Jump to content

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற நிஷாந்த டி சில்வா ஒரு தமிழர்! சரத் வீரசேகர வெளியிட்டுள்ள தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா இலங்கையிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றிருந்தார்.

குறித்த அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் பேசிய ஸ்ரீ லங்கா பூகோள ஒன்றியத்தின் உறுப்பினர் ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது

கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார்.

அவர் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவராவார். இந்த நிலையில், அவருக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எவ்வாறு விசாவை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது.ர்.

இதுவொருபுறமிருக்க, இராணுவ முகாம்களில், தமிழ் பெண்களும், சிறுமிகளும் தற்போதும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.

தானும் அவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்கொண்டதாக நிமல்கா பெர்னாண்டோவும் கூறுகிறார்.

நிமல்கா பெர்னாண்டோவின் மகனான கனிஷ்க ரத்னப்பிரிய என்பவரே சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்படுகிறார்.

அவர்கள் அனைவரும், இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் யார் யாருக்கு எதிராக செயற்படுவார்கள் என்பது தெரியாது என்று பேசிய அவர், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ராஜித சேனாரட்னவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் வின் 

Link to comment
Share on other sites

13 minutes ago, பெருமாள் said:

கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்

என்னதான் சிங்களம் வாய்கிழியக் கத்தினாலும் தமிழன் இன்றி அதனால் நாட்டை அரசாட்சி செய்முடியாது. இலட்சக்கணக்கில் சிங்களப் படைகள் இருந்தாலும் கருணா அம்மான் என்ற ஒரு தமிழன் இல்லாமல், தனிப்பெரும் தலைவன் பிரபாகரன் அவர்களின் படையை அழித்திருக்க முடியாது என்பது மறைக்க முடியாத உண்மை.  

Link to comment
Share on other sites

19 minutes ago, Paanch said:

என்னதான் சிங்களம் வாய்கிழியக் கத்தினாலும் தமிழன் இன்றி அதனால் நாட்டை அரசாட்சி செய்முடியாது. இலட்சக்கணக்கில் சிங்களப் படைகள் இருந்தாலும் கருணா அம்மான் என்ற ஒரு தமிழன் இல்லாமல், தனிப்பெரும் தலைவன் பிரபாகரன் அவர்களின் படையை அழித்திருக்க முடியாது என்பது மறைக்க முடியாத உண்மை.  

நீண்ட  போராடியும்  வெற்றி பெற முடியாத தமிழன் காட்டிக்கொடுப்பில்  உடனடி வெற்றியை சாதித்துள்ளான். தமிழர்கள்  இத்தொழிலில் துறை சார் நிபுணர்களாக இருப்பதும் ஒரு பெருமை தான்.  

Link to comment
Share on other sites

"கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார்."

பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க கதிர்காம கந்தன் அருளால் பிறந்ததன் காரணமாக இன்றுமுதல் நீ கந்தப்பா எனவும் அழைக்கப்படுவாய் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இலங்கையில் இருக்கும் போது மகிந்தா கூட்டணியோடு சேர்ந்து இல்லாத பாதகம் எல்லாம் செய்து போட்டு  அவற்ற உயிரை காப்பாற்ற சுவிஸுக்கு போயிருக்கார்...இவரும் ஒரு போர்க்குற்றவாளி தான்...எத்தனை அப்பாவிகள் இவரால் இறந்திருப்பார்கள் ...இவருக்கு அடைக்கலம் கொடுத்த தன மூலம் சுவிஸ் அரசும்  தவறிழைத்து விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனாலதான் இவர்கள் இந்தப் பதறு   பதறுகிறார்களோ? கருணா மாதிரி இவரும் தன் தலைவனை காட்டிக் குடுத்து துரோகம் செய்தால் இவர்கள் நிலை.....? துரோகம் கத்தியைப் போன்றது. மற்றவனை குத்தும்போது சுகமாக இருக்கும். அதுவே தன்னைக் குத்தும்போது கொடூரமாக இருக்கும். இது எல்லாத் துரோகிகளுக்கும்பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.