Jump to content

தமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்


Recommended Posts

பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து  செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன்  இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார்

வீடியொவொன்றில்  பொறிஸ்ஜோன்சனின் இந்த  கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலை முன்னிட்டு  டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர்  இதனை தெரிவித்துள்ளார் 

 

வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு  செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என  பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும்,மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்,

boris_jhon_de_12.jpg

பிரெக்சிட்டை நிறைவேற்றினால்  நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம்  ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/70893

 

Link to comment
Share on other sites

பிரித்தானியா பாராளுமன்றத் தேர்தல் 2019! எமக்காக குரல் கொடுக்கும் நண்பர்களை வென்றெடுங்கள்!

 

தமிழினம் பேரழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒரு இனம். அதனை உலகத்தில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும்; இலங்கை தீவின் உள்ளேயும் வெளியேயும் இருந்து தமிழினத்தை பாதுகாக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க விடக் கூடாது என்ற சூழ்ச்சி திட்டத்துடன் ஒரு கொடூரமான இன அழிப்புத் திட்டத்தினை நிறைவேற்றும் முக்கியமான சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ச, அதிஉச்ச அதிகாரங்களுடன இன்று இலங்கை ஜனாதிபதியாக வந்துள்ளார். இந்த பின்புலத்தில்  இலங்கையிலுள்ள எம் இனத்திற்காக முழு வீச்சுடன் குரல் கொடுத்து அவர்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களில் தங்கியுள்ளது

தாம் வாழும் நாடுகளின் அரசியல், ராஜதந்திர சக்திகளின் மத்தியில் தமிழ் மக்கள் ஆளுமை உள்ளவர்களாக எழுந்து நிற்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக 2009 மே இன அழிப்பின் உச்சத்தின் போது பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்ததுடன் தொடர்ச்சியான பன்முக அழுத்தங்கள் மூலம் இந்த நாட்டின் கொள்கையை சர்வதேச விசாரணைக்கு சார்பாக மாற்றியமைத்தது. சோர்வு, தயக்கமின்றி அரசியல் ராஜதந்திர அழுத்தங்களை முழு வீச்சுடன் நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது

தனி மரம் தோப்பாகாது. தமிழ் மக்கள் தனித்தனியாக நின்றோ அல்லது இந்நாட்டின் மக்களை தம் பக்கம் திருப்பாமலோ எம் மக்களின் பாதுகாப்பையும் எமது தேசத்தின் விடுதலையையும் இன்றுள்ள சூழ்நிலையில் உறுதிப்படுத்த முடியாது. இந் நாட்டின் அதிகார பீடங்களில் எமக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கன ஒரு சந்தர்ப்பம் இன்று உங்கள் முன் வந்துள்ளது.

நாளை இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. அது தமிழர்களின் அபிலாசைகளையும் மற்றும் எம் தேசத்தின் எதிர்காலத்தையும் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாற்றியமைக்கக் கூடியது. உலகின் சக்தி வாய்ந்த முடிவெடுக்கும் மட்டங்களில் எமக்கான நண்பர்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது

அதனால் நாளைய தேர்தலில், எந்தக் கட்சியாக இருந்தாலும் எம் மக்களின் அபிலாசைகளுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய நண்பர்களை வென்றெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி எம் மக்களின் ஜீவாதாரமான நலன்களை முன்னகர்த்த வேண்டுமாறு உரிமையுடன் கோருகின்றோம். இதற்கான வழிவகைகளையும் ஆவணங்களையும் ஒருங்கிணைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளது

தமிழ் மக்கள் செயல் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது

நண்பர்களை வென்றெடுப்போம்! எம் தேசத்தின் இருப்பினை நிதர்சனமாக்குவோம்!

தொடர்புகளுக்கு 0208 808 0465, 07508365678, 07943100035, 07814486087



--

Best Wishes

S. Sangeeth     

BTF Media Coordinator

+44 (0) 7412 435697

Disclaimer

This email and any attachments with it are confidential and intended solely for the use of the individual or entity to whom they are addressed. If you have received this email in error please let us know at the earliest. Any unauthorised use, disclosure, or copying is not permitted.

Every effort has been made to ensure that this e-mail is virus free. However, the British Tamils Forum does not accept any liability in respect to an undetected virus and recommends that the recipient(s) use an up to date virus scanner.

Registered Office: British Tamils Forum, Unit 1, Fountayne Business Centre, Broad lane, London, N15 4AG

Telephone: +44(0)20 8808 0465

Website: www.britishtamilsforum.org  

E-mail: info@britishtamilsforum.org  

Twitter: https://twitter.com/tamilsforum

Facebook: https://www.facebook.com/BritishTamilsForum

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.