Jump to content

தனி நாடாகிறது போகைன்வில்

ampanai

Recommended Posts

2839

பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது.
இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில்,  இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/92378/தனி-நாடாகிறது-போகைன்வில்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

"யார் யாருக்கெல்லாமோ தனிநாடு அமையுது, உசிரைக் குடுத்து போராடியும் சில பரதேசிகளினால் தடைபடுகிறது. இனியாவது நல்லது நடந்தால் சரி..!"

Link to comment
Share on other sites

13 minutes ago, ராசவன்னியன் said:

tenor.gif

"யார் யாருக்கெல்லாமோ தனிநாடு அமையுது, உசிரைக் குடுத்து போராடியும் சில பரதேசிகளினால் தடைபடுகிறது. இனியாவது நல்லது நடந்தால் சரி..!"

இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.

இலங்கைத்தமிழர் இந்தியாவிடம் ஓடுவது தொடரும் வரை, இந்தியா இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இந்தியர்கள் இலங்கை பிரச்சினையில் தலையிடாதிருப்பதே இலங்கைத்தமிழருக்கு செய்யும் பெரும் நன்மையாக இருக்கும். 

தமிழருக்கு தனிநாடு வேண்டுமென்றால், தமிழ்நாட்டு தமிழரே அதற்கானவற்றை செய்ய வேண்டும், இலங்கை தமிழரை அழிக்காமல்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கற்பகதரு said:

இலங்கைத்தமிழர் இந்தியாவிடம் ஓடுவது தொடரும் வரை, இந்தியா இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

கோத்தா வந்த பின்னர் கூட்டமைப்பினர் டெல்லி செல்லவில்லை.

6 minutes ago, கற்பகதரு said:

இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.

அவ்வாறுதான் சிங்களமும் எண்ணுகின்றது. ஆனால், பூகோள அரசியல் மாற்றங்கள் மாறியவண்ணேமே உள்ளன. பாகிஸ்தானை பலமிழக்க செய்ய இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது. இன்று, சீன அரசை பலமிழக்க வைக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது. இல்லை என்றால், இன்னும் இருபத்துவருடங்களில் இந்தியாவே இருக்காது.

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

இது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா? இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கைலாஷ்க்கு றிக்கெற் போட அலையினம்.. இதென்ன இந்த வார புது வரவு..👍

Link to comment
Share on other sites

8 hours ago, கற்பகதரு said:

இது உங்களுடைய தனிப்பட்ட கருத்து இல்லையா? இந்திய அரசோ, அதன் ஆலோசகர்களோ இப்படி சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே, இந்தியா எந்த காலத்திலும் இலங்கைத்தீவில் வேறு ஒரு நாடு உருவாக இடமளிக்காது.

ஒரு சோவியத் யூனியன் 15 நாடுகளாக உடையும் என எந்த சோசலிச தலைமையும் எண்ணியதில்லை. 
இரண்டு ஜெர்மனைகளையும் இணைக்க விடுவார்கள் என பல ஜெர்மானியர்கள் கனவுடன் இறந்துபோனார்கள். 

இந்தியாவின் கொள்கையும் மாறும். மாற்றப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2019 at 3:30 PM, கற்பகதரு said:

On 12/11/2019 at 3:30 PM, கற்பகதரு said:

தமிழருக்கு தனிநாடு வேண்டுமென்றால், தமிழ்நாட்டு தமிழரே அதற்கானவற்றை செய்ய வேண்டும், இலங்கை தமிழரை அழிக்காமல்.

👍

அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்கியவர்கள் தனிநாட்டை கைவிட்ட பின்பு கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக தெரிவித்தவர்கள் 6 கோடி பெரும் தொகை தமிழர்கள் கொண்ட தமிழ்நாடு தனிநாடு கேட்டு போராடலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2019 at 3:39 PM, ampanai said:

பாகிஸ்தானை பலமிழக்க செய்ய இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது. இன்று, சீன அரசை பலமிழக்க வைக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது.

பாகிஸ்தானை பலமிழக்க செய்ய இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது மாதிரி  சீனாவை பலமிழக்க வைக்கவேண்டும் என்றால் இந்தியா சீனாவை பிரித்து தானே ஒரு தேசம் உருவாக்க வேண்டும்? இந்தியா புலிக்கு எதிராக யுத்தம் செய்தபோது இனி அமெரிக்கா புலி ஆதரவு நிலைபாடு எடுக்கும் தமிழீழம் கிடைக்கும்  என்றும் பேசியவர்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பாகிஸ்தானை பலமிழக்க செய்ய இந்தியா வங்கதேசத்தை உருவாக்கியது மாதிரி  சீனாவை பலமிழக்க வைக்கவேண்டும் என்றால் இந்தியா சீனாவை பிரித்து தானே ஒரு தேசம் உருவாக்க வேண்டும்? இந்தியா புலிக்கு எதிராக யுத்தம் செய்தபோது இனி அமெரிக்கா புலி ஆதரவு நிலைபாடு எடுக்கும் தமிழீழம் கிடைக்கும்  என்றும் பேசியவர்கள்.

சீனாவை புவியியல் ரீதியாக பிரிப்பது கடினம். ஒரு காரணம், அவர்களின் சோவியத்த யூனியன் இல்லை இந்தியா போன்று பலமான சிறுபான்மை இனங்களை கொண்டிருக்கவில்லை. சீனாவில் உள்ள சிறுபான்மை முஸ்லீமகளை அவர்கள் பலம் கொண்டு அடங்குகின்றனர். சீனாவின் பலவீனமாக கருதப்படுவது அங்கில்லாத சனநாயகமும் மறுக்கப்படும் மனிதஉரிமைகளும். அதில் ஓட்டைகள் விழாமல் இருக்க சீன அரசு கவனமாக உள்ளது.   

Link to comment
Share on other sites

On 12/12/2019 at 9:03 PM, ampanai said:

சீனாவை புவியியல் ரீதியாக பிரிப்பது கடினம். ஒரு காரணம், அவர்களின் சோவியத்த யூனியன் இல்லை இந்தியா போன்று பலமான சிறுபான்மை இனங்களை கொண்டிருக்கவில்லை. சீனாவில் உள்ள சிறுபான்மை முஸ்லீமகளை அவர்கள் பலம் கொண்டு அடங்குகின்றனர். சீனாவின் பலவீனமாக கருதப்படுவது அங்கில்லாத சனநாயகமும் மறுக்கப்படும் மனிதஉரிமைகளும். அதில் ஓட்டைகள் விழாமல் இருக்க சீன அரசு கவனமாக உள்ளது.   

The Han (汉) people are the largest ethnic group in mainland China. In 2010, 91.51% of the population were classified as Han (~1.2 billion)[1]. Besides the Han Chinese majority, 55 other ethnic (minority) groups are categorized in present China, numbering approximately 105 million people (8%), mostly concentrated in the bordering northwest, north, northeast, south and southwest but with some in central interior areas.

The major minority ethnic groups in China are Zhuang (16.9 million), Hui (10.5 million), Manchu(10.3 million), Uyghur (10 million), Miao (9.4 million), Yi (8.7 million), Tujia (8.3 million), Tibetan (6.2 million), Mongol (5.9 million), Dong (2.8 million), Buyei (2.8 million), Yao (2.7 million), Bai (1.9 million), Korean (1.8 million), Hani (1.6 million), Li (1.4 million), Kazakh (1.4 million) and Dai (1.2 million).[2]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.