Jump to content

பிரதமர் - எதிர்க்கட்சி தலைவர் இல்லாது கூடியது அரசியல் அமைப்பு சபை


Recommended Posts

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு சபை இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

parlimant.jpg

ஜனாதிபதி தேர்தலின் பின்னர்  புதிய அரசாங்கம் பதவியேற்றதை  அடுத்து இவ்வாறு அரசியல் அமைப்புச் சபை கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பு சபை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இல்லாதே கூடியுள்ளது. 

அரசியல் அமைப்பு சபையில் 10 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில்  சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகப்பூர்வ அதிகாரத்திற்கு அமைய தெரிவுச் செய்யப்படுவர். 

அவர்களில் இடைக்கால அரசாங்கதின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. அதேபோல் எதிர்க் கட்சித் தலைவராக  சஜித் பிரேமதாசவை பெயரிடப்பட்டுள்ள போதிலும் கூட பாராளுமன்றம் கூடி இன்னமும் எதிர்க்கட்சி தலைவரை உத்தியோகபூர்வமான நியமிக்காத நிலையில் அவரும்  பங்கேற்கவில்லை.  எனினும் குழுவில் இடம்பெற்றுள்ள ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 சிவில் சமூக பிரதநிதிகள் நேற்றைய  கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  

இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பு சபை கூட்டத்தின் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவருக்கான வெற்றிடத்தில் வேறொருவரை நியமிப்பது குறித்து மிக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வை அடுத்து  அப்பதவிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பின் 107 (1) மற்றும் 41 அ (1) சரத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி பரிந்துரைத்து அரசியல் அமைப்பு சபைக்கு அனுப்பியிருந்தார். 

அதற்கமைய ஜனாதிபதி  முன்வைத்துள்ள பரிந்துரையை கூடிய அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகரித்தது. 

https://www.virakesari.lk/article/70936

Link to comment
Share on other sites

ஊடக சுதந்திரத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி உறுதி

நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எந்தவொரு நியாயமான விமர்சனத்திற்கும் இடமுள்ளதென்றும் நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப் பணியில் ஈடுபட்டு, ஊடகங்களின்மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அழைப்பில் ஜனாதிபதிக்கும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி  மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பெரும் திர்பார்ப்புக்களுடன் நாட்டின் ஜனாதிபதியாக தன்னை தெரிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் வினைத்திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன அவற்றில் முக்கியமானவையாகும். இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு தனக்கு குறைவின்றி கிடைக்குமென்று ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

முதலீடு மற்றும் பொருளாதார தொடர்புகளை சர்வதேச ரீதியாக கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதிமையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். எனவே நாட்டின் பிரதிமையை கட்டியெழுப்புவதிலும் ஊடகங்களுக்கு விரிவானதொரு பொறுப்பு உள்ளதென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், கடந்த சில நாட்களாக பேசப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவருடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் நாட்டின் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

சர்வதேச ஊடகங்கள் தேவையற்ற வகையில் அந்த நிகழ்வை ஊதி பெருப்பிக்க மேற்கொண்ட முயற்சி குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, அதனை சரி செய்யக்கூடிய இயலுமை எமது நாட்டு ஊடகங்களிடம் உள்ளதெனத் தெரிவித்தார்.

நகரங்களை அழகுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுவரோவியம் வரையும் நடவடிக்கை குறித்து இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அது எவரினதும் கோரிக்கையின்பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும், நாட்டை நேசிக்கும் இளைஞர்களிடையே உருவான ஆக்கத்திறன் சார்ந்த ஒரு  நிகழ்ச்சித்திட்டமாகும் எனக் குறிப்பிட்டார். 

எவ்வாறானபோதும் நாட்டை நேசிக்கும் அக்குழுவினர்களை வலுவூட்டுவதற்காக ஊடகங்களின் பங்களிப்பு குறைவின்றி கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். 

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/70939

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

சர்வதேச ஊடகங்கள் தேவையற்ற வகையில் அந்த நிகழ்வை ஊதி பெருப்பிக்க மேற்கொண்ட முயற்சி குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, அதனை சரி செய்யக்கூடிய இயலுமை எமது நாட்டு ஊடகங்களிடம் உள்ளதெனத் தெரிவித்தார்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் மனித-இன  விரோத செயற்பாடுகளை மறைக்கவும் நியாயப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை வெளிப்படையாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.