• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

Recommended Posts

ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

white_van.jpg

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த  இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71023

 

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா? - விசாரணைகளுக்காக இருவர் கைது

 •  
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா?படத்தின் காப்புரிமை Getty Images

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேனின் ஓட்டுநர்கள் என்ற வகையில் இந்த இரண்டு பேரும் இருந்தனர்.

ஒரு வாகனத்தில் நபர்களை கடத்தி, பின்னர் வேறொரு வாகனத்தில் அவர்களை மாற்றி கொண்டு செல்வதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளை வேன் தொடர்பில் அறியவில்லை என கூறியுள்ளதாகவும், ஆனால் வெள்ளை வேன் விவகாரத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ரஞ்சித் பிரசாத்படத்தின் காப்புரிமை AZZAM AMEEN/ twitter Image caption ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரின் கீழ் கடமையாற்றிய அதிகாரிகள் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரிகேடியர் ஒருவரும், மேஜர் ஒருவரும் இருந்ததாக கூறிய அவர், குறித்த இராணுவ அதிகாரிகளின் கீழேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மொனராகலை பகுதியிலுள்ள இடமொன்றிற்கு கடத்தப்படுபவர்கள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில். துன்புறுத்தல்களின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, உடலை வெட்டி, முதலைகளுக்கு உணவாக வீசியதாகவும் அன்றைய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட சாரதி என தன்னை கூறி கொண்டவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் இவ்வாறே காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தான் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்த போதிலும், போலீஸார் விசாரணைகளை நடத்த முயற்சித்தபோது அதனை விசாரணை செய்ய வேண்டாம் என உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

CID

இந்த ஆட்கடத்தல் விவகாரத்திற்கு போலீஸார் மற்றும் இராணுவம் இரண்டு தரப்பினரும் தொடர்புப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்கள், வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட மற்றொருவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த இரண்டு சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பலர் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு, காணாமல் செய்யப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த இரண்டு பேரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து, வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தில் சாரதிகளாக பணியாற்றியிருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50794679

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, பிழம்பு said:

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் தூதுவராலய கைது, நாட்டை விட்டு சுவிஸிற்கு ஓடிய புலனாய்வு அதிகாரி, அதன் தொடராக இந்த கைதுகள் - இவை இதுவரை கொத்தாவிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கிய சிங்கள மக்களையும் பாதிக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு கூறுகின்றது. 

இந்த அணுகுமுறையால், மற்றும் பொருளாதாரம் சரியும் என்றால், ஜே.வி.பி.ற்கு வரும் காலங்களில் ஆதரவு அதிகாரிக்கலாம்.  

Share this post


Link to post
Share on other sites

இப்போதான் கதை  ஆரம்பித்திருக்கு.  எத்தனை நாளைக்கு சொறிந்த கையை மறைத்து வள்ளலாய், யோகியாய், எளிமையாய் நடிக்க முடியும்? எப்பவும் உண்மையான மனிதன்  புதுசாய் நடித்து  பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து  மக்களிடம் பெயர் எடுக்க தேவையில்லை. பாராளுமன்ற தேர்தல் முடிய பழைய நாடகங்களை  தாராளமாய் பார்க்கலாம். என்ன வாகனத்தின் நிறம் மாறலாம்.  

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ampanai said:

சுவிஸ் தூதுவராலய கைது, நாட்டை விட்டு சுவிஸிற்கு ஓடிய புலனாய்வு அதிகாரி, அதன் தொடராக இந்த கைதுகள் - இவை இதுவரை கொத்தாவிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கிய சிங்கள மக்களையும் பாதிக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு கூறுகின்றது. 

எந்தப் பாதிப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சிங்கள மக்கள் வந்துவிட்டனர். இன்றுவரை இலங்கையை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் சிங்களத் தலைமைகள், 'சிங்களத்துக்கு ஒருகண் போனாலும்  கவலையில்லை தமிழுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்' என்ற ஒரு வெறியை சிங்கள மக்களுக்கு ஊட்டி அதனை நன்றாக வளர்த்தும் வந்துள்ளனர். இதிலிருந்து சிங்கள மக்கள் மாறுவதென்றால் பெரும் அழுத்தம் அவர்களுக்கு ஏற்படவேண்டும். அப்படி அழுத்தம் ஏற்பட நாங்களும் விடமாட்டோம். ஏனெனில் நாங்கள் ஆரியத்துக்கு அடிமையானவர்கள். ஆரிய ஆளுமையிலிருந்து விடுபடும்வரையில் எங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட ஆரியம் விடாது.  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித

வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­டத்தில் பக்­கச்­சார்­பான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு முழு­மை­யான விட­யங்கள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

புதிய ஆட்­சி­யா­ளர்கள் வெள்­ளைவேன் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு சொற்ப நாட்­க­ளுக்கு முன்­ன­தாக  ராஜித சேனா­ரத்ன நடத்­திய  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் மற்றும் மனி­தப்­ப­டு­கொ­லைகள் இடம்­பெற்று முத­லை­க­ளுக்கு போடப்­பட்­டமை தொடர்பில் தக­வல்­களை வெள்­ளை­வேனில் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாக கூறி தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திய இருவர் வெளி­யிட்­டி­ருந்­தனர்.  இந்­நி­லையில் குறித்த இரு­வ­ரையும் கைது செய்து குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வரு­கின்­றனர். 

இந்­நி­லையில் அவர்­களின் கைது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

அத்­துடன்,  அவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான காலத்தில் ஜன­நா­யகம் மறு­த­லிக்­கப்­பட்ட ஆட்­சிக்­கா­லத்தில் வெள்­ளைவேன் கலா­சாரம் அறி­மு­க­மா­னது. 

இந்­தக்­க­லா­சாரம் நடை­மு­றையில் இருந்த காலத்தில் பலர் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டுகள் உள்­ளன. அவை தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் அவை முற்­றுப்­பெற்­றி­ருக்­க­வில்லை. மேலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் பலரும் என்­னி­டத்தில் நேர­டி­யா­கவும் முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர். 

இந்­நி­லையில் தான் குறித்த இரு­ந­பர்­களும் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் தொடர்­பி­லான விட­யங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வந்­தி­ருந்­தனர். குறித்த நபர்­க­ளி­டத்தில் நான் அதற்­கான சாட்­சிகள் இருக்­கின்­றவா என்­பது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து கேட்­டி­ருந்தேன். 

அந்த இரண்டு நபர்­களும் நேர­டி­யாக சட்­சி­யத்­தினைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் மற்றும் சில  ஆவ­ணங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தான் வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்த தக­வல்­களை அவர்கள் மூல­மாக நான் பங்­கேற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். 

மேலும் அவர்கள் தமக்­கான பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்­தார்கள். இந்­நி­லையில் குறித்த விடயம் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலி­ஸா­ரி­டத்தில் நானே கோரி­ய­தோடு உரி­ய­வர்­க­ளுக்கு பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்தேன். 

தற்­போது அவர்கள் இரு­வ­ரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன் என்றார். 

https://www.virakesari.lk/article/71067

 

Share this post


Link to post
Share on other sites

அடுத்தது ராஜீத என்று கதைக்கினம் 
 

Share this post


Link to post
Share on other sites

 தகவல்களை வெளியிட்ட  இவர்களின் கதை இன்றோ? என்றோ முடிவடைந்து காணாமல் போனோர், வெளிநாட்டுக்குத் தப்பியோர் என்று மறந்து, மறைந்து போய்விடும். மற்றயோர் வாயை மூடிக்கொண்டு அமைதி ஆக்கப்பட்டுவிடுவர். இவ்வளவுதான் இந்த நாட்டின் நீதி நிலவரம். அதனாற்தான் குற்றவாளிகள் இன்னும்  வாழுகிறார்கள்.  அவர்களின்  ஆதரவாளர்களும் பெருகுகிறார்கள். உ+ம் டக்ளஸ்  

Share this post


Link to post
Share on other sites

வெள்ளை வான் கதையை சொல்லியவர்களே கோத்தாவின் ஆட்க்கள் கோத்தாவின் ஆசியுடன் நடைபெற்ற கூத்து கோத்தாவின் தமிழர்களுக்கு எதிரான விம்பத்தை அடித்தட்டு சிங்களமக்களுக்கு பெரிதாக காட்டுவதுக்கு நடைபெற்ற நாடகம் .

இனி அந்த கதையை சொல்லியவர் இவர்கள்தான் என்று பலி ஆடுகள் ஆகுதியாக்கப்படும் . 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல்  இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன்  பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன்மலரோ? மேகம் யாவும் பேரொலியோடு மேளம் போலே முழங்குவதாலே கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண வேடிக்கையோ? மண்ணில் பெருகும் வெள்ளம் போலே மனதில் பொங்கும் ப்ரேமையினாலே காணா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலந்தானோ...என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை  டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.
  • சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும்  இல்லாதபோது தூற்றுவதுமாய்  சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும்  இல்லாதபோது மறப்பதுமாய்  சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து  நம்மை கீழே போட கதைப்பதுமாய்  சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர்  சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு  அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர்  சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு  வாழ்வு போன பின் வந்து  வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று  பொய் உரைத்து போற்றுவார்கள்  சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் செய்வர்  பின்பு படிப்பது தேவாரம் இடிப்பது கோவில்  என்பது போல் இருப்பார்  சில நேரங்களில் சில மனிதர்கள். கட்டி வந்த பொட்டலங்களோடு இருந்துகொண்டு  மாற்றம் ஒன்றே மாறாதது என்பர்  சில நேரங்களில் சில மனிதர்கள். அவருக்கு என்ன தெரியும்  அரசியல் தெரியாத செல்லாக்காசு என்பர்  சோக்கிரட்டீஸ் உடன் படித்தவர் போல்  சில நேரங்களில் சில மனிதர்கள். உதவிகள் மட்டும் கேக்க வருவார்  அடுத்த நாள் கண்டால்  யார் இவர் என்பார்  சில நேரங்களில் சில மனிதர்கள். தற்பெருமை பேசி  தம்மையே புகழ்வர்  சில நேரங்களின் சில மனிதர்கள். தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை  எங்கேயும் கண்ட மாதிரி இல்லை. பா.உதயன்.  
  • பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி! மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிள்ளையானின் முதல் நியமனமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் அமைந்துள்ளது. வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட உள்ள நிலையில். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வருவதற்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் சிபாரிசில்  கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் நடைபெற்ற முதலாவது அதி உயர் அரச நியமனம் இது என்பதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிகாரம் இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் என்பதுடன் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாம் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதை விட நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்கள் மோசடிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் விசாரணை செய்யப்பட்டவர்களை அரசியல இலாபங்களுக்காக நியமிப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. அதுவும் கொலைக் குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் ஒருவரது சிபாரிசில் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை ஜனாதிபதி அவர்கள் நியமிக்கமாட்டார் என பொது ஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எது எவ்வாறு இருப்பினும் தற்போதைய நிலவரப்படி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் பிள்ளையானிடம் இருந்து கட்சியின் செயலாளர் பிரசாந்தன் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலின் படி கலாமதி பத்மராஜா அவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவரது பெயர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.   http://www.battinaatham.net/description.php?art=23307
  • விசேட தீர்வு திட்டங்களுடன் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் (எம்.மனோ­சித்ரா) ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ விசேட தீர்வு திட்­டங்கள் மற்றும் சலு­கை­க­ளுடன் இம்­மாத இறு­திக்குள் வடக்­கிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லக ஊட­கப் ­ப­ணிப்­பாளர் மொஹான் சம­ர­நா­யக்க தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள போதிலும் இன்னும் தினம் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மின்றி இளை­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள் உள்ளிட்ட பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம், மக்­களின் அடிப்­படை பிரச்­சினை, குடிநீர் பிரச்­சினை, வேலை வாய்ப்­புக்கள் என்­ப­வற்­றோடு வடக்கின் அபி­விருத்தி உள்­ளிட்ட மேலும் பல முக்­கிய விட­யங்கள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. இவற்­றுக்கு மேல­தி­க­மாக விசேடமாக வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுடன் சந்திப்புக்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ வடக்­கிற்கு மேற்­கொள்­ள­வுள்ள முத­லா­வது விஜயம் என்­பதால் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­வி­டப்­பி­ர­தி­நிதி ஹனா சிங்­க­ரு­ட­னான சந்­திப்பில் 'தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் அபி­லா­ஷை­க­ளுடன் முரண்­பட்­டுள்ள போதிலும், காணாமல் போனோ­ரது உற­வி­னர்­களின் குடும்­பங்­களின் நல­னுக்­கான செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும்' என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டி­யிருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.   https://www.virakesari.lk/article/73469
  • ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஏமனில் 60 பேர் உயிரிழப்பு ! ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமனின் தெற் பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை தகர்ப்பதற்காக கிளரச்சியாளகர்கள் ட்ரோன்கள் (drones) மற்றும் பிளாஸ்டிக் ஏவுகணைகள் (ballistic missiles) பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாகர்களின் தாக்குதலில் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதோடு , சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் ஏமனில் இராணு முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 25 இராணுவத்தினர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/73477