• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ஊழலற்ற அதிகாரியாக டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவானார்

Recommended Posts

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.  

20105.jpg

http://valampurii.lk/valampurii/content.php?id=20105&ctype=news

 

 

2671793582874907

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
56 minutes ago, ampanai said:

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தமிழ் அதிகாரியாக ஐவரில்

இதன் மூலம் ஏனைய அதிகாரிகள், டொக்டர்கள் ஊழல் செய்பவர்களாக கருதப்படுகிறது?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, Rajesh said:

இதன் மூலம் ஏனைய அதிகாரிகள், டொக்டர்கள் ஊழல் செய்பவர்களாக கருதப்படுகிறது?

இல்லை. 

டாக்டர் த.சத்தியமூர்த்தி அவர்களின் ஆளுமையை ஒரு முன்மாதிரியாக மற்றையவர்களும் பின்பற்றலாம் என்பதுடன், திக்கு திசை தெரியாமல் உள்ள  எமது இளைய சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக உயர்ந்து நிற்கிறார். 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

வாழ்த்துக்கள் ...இவர் தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் 

 

Share this post


Link to post
Share on other sites
On 12/11/2019 at 11:42 AM, Rajesh said:

இதன் மூலம் ஏனைய அதிகாரிகள், டொக்டர்கள் ஊழல் செய்பவர்களாக கருதப்படுகிறது?

இருக்கலாம் 

ஆனால் சத்திய மூர்த்தி அவர்களின் வேலையை பாராட்டலாம் யுத்தகாலத்தில் யுத்த சூழலில் நின்று சேவையாற்றிவர்கள் ஒருவர் என கேள்வியுற்றேன்  ஆனால் சிலர் வைத்தியர்கள் நாட்டுக்கு சேவையாற்றுவேன் என சொல்லி நாட்டை விட்டு ஓடியவர்களே.

Share this post


Link to post
Share on other sites
On 12/11/2019 at 11:42 AM, Rajesh said:

இதன் மூலம் ஏனைய அதிகாரிகள், டொக்டர்கள் ஊழல் செய்பவர்களாக கருதப்படுகிறது?

அப்படி சொல்ல முடியாது. ஒருவரை தெரிவு செய்யும்போது அவர் மற்றவர்களை விட அதில் மேன்மையாக செயல்படுபவராக இருப்பர். ஊழல் செய்யவிடடாலும் அந்த காரியத்தில் ஒரு அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும்.

நானும்கூட இவருக்கு வாக்களித்திருந்தேன். இவர் யுத்த காலத்தில் செய்த அர்ப்பணிப்பும் இவருக்கு வாக்களிக்க ஒரு காரணமாக இருந்தது. வாழ்த்துக்கள் Dr சத்தியமூர்த்தி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மிக்க மகிழ்ச்சி தமிழினி, எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ  ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது  இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .
    • கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில்  தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது. இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம் பெற்றிருக்கின்றது. முகப்பு கியூபெக் செய்திகள் கியூபெக் மாகாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் நினைவுத் தபால் முத்திரை..! 2020-01-18 19:30 கியூபெக் செய்திகள் கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில்  தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது. இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம் பெற்றிருக்கின்றது.                                                  அத்துடன் அப்பனையின் வேரிலே விழுதுகள் தம் வேர்களை முளைத்து கொள்ளுவது போல முடியுடைய மூவேந்தர்களாய் கொடி பரப்பி நிலைத்து நின்ற நம் மூதாதையர் சேர சோழ பாண்டியரின் சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு 12ம் நூற்ற்றாண்டில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), அதனை அண்டியுள்ள 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்)கொண்டு 12ம் நூற்றாண்டில் இல் கட்டப்பட்ட மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் கோயில் தமிழர் கட்டிட கலையின் பொக்கிசமும் இம்முத்திரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம். அகம் புறம் என பகுத்து வாழ்ந்த ஆதித்தமிழரின் வீரக்கலையான சிலம்பம் இடம் பெற்றிருக்கின்றது. அத்துடன் நமது நிலம் வளம் வாழ்வில் இதில் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் கலை என அனைத்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தம் வாழ்வில் தவிர்க்க முடியாததாக இருக்கும் யாழ் இசைக் கருவி தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கின்றது. ஆதி தமிழர் வாசித்த யாழ் இசைக் கருவி தவறாது இம் முத்திரையில் இடம் பிடித்திருக்கின்றது. நமது மொழியின் இனத்தின் பெருமையை செழுமையை நினைவுகூற வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் வெறுமனே அந்தந்த நாட்களோடு முடிந்து விடக்கூடாது. இனிவரும் வரலாறு பேசும் அளவு அவற்றை உறுதியான சான்றாதாரங்களையும் ஆவணப்படுத்தி விட வேண்டும் எனும் நோக்கிலேயே இம் முத்திரையை கனடா தபால் தினைகளத்தின் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது இவ் நினைவு முத்திரையை சிறந்த முறையில் வடிவமைத்த இளம் மாணவி சியானி சரவணமுத்து அவர்களுக்கும் அவறோடு இணைந்து உதவிய அணைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி    
    • சசி அண்ணா எனது மகள் Cawthra Park Art School லிலும் MERRIAM School of Music லிலும் படிக்கின்றா.  இப்போது Innovative Art School லிலும் சேர்ந்துள்ளா. மகளின் Major -Vocal அத்துடன் இப்படியான இசைநடனத்திலும் ஆர்வம் இருப்பதால் அதையும் சேர்த்து படிக்கின்றா. Innovative Art School - Oakville லிலும் Down Town லிலும் உள்ளது. Down Town உங்களுக்கு கிட்டவாக இருக்கும். தற்போது Frozen Musical தொடங்கவுள்ளார்கள். முடிந்தால் உங்கள் மகனை அங்கு சேர்க்கலாம் சசி அண்ணா.  
    • இப்படியான  நிகழ்வு ஒன்றை 12 ம் வகுப்பு மாணவர்கள் நடாத்தி இருந்தார்கள். ஏறத்தாள ஒரு வருடம் பயிற்சி செய்து இருந்தார்கள். நானும் அரை மனமாக தான் சென்றேன். கொஸ்ரியூமில் இருந்து பின்ணணி இசை வரை ஒவ்வொரு ஆசியர் பொறுப்பெடுத்து செய்து இருந்தார்கள். பாடசாலை இசைக்குழுவே பின்னணி இசையை செய்து இருந்தார்கள். பல்வேறு நாட்டு பின்ணணிகளை கொண்ட  மாணவர்கள் பங்கு பற்றி பின்னி எடுத்து விட்டார்கள். ஒருவர்  இனிமையாக பாடுவதே அதிசயம். ஒரு குழு பாடி , ஆடி நடிப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அத்தனை  திறமை இந்த சிறுவர்களிடமா என பிரமித்து நின்றேன். பார்த்த காட்சியின் பெயர் legally blond. கவி அவர்களே உங்கள் காட்சி வருணனை அருமை. நேரே காட்சியை பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. நன்றிகள்    
    • தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன? எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்? என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.