Jump to content

யாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

குறைபாடு இருக்குமா இருந்தால் அதட்கு அந்தந்த சபைகளின் தவறே தவிர சம்பந்தனை குறை சொல்ல முடியாது. அவருக்கு வயது சென்றபடியாலதான்

வயது போனால் வீட்டுக்குள் படுத்துகிடப்பது தானே அல்லது பேசாமல் முதியோர் இல்லத்தில் போய்  சேருவதுதானே அங்கை இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் சனமாவது  நிம்மதியாய் இருக்கும்கள் .

Link to comment
Share on other sites

அண்மையில் இந்தியா உறுதியளித்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 100 மில்லியன்கள் வரை சூரியமின் உற்பத்திற்கு என கூறப்பட்டிருந்தது. அது எங்கே எப்பொழுது என தெரியவில்லை. ஆனால், அது அநேகமாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்காக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

On 12/11/2019 at 4:16 PM, பெருமாள் said:

ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக

மீற்றருக்கும் அடிக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகவியலாளர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

78854446_455041802055384_554987935317046

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து  அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

78891908_701157650410650_252962518918076

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு,  பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர் .

https://jaffnazone.com/news/14887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  சம்பந்தமான  முகநூல்  பதிவொன்று

 

 

Shanmugarasa Vadivelu
 

ஜேர்மனி சென்றிருந்தபோது இந்த காற்றாலை மையத்தை கண்டேன். இதுகுறித்து ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்ட விடயங்களை பதிவின் இடையில் கூறுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை மையம் (Wind Farm) அமைக்கப்படுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவதாக அறிகிறேன். அந்த மக்கள் வேண்டுமென்றே திசைதிருப்பப்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. காற்றாலை மையம் எமது சூழலுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அந்த மக்கள் விளங்கிக்கொண்டால் இதற்கான எதிர்வினையை கைவிடுவர்.

காற்றாலை மையத்தால் சூழலுக்கு அபாயகரமான பாதிப்புக்கள் ஏற்படுமா?

இல்லை. சிலர் காற்றின் போக்கு திசைதிருப்பப்பட்டு மழைவீழ்ச்சி குன்றும் என்றும் குறித்த பகுதியில் பறவைகள் அழிவடையும் என்றும் தமக்குத்தெரிந்த விஞ்ஞான விளக்கங்களை அடித்துவிடுகிறார்கள். இது உண்மையல்ல.

ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து போலாந்துக்குச் செல்லும் சாலையோர வயல்வெளியொன்றில் பல காற்றாலைக் கம்பங்கள் நிறுவப்பட்டு சிறகுகள் சுழன்றுகொண்டிருந்தன. ஒரு புறநகர் பகுதியில் அமைந்திருந்தது அந்த காற்றாலை மையம். "ஜேர்மனியின் மின்னுற்பத்தியில் காற்றாலைகளின் பங்களிப்பு என்ன?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.

கொஞ்சம் உற்சாகமாக கூறினார், "ஆம், இது எமது நாட்டின் சுத்தமான சக்தி (Clean Energy) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் மலிவானது. அத்துடன் எரிபொருள் செலவுகள் இல்லாத ஒரு தற்சார்பு உற்பத்திப்பண்பைக் கொண்டது. ஜேர்மனி இவ்வாறான தற்சார்பு உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது."

"சரி சூழல் சார்ந்த பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லையா?" என்று கேட்டேன்.

"சூழல் சார்ந்து பாரதூரமான பிரச்சினைகள் எதுவுமில்லை. இங்கு சில போராட்டக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்று பார்த்தால், எரிச்சலூட்டும் இரைச்சல், சூரிய வெளிச்சத்தை மறைக்கும் காற்றாலைக் கம்பங்களினதும் சிறகுகளினதும் நிழல் மற்றும் பறவைகளுக்கும் வௌவால்களுக்கும் ஆபத்தை விளைவிக்கவல்ல காற்றாடிச் சிறகுகள் என்பனதான். இவை ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை. ஆனால், மக்கள் குடியிருப்புக்களிலிருந்து சுமார் 1000மீட்டர்களாவது தள்ளி காற்றாலைக் கம்பங்களை நிறுவவேண்டுமென ஜேர்மன் அரசு நிபந்தனை விதிக்கவுள்ளது. தற்போது சுமார் 38% மின்சாரத் தேவை காற்றாலை மற்றும் சூரியக்கலம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களினாலேயே நிரப்பப்படுகிறது. இதனை இனிவரும் காலங்களில் அறுபது வீதத்துக்கும் மேல் அதிகரிப்பதே அரசின் இலக்காக உள்ளது" என்றார்.

"சரி, இரைச்சல் ஏன் மக்களை எரிச்சலூட்டுகிறது? நிழலுக்கு ஏன் பயப்படுகிறார்கள்?"

"காற்றாடிகள் சாதாரணமாக சுழலும்போது இரைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் பலத்த காற்று வீசும்போது இரைச்சல் பயங்கரமாய் இருக்கும். இது ஒரு சாதாரண விமானம் அருகாக செல்வதுபோல இருக்கும். அருகிலே இருப்பவர்களுக்கு எரிச்சல் வரும்தானே? (சிரிக்கிறார்) நிழலுக்கு பயப்படுகிறார்கள். மிக உயரமான கம்பங்கள் மிகவும் அகலமானவை. இவை ஒரு வீட்டையே மாதக்கணக்கில் வெய்யில் படாமல் மறைக்கவல்லவை. இங்கு குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம்தான் மக்களின் வாழ்வியல் தேவை. கொந்தளிப்பார்கள்தானே? (மீண்டும் சிரிப்பு) என்னவோ, உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு உலைகள், அனல்மின் நிலையங்கள், எரிசக்தி மையங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் இவை ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவை இல்லை." என்றார்.

அப்போதுதான் நினைத்தேன், ஜேர்மனியிடம் இந்த வல்லரசுகள் கற்பதற்கு நிறைய உள்ளன என்பதை.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை அமைக்கப்படுவதன் சாதக பாதகங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். இதுதொடர்பில் நண்பர்களின் கருத்துக்களையும் இங்கு எதிர்பார்க்கிறேன்.

 
 
 
Link to comment
Share on other sites

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாவகச்சேரி - மறவன்புலவில் காற்றாலை அமைத்தவர்களை அடித்து விரட்டிய மக்கள்..! பொலிஸ் குவிப்பால் பதற்றம்..

78854446_455041802055384_554987935317046

சாவகச்சேரி- மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்

மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து  அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

78891908_701157650410650_252962518918076

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு,  பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர் .

https://jaffnazone.com/news/14887

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இந்த காற்றாலைகள் அமைவது பிழையானதே வடகிழக்கில் ஆளரவமற்ற இடங்கள் எவ்வளவோ இருக்க மக்கள் குடியிருப்பு பகுதியை ஏன் தெரிவு செய்தார்கள் ?

இல்லாவிடின் இந்த மக்களின் கொந்தளிப்புக்கு பின்னால் காசு சம்பாதிக்கும் அரசியல் வாதி பின்னுக்கு நிட்கிறார் தனியார் அமைப்புத்தானே மக்களை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க வழி செய்கிறார் போல் உள்ளது .ஏற்கனவே உள்ள மின் ஆலைகளை அமைக்கும்போது எந்த பிரச்சனையும் வரவில்லையே ?

இதற்கு இலகுவான வழி  உள்ளூர் ஊடகங்களில் காற்றாலைகளின்  நன்மை தீமைகளை ஒப்பிட்டு பொது மக்களுக்கு விளக்கம் கொடுப்பது ஒரு அனல் மின் நிலையத்தை விட காற்றாலைகளின்  நன்மையை விளங்கப்படுத்துவது இலகுவானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு  முகநூல் பதிவு:

L’image contient peut-être : ciel, nuage, arbre et plein air
Vadakovay Varatha Rajan

காற்றாலைகள்
-----------------

அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் .
இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் .
இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன்.
1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது ,
A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் .
B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன.
C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை .
2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை .
3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை .
4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை .
5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது .
6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் .
7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதில்லை .
8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது .
குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது .
9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை .
10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் .
ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் .
உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன .

எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும்

இலங்கை அல்ல வளர்ந்த நாடுகளே முடிவு கட்டி விட்டன 2035 க்கு முன்  அனல் மின் நிலையம் தொடக்கம் அணுமின் வரை முற்றாக நிறுத்துகின்றனர் காற்றாலைகள் கடல் அலைகள் சூரிய சக்தி போன்ற இயற்கையில் கிடைக்கும் சுற்று சூழலுக்கு பாதிப்பு  குறைவான சக்தி வழங்கலை  பெறுவதை ஊக்குவிக்கின்றனர் .

இங்கு சனம்  கொந்தளிக்க காரணம் தனியார் நிறுவனம் கையகப்படுத்திய காணிகள் பற்றிய தெளிவின்மை இரண்டாவது ஆலைகள் அமைவிடம் குடியிருப்பு பகுதிக்கு நெருக்கமாய் உள்ள காரணம் என்று முகநூல் உறுதி செய்யாத செய்திகள் கூறுகின்றன மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய உள்ளூர் ஊடகங்கள் இந்த விடயத்தில்  அமைதியாக இருப்பது சந்தேகமாய் உள்ளது அதாவது அந்த ஏரியா அரசியல் வாதியை  தனியார் கம்பனி இன்னும் கவனிக்க இல்லை போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

✔️😥

தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் இலாபங்களுக்காக சமயயோசிதமாக திட்டமிட்டு மக்களை அப்படி செய்ய பழக்கி உள்ளார்கள்.
மக்களும் எதையும் யோசிக்காமல் தங்களுக்கு தாங்களே தீமை செய்து கொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

On 12/13/2019 at 8:12 PM, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

 

On 12/13/2019 at 8:12 PM, Rajesh said:

எந்த நல்லதை செய்தாலும் எதிர்த்து பழகிட்டாங்கள்!

உண்மை. செம்மறி ஆடுகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.