• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யாவும் உக்ரேனும் இணக்கம்

Recommended Posts

image_f692126c79.jpg

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியும் சந்தித்த பின்னர் கிழக்கு உக்ரேனில் முழுமையான யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யாவும் உக்ரேனும் இணங்கியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், ஜனாதிபதி புட்டினும், ஜனாதிபதி ஸிலென்ஸ்கியும் நேற்று  சந்தித்திருந்தனர். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனி சான்செலர் அங்கெலா மேர்க்கலின் அனுசரணையில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே, மோதலுடன் தொடர்புபட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை செய்து பரிமாறுவதற்கு ரஷ்யாவும், உக்ரேனும் இணங்கியுள்ளன.

இதுதவிர, அடுத்தாண்டு மார்ச் மாத முடிவுக்குள், உக்ரேனின் மூன்று மேலதிக பிராந்தியங்களிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கும் ரஷ்யாவும், உக்ரேனும் இணங்கியுள்ளபோதும், எப்பகுதிகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, யுத்தநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்குமிடையில் நான்கு மாதங்களில் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுக்களையடுத்த செய்தியாளர் மாநாட்டில், பிரச்சினையைத் தணிப்பதை நோக்கிய முக்கியமான படியொன்று என பேச்சுக்களை ஜனாதிபதி புட்டின் புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில், உக்ரேனூடான குழாய்கள் வழியான ரஷ்ய வாயு ஏற்றுமதிகளுக்கான முடக்கம் நீக்கிக் கொள்ளப்படும் என ஜனாதிபதி ஸிலென்ஸ்கி கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், ரஷ்ய ஆதரவுப் படைகளை விலக்கிக் கொள்வது, பிரிவினைவாதப் போராளிகளிடமுள்ள உக்ரேனிய பகுதிகளில் தேர்தல்கள் போன்ற விடயங்களில் ரஷ்யாவும், உக்ரேனும் தொடர்ந்தும் இணக்கமின்றியே காணப்படுகின்றன.

இதேவேளை, போராளிகளால் கடுப்படுத்தப்படும் டொன்பாஸ் பிராந்தியத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்குமாறு உக்ரேனிய அரசமைப்பு மாற்றமொன்றுக்கும் ஜனாதிபாதி புட்டின் அழைப்பு விடுத்ததுடன், குறித்த பிராந்தியத்தைக் கைப்பற்றுதலில் பங்கேற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்தும் கருத்தை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில், அமைத்திக்காக எந்தவொரு இடங்களையும் உக்ரேன் விட்டுக் கொடுக்காது என ஜனாதிபதி ஸிலென்ஸ்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/யததநறதததத-அமலபடதத-ரஷயவம-உகரனம-இணககம/50-242301

 

 

Share this post


Link to post
Share on other sites

பூட்டினின் நகர்வுகளை பலரும் முழுமையாக புரிந்து கொள்ளுவதில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் கூட ஒரு பொறியாக இருக்கலாம். 

ஐரோப்பாவிற்கு உருசியாவின் நிலவாயு தேவை. உருசியாவிக்ரு நேட்டோவை பலவீனப்படுத்த வேண்டும். 

இந்த சக்கரத்திற்குள் ஒரு அச்சாணியை தேடிய வண்ணம் பூட்டின் உள்ளார். ஒரு நாள் அதை கண்டுபிடித்து பின்னர் கழட்டியும் விடுவார். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தேர்தல் முடிந்தபின்னும் இதே முடிவில் இருப்பாரா? இப்பவே தான் தலைவர் என்று அறிவித்தால் ஒருவரும் வாக்குப் போட மாட்டார்கள் என்பது புரிந்திருக்கும். 
  • இது உண்மையானதாக இருக்கலாம். அப்படிப் பார்த்தாலும் கொறியாவுக்கு இளவரசி தமிழைக் கொண்டு செல்வதற்கு முன்னரே கொறிய மொழி இருந்துள்ளது. தமிழில் இருந்து கொறிய மொழி தோன்றவில்லை. 
  • நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும்  என் வேர் பற்றி எழுதுவேன்  என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம் எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன் வஞ்சனை செய்வோர் பற்றியும் வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும் எஞ்சி இருக்கும் காலம் வரை என் தமிழ் தந்த திமிரோடு எழுதுவேன் பேசுவேன் நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன் என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும் நான் எழுதுவேன் நான் பேசுவேன்.  
  • எப்போதும் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவர்.! – மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சுமந்திரன் திட்டவட்டம் .! “இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அவருக்குரிய ஆற்றலும் அனுபவமும் இப்போது வேறு எவரிடமும் இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘சக்தி’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சி.வி.விக்னேஸ்வரனைக் கூட்டமைப்புக்குள் கொண்டு வந்தோம். அவரை வடக்கு மாகாண முதலமைச்சராக்கினோம். அவர் தன்னுடைய முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடையும் வரைக்கும் கூட்டமைப்பின் உறுப்பினராகவே இருந்தார். பதவிக்காலம் முடிந்து மறுநாள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தார். புதிய கட்சிக்கான ஆயத்தங்களை அவர் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே செய்திருந்தார். அப்படியான ஒருவரான விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாறினால் கூட்டமைப்புடன் தான் மீண்டும் இணைவேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. எவரும் வரலாம்; போகலாம். ஆனால், இரா.சம்பந்தனே தலைவராக இருப்பார். அவர், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகச் செயற்படுவார்” – என்றார். http://puthusudar.lk/2020/01/29/tna-leader-sampanthan-3/
  • சிறுகதை அவருடையதுதான் தமிழ் சிறி சிறுகதை அவருடையதுதான் தமிழ் சிறி மல்லிகை  சி.குமாரின் முகநூலில் காணக் கிடைத்தது,