• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும்

Recommended Posts

இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார்.   

ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.   

இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியளிக்க இணங்கி இருந்தமையும் ராஜபக்‌ஷ - இந்தியா இடையேயான, ‘இரண்டாம் இன்னிங்ஸ்’இன், சுப ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

2015இற்கு முன் ராஜபக்‌ஷ, இந்தியா இடையேயான உறவு, சுமூகமானதாக இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ கண்ட தோல்வி, ராஜபக்‌ஷக்களுக்கு சர்வதேசம், பூகோள அரசியலில் சமநிலையைப் பேணவேண்டியதன் அத்தியாவசியத்தையும் அதைத் தந்திரோபாய ரீதியில் கையாளவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருக்கிறது. இதை, ஜனாதிபதி கோட்டாபயவின் ஆரம்பகால நடவடிக்கைகள், எமக்கு உணர்த்தி நிற்கின்றன.  

சிலர், மோடி-ராஜபக்‌ஷ ஆகியோரிடையேயான அரசியல் ரீதியிலான ஒற்றுமைத் தன்மைகளே இந்தப் ‘புதிய ஒற்றுமை”க்குக் காரணம் என்கிறார்கள்.   

மோடியும் ஒரு பெரும்பான்மையினத் தேசியவாதி; அதுபோலவே, ராஜபக்‌ஷக்களும் பேரினத்தேசியவாதிகள். ஆகவே, அவர்கள் இணங்கிச் செயற்படுவதில் ஆச்சரியம் இல்லையென்று சிலர் சொல்கிறார்கள்.   

ஆனால், இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, ஆட்சிக்கு வருபவர்களால் பெருமளவுக்கு மாற்றியமைக்கப்படும் ஒன்று அல்ல; அதிலும் குறிப்பாக, இந்தியாவின் அயலவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு, ஆட்சிக்கு வரும் கட்சிகளைத் தாண்டி, மிக நீண்டகாலமாக, ஒரே மாதிரியானதாகவே அமைந்திருக்கிறது.  

அணுகுமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அயலவர்கள் தொடர்பிலான இந்தியாவின் வௌியுறவுக் கொள்கை, ஸ்திரமானதாகவே இருந்திருக்கிறது.   

இதற்குக் காரணம், இந்தியாவின் பாதுகாப்பு ஆகும். இது பற்றிக் கருத்துரைக்கும் மஞ்சரி சட்டர்ஜீ மில்லர், “பா.ஜ.கவின் கீழ் கூட, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பல அம்சங்கள், இன்றும் உலகில் இந்தியாவின் பங்கைப் பற்றிய பழைய, நிறுவன மயமாக்கப்பட்ட கருத்துகளிலேயே சாய்ந்துள்ளன. மேலும், முந்தைய எல்லாக் காங்கிரஸ் அரசாங்கங்கள், தங்கள் கண்ணோட்டங்களிலும் உத்திகளிலும் ஒற்றைத் தன்மையிலேயே செயற்பட்டிருக்கின்றன என்று நினைப்பதும் தவறானதாகும். காங்கிரஸின் கீழான இந்தியாவுக்கும் பா.ஜ.கவின் கீழான இந்தியாவுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கையின் தூரநோக்குக்கு இடையில் வேறுபாடுண்டு என்று கூறுவது தவறாகும். பல வழிகளில் அவை முன்னையதன் தொடர்ச்சியாகவே அமைகின்றன” என்கிறார்.  

சுர்ஜித் மான்சிங், ராஜு தோமஸ் ஆகிய இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய ஆய்வாளர்கள், இந்திய வெளியுறவுக் கொள்கைகள், 30 ஆண்டுகளில் பெருமளவு மாறியிருந்தாலும், அமெரிக்காவின் ‘மொன்றோ கோட்பாடு’, ‘ஐசன்ஹவர் கோட்பாடு’, ‘நிக்ஸன் கோட்பாடு’ (குவாம் கோட்பாடு) போன்று வெளிப்படையான கொள்கைகளை, பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பில், இந்தியா கொண்டிருக்கவில்லை என்று கருத்துரைக்கிறார்கள்.   

ஆனால், பிரபலமான அரசறிவியலாளரும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆய்வாளருமான பபானி சென் குப்தா, வெளிப்படையாக இந்தியா அறிவிக்காவிட்டாலும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில், வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதனை அவர் முதலில், ‘பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பான இந்தியக் கோட்பாடு’ என்று விளித்தார். காலவோட்டத்தில், அது ‘இந்தியக் கோட்பாடு’ என்றும் ‘இந்திரா கோட்பாடு’ என்றும், பின்னர் ‘ராஜீவ் கோட்பாடு’ என்றும் குறிக்கப்பட்டது.   

image_25b0659b1b.jpg

பபானி சென் குப்தா குறிப்பிட்ட இந்தியக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும்.  

இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும், இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது.  

மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.   

இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்டதுதான் ‘இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக் கொள்கை’ என்று 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி, ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பபானி சென் குப்தா எழுதியிருந்தார்.   

சுருக்கமாக, இந்தக் கொள்கையானது, இந்தியா, தன்னைத் தெற்காசியப் பிராந்தியத்தின் (பாகிஸ்தான் தவிர்த்து) ‘பெரியண்ணன்’ஆக உருவகித்துக் கொள்வதைச் சுட்டுகிறது.  

1980 களில் இருந்த நிலையை விட, தற்போதைய பூகோள அரசியல் நிலையும் களமும் பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இன்று, சீனாவைச் சமன் செய்வதுதான் இந்தியாவுக்குத் தெற்காசியாவில் இருக்கும் மிகப்பெரும் சவால்.   

மறுபுறத்தில், சீனாவும் தெற்காசியாவில் தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் மும்முரமாக முன்னெடுத்து வருகிறது. பாகிஸ்தானோடு மிக நெருக்கமாகச் சீனா செயற்பட்டு வருவதுடன், சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் பெருவீதியை அமைத்தும் வருவதுடன், பாகிஸ்தானின் ‘க்வாடார்’ துறைமுகத்தையும் 2059 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது.   

மறுபுறத்தில், தற்போது நேபாளத்தில் ஆட்சியிலிருக்கும் நேபாள கொம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) அரசாங்கத்தோடு, சீனா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, நேபாளத்திலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது.   

மேலும், பங்களாதேஷிலும் சீனா மிகப்பாரியளவிலான உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில், வேறெந்த நாட்டிலும் சீனா முதலிட்டமையை விட, மிக அதிக அளவில், பங்களாதேஷில் முதலிட்டிருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கருத்துரைப்பதுடன், பங்களாதேஷை கடன்வலையில், சீனா அழுத்தப் பார்க்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள்.  

ஆகவே, இந்தியாவின் அயலவர்களை வளைப்பதில், தனது பிடிக்குள் கொண்டுவருவதில், சீனா மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருவது ‘வௌ்ளிடைமலை’. இதுதான், இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரும் சர்வதேச பூகோள அரசியல் சவாலாகும்.  

2015இற்கு முன்னர், ராஜபக்‌ஷக்களின் சீனாச் சார்பு நடவடிக்கைகள், இந்தியாவை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது என்பது வௌிப்படையாகவே தெரிந்தது.   

2015 ஆட்சி மாற்றத்தில், மேற்குலகினது மட்டுமல்லாது, இந்தியாவினது பங்கும் இருந்தது என்ற குற்றச்சாட்டையும்  அனைவரும் அறிந்திருந்தனர். 2019இல் மீண்டும் ஆட்சிப்படி ஏறியிருக்கும் ராஜபக்‌ஷக்களுக்கு ,2015இற்கு முன்னர் வௌியுறவுக் கொள்கை தொடர்பிலான தமது அணுகுமுறையில் இருந்த தவறுகள், குறிப்பாக, ‘பெரியண்ணன்’ தொடர்பிலான தமது அணுகுமுறைத் தவறுகள் தௌிவாகப் புரிந்திருப்பதையே, கோட்டாவின் ஆரம்பகால நடவடிக்கைகள் உணர்த்தி நிற்கின்றன.   

இலங்கை தொடர்பிலான இந்தியாவின் எதிர்பார்ப்பு என்பது, மிகவும் நேரடியானதும் தௌிவானதுமாகும். இலங்கையினது சர்வதேசக் கொள்கை எப்படிக் கட்டமைந்தாலும், அதில் ‘இந்தியாவுக்கு முதலிடம்’ வழங்கவேண்டும் என்பதே, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும். அதுபோலவே, இந்தியாவும் ‘அயலவர்களுக்கு முதலிடம்’ என்ற வௌிநாட்டுக் கொள்கையைக் கொண்டிக்கிறது.   

தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைச் சமன் செய்ய, இந்த வௌியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு அவசியமாகிறது. இந்தியாவின் இந்த எதிர்பார்ப்பு, இலங்கை அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்படும் வரை, இந்தியா, இலங்கையின் ஏனைய முடிவுகளில் தலையிடாது என்று உறுதியாக நம்பலாம்.   

ஜனாதிபதி கோட்டாபயவின் முதற்கட்ட நடவடிக்கைகள், இந்தியாவை அலட்சியப்படுத்தாத ‘இந்தியாவுக்கு முதலிடம்’ என்ற சர்வதேச அணுகுமுறையைக் கையாள விளைகிறார் என்பதை உணர்த்துவதாக அமைகிறது.   

இதை ஜனாதிபதி கோட்டாபயவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கும் வரை, இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் இந்தியா வலுவான தலையீடு எதையும் செய்யாது. ஜனாதிபதி கோட்டாவின் எதிர்பார்ப்பும் இதுதான்.  

இங்குதான் தமிழ் அரசியல் தலைமைகள், பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகப் போகிறார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் காலம் முதல், இலங்கையின் தமிழ்த் தலைமைகள், இந்தியாவிடம் சரணாகதியடைந்த அரசியலையே முன்னெடுத்து வருகிறார்கள்.   

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழர் விவகாரம் என்பது, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ‘துருப்புச் சீட்டு’. இந்திய நலன்களுக்கு எதிராக, இலங்கை செயற்படும் போது, இலங்கையில் தலையிடுவதற்கு, இந்தியாவுக்கு இருக்கும் வௌிப்படையனதொரு காரணம் இலங்கையின் இனப்பிரச்சினை.   

அதனால்தான், இலங்கையின் தமிழர் தலைமைகளைத் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இந்தியா எப்போதும் விரும்புகிறது. ஆகவே, இலங்கை அரசாங்கம், இந்திய நலன்களைப் பாதிக்காது, தமது காய்களை நகர்த்தும் வரையில், தமிழர் விவகாரம் பற்றி, அர்த்தபூர்வமான எந்தவோர் அழுத்தத்தையும் இந்தியா வழங்கப் போவதில்லை.  

 இந்தச் சந்தர்ப்பத்தில், வெறுமனே 13ஆம் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியா இலங்கைக்கு சொல்லுமேயன்றி, வேறெதையும் தமிழ்த் தலைமைகள் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.   

ஆகவே, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்த அர்த்தபூர்வமான முன்னகர்வுகளும் ஏற்படாவிட்டாலும், தமிழ்த் தலைமைகளால் அதுபற்றி எதுவும் செய்யமுடியாத நிலைமை ஏற்படப்போகிறது.   

இந்திய-சீன-அமெரிக்க நலன்களை, ராஜபக்‌ஷக்கள் சரியாகச் சமன் செய்து, தமது காய்நகர்த்தல்களை முன்னெடுத்தால், தமிழ்த் தலைமைகளுக்கு இந்தப் ‘பூகோள அரசியலில்’ காய்நகர்த்தல் செய்ய இடமேயில்லாமல் போய்விடும்.   

ஆகவே, இந்தச் சூழலில், ராஜபக்‌ஷக்களுடனான அரசியல் ஊடாட்டங்களினூடாகத் தமது நலன்களை அடையப்பெற்றுக் கொள்வது, அல்லது இந்தியாவுடனான உறவுகளில் ராஜபக்‌ஷக்கள் மீண்டும் சறுக்கும் வரை காத்திருப்பது என்ற இரண்டு தெரிவுகளே, தமிழ்த் தலைமைகளிடம் இருக்கின்றன. இது ஒரு வகை ‘செக் மேட்’ நிலைதான்.  

‘தமிழ்நாடு’ என்ற காரணத்தைத் தாண்டி, இந்தியாவுக்குத் தமிழர் சார்பாகப் பலமான அழுத்தம் தரக்கூடிய எந்த சக்தியும் இல்லை. ஆனால், ‘தமிழ்நாட்டின்’ ஆதரவுச் சக்தியை நீர்த்துப்போகச் செய்யும் அரசியல் தந்திரோபாயங்கள் மிகப் பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   

இலங்கையின் தமிழர் பிரச்சினையை, உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதைத்தாண்டி, கேலிக்கூத்தாக மாற்றுவதற்காகவே, தமிழ்நாட்டில் கோமாளிக் கட்சிகள் பல களமிறக்கப்பட்டுள்ளன. இது இலங்கைத் தமிழர் பிரச்சினையை, தமிழ்நாட்டின் அரசியல் மய்யவோட்டத்திலிருந்து நீக்கும் பணியை மிகவிரைவாகச் செய்து வருகிறது.  

 மறுபுறத்தில், இலங்கையின் தமிழ்த் தலைமைகள், இந்தியாவைத் தாண்டிச் சிந்திக்கும் அறிவையும் திராணியையும் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. ராஜபக்‌ஷக்கள்,தமது காய்நகர்த்தல்களை சரியாக முன்னெடுக்கும் வரை, ‘பெரியண்ணனை’ அதிருப்தியாகாத வரை, இலங்கைத் தமிழ் தலைமைகளின் நிலையும் இனப்பிரச்சினைத் தீர்வின் நிலையும் ‘செக்மேட்’ தான்!    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தியாவும்-கோட்டாவும்-தமிழர்களும்/91-242288

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நீங்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் கிளிநொச்சி வன்னி பிரதேசத்துடன் சேர்ந்த இடமில்லை। வன்னி பிரதேசம் என்பதும் வன்னி தொகுதியாதான் குறிக்கிறது। அதாவது மன்னர் மாவடடம் , வவுனியா  மாவடடம் , முல்லைத்தீவு மாவடடம்। அதேபோலத்தான் யாழ்   மாவட்டம்  , கிளிநொச்சி மாவட்டத்தை ஒரு தொகுதியாக/பிரதேசமாக  குறிக்கிறது ।  புலுடா விட வேண்டிய அவசியமில்லை। நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய  முடியாது ராஜேஷ் அவர்களே। 
  • கீழே....  மல்லிகை சி.குமார்  என்ற  பதிவை, இளையத்தில் கண்டேன். இருவரும் ஒருவரா? என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. தெரிந்தவர்கள் கூறினால் நல்லது.   ////// மல்லிகை சி. குமார்"டீச்சர் இன்னிக்கும் அந்த மானைப் பார்த்திட்டு வந்தீங்களா?"அந்த சிறுமி தன் மழலைக் குரலில் என்னைப் பார்த்து கேட்க,"ஆமா பார்த்திட்டு தான் வந்தேன். உன்னப் போல அந்த மானும் என்னை விழிச்சி விழிச்சு பார்திச்சு" - என்றேன் நான்."அப்ப எங்களுக்கும் அந்த மானப் பார்க்க ஆசையா இருக்கு டீச்சர்...""ஆமா... டீச்சர், எங்களையும் கூட்டிக் கொண்டு போய் அந்த மானக் காட்டுங்களே..." - மாணவர்களின் ஏகோபித்த குரல்கள்."சரி.... சரி.... எல்லாரும் அமைதியா இருங்க. உங்க எல்லாத்தையும் மானைப் பார்க்கக் கூட்டிக் கிட்டுப் போறேன்" என்று ஆறுதலாக சொன்னேன்."எப்ப டீச்சர் கூட்டிக்கிட்டுப் போவீங்க?" ஒருத்தி ஆசையாகக் கேட்டாள்.மானைப் பார்க்க வேண்டும் என்ற அவர்களின் ஆசையும் ஆர்வமும் என்னை நெம்பி எடுப்பது போல இருந்தது. அவர்களின் ஆசையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உந்துதல் என்னுள் எழுந்தது."ந்தாப் பாருங்க இன்றைக்குப் பின்னேரம் மழை இல்லாவிட்டால் உங்களை மான் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போறேன்" என்றேன்."ஹய்ய்யா.... அப்படின்னா மழ வராது" எல்லாரும் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்தனர்."டீச்சர் அப்படினா நாங்க அந்தி வரைக்கும் இங்கேயே இருக்கணுமா?" - ஒரு சிறுமி சந்தேகத்தோடு கேட்டாள்."இல்ல மத்தியானம் உங்களை எல்லாம் கூட்டிக்கிட்டுப் போக உங்க வீட்டிலிருந்து யாராவது வருவார்கள் தானே... அவுங்களோடு நீங்க வீட்டுக்குப் பொயிட்டு பின் நேரம் மூன்று மணிக்கு திரும்பவும் இங்க வாங்க. அதன்பிறகு நாம மான் பார்க்கப் போவோம். அந்தி நேரத்திலும் மான் அங்க வரும். உங்களைக் கூட்டிக்கிட்டுப் போகவரும் உங்க வீட்டுக்காரர்களிடம் நான் விபரமாகச் சொல்லுறேன்" என்றேன் நான்."ஹய்யா... நாம எல்லாம் மான் பார்க்கப் போறோம்.." அவர்களிடம்தான் எவ்வளவு குதுகளிப்பு!"டீச்சரம்மா... இன்னிக்கு இவுங்களுக்கெல்லாம் கடலைதான் சாப்பாடு... இப்ப நேரம் சரி... எல்லாருக்கும் சாப்பாட்டை கொடுத்திடுவோமா? என்று சமையல்கார ஆயா வந்து என்னிடம் சொல்லவும், சிறுவர்களுக்கு உணவு கொடுப்பதில் மும்முரமானோம். அவர்கள் வரிசையாக ஒழுங்காகப் போய் தங்கள் கைகளை சுத்தம் செய்துவிட்டு வந்து தங்கள் கதிரைகளில் அமர்ந்தார்கள். ஆயா எல்லாச் சிறுவர்களுக்கும் உணவைப் பரிமாறினாள்.சிறுவர் முன்பள்ளியும் சிறுவர் அபிவிருத்தி நிலையமும் ஒரே இடத்தில் இருப்பதால்... சிறுவர் அபிவிருத்தி நிலைய ஆயாவும் வந்து உதவி செய்தாள்.சிறுவர்களுக்கு உணவு, பால் என்பன கொடுப்பதோடு மற்றும் சுத்தம் செய்வதெல்லாம் இந்த ஆயாக்களின் பொறுப்பாக இருப்பதால் நான் போய் என் ஓய்வு அறையில் அமர்ந்தேன்.மேக மலை....இயற்கை சூழ்ந்த மலையடிவார இடம். பசுந் தேயிலைக் குன்றுகள். அதையடுத்து காடும் மலைகளுமான தொடர்கள். தேயிலைத் தோட்டத்தையடுத்து அடர்ந்த காடுகள் இருப்பதால்... அக்காடுகளிலிருந்து மான், பன்றி, மரை, குரங்கு.... ஏன் சிறுத்தைகள்கூட தேயிலைத் தோட்டத்திற்குள் நுழையும்.நான் இந்த மேகமலை எஸ்டேட்டில் உள்ள சிறுவர் முன்பள்ளிக்கு ஆசிரியையாக வந்து மூன்று மாதங்களாகி விட்டன. தினமும் டயகம டவுனிலிருந்துதான் இங்கு வருகின்றேன். டயகம டவுனிலிருந்து மேற்கு திசையில் சிறிது தூரத்திற்கு அப்பால் உள்ள தமிழக் கொல்லை என்ற இடம்தான் என் சொந்த இடம். என் அப்பா ஒரு அங்காடி வியாபாரி, ஆற்றங்கரை ஓரமாக எங்களுக்கு வீடும் சிறிது நிலமும் இருந்தது. ஆற்றை ஒட்டியே அந்த சிறு விவசாய நிலமும் இருப்பதால்...மழை காலத்தில் ஆறு பெருக்கெடுத்தால் பயிரெல்லாம் தேசமாகி விடும். போனமுறை லீக்ஸ் போட்டிருந்தோம். புரண்டு வந்த வெள்ளத்தில் எதுவுமே மிஞ்சவில்லை. இதில் அப்பாவைவிட அம்மாவுக்குத்தான் கவலை அதிகம். ஏனென்றால் அந்த நிலத்தில் எல்லா வேலையும் செய்வது அம்மாதான். என் படிப்பும் அந்த நிலம் போலத்தான். குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் வறுமை வெள்ளத்தால் எனக்கு படிப்பும் ஒழுங்காக வரவில்லை. இலவசமாக சீருடை, பாட நூல்கள் கிடைத்தாலும் கொப்பிகள் வாங்குவதற்கும், டியூசன் வகுப்புகளுக்குப் போவதற்கும் கஷ்டப்படுவேன். எனக்கு கீழ் இரண்டு தங்கச்சிமார்களும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். அப்பாவின் தொழிலிலும் ஒரு விருத்தியில்லை.எப்படியோ ஓஃஎல் வரைக்கும் படித்தேன். தகுந்த தகுதி இல்லாததினால் மேற்கொண்டு படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எப்படியோ அப்பாவுக்குத் தெரிந்த ஒரு மெடத்தின் மூலம் பாலர் முன்பள்ளியில் எனக்கு இந்த வேலை கிடைத்தது. இதுவும் சுளையாக கிடைக்கும் மாத சம்பளமில்லை. இந்த முன்பள்ளியில் எத்தனை பிள்ளைகளின் பெற்றோர்களும் மாதாமாதம் மனசு வச்சிக் கொடுக்கும் ஒரு சிறு தொகைதான் எனக்குச் சம்பளம். ஆனால் இந்தத் தோட்டத்தைப் பொறுத்தவரை நான் ஒரு டீச்சர். அனைவரும் என்னை டீச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இங்கு வேலைக்கு வந்தப்பிறகு தோட்ட நிர்வாகத்தின் மூலம் - ஒரு தொண்டர் நிறுவனம் நடத்திய பயிற்சி முகாமுக்கும் போய் வந்தேன்.சனி, ஞாயிறு தவிர.... ஏனைய நாட்களில் நான் காலை எட்டு மணிக்கு முன் டயகம டவுனுக்கு வந்துவிட வேண்டும் டவுனிலிருந்து மேக மலைக்கு போகும் மினி பஸ் எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு விடும். காலை நேரத்தில் சன்னல் ஓரமாக அமர்ந்து பயணிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.நான் பாடசாலையில் படிக்கும்போதே சுமாராக ஓவியம் தீட்டுவேன். படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தப் போது கூட ஓவியத்தில் ஈடுபாடாகத்தான் இருந்தேன். இப்பொழுது கூட இந்த சிறுவர்களுக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்து இங்கே மாட்டி வைத்திருக்கின்றேன். புதிதாக நான் இங்கே வரைந்து வைத்திருப்பது அதோ அந்த கூட்டமான புள்ளி மான்கள் படம்தான். என் மாணவர்கள் இதை பெரிதாக ரசித்தார்கள்.நான் ஒவ்வொரு நாளும் அந்த மினி பஸ்ஸில் டயகம நகரிலிருந்து மேகமலைக்கு வரும்போது சில நாட்களில் அந்த பஸ் சந்திரகாமம் பாடசாலையோடு நின்றுவிடும். அப்படிப்பட்ட நாட்களில் நான் சந்திரகாம தோட்டத்திலிருந்து மேகமலைக்கு நடந்துதான் போவேன். சந்திரகாமத்திற்கும் மேகமலைக்குமிடையே வனப்பகுதி. நன்றாக வெயில் அடித்தாலும் பாதை ஈரப்பசையாக நிழல் கட்டித்தான் இருக்கும்.சாலை ஓரத்தில் அழகான போரஸ்ட் பங்களா. அதிலிருந்து சிறிது தூரம் சென்றால் ஒரு சந்தி. வான மலை என்ற ஆன மலைக்கும் தேசிய கால்நடைப் பண்ணைக்கும் அந்த சந்தியிலிருந்து தான் பாதைகள் பிரிகின்றன. உலக முடிவு (வேல்ட்ஸ் என்ட்) என்ற இடத்திற்கும் இங்கிருந்து போகலாம். நான் நடந்து வரும்போது எத்தனையோ முறை இந்த வன எல்லையில் மான்களைப் பார்த்திருக்கிறேன். நான் இவ்வழியில் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு மானையாவது பார்க்கத் தவறுவதில்லை. அதேபோல பின்நேரம் நான் மேக மலையிலிருந்து திரும்பும் போதும் மான் என் கண்களுக்கு தென்படும். குறிப்பாகச் சொன்னால் அந்திவேளையில் அந்த ஒற்றை புள்ளிமான்! பெரும்பாலும் அந்தி நேரத்தில் மேக மலையிலிருந்து டவுனுக்குப் போக வாகனங்கள் கிடைக்காது. நான் நடந்துதான் போவேன்.தனிமையில் நடக்கும்போது மனம் ரம்யமாகவே இருக்கும். "டீச்சரம்மா அந்தி நேரத்தில் இங்கிருந்து நடந்து போறீங்க. சில நேரம் வனப்பகுதியில இருந்து சிறுத்த வந்தாலும் வரும். போன வாரம் நம்ம தோட்டத்து ஆளுங்க சிறுத்தையைக் கண்டிருக்காங்க. நாய்களையும் சிறுத்த கொன்னு போட்டிருக்கு. ஏதுக்கும் பார்த்தே போங்க" ன்னு யார் யாரோ என்னிடம் சொல்லியும் இருக்காங்க. நானும் அந்த அச்சமெல்லாம் தவிர்த்துதான் நடக்கின்றேன். ஆனா இதுவரைக்கும் மான் என் கண்களில் தென்பட்டது போல ஒரு சிறுத்தைகூட என் கண்களில் தென்படவில்லை.ஏற்கனவே அந்த வனத்தில் உள்ள சிறுத்தைகளில் ஒன்று தேயிலைக் காட்டுக்குள் நடமாடுவதாக பேச்சும் அடிபடுகிறது. அதை பொதுமக்களும் நம்புகிறார்கள். சிறுத்தை மனிதர்களையும் அடித்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. இதனால் இந்த முன்பள்ளியிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மான் பார்க்க தன் பிள்ளைகளை வனப் பகுதிக்கு அனுப்புவார்களா?மத்தியானம்சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துப்போக வந்த பெற்றோர்களிடம் நான் என் திட்டத்தை விளக்கமாகச் சொன்னேன். சில பெற்றோர்கள் மறுப்புத் தெரிவித்து விட்டனர். சிலரோ,"அதுக்கென்னாங்க டீச்சர் நீங்க எங்க பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய் மானைக் காட்டுங்க. ஆனா... நீங்கப் போற அந்த நேரத்தில மான் அங்க வந்து மேயுமாங்கிறதுதான் சந்தேகம். நாம நெனைக்கிற நேரமெல்லாம்... நமக்காக மானு அங்க வராது. ஆனா ஒங்க ஆசையை நாங்க கெடுக்கல்ல. எங்க பிள்ளைகளை கூட்டிக்கிட்டுப் போங்க..." என்றனர்.மாலை மூன்று மணி.பெற்றோர்கள் அனுமதித்த பிள்ளைகள் எல்லாரும் முன்பள்ளிக்கு வந்து விட்டனர். அவர்களோடு சற்று வயதான ஒருவரும் வந்திருந்தார்."டீச்சரம்மா நானும் ஒங்களோட வனப்பகுதிக்கு வர்றேன். காட்டப்பத்தி எனக்கு எல்லாமே தெரியும். அதோட நானும் இந்த ரெண்டு மூணு நாளா போரஸ்ட் பங்களாப் பக்கம் ஒரு மானு மேயிறதைப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். முன்னயெல்லாம் இந்த தோட்டத்தில உள்ள கொஞ்சப் பேரு மான் வேட்டை, மரை, பன்றி வேட்டைன்னு மிருகங்களை வேட்டையாடி வந்து அதுங்க இறைச்சிகளை விற்பனை செய்வாங்க. நான் அப்பவே அந்த விலங்கு வேட்டைக்கு எதிர்ப்பு தெரிவிச்சவன்."எதுக்கிடா இந்த வாயில்லா ஜீவன்களை கொன்னு அது எறச்சியை வித்து வாழுறீங்க! பாவண்டா விலங்குகளை கொல்லாதீங்க!ன்னு அப்பவே சொல்லுவேன். இப்ப அரசாங்கமே பார்த்து அந்த மிருக வேட்டைக்கு தடைப் போட்டிறிச்சி. இல்லாட்டிப் போனா மானு, மரைன்னு கொன்னுக்கிட்டுத்தான் இருப்பானுங்க" என்றார் அவர்."அட இந்த காடுகள் சூழ்ந்த இடத்திலேயும் இப்படி ஒரு ஜீவகாருண்ணிய போதகரா?" என்று அந்த முதியவரைப் பார்த்து நான் வியந்தேன்.மூன்று மணிக்குப் பிறகு...நாங்கள் அங்கிருந்து காட்டுப் பங்களா பக்கம் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். அந்த முதியவரும் எங்களோடு வந்தார்."டீச்சர் ஒரு மான் மட்டுமா வரும்?""அதுக்கு கொம்பு இருக்குமா?""நீங்க வரைஞ்சி வைச்சிருக்கிற மாதிரி அது மேல புள்ளிகள் இருக்குமா?"என்று பலவித கேள்விகளை அந்த நாலுக்கும் - ஆறுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சிறுவர்கள் என்னை நோக்கிக் கேட்டபடி வந்தனர். நாங்கள் தேயிலைச் செடிகளைக் கடந்து வனப்பகுதி தொடங்கும் காட்டுப் பங்களாவை அண்மித்தோம்.கலர்...கலர் துணிகளில் கொடி எல்லாம் கட்டி இருந்தார்கள். காலையில் நான் இந்த வழியாக போன போது இந்தக் கொடிகளெல்லாம் இல்லை. ஆனால் இப்பொழுது...?"ஏங்கய்யா இந்த போரஸ்ட் பங்களாவில் ஏதும் விசேஷம்மா?" என்று எங்களுடன் வந்த பெரியவரை நோக்கிக் கேட்டேன்."டீச்சரம்மா... ராவைக்கித்தான் விடிய விடிய விசேஷம் நடக்கப்போவுது. யாரோ ஒரு மந்திரியோட மகன் தன் கூட்டாளிமார்களோடு வந்து இங்க கும்மாளம் அடிக்கப் போறானாம். டான்ஸ் நிகழ்ச்சி எல்லாம் நடக்குமின்னு, இங்க பூஞ்செடி தோட்டத்தில வேலை செய்யும் என் சொந்தக்காரன் ஒருத்தன் நேத்து அந்திக்கே ஏங்கிட்ட சொல்லிட்டான். இந்தப் பங்களாவில அடிக்கடி ராவு நேரத்தில் ஏதாவது களியாட்டம் நடக்குமாம்.ஏஞ் சொந்தக்காரனும் ஏம் மாதிரிதான். விலங்குகளை வதை செய்வதை தாங்கிக்க மாட்டான். ரொம்ப இரக்கக் குணம் உள்ளவன். இந்த பங்களாவில உள்ளவனுங்க காட்டு சேவலை அடிச்சி சமைச்சாலும்... ஏஞ் சொந்தக்காரன் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டான். விலங்குகளை வேட்டையாடுவது அவனுக்கும் பிடிக்காது..." என்ற முதியவர்,"வாங்கம்மா... இன்னும் கொஞ்சந்தூரம் போய் பார்ப்போம். மான் எப்படியும் தென்படும். ரோட்டு ஓரமா வந்து மான் புல் மேயும்" என்றார்."மானை சிறுத்த கண்டா கொன்னுப்புடும்ன்னு சொல்லுறாங்களே.... சிறுத்த மானைக் கொல்லுமா?" மற்றொரு சிறுமி சிறிது பயத்தோடு கேட்டாள்."அட... எந்த சிறுத்தையும் இங்க வராது" என்ற பெரியவர் தன் வலது கையை காட்டுப் பக்கம் நீட்டி, "சிறுத்தையெல்லாம் அதோ தெரியுதே அந்த ஆனைமலைக் காட்டுலதான் திரியும். இங்க இந்த ரோட்டுப் பக்கமெல்லாம் சிறுத்த வராது. நீ தைரியமாக இரு. பயப்படக்கூடாது" என்றார்."அப்ப ஏன் மானை இன்னும் காணோம். அந்த மானை சிறுத்தை கொன்னிருக்குமோ?" என்று ஒரு சிறுவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக ஒரு கறுப்பு நிற வாகனம் எதிர் பக்கமிருந்து வந்துகொண்டிருந்தது. "எல்லாரும் ஒதுங்கியே நில்லுங்க. அங்க வருவது மந்திரி மகனோட வாகனமாகத்தான் இருக்கும்" என்றார் முதியவர்."ஐயா மந்திரியோட மகன் வர்றதால இன்னிக்கி மான் இந்தப் பக்கம் வராது" என்று நான் சிரித்தபடியே சொல்லிவிட்டு சிறுவர்களை நோக்கினேன். என் வார்த்தைக்குப் பின் அவர்களின் முகமெல்லாம் வாடியது.இன்றைக்கு இவர்களுக்கு மானைக் காட்ட முடியாமல் ஏமாற்றத்தோடுதான் திரும்பிப் போக நேருமோ...? என்று ஒரு அவநம்பிக்கையும் எனக்குத் தோன்றியது. வாகனம் அருகில் வந்த போதுதான் தெரிந்தது அது பொலீஸ் வாகனமென்று.வேகமாக வந்த வாகனம் காட்டுப் பங்களாவின் முகப்பில் போய் நின்றது. வாகனத்திலிருந்து அவசரம் அவசரமாக குதித்த பொலீஸ்காரர்கள் பங்களாவின் உள்ளும் புறமுமாக ஓடினார்கள்."என்னா பெரியவரே.... மந்திரியோட மகன் வரப்போறான்னு இப்பவே அவனுக்கு பொலீசு பாதுகாப்பெல்லாம் தடப்புடலா வந்திருச்சே" என்றேன்."அது இல்லம்மா வேற ஏதோ விபரீதம் நடந்திருச்சிப் போல..." என்று சொல்லிக் கொண்டே முதியவர் பங்களாப் பக்கம் நெருங்கிப் போக நானும் சற்று பங்களாப் பக்கம் முன்னேறிப் போய் நின்றேன். சிறிது நேரத்திற்கெல்லாம்... பங்களாவின் பின்பக்க காம்பிராவிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட உடம்பில் பாதி வரைக்கும் தோல் உரிக்கப்பட்ட பரிதாப நிலையில் ஒரு மானின் உடலை சுமந்து வந்த இரு பொலிஸார் அதை வண்டிக்குள் போட்டதைப் பார்த்த எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது. உடம்பே நடுங்கியது. இதைத் தொடர்ந்து ரத்தக்கறை படிந்த உடுப்போடுள்ள ரெண்டு மூன்று ஆசாமிகளை அடித்து தர.... தர... வென்று இழுத்துக்கொண்டு வந்த சில பொலிஸார் அந்த ஆசாமிகளையும் வண்டிக்குள் தள்ள இன்னும் ரெண்டு பொலிஸ்காரர்கள் இரத்தக்கறைபட்ட ஆயுதங்களோடு வந்தனர்.இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முதியவர் என் பக்கம் திரும்பி..."டீச்சரம்மா இந்தக் கொலக்காரப் பாதகணுங்க ரவ்வு நடக்கப்போகும் களியாட்டத்துக்காக வாயில்லாத புள்ளிமான கொன்னு விருந்துப்போட எத்தணிச்சானுங்க.. ஆனா... இப்ப கையும் களவுமா பொலிஸ்காரங்க கையில மாட்டிக்கிட்டானுங்க. இந்த மான் எறைச்சிக்கு ஆசப்பட்ட அந்த மந்திரியோட மகனையும் உள்ளுக்குத் தள்ளணும். அவன்தான் அம்ப எய்து விட்டவனா இருக்கணும்" என்றவர்,"இந்தக் கொலகார பாதக செயல அவசரமா டவுன்ல உள்ள பொலிசுக்கு தெரியப்படுத்தியது நிச்சயமா என் சொந்தக்காரனாதான் இருக்கணும். அவனால இந்த மாதிரி கொடூரத்தை எல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது. எப்பவும் அவன் கிட்ட செல்போனும் இருகு;கும். அவனால இந்த கொலைகாரன்களை தட்டித்தடுக்க முடியாவிட்டாலும் பொலிசுக்கு தகவல் சொல்லும் அளவுக்கு அவன் கிட்ட தைரியம் இருக்கு" என்றார் முதியவர்."டீச்சர் இன்னிக்கி மான் வராதா...?" சற்று தூரத்தில் நிற்கும் சிறுவர்களில் ஒருவன் காட்டுப்பகுதியை பார்த்தபடி கேட்க..."மான் இனிமே இங்க வராதுடா தம்பி. ரெண்டு கால் உள்ள கொடூர மனித சிறுத்தைங்க அந்த இளமான இறைச்சிக்காக கொன்னு கொதறிப்புடுச்சிங்க..." வேதனையோடு சொன்னார் பெரியவர்."அப்ப மானு செத்துப் பொயிருச்சா?" கண் கலங்க கேட்டாள் ஒரு சிறுமி... "செத்துப் போவுல... அதை சாவடிச்சிட்டானுங்க" என்ற பெரியவரின் குரல் சோகமாக ஒலித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மானின் உடலையும் சுமந்து கொண்டு அந்தக் காட்டுப் பங்களாவிலிருந்து கிளம்பியது காவல்துறை வண்டி.(கற்பனையும் உண்டு) //////
  • கிடைக்கவில்லை Kapithan. ஆனால் அவர் ஓவியம் வரையும் ஒரு படம் இருக்கிறது
  • இதனால மூளைக்கு... ஒன்றும், ஆபத்து இல்லையே....    🤣