• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மேலதிக கொடுப்பனவினை வழங்க அனுமதி!

Recommended Posts

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF.jpg

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மேலதிக கொடுப்பனவினை வழங்க அனுமதி!

தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்க திரைசேறி அனுமதி வழங்கியுள்ளது.

திரைசேறியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவு செலுத்த தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கமைய, அவர்களின் 2018 நிதியாண்டு நிதி அறிக்கையின் அடிப்படையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

http://athavannews.com/அரச-ஊழியர்களுக்கு-மகிழ்-3/

Share this post


Link to post
Share on other sites

உண்மையாகவே அரச ஊழியருக்கு நல்ல செய்தி.  இருந்தாலும் எல்லா ஊழியர்களும் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அதே நேரத்தில் கடமை தவறாத ஊழியர்களும் இருக்கவே செய்கிறார்கள். எனவே இப்படியான வெகுமதிகள் வழங்கும் போது இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்தால் நல்லது.  

Share this post


Link to post
Share on other sites

அரசுக்கு ஒரு நன்றிய சொல்லிக்குவம்  

4 hours ago, தமிழ் சிறி said:

தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு

இதற்குள் நம்ம நிறுவனமும் அடங்குமா தெரியல?? 

Share this post


Link to post
Share on other sites

சரியா வாசிக்காம 99% ஆன ஆட்கள் ஏமாறப் போகினம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Posts

  • லைக்கா நிறுவனத்திடம் கமல்ஹாசன் கோரிக்கை.! படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்று லைக்கா படத்தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்தையடுத்து கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த பின்பே படப்பிடிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இனி படப்பிடிப்புத் தளத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால் முழுப் பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். எந்த ஒரு படத்தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என பரிசோதிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.vanakkamlondon.com/லைக்கா-நிறுவனத்திடம்-கமல/
  • அவர் நிக்கிற பொசிசனை பார்த்த பிறக்குமா அப்படிச்  சொல்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத் தக்கது.......!   😂
  • தமிழ் நாட்டிலும் இப்படியான வெதுப்பக வான்களின் சேவை வந்துவிட்டது தோழர்.. நம்மை கடந்து போகும் போதே அருமையான வாசம் வீசும்..👌
  • கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு  யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld  நகரில் Ummelner  வீதியில் இருந்த  அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி,  அதன்மேல் தனது  ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே  இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருந்ததை பொலீஸார் கண்டனர். கூடவே தனது அடையாள அட்டையையும் அங்கே தவற விட்டு விட்டுச் சென்றிருக்கிறான். பொலீஸாருக்கு தன்னை பிடிப்பதற்கு எளிதாக தனது சைக்கிள்,ஜக்கெற், அடையாள அட்டை எல்லாவற்றையும் வைத்து விட்டு எதற்காக அந்த முப்பது வயது இளைஞன்  அவசரமாகத் தப்பி ஓடினான் என்பது தெரியவில்லை. https://www.westfalen-blatt.de/OWL/Bielefeld/Bielefeld/4154866-Polizei-stellt-Diebesgut-sicher-Strafverfahren-gegen-Bielefelder-eingeleitet-Einbrecher-laesst-Ausweis-liegen    
  • சர்வதேசத்துக்கு மட்டுமல்ல சாதாரண பொதுமகனுக்கும் சிறீலங்காவின் உண்மை முகம் தெரியும். அதுகூடத் தெரியாமல் ஒரு பாரளுமன்ற உறுப்பினர்.