Jump to content

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா


Recommended Posts

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ம் ஆண்டில் அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2வது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி  3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29 வது இடத்தில் உள்ளார்.

 

 

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 34 வது இடத்தில் உள்ள நிர்மலா, இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர். இதே போன்று எச்சிஎல் கார்ப்பரேஷன் சிஇஓ நடார் மல்கோத்ரா (54), இந்தியாவின் பணக்கார பெண்மணியாக கருதப்படும் மசூம்தர் ஷா (65) ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் (6), ஐபிஎம் சிஇஓ ஜின்னி ரோமட்டி (9), பேஸ்புக் சிஓஓ ஷெரில் சண்ட்பர்க் (18), நியூசி., பிரதமர் ஜசிந்தா ஆர்டன்(38), அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப்(42), செரினா வில்லியம்ஸ் (81), பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரிட்டா துன்பர்க் (100) ஆகியோரும் இப்படியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2433124

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜனாசா நல்லடக்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடு -ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் ஜனாசா நல்லடக்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுஎன ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தை தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய தாகவே அரசாங்கம் ஆக்கி வருவது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசின் நிலைப்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அரசாங்கம் தாங்கள் நினைத்த இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறிய செயலாகும். இரணை தீவிலே நல்லடக்கம் செய்ய முற்படுவதும் இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. மாறாக முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஜனாஸாக்களை எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவது தான் அந்த மக்களுடைய கோரிக்கையை கௌரவமான முறையில் நிறைவேற்றுவதாக அமையும். ஏற்கனவே மன்னாரில் நல்லடக்கம் செய்ய முற்பட்டு அது வெற்றி அளிக்காமல் போன நிலைமையிலே மீண்டும் இரணைத்தீவை தேர்ந்தெடுத்திருப்பது இன முறுகலை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் இது சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கை. ஒரு முஸ்லீம் இறந்து 24 மணித்தியாலத்திற்குள் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாக அமைந்திருக்கிறது. பொது இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு நல்லடக்கம் செய்ய முற்படுகின்ற பொழுது நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் இழுத்தடிப்பை ஏற்படுத்துவதோடு அந்த குடும்பங்கள் அந்த இடங்களுக்குச் சென்று தமது முறையை பின்பற்றுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை. இப்படியான இழுத்தடிப்பு செய்வதையும் மற்றவர் கலாச்சார முறைகளை அரசே தீர்மானிப்பதை தவிர்த்து குறித்த இனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தி நாடு முழுவதும் ஜனாஸா நல்லடகத்துக்கான பொது விதிமுறையை கையாள்வதன் மூலம் தான் இதற்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு அந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமையும். தவிர இப்படியான நடவடிக்கைகளால் முடிவுகள் எட்டப்படாது. ஆகவே அரசாங்கம் பாசாங்கு செய்வதைவிட சரியான தீர்வினை முஸ்லீம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுப்பதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். இதற்கு அரசு ஆவன செய்ய செய்ய வேண்டும்   Thinakkural.lk
  • கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம்’     சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்படும் சம்பளத்தொகையை முதலாளிமார் சம்மேளனம் வழங்கத் தயார் என்று தெரிவித்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியாது என்றும் எனவே, கூட்டுஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்தார். 'கூட்டொப்பந்ததில் 300 நாட்களுக்கு வேலை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இப்போது நாளொன்றுக்காக அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்க முடியும் எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிற்றுறை வீழ்சியடைந்தால் தொழிற்சங்கங்களும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும்' என்றும் சுட்டிக்காட்டினார்.  டிக்கோயா தரவளை முகாமையாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  தாங்கள் ஒருபோதும் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன்வைத்தபோது 2019 ஆம் ஆண்டே தாங்கள் ஆலோசனையொன்றை கூட்டொப்பந்த தொழிற்சங்கங்களிடம் முன்வைத்ததாகவும் தெரிவித்தார். 'வெறுமனே சம்பளத்தை அதிகரிக்க முடியாது. எனவேதான் தொழில்முறையில் சில ஆலோசனைகளை முன்வைத்தோம். அந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளபட்டிருந்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றிருக்க முடியும். 'தற்போது சம்பள நிர்ணய சபையினூடாக சம்பளவுயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வழங்க தாயார். அந்தத் தொகை எங்களுக்கு மட்டுமல்ல சிறுதோட்ட உடமையாளர்களாக இருக்கும் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் வழங்க வேண்டும்.  இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியது. எனவே கூட்டொப்பந்ததிலிருந்து விலகவுள்ளோம். கூட்டொப்பந்தத்தில் தொழிலாளர்களின் சம்பளமட்டுமல்ல அவர்களின் சுகாதார நலன் விடயங்களிலும் பல்வேறு விடயங்களை செய்து வந்தோம். இந்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு இனி கிடைக்காத நிலை தோன்றியுள்ளது. அதேபோன்று கூட்டொப்பந்த உடன் படிக்கையானது தொழிலாளர்களுக்கு சாதகமானதாகவே இருந்தது. எதிர்காலத்தில்  பெருந்தோட்டத் தொழிற்றுறை வீழ்சியடைந்தால், அதற்கான பொறுப்பினை தொழிற்சங்கங்களும் அரசாங்கமே ஏற்க வேண்டும்' என்றார். Tamilmirror Online || ’கூட்டுஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம்’  
  • இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு   http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Kabir-Hashim.jpg இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரிவினைவாதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்டார். சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளபோதிலும் இவ்வாறான இடத்தை தெரிவு செய்துள்ளமையானது அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதாக கூறினார். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டல்களை பின்பற்றாத நாடு இலங்கை மாத்திரமே என்றும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.   இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு | Athavan News
  • கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்   http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/iranaitivu-1.jpg கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழு இந்த விடயம் குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டார். அவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருந்து கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை அடக்கம் செய்யப் பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் சடலங்கள் கொழும்பு மற்றும் வெலிகந்த மருத்துவமனை போன்ற இரு இடங்களிலிருந்து தீவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு உறவினர்கள் இறுதி சடங்குகளுக்கு தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இறுதி சடங்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி  அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர் | Athavan News
  • யார் இந்த சங்கி, பிஜேபி சர்வாதிகார அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.