Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
அலிஸ் ஹார்டே பிபிசி
இதை பகிர வாட்ஸ்அப்
 • உடலுறவு போது தாக்கப்படும் பெண்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வுபடத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக

மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.

மூன்று வெவ்வேறு ஆண்களுடன், ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொண்ட சமயங்களில் விரும்பத்தகாத செயல்களுக்கு ஆளானதாக 23 வயதான அனா என்பவர் தெரிவித்தார்.

தன்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுத்து அறைந்ததாக அவர் குறிப்பிட்டார். பிறகு தன்னுடைய கழுத்தைச் சுற்றி அந்த ஆண் இறுக்கியதாகவும் கூறினார்.

உடலுறவு Image caption அனா

``நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. அடக்குமுறைக்கு ஆளானேன். தெருவில் உங்களை யாராவது அறைந்தாலோ அல்லது கழுத்தை நெரித்தாலோ அது ஒரு தாக்குதலாகக் கருதப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

தன்னுடைய நண்பர்களுடன் அவர் பேசியபோது, இது இயல்பாக நடக்கும் விஷயங்கள் தான் என்பதை அறிந்து கொண்டார்.

"அப்போதிருந்து, ஏறத்தாழ எல்லா ஆண்களுமே இவற்றில் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுகிறார்கள்.''

மற்றொரு சமயத்தில் உடலுறவு நேரத்தில், விருப்பம் இல்லாமல் அல்லது முன் அறிகுறி ஏதும் இல்லாமல் ஓர் ஆண் தன் கழுத்தை நெரிக்க முயற்சித்தார் என்று அனா கூறினார்.

இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ள அவர், தனக்கு லேசான காயங்கள் மற்றும் நாள் கணக்கில் வலி ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆண் கடுமையாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா என்றும், எப்போதாவது அது விருப்பம் இல்லாமல் நடந்திருக்கிறதா என்றும் பிரிட்டனில் 18 முதல் 39 வயதுக்கு உள்பட்ட 2002 பெண்களிடம் சவன்டா காம்ரெஸ் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த முடிவுகளை கொண்டு, பிரிட்டன் முழுக்க எப்படி இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

பெண்ணின் கால்படத்தின் காப்புரிமை ANDREAS RENTZ

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் (38%) இதுபோன்ற செயல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தது சில சமயங்களிலாவது அது விரும்பத்தகாத செயல்களாக இருந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது விரும்பத்தகாத செயலாக இல்லை என்று ஒரு பகுதியினர் (31%) கூறியுள்ளனர். இதுபோன்ற அனுபவம் இல்லை என்றோ, இதுபற்றித் தெரியாது என்றோ அல்லது பதில் அளிக்க விரும்பவில்லை என்றோ 31% பேர் குறிப்பிட்டுள்ளனர்.

``இளம்பெண்கள் வெறித்தனமான, அபாயகரமான மற்றும் கண்ணியக் குறைபாடான செயல்களுடன் கூடிய உறவுக்கு நிர்பந்திக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன'' என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று பெண்கள் நீதிக்கான மையத்தின் நிர்வாகிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

``இயல்பானது தான் என்ற எண்ணம் உருவாக்கப் பட்டிருப்பதும், அளவுக்கு அதிகமான ஆபாசப்படங்களும் தான் இந்தப் பழக்கம் பரவலாக இருப்பதற்குக் காரணம்'' என்று அவர்கள் கூறினர்.

``40 வயதுக்கு உள்பட்ட பெண்கள், இன்னொரு ஆணுடன் ஒப்புதலுடன் உறவு கொள்ளும் போது, எந்த அளவுக்கு அடிக்கடி வன்செயல்களுக்கு ஆளாகின்றனர், எந்த அளவுக்கு அது அச்சுறுத்தலாக அமைகிறது'' என்பதை இந்தத் தகவல்கள் காட்டுகின்றன என்று மகளிர் உதவிக்கான தற்காலிக இணை தலைமை நிர்வாகி அடினா கிளாய்ரே தெரிவித்தார்.

``ஒருவருடன் உறவு கொள்ள சம்மதிப்பது என்பது அறைதல் அல்லது இன்னொருவர் கழுத்தை நெரித்தலின் அபாயத்தைக் குறைப்பதாக ஆகிவிடாது'' என்கிறார் அவர்.

உடலுறவு போது தாக்கப்படும் பெண்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வுபடத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்காக

`பயந்து போய்விட்டேன்'

``நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். உறவின் போது - எந்த அறிகுறியும் இல்லாமல் - அவர் என் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார். உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன். பயந்து போய்விட்டேன். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் நாம் பலவீனமாக இருக்கிறோம், இந்த ஆள் நம்மை ஆட்படுத்திவிடுவார் என்று நினைத்தேன்" என்கிறார் எம்மா.

ஆபாசப் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் தான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

``ஆன்லைனில் இதுபோன்ற காட்சிகளை அவர் பார்த்துவிட்டு, நிஜ வாழ்க்கையிலும் அதை செய்து பார்க்க முயற்சி செய்திருக்கிறார் என்று கருதினேன்.''

மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற செயல்களுக்கு ஆளானவர்களில் 42% பேர் அதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர், அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று கூறியுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

வெறித்தனம் `இயல்பானது' என்பதாய் மாறி வருகிறது

உடலுறவு போது தாக்கப்படும் பெண்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வுபடத்தின் காப்புரிமை Getty Images

ஸ்டீவன் போப் என்பவர் பாலியல் மற்றும் உறவுமுறைகள் குறித்த உளவியல் நிபுணர்.

இதுபோன்ற செயல்கள் `தினந்தோறும்' அதிகரித்து வருவதன் எதிர்மறை தாக்கம் பற்றி தாம் ஆய்வு செய்து வருவதாக பிபிசி ரேடியோ 5 லைவ் செய்தியாளரிடம் அவர் கூறினார்.

``இது மவுனமாகப் பரவும் ஒரு ஆபத்து. இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கலாம். உறவு நிலையின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலர் இதைக் கருதுகிறார்கள். ஆனால் - வன்முறை ஏற்புடையது என்று மாறி வருவது - மோசமானதாக உள்ளது.''

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இதில் உள்ள ஆபத்துகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

``கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் எல்லை மீறும் போது `நூலிழையில் தப்பிய நிலையில்' பலர் என்னிடம் வருகிறார்கள். நீண்ட நேரம் சுயநினைவிழந்து இருந்துள்ளனர்.''

``கழுத்தை நெரித்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் அதுபற்றி துளியும் யோசிப்பதில்லை என்பது வருத்தமானது.''

இந்த ஆய்வு முடிவுகள் ``மிகவும் பயத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன'' என்று பிரசார அலுவலர் பியோனா மெக்கென்ஜி கூறியுள்ளார்.

பெண்படத்தின் காப்புரிமை Getty Images

``மன ஒப்புதலுடன் உறவு கொண்ட சமயங்களில் கழுத்தை நெரித்தல், அறைதல், துப்புதல் போன்ற செயல்களுக்கு ஆட்பட்ட, கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்ட மற்றும் கையால் குத்தப்பட்ட பெண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதை ஆரம்பத்தில் பெரும்பாலான பெண்கள் உணர்ந்திருக்கவில்லை.''

`பாலியல் உறவு விளையாட்டு தவறாகிப் போய்' பெண்கள் கொல்லப்பட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன. மன ஒப்புதல் என்பதை தங்களுக்குப் பாதுகாப்பு தரும் அல்லது வன்மையாக நடந்து கொள்வதற்கான சம்மதம் என எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க முடியாது.

பாலியல் உறவு என்பது ``அதிகம் ஆண்களின் செயல்பாடு சார்ந்ததாகிவிட்டது. ஆபாசப் படங்களில் உள்ளதைப் போல ஆகிவிட்டது. இதில் பெண்களுக்குப் பெரிய பங்கு இல்லை'' என்பது போல மாறிவிட்டது என்று அனா கூறுகிறார்.

உறவின் போது வெறித்தனமாக நடந்து கொள்வது இயல்பானது என்றாகிவிட்டது. ``அவர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்களுக்குள் ஒற்றுமையான அம்சங்கள் எதுவும் இல்லை. அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறேன். படங்களைப் பார்த்துவிட்டு, பெண்கள் அவற்றைத்தான் விரும்புவார்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கத் தவறிவிடுகிறார்கள்'' என்று அவர் கூறினார்.https://www.bbc.com/tamil/global-50593392

https://www.bbc.com/tamil/global-50593392

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி ஆண்பிள்ளைகளா

யாரிட்ட  எப்படி  எங்கு  வீரத்தை  காட்டுவது  என்றில்லையா??

மாம்பழத்தை  எவனாவது  கோடாலியால கொத்தி சாப்பிடுவானா??😥

 

 

Link to post
Share on other sites
43 minutes ago, விசுகு said:

அடப்பாவி ஆண்பிள்ளைகளா

யாரிட்ட  எப்படி  எங்கு  வீரத்தை  காட்டுவது  என்றில்லையா??

மாம்பழத்தை  எவனாவது  கோடாலியால கொத்தி சாப்பிடுவானா??😥

 

 

 இதில் மாம்பழமும் கோடாரியால் கொத்தப்படுவதை விரும்புகின்றனர் என நினைத்து தான் இவர்களில் அனேகர் இவ்வாறு ஈடுபடுகின்றனர்.

பாலியல் கல்வி சரியான விதத்தில் கற்பிக்கப்படாது பாலுறவை வெறுமனே ஆபாசப்படங்களில் இருந்து மட்டுமே அறிந்து கொள்வதால் ஏற்படும் அவலம் இது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால், கோடாலி பெருசா இருக்கணும், கொத்தினாதான் 'ஆண்மை'யென இன்னமும் பல ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன்.

உளவியல் கல்வியை உயர்நிலை பள்ளிகளிலும் நடத்தினால்தான் இம்மாதிரி தவறான சிந்தனைகளுக்கு தெளிவு கிட்டும்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

அடப்பாவி ஆண்பிள்ளைகளா

யாரிட்ட  எப்படி  எங்கு  வீரத்தை  காட்டுவது  என்றில்லையா??

மாம்பழத்தை  எவனாவது  கோடாலியால கொத்தி சாப்பிடுவானா??😥

 

 

FB-IMG-1445846330728.jpg

என்ன நடக்கிறது என்று ஒரு எட்டு பார்த்துட்டு போவம் கோடாரியெல்லாம் பற்றி பேசுறாங்கள் 🤨

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

இதில் வேடிக்கை என்னவென்றால், கோடாலி பெருசா இருக்கணும், கொத்தினாதான் 'ஆண்மை'யென இன்னமும் பல ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன்.

உளவியல் கல்வியை உயர்நிலை பள்ளிகளிலும் நடத்தினால்தான் இம்மாதிரி தவறான சிந்தனைகளுக்கு தெளிவு கிட்டும்.

ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அதிக அன்புடன் இருப்பது பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார்.

நாங்கள் திருமணம் செய்து 1 வருடம் ஆகிறது ஆனால் என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடவில்லை. என் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை ஒரு கடுமையான சொல்லைக் கூட சொல்லவில்லை. என்னிடம் சத்தம் போட்டு கூட பேசுவதில்லை, தம்பதிகளுக்குள் சண்டைகள் வேண்டும். அதனால் இவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அதிக அன்புடன் இருப்பது பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார்.

 

நாங்கள் திருமணம் செய்து 1 வருடம் ஆகிறது ஆனால் என் கணவர் ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடவில்லை. என் மீது அதிகமான அன்பையும், பாசத்தையும் காட்டுகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதுநாள் வரை ஒரு கடுமையான சொல்லைக் கூட சொல்லவில்லை. என்னிடம் சத்தம் போட்டு கூட பேசுவதில்லை, தம்பதிகளுக்குள் சண்டைகள் வேண்டும். அதனால் இவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.

 

இவருக்கு பக்கத்து வீடுகளிலும் சண்டை போட யாரும் கிடைக்கவில்லையா.....!   😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2019 at 7:05 PM, விசுகு said:

அடப்பாவி ஆண்பிள்ளைகளா

யாரிட்ட  எப்படி  எங்கு  வீரத்தை  காட்டுவது  என்றில்லையா??

மாம்பழத்தை  எவனாவது  கோடாலியால கொத்தி சாப்பிடுவானா??😥

 

4 hours ago, suvy said:

இவருக்கு பக்கத்து வீடுகளிலும் சண்டை போட யாரும் கிடைக்கவில்லையா.....!   😂

 

மாம்பழத்தை கோடாலிகொண்டு கொத்தவல்ல, கடப்பாரை கொண்டுபிளக்க எங்கள் சுவித்தம்பி அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குப் புறப்படுகிறார், வாழ்த்துக்கள்!

கழ உறவுகளும் வாழ்த்தலாம்.!! 🙌🤣

 

Edited by Paanch
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உங்களில் அநேகர் BDSM, S&M இதர உறவு முறைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இங்கே எழுத தயங்குகிறீர்கள் என நினக்கிறேன்.

இது ஒருவகை பாலியல் வாழ்க்கை முறை. டொம் (ஆண் ஆதிக்கம் செய்வது), டொமே (பெண் ஆதிக்கம் செய்வது) சப்மிசிவ் (அடங்கும் நிலையினர்), சிலேவ் (அடிமைகள்), சிலேவ் ஓனர் - என பலவகைகள் உண்டு. தவிர கையிற்றால் கட்டுவது, முதல் பலவகை துன்புறுத்தல்களிலும், துன்புறுத்தபடுவதிலும் இன்பம் அடையும் வகையினரும் உளனர்.

இந்த லிஸ்டை வாசித்தீர்கள் என்றால் தலை கிறுகிறுக்கும், பெல்டால் விளாசினால், ஊசியால் குத்தினால் மட்டுமே எனக்குத் திருப்தி என்பது முதல் குழந்தைகள் கட்டும் நேப்பியை கட்டி என்னை குழந்தை போல் சீராட்டினாலே எனக்குத் திருப்தி என்போர் வரை ஒவ்வொரு வகை.

கழுத்தை நெரித்தல், மூச்சு திணறி மயங்கும் நிலைவரை போதல் இதில் இன்னொரு வகை.

இவை எல்லாம் இருவரினதும் சுயவிருப்பிலேயே நடக்கும். சேவ் வேட்ஸ் எனும் முறை உண்டு. ஒருவர் எல்லையைதாண்டினால், அந்த சொல்லை பாவித்தால் உடனே நிறுத்த வேண்டும். ( சேவ் வேர்ட்ஸ் தேவையில்லை, என்னை நீ என்னவும் செய்யலாம் என்ற நிலையில் உள்ளோரும் உள்ளனர்).

இது இணைய பாலியல் தள பரவலால் வந்ததா? என்றால் இல்லை. முன்பே இருந்தது. இவற்றிற்கென பிரத்தியேக கிளப் எல்லாம் கூட இருக்கிறது.

ஆனால் எல்லாவற்றையும் ஜனரஞ்சக படுத்தியது போல இதையும் இணையம் ஜனரஞ்சக படுத்திவிட்டது.

அதை பார்த்து, ஆர்வப்பட்டு இதில் இறங்கிவிட்டு, அல்லது என் குழாமில் உள்ளவர்கள் செய்கிறார்கள் என தாமும் இறங்கிவிட்டு, அசெளகரியப்படுபவர்களே இந்த கட்டுரையில் எழுதப்படுபவர்கள்.

பிகு: அண்மையில் ஒரு இளம் இங்கிலாந்து பெண் அவர் நியூசிலாந்தில் சந்தித்த இப்படியான ஒரு வன்-துணையால் கழுத்தை நெருக்கி கொல்லப்பட்டார். அது ஒரு கொலை என தீர்ப்பாகியது.

கரணம் தப்பினால் மரணம் -ஆனால் அந்த திரில்தான் சிலருக்கு பிடிக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த லிஸ்டை வாசித்தீர்கள் என்றால் தலை கிறுகிறுக்கும்,

லிஸ்ட் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும். 

பிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா? பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்னமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா?

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

மாம்பழத்தை கோடாலிகொண்டு கொத்தவல்ல, கடப்பாரை கொண்டுபிளக்க எங்கள் சுவித்தம்பி 

ஐக்கிய அரபு எமிரேட்டுக்குப் புறப்படுகிறார், வாழ்த்துக்கள்! கழ உறவுகளும் வாழ்த்தலாம்.!! 🙌🤣

giphy.gif

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

giphy.gif

வாழ்த்தச் சொன்னால் இப்படியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே.... 😲

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ர்

6 minutes ago, Paanch said:

வாழ்த்தச் சொன்னால் இப்படியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே.... 😲

 

அவர் ஏற்கனவே அங்கே காம்ப் அடித்திருப்பதால்

சுவி  அண்ணா

அதுவும் படப்பாரையோட போட்டிக்கு  வந்தா???😂

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

வாழ்த்தச் சொன்னால் இப்படியா சுவித்தம்பியைப் பயமுறுத்துவது வன்னியரே.... 😲

இல்லை சார்,

அவருக்கே ஞாபக மறதி அதிகமா போயிட்டுது..! 😋

கிளப்பி வாறேனென ஐக்கிய அமீரகம் வராமல், கடப்பாரையோடு பக்கத்திலிருக்கும் 'செளதி அரேபியா' பக்கம் போய்விட்டால், கதை கந்தலாகிவிடுமென அதிர்ச்சியில் சொன்னேன்..

* UAE is more tolerant than any other gulf countries.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

லிஸ்ட் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும். 

பிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா? பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்னமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா?

ஓம் இதை எல்லாம் வெளிநாடுகளில் வற்புறுத்தி செய்வது கொஞ்சம் குறைவு. இந்த மாதிரியான முறைகளை விரும்புவர்கள் பரஸ்பரம் துணைகளை இனம்காண தனிப்பட்டு டேட்டிங் சைட்கள் கூட உண்டு.

கணவன் கூட மனைவியை பாலியல் வல்லுறவு செய்யலாம், அதுவும் ரேப்தான் என்பதையே நம்மில் அநேகர் ஏற்பதில்லை. அதெப்படி கணவன் மனைவியை ரேப் பண்ண முடியும் என்று கேட்பார்கள் (தாலி கட்டினவுடன் பெண்ணின் உடல் ஆணின் சொத்து என்னும் மனநிலை).

உடலுறவு என்பதே பிள்ளை பெறுவதற்கான முன்நடவடிக்கை, லைட்டை நூத்துப்போட்டு செய்யும் விசயம் என்பதாக சிந்திப்பவர்களும், பாலுறவு என்பது ஆண்கள் மட்டுமே தமக்குள் கதைத்து பேசும் விடயமாகவும் இருக்கும் நம் சமூகத்தில், இப்படியான போக்கு உடைய ஒருவருக்கு, ஒத்த போக்குள்ள ஒரு துணையை தேட வாய்ப்பே இல்லை. கலியாணம் முடிச்ச ஆள் நேரெதிர் போக்கில் இருந்தால் - நான் செய்வேன் நீ ஓம்படத்தான் வேண்டும் என்ற ரீதியில் அணுகி, துணையின் வாழ்கையை ரணமாக்கி விடுவார்கள்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

giphy.gif

 

On 12/14/2019 at 10:00 AM, Paanch said:

 

 

மாம்பழத்தை கோடாலிகொண்டு கொத்தவல்ல, கடப்பாரை கொண்டுபிளக்க எங்கள் சுவித்தம்பி அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குப் புறப்படுகிறார், வாழ்த்துக்கள்!

கழ உறவுகளும் வாழ்த்தலாம்.!! 🙌🤣

 

இல்லை நான் போக மாட்டன், அவர் அலவாங்குடன்  நிக்கிறமாதிரி இருக்கு .....!   😂

19 hours ago, விசுகு said:

ர்

 

அவர் ஏற்கனவே அங்கே காம்ப் அடித்திருப்பதால்

சுவி  அண்ணா

அதுவும் படப்பாரையோட போட்டிக்கு  வந்தா???😂

இவரும் அதை உறுதிப்படுத்துகிறார்.....!  😄

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2019 at 9:27 AM, goshan_che said:

 

மன்னிக்கவும் உங்களில் அநேகர் BDSM, S&M இதர உறவு முறைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இங்கே எழுத தயங்குகிறீர்கள் என நினக்கிறேன்

 

எல்லா சமூகங்களிலும் ஒரு subculture  இருக்கும். அவை mainstream ஆகாததால் அறியவோ, ஆராயவோ வேண்டியேற்படாது.

உடலுறவில் வன்முறையை விரும்புவர்கள் சம்மதத்துடன் செய்தால் அதனைப் பேசவேண்டியதில்லை. ஆனால் ஒருவர் இன்னொருவரின் விருப்பமின்றி வன்முறையைப் பிரயோகிக்க ஆபாசப்படங்கள் பார்ப்பது பரிசோதனைகளை ஊக்குவிக்கின்றது!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2019 at 6:38 PM, பிழம்பு said:

மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.

பெண்கள் ஆண்களை வாயால் கடிப்பதில்லையா? விரல் நகத்தால் முதுகில் கீறுவதில்லையா? தலைமுடியை ஆவேசத்தால் இழுப்பதில்லையா? 
கழுத்துப்பக்கம் பென்னாம் பெரிய விறாண்டலோடை சில ஆண்சிங்கங்கள் பம்மிக்கொண்டு திரியுறதை ஒருத்தரும் காணேல்லையோ? 😂

On 12/14/2019 at 2:36 PM, goshan_che said:

உடலுறவு என்பதே பிள்ளை பெறுவதற்கான முன்நடவடிக்கை, லைட்டை நூத்துப்போட்டு செய்யும் விசயம் என்பதாக சிந்திப்பவர்களும்,

உடலுறவு பிள்ளை பெறுவதற்கு மட்டும் என நினைப்பவர்கள்  இருந்தால்.......எமது சமூகத்தைல் பாதி சனத்தொகை தான் இருக்கும் 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை 
கன்னத்தில் காயங்கள் காதல் இல்லை 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவிற்குப் பின்னூட்டம் அளிக்க முனைந்து, அது சற்று அளவிற் பெரிதானதால் 'சமூகச் சாளரத்தில்' கட்டுரையாவே வரைந்து விட்டேன். இணைப்பு கீழே :

 

ஒரு பதிவு என்னைக் கட்டுரை எழுதத் தூண்டியது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் 'என்னே இந்த நகைமுரண் !' எனும் தலைப்பில் 'தமிழும் நயமும்' பகுதியில் என் பதிவுக்கு சுவி அவர்கள் அளித்த பின்னூட்டம், என்னை  'எரிதழல்' எனும் கட்டுரை எழுத வைத்தது. நன்றி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2019 at 4:24 AM, Maruthankerny said:

காமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை 
கன்னத்தில் காயங்கள் காதல் இல்லை 

காதலிலே ரெண்டுவகை, சைவமுண்டு அசைவமுண்டு.

On 12/15/2019 at 11:59 PM, குமாரசாமி said:

பெண்கள் ஆண்களை வாயால் கடிப்பதில்லையா? விரல் நகத்தால் முதுகில் கீறுவதில்லையா? தலைமுடியை ஆவேசத்தால் இழுப்பதில்லையா? 
கழுத்துப்பக்கம் பென்னாம் பெரிய விறாண்டலோடை சில ஆண்சிங்கங்கள் பம்மிக்கொண்டு திரியுறதை ஒருத்தரும் காணேல்லையோ? 😂

உடலுறவு பிள்ளை பெறுவதற்கு மட்டும் என நினைப்பவர்கள்  இருந்தால்.......எமது சமூகத்தைல் பாதி சனத்தொகை தான் இருக்கும் 😎

எல்லாரையும் எங்களை மாரியே நினைக்கும் உங்கள் பாங்குதான் எனக்கு உங்களில் பிடித்தது அண்ணை😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த நேரகாலத்தைப் பொறுத்து அததற்கு சில வரைமுறை உண்டு.எல்லை தாண்டாத சுதந்திரத்தை பேணுதல் அவசியம். மீறினால் அனுபவித்துத்தான் ஆகணும்......!  😂

Résultat de recherche d'images pour "smooth driving benz car gif"

நல்ல மூடில் ஆட்டொரோட்டில  110 ல் பென்ஸ் கார் ஓடும் சந்தோசம் . ஜாலி .....!  😋

Image associée

ரொமாண்டிக் மூடில் இருவரும் இருக்கும் போது மேடுபள்ளமான சாலையில் ஜீப்பில்  குதித்து ஓடுற திரில் ...தப்பில்லை....! 🤣

Résultat de recherche d'images pour "tractor working field gif"

விசர் மூடில்  டிராட்டர் ஓடுறது தப்பு, மகா தப்பு......!  🥵

ஏதோ நம்மால் முடிஞ்ச்சது.....!  👍

 

 • Like 1
 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

எல்லாரையும் எங்களை மாரியே நினைக்கும் உங்கள் பாங்குதான் எனக்கு உங்களில் பிடித்தது அண்ணை😂

ரொம்ப தாங்ஸ் மை சண் 😎

Bildergebnis für pithamagan surya comedy"

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

வெள்ளை சேட்டுடன் ஒருத்தன் அசையாமலே இருக்கிறான்.

யாரது சுவியராய் இருப்பாரோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

giphy.gif

வெள்ளை சேட்டுடன் ஒருத்தன் அசையாமலே இருக்கிறான்.

யாரது சுவியராய் இருப்பாரோ?

சலசலப்புகளுக்கு அஞ்சாத துணிஞ்ச கட்டை 😎

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு ( The Catholic Expression ) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது.  இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களின் போது நீதி நிர்வாகத்தின் போது மறைக்கப்பட்ட காரணிகள் குறித்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த.ஆர்.அன்டனி அமரசிங்க தெரிவித்துள்ளார்.  https://www.virakesari.lk/article/91097
  • (நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.  அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை முதலீட்டுச்சபையின் ஊடாக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இக்காலப்பகுதியில் 9,462 முதலீட்டு விண்ணப்பங்களை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருக்கிறது.  அவற்றில் வடமாகாணத்தை மையப்படுத்தியதாக வெறுமனே 100 திட்டங்களுக்கான முதலீடுகளே காணப்பட்டதுடன் தற்போது முதலீட்டுச்சபையினால் அனுமதியளிக்கப்பட்ட 22 திட்டங்கள் மாத்திரமே வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்தது. எனினும் அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி அவற்றில் 10 திட்டங்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையை மைப்படுத்தியதாக அமைந்திருக்கின்றன. https://www.virakesari.lk/article/91098
  • தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோத்தாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது இதன் காரணமாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர். இவ்வாறு இனைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பில்  நாம் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பத்துக் கட்சிகளும் இன்று கலந்துரையாடினர். மேற்படி கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.https://www.virakesari.lk/article/91101
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா .
  • மகிந்தவுக்கு அறளை பெயர்ந்து ஞாபக மறதி வந்திட்டுது ஆனால் செலெக்டிவ் அம்னீசியா
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.