Jump to content

மகாகவி பாரதிக்கு இன்று 138வது பிறந்தநாள்..!


Recommended Posts

157603277892299.jpg

மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி...

சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி.

தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு.

பாரதி ஒரு ஆன்மீகக் கவியாக பலருக்குத் தெரியலாம். கண்ணன் பாடல்கள் அதற்கு ஒரு காரணம். கண்ணனை குழந்தையாக, தாயாக, சேவகனாக, நண்பனாக, வழிகாட்டியாக நினைத்து பாடல்கள் புனைந்தவர் பாரதியார்.

பாரதி ஒரு தீர்க்கதரிசி... அதனால்தான் சுதந்திரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்தி முழங்கினார்..

தமிழ் இலக்கியத்திற்கு புதுக்கவிதை, ஹைகூ, சிறுகதை என நவீன வடிவம் கொடுத்தவரும் பாரதிதான்....சங்க கால புலவர்கள் பிடியில் இருந்த புரியாத தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிஞராக பாரதி திகழ்ந்தார்..

பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான்.

இளம் வயதிலேயே காலமான போதும் காலா வா உன்னைக் காலால் மிதிக்கிறேன் என்ற பாரதியின் கவிதை வரிகள் மரணத்தை வென்று இன்றும் உயிர்த்திருக்கிறது.

https://www.polimernews.com/dnews/92299/மகாகவி-பாரதிக்கு-இன்று-138வதுபிறந்தநாள்..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை”

வறுமையின் கிளையில் வசித்துவிட்டுப் போன யுக குயிலே..
காற்றின் உயிரில் கலந்துவிட்டது உனது கவிக்குரல்.
அது மனித ராசியின் கடைசிக் காதுவரை கட்டாயம் கேட்கும்.

ஒரு மகாகவி பிறக்கப்போகும் பிரஜைகளுக்கும் பிரதிநிதியாகிறான்.
மனித குலத்தின் பயணப்பாதையை, முகவரி தெரியா இருட்டு மூடும் போதெல்லாம், ஒரு மகாகவி வந்துதான் தீக்குச்சி கிழிக்கிறான்.

மகாகவியே, நெருப்பின் மகனே, நீ தீக்குச்சியா? இல்லை தீப்பந்தம்.
உன் கிரணக்கீற்றுகள் சில நூற்றாண்டுகளின் விளிம்புவரை சென்று விழும்.

மனிதனை மீண்டும் மிருகமாக்கும்
விஞ்ஞானமே சமாதானப்புறாக்களையும் அணுகுண்டுகளையும் வளர்த்து கொண்டிருக்கும் வல்லரசுகளே
எங்கள் கீதக்குயிலின் குரலைக் கேளுங்கள்.

எங்கள் குயிலின் குரலில் இருக்கும் மனிதாபிமானத்தை மனப்பாடம் செய்யுங்கள்.

அஃறிணைகளையும் தம் ஜாதியென்றான் எம் தமிழ்க் கவிஞன்.
நீங்கள் உயர்தினைகளையே ஒன்றாய் ஒப்புக் கொள்ளவில்லையே

அடுத்த தலைமுறையின் தேவை- 
ஆயுதக் கிடங்குகளல்ல..
நடமாடி மகிழ சில நந்தவனங்ஙள்.

மகாகவிஞனே, எட்டயபுரத்துக் கொட்டு முரசமே
உன்னை உள்ளூரே புரியவில்லையே
உலகம் புரிவதேது?

முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் நீ கண்டு வந்த அந்தக் கர்வக் கனவு எங்கே?
எம் நாட்டில் ஜனத்தொகையும் உன் பாட்டு நூலின் பதிப்புகளும் மட்டுமே பன்மடங்காயின.

இங்கு உன் கவிதைக்கு பொழிப்புரை சொல்வதொரு பொழுதுபோக்கு.
உன் எழுத்துக்கு இல்லாத பொருள் சொல்பவன் இலக்கியமேதை.

கொச்சை தாகம் கொண்டிருக்கும் சமூகத்தில் கவிதையென்பது காகிதந்தான்.
கவிஞனின் அம்பறாத்ததூணியை அது பூக்களால் நிரப்பிவிடும்.

இந்த அமைப்பில் இதுதான் விதி
இந்த விதிக்கு இதுதான் கதி.

ஓ பழைய மனிதர்களே வழிவிடுங்கள்
இந்த தேசத்தை வாலிப புயல்கள் வலம் வரட்டும்.
புறப்படும் அந்தப் புயல்களின் வழியில் நீங்கள் வணக்கத்தை எதிர்பார்த்து வரவேண்டாம்.

பாரதியின் கவிதைக்கு வார்த்தையால் அல்ல. 
வாழ்க்கையால் உரை வரைவோம்.
சுதந்திரத்தை இன்னமும் நாம் தேதியில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டாம்.
அதை சூரியனைப்போல் எல்லோருக்கும சொந்தமாக்கி விடுவோம்.

எங்களை மன்னித்தே பழகிவிட்ட மகாகவியே
உன் கவிதைகளையே சப்தச் சந்தையில் விற்கும் மனப்பாட வியாபாரிகளையும் மன்னித்துவிடு.

உன் எழுத்துக்களை வாழ்க்கைப்படுத்தினால் 
உன்னை உச்சரிக்க எமக்கு யோக்கியதை இருக்கிறது.

உன் நூற்றாண்டு என்பது உன் அறுபதாம் நினைவு நாளாய் ஆகிவிடக்கூடாது.

உனக்கு மரணமில்லை.

கவிஞனும் காற்றும் மரித்ததாய் ஏது சரித்திரம்?

வைரமுத்துவின் “ கவிராஜன் கதை” புத்தகத்திலிருந்து  எனக்கு பிடித்த வரிகள்.

56320-E5-D-73-F9-4045-8-E72-A79121904-F6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பாரதிபற்றித் தெரியவந்தது சுதந்திரம் பற்றி நான் தேடத் தொடங்கியபோது
எமக்காவே அவன் பாடியதுபோன்றதொரு பிறமை பல காலமாக எனக்குள் இருந்தது
எனது இனம் தேடிய சுதந்திரக் காற்றை பாரதியின் பாடல்களில் சுவாசித்திருக்கிறேன்
அவன் சொல்லியதுபோன்றே என்றோவொருநாள் நாம் விடுதலையடைவோம் என்கிற இறுமாப்பு நேற்றுவரைக்கும் கூடவே இருந்தது...........

இன்று எல்லாமே கானல் நீராக, அந்தப் பாரதிபோன்றே வெறும் 30 வருடங்களில் அழிந்துபோயிற்று
நான் தேடிய சுதந்திரத்திற்கும் பாரதிக்கும் ஒரேவயது - 30 ஆண்டுகள்

இப்போது கவிதைகள் பிடிப்பதில்லை
தோற்றதற்கான ஆற்றாமையும், தோல்வியின் வலியும் கூடவே வருகிறது
காரணங்களைக் கால்களுக்குள்ளேயே தேடித்தேடி கூனியதுதான் மிச்சம்

விடுதலைதேடி வீதிவழியே ஏறிச்சென்றவர்கள் போன திக்குகள் பார்த்துக் கண்கள் இன்னும் பனித்திருக்க
கிடைக்காத எனது விடைகளுக்காய் இன்னும் புதிதாகக் கேள்விகள் கேட்டு மரத்துப்போகிறேன்

பாரதி, நீ இன்றிருந்தால் தொடர்ந்தும் பாடியிருப்பாய் - எமக்கு
விடுதலை ஒரு கேடாவென்று !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி  யார்........பாரதியார்தான்....,   வாழும்போது மனிதனாய் இருந்தார் , நீங்கும்போது சித்தராகவே மாறியவர். காலத்தால் அழியாத பாடல்கள் .......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் சுதந்திர வேட்கைக்காக மட்டும் போராடியவர் அல்லவே. அவருடைய சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்பன இன்றுவரை வரையறைக்குட்பட்டது என்றாலும் கூட, அவருடைய எழுத்துகள்தான் பெண் விடுதலைக்கான வித்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பாரதியார் சுதந்திர வேட்கைக்காக மட்டும் போராடியவர் அல்லவே. அவருடைய சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்பன இன்றுவரை வரையறைக்குட்பட்டது என்றாலும் கூட, அவருடைய எழுத்துகள்தான் பெண் விடுதலைக்கான வித்துகள். 

நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் !

Link to comment
Share on other sites

On 12/12/2019 at 4:33 AM, ரஞ்சித் said:

பாரதி, நீ இன்றிருந்தால் தொடர்ந்தும் பாடியிருப்பாய் - எமக்கு
விடுதலை ஒரு கேடாவென்று !

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

 

கேரளத்து குட்டிகள் (சேரநன்னாட்டிளம் பெண்கள்)

பாரதியை மயக்கிவிட, அவர் சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்பது பற்றி கனவு கண்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.