வந்­தி­ருப்­பதில் இந்­தியா எத்­த­கைய கரி­ச­னையைக் கொண்­டுள்­ளது?

பதில்:- வெளி­நா­டு­களின் தலை­யீடு பெரு­ம­ளவில் இல்­லா­ததே இந்த தேர்­த­லுக்கும் முந்­தைய ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்கும் இருந்த முக்­கி­ய­மான வேறு­பா­டாக உள்­ளது. அத்­துடன் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் தோல்­விக்கு பின்­னரும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தியப் பிர­தமர் மோடி­யுடன் தொடர்பு வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இருந்­தாலும், கோத்­தா­பய ராஜ­பக் ஷ சீன சார்பு நிலை இல்லை என்­பதை இந்­தியா நிச்­சயம் செய்­வது அவ­ரு­டைய அடுத்த கட்ட செயற்­பா­டு­களை பொறுத்தே அமையும். ஆகவே இந்­தியா ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் அடுத்த கட்ட செயற்­பா­டு­களில் நிச்­ச­ய­மாக கரி­சனை கொண்­டி­ருக்கும்.

கேள்வி:- அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அச்­செ­யற்­பாடு சீனாவின் 'பிடியை' தளர்த்­து­வ­தாக அமையும் என்று கரு­த­லாமா?

பதில்:- இந்த துறை­முகம் சார்ந்த ஒப்­பந்­தத்தை திருத்த முதலில் சீனாவின் ஒப்­பு­தலைப் பெற­வேண்­டி­யுள்­ளது.  அதைப் பெறு­வது அவ்­வ­ளவு எளி­தான விட­ய­மல்ல. முன்­ன­தாக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அரசு, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்ட ஒப்­பந்­தத்தை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு ஏறத்­தாழ மூன்று ஆண்­டு­க­ளா­கி­யி­ருந்­தன.

அவ்­வா­றான நிலையில், சீனா அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­தினை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு இணங்­கி­னாலும் மேற்­கு­றிப்­பிட்ட விட­யத்தின் பிர­காரம் பார்க்­கையில், அது உடன் முடி­வுக்கு வரும் என்று  எதிர்­பார்க்க முடி­யாது. அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது, கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்­டத்­தினை விடவும் சீனாவின் பிராந்­திய பாது­காப்­புக்கும் வளர்ச்­சிக்கும் மிகவும் முக்­கி­ய­மா­னது.

ஆகவே ஜனா­தி­பதி கோத்­தா­பய இந்த விட­யத்தை கையி­லெ­டுத்­தாலும் ஐந்து ஆண்­டு­க­ளுக்குள் எவ்­வி­த­மான முடி­வு­களும் கிடைக்­காது. பேச்­சு வார்த்­தை­க­ளி­லேயே ஆட்­சிக்­காலம் நிறை­வுக்கு வந்­து­விடும்.

கேள்வி:- சீனா, தனது கன­வுத்­திட்­ட­மான 'ஒரே­பட்டி ஒரே மண்­டலம்' (BRI) திட்­டத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு பல்­வேறு முயற்­சி­களை எடுத்­து­வரும் கேந்­திர ஸ்தான­மான அம்­பாந்­தோட்­டையில் ஆதிக்­கத்தை தளர்த்­து­வ­தற்கு முன்­வ­ருமா?

பதில்:- இல்லை, அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது ஒரே பட்டி ஒரே மண்­டலம் திட்­டத்தின் இன்­றி­ய­மை­யாத அங்­க­மா­க­வுள்­ளது. ஏனெனில் இலங்கை பூகோள ரீதியில் இந்து சமுத்­தி­ரத்தின் ஆளு­மைக்­கான கேந்­திர முக்­கி­ய­மான பகு­தியில் அமைந்­துள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முகம் இந்து சமுத்­தி­ரப்­பி­ராந்­தி­யத்தில் சீனாவின் கன­வுத்­திட்­டத்தின் கரு என்று கரு­தலாம். ஆகவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது ஆதிக்­கத்தை விட்டுக் கொடுக்கும் என எதிர்­பார்ப்­பது ஏமாற்­றத்தில் முடியும். அவ்­வாறு சீனா முடி­வெ­டுக்கும் வகை­யி­லான அழுத்தம் எதுவும் தற்­போது இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சீனாவின் இரா­ணுவ மற்றும் பண­பல வளர்ச்­சியைக் கண்டால் அத்­த­கைய சூழ்­நிலை எதிர்­கா­லத்­திலும் தோன்­று­வ­தற்கு வாய்ப்­புக்கள் இல்லை.

கேள்வி:- புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய அமெ­ரிக்கா, சீனா, இந்­தியா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான சம­நி­லையை பேணுவார் என்று எதிர்­பார்க்­கின்­றீர்­களா?

பதில்:- இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார மற்றும் வல்­ல­ர­சு­களால் ஏற்­படும் பாது­காப்பு அழுத்­தங்­களால் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு நடு­நிலை பேணு­வதைத் தவிர வேறு வழி­யில்லை.

கேள்வி:- புதிய ஆட்­சியில் இரா­ணுவ புல­னாய்வுக் கட்­ட­மைப்­புக்­களை வலுப்­ப­டுத்தி அவற்றை அன்­றாட செயற்­ப­டு­களில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­னையும், போர் நிறை­வ­டைந்து பத்­தாண்­டு­க­ளா­கின்ற போதும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இரா­ணுவ முகாம்கள் நீடிக்­கப்­பட வேண்டும் என்றும் கூறப்­ப­டு­வதை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:-  உள்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான வேறு­பா­டுகள் நீடிக்­கின்ற நிலையில் இவ்­வா­றான நிலைப்­பா­டுகள் விரி­சல்­களை மேலும் அதி­க­மாக்கும் செயற்­பா­டு­க­ளா­கவே இருக்கும் என்று கரு­து­கிறேன்.  வட­கி­ழக்கில் இரா­ணுவ முகாம்கள் தொடர்ந்து நிலை கொண்­டி­ருப்­பதில் தவ­றில்லை. ஆனால் அதற்­கான சமூக சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த அரசு தவ­றி­விட்­டது. ஆகவே முத­லா­வ­தாக அரசு வட­கி­ழக்கில் இரா­ணுவ செயல்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும்.  

கேள்வி:- இரா­ணுவப் பின்­ன­ணியைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய முன்னாள் படை­வீ­ரர்­களை முக்­கிய பத­வி­களில் அமர்த்­து­கின்­ற­மை­யையும் அவ­ரு­டைய போக்கு சர்­வா­தி­கா­ரத்­தி­னையே நோக்கி நகரும் என்றும் எதிர்வு கூறப்­ப­டு­வதை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இரா­ணுவ செயல்­பா­டு­களை அர­சாண்­மைக்கு உப­யோ­க­மாக்­கு­வது ஜன­நா­யக வளர்ச்­சிக்கு புறம்­பா­னது. பாகிஸ்­தானில், அதிக அளவில் அர­சி­யலில் இரா­ணுவம் ஈடு­பட்டால் நடக்கும் அவ­லங்கள் இதற்கு எடுத்­துக்­காட்­டா­கின்­றன. கோத்­தா­ப­யவின் கடந்­த­கால செயல்­பா­டு­களில் சில எதேச்­ச­தி­கா­ரத்­தன்மை கொண்­டவை என்று பொது­வான கருத்­துக்கள் நிலவும் போது இத்­த­கைய அச்­சங்கள் ஏற்­ப­டு­கின்­றன. ஆகவே அவர் தனது செயல்­பா­டு­களை கவ­னத்­துடன் செய்ய வேண்டும்.  அவ­ருக்கு உத்­தி­களைக் கூறு­வது பிர­தமர் மஹிந்த மற்றும் பத­வியில் உள்ள பழுத்த அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யா­கின்­றது. இவற்றை எல்லாம் கடந்து இலங்­கையில் ஜன­நா­யகம் தொடர்ந்து நிலை பெற­வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றேன்.

கேள்வி:- சீன ஜனா­தி­ப­திக்கும், இந்­தியப் பிர­த­ம­ருக்கும் இடையில் மாமல்­ல­ பு­ரத்தில் நடை­பெற்ற சந்­திப்பின் பின்­ன­ரான சூழலில் இந்­தி­யாவின் சீன சார்பு நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­னவா?

பதில்:- செயற்­பாட்டு ரீதி­யாக இந்­தி­யா-­ – சீனா உறவில் ஏற்­படும் விரி­சல்கள் கட்­டுக்குள் அடங்­காது போர்ச் சூழலை உரு­வாக்கக் கூடாது என்­பதே  ஊஹான் மற்றும் மாமல்­ல­புரம் ஆகி­ய­வற்றின் இரு தலை­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­புக்­களின் கருத்­தாகும். அதற்­கான சுமுக சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்தச் சந்திப்புக்கள் பெரிதும் உதவியுள்ளன. ஆனால் இரு நாடுகளின் அடிப்படை நிலைப்பாட்டில் மாற்றங்கள் அதிகம் இல்லை. மாமல்லபுரம் போன்ற சந்திப்புகளின் குறிக்கோள்கள்  அதிகாரபூர்வமான அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.

கேள்வி:- பொருளாதார  ஸ்திரத்தினை பேணுவதற்கு தவிர்க்க முடியாதவொரு சூழலில் இலங்கை, சீனாவுடன் நெருங்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றபோது இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில்:- எந்த காரணத்துக்காக, எத்தகைய சூழலில் சீன பொருளாதார உதவியை இலங்கை பெறுகிறது என்பதைப் பொறுத்தே, இந்தியா தனது நிலைப்பாட்டை எடுக்கும். அந்தப் பிரதிபலிப்புக்களை தற்போதே கூற முடியாது.

கேள்வி:- இந்தியா -– இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- 13ஆவது  திருத்தச் சட்டத்தை கோத்தாபய முழுமையாக செயல்படுத்துவார் என்பது வீணான எதிர்பார்ப்பு. அதை அவரே பலமுறை கூறியுள்ளார். ஏனெனில், அவருக்கு வாக்களித்த சிங்களப் பெரும்பான்மையினருக்கு அதில் உடன்பாடு இல்லை.

கேள்வி:- பிரதமர் மோடி அதற்கான வலியுறுத்தலை செய்துள்ளபோதும் கோத்தாபய இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அதற்கு மாறுபட்ட கருத்தினையே முன்வைத்துள்ளாரே?

பதில்:- இருவரும் தமது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார்கள். அதற்கு மேல் முன்னேற்றம் காண இரு நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சி எடுப்பார்களா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது.

- நேர்காணால் - ஆர். ராம்

https://www.virakesari.lk/article/70738

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.