• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

உடல் நலத்தை காக்க வல்ல அற்புத மூலிகை - நீர் முள்ளி .!

Recommended Posts

உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!!

1576151859-7836.jpg

இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும்.

நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை  சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன்  கிடைக்கும்.

நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய  நச்சு நீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது,

நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை விரைவில்  விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்.
 
வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து  வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன்; வெண்ணெய் கலந்து  சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும்.

நீர் முள்ளி உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை,  மகோதரம், நீரடைப்பு குணமாகும்.

https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/neermulli-seeds-amazing-medicinal-herbs-for-health-119121200069_1.html

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள்.  அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத்  தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள். அவளது பிள்ளைகளுக்கு முன்னாலேயே “பெட்டை நாய், பரத்தை” என்று பேசிக் கொண்டும் இருந்தான். நாளடைவில் அவனது ஏச்சுக்களும் தாக்குதல்களும் மணிக்கணக்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. Adrianக்கும் Natascha வுக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஆரம்பமாவதால்  ஒரு கட்டத்தில் அவள் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு Adrian இடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். பின்னர் இருவருக்கும்  சமரசம் ஏற்பட மீண்டும் இணைந்து கொண்டார்கள்.  14.12.2019இல்  தங்கள் இருவருக்கும் உள்ள மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இருவருக்கும் இடையில்  சண்டை ஆரம்பித்தது. Adrian உடனடியாகவே Natascha வைத் தாக்க ஆரம்பித்து விட்டான். அவனது தாக்குதலுக்கு மத்தியிலும் Natascha தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி நிலவறைக்குள் மறைந்து கொண்டாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளது குடியிருப்பில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவளுக்கு உதவியாக நின்றார்.  ஒரு நிலையில் வீட்டில் Adrian இன் சத்தம் அடங்கிப் போனது.  இதை அவதானித்த Natascha, பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காரனுடன் விட்டு விட்டு தனது வீட்டுக்குள் சென்று தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற எத்தனித்த போது அவள் முன்னல் Adrian வந்து நின்றான்.  அப்பொழுது Natascha நின்ற இடம் சமையலறை. அந்த வாசலை மறைத்துக்  கொண்டு  நின்று அவள் மேல் தாக்குதலை Adrian ஆரம்பித்தான். அவளால் வெளியேற முடியாத நிலை.  அடி, உதைகள் பலமாக இருந்தன. இந்த நிலையில் சமையலறை மேசை இழுப்பறையைத் திறந்து  அங்கிருந்த கத்தியை எடுத்து தன் பலம் கொண்ட மட்டும் Adrian உடலில் சொருகினாள். நிலை தடுமாறி கீழே விழுந்தவன் மீது மீண்டும் ஒரு தடவை கத்தியால் குத்தினாள்.  சமையலறைக்குள்ளேயே Adrian இறந்து போனான்.  Natascha, Adrianஐ கத்தியால் குத்தும் போது அவளது இரத்தத்தில் 2 வீதமான அற்ககோல் செறிவு காணப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது. பாதுகாப்புக்காக Adrianஐ Natascha கத்தியால் ஒருதடவை குத்தியபின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கப் பார்த்திருப்பாள். ஆனால் அவள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவனைக் கத்தியால் குத்தியிருக்கிறாள். இது ஒருவரைக் காயப்படுத்தி மரணம் விளைவிப்பதற்கான செயல் என்று கருதி நீதிமன்றம் Natascha வுக்கு  மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. `கொலை நடந்த நேரத்தில் உள்ள சூழ்நிலை, அந்த நேரத்தில் அவளுக்கு இருந்த பதட்டம், அவள் இரத்தத்தில் இருந்த அற்ககோல் செறிவு, அவளது பிள்ளைகளின் எதிர்காலம்,  மற்றும் Natascha தப்பிக்க முடியாத  ஒரு வன்முறையின் சூழலில் அந்தக் கத்தியைப் பாவித்து தன்னை  விடுவிக்க முடிந்தது போன்ற காரணங்களைக் கவனத்தில் கொண்டு Natascha வை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்` என்று Nataschaவின்  சார்பில் அவளுடைய வழக்கறிஞர் ஒரு மேன் முறையீடு செய்தார். அந்த மேன் முறையீட்டுக்கன தீர்ப்புத்தான் நீதிமன்றில் இப்பொழுது அறிவிக்கப் பட்டிருக்கிறது. "ஒரு அவசர நிலையிலேயே Natascha  கத்தியை எடுத்து தனது வாழ்க்கைத் துணைவனைக் கொன்றிருக்கிறாள். Nataschaவின் நிலையைக் கருத்தில் கொண்டு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்கள் நீங்க அவளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் பட வேண்டும்" என நீதிமன்றம் அறிவித்து அவளை விடுதலை செய்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறது.  மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
    • ஊரில சீமேந்தும் மணலும் சல்லியும் விக்கிற விலைக்கு இவைக்கு விளையாட்டு. எத்தனையோ சனம் இருக்க ஒரு இருப்பிடம் இல்லாமல் கொட்டில் கட்டி வாழுது. அதுகளுக்கு ஒரு அறையில் ஒரு சின்ன வீடாவது கட்டிக்கொடுத்திருந்தால்.. நாலைஞ்சு குடும்பம் வீடு பெற்றிருக்கும். 
    • 'யாழப்பாணத்துக்கு போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவையை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்' என சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்ததே, அதெல்லாம் பொய்யா கோபால்..?
    • உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ' சைனா டவுன் ' இருக்குதே. அதன் மூலம் நாங்கள் வைப்போம் ஆப்பை ... தேவை வரும்பொழுது
    • இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்கள் உட்பட ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை கொலைசெய்யவேண்டும்-  கொலையாளியின்  அதிர்ச்சி இணையத்தள பதிவு  ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு ஒன்பது பேரை கொலை செய்த நபர் தனது தனிப்பட்ட இணையத்தளத்தில் ஜேர்மனியில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பிரஜைகள் உட்பட பல ஆசிய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ளமை விசாரணையாளர்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ரொபியாஸ் ரத்ஜென் எனும் அந்த நபர் தனது இணையத்தளத்தில் எங்கள் மத்தியில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இனக்குழுக்களும், இனங்களும் கலாச்சாரங்களும் உள்ளன  என தெரிவித்துள்ளார். இவர்களை சுத்தம் செய்யவேண்டும் இது; உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ். இவர்களை முற்றாக அழிப்பதை சாத்தியமாக்கும் பட்டன் ஒன்று இருந்தால் நான் ஒரு நொடியில் அதனை அழுத்துவேன் என ரத்ஜென் தெரிவித்துள்ளார். பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார். இந்த இணையத்தளத்தினை அதிகாரிகள் தற்போது அகற்றியுள்ளனர் இதேவேளை இவர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரத்ஜென் அவரது வீட்டில் தாயாருடன் இறந்து கிடக்க காணப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/76120