Jump to content

ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம். அவ்வாறு தன்னிச்சையாக பிரேரணையிலிருந்து அரசாங்கம் அவ்வாறு தன்னிச்சையாக விலக முடியாது. இதேவேளை இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மீளாய்வு செய்த பின்னர் அரசாங்கம் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று நாங்கள் பார்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் முழுமையாக விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்த 30-1 என்ற பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது 2017 ஆம் ஆண்டாகும்போது இந்த பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது. எனினும் அக்காலப்பகுதியில் பிரேரணை முழுமையாக நிறைவேறாததன் காரணமாக 2017 ஆம் ஆண்டு 30-1 என்ற பிரேரணை மேலும் இரண்டு வருடங்களுக்கு நிறைவேற்றப்பட்டது. அது 34-1 என்ற பிரேரணை ஊடாக முன்னெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டாகும்போது 30-1 என்ற பிரேரணையை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்று தெரிவித்தே 34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.

எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பிரேரணை தொடர்பாகவே முழுமையான மீளாய்வை செய்யப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மீளாய்வு செய்த பின்னர் அரசாங்கம் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று நாங்கள் பார்ப்போம். மீளாய்வின் பின்னரான அரசாங்கத்தின் முடிவிலேயே நாம் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தங்கியுள்ளன. எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும். அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். அந்த நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/ஜெனிவா-பிரேரணை-தொடர்பில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன்

சரியான தலையங்கம்தான்.

பார்த்துக் கொண்ட்டிருக்கின்றோம்.

இதனைத்தான் திருவாளர் பொதுஜனங்களும் சொல்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து இன்னும் வீட்டுக்கு போகாமல் சுத்தி திரியிது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

"எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்." 

30-1 ... 34-1 .... 40-1 ......   10000000000 - 1

Link to comment
Share on other sites

2009 இல் பார்த்துகொண்டு இருந்தோம்

2019!இல் பார்த்துகொண்டு இருக்கிறோம்

2029 இல் பார்த்துகொண்டு இருப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

99px-John_Wallis_by_Sir_Godfrey_Kneller,

John Wallis (1655) is credited for introducing the symbol ∞ to represent the concept of infinity .. 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.