Jump to content

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உங்களது  பார்வையில் இவை  சரியே

ஏன் ஏராளமான தமிழர்கள் இவ்வாறு  தான் தற்பொழுது  கடந்து  போகிறார்கள்

உண்மையில்  தமிழரின்  போராட்டம் முக்கியமான  நிலைகளுக்கு  வரும்  போதெல்லாம்

கிழக்கை  சேர்ந்த எவராவது குறி  வைக்கப்படுகிறார்கள்

கிழக்கின் புவிசார் நிலையும் மூவின கலப்பு வாழ்வும்

இதற்கு  உகந்ததாக  சிங்களத்துக்கு வழியமைத்து

 தொடர்ந்து வெற்றி தருகிறது.

அது  ராசதுரையிலிருந்து தொடர்கிறது.......

நீங்கள் மேலே  எழுதியவாறு அங்குவாழ்   மக்கள்  தெளிவாகவே  உள்ளனர்

ஏனெனில் அவர்கள்  நீண்ட  தூரம்  சிந்திக்கின்றனர்

இருந்தபோதும் குறி  வைக்கப்படுபவர்கள் வலைக்குள் விழும்போது அந்த  மக்களும்  அவமானத்தை  சுமக்கவேண்டியுள்ளது.

ஏன் தாயகத்தின்  வேற  பகுதியிலுள்ளவர்கள் மாறவில்லையா  என்றால் தாயகத்தின் கனவை  சிதைக்கும் வீரியம் இவர்கள்  அளவுக்கு இருந்திருக்காது  என்பதையும் கருத்தில் கொள்க.

நான்  ஒன்றும் பிரதேசவாசி அல்ல.  அதை  நான்  உங்களுக்கு  சொல்லவேண்டியதில்லை  என  நினைக்கின்றேன்.

அதெப்படி அண்ணை,

ராசதுரை, கருணா, பிள்ளயானின் செயல்பாடுகள் மட்டும் தமிழர் போராட்டத்தை கருவறுத்த விடயங்கள்.

ஆனால், ஜிஜி, ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கம், வரதர், சுரேஸ், கேபி, மாத்தையா, டக்லஸ், சித்தர், ராஜன்,  (லிஸ்ட் ரொம்ப பெரிசி) செய்த விடயங்கள் அவ்வளவு பாதிப்புக்கள் தரவில்லை?

இதன் அளவீடுதான் என்ன?

இதைதான் அண்ணை unconscious bias என்பது, உங்களுகே தெரியாமல் உள்ளே ஊறியுள்ள யாழ் மையவாதம்.

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அதெப்படி அண்ணை,

ராசதுரை, கருணா, பிள்ளயானின் செயல்பாடுகள் மட்டும் தமிழர் போராட்டத்தை கருவறுத்த விடயங்கள்.

ஆனால், ஜிஜி, ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கம், வரதர், சுரேஸ், கேபி, மாத்தையா, டக்லஸ், சித்தர், ராஜன்,  (லிஸ்ட் ரொம்ப பெரிசி) செய்த விடயங்கள் அவ்வளவு பாதிப்புக்கள் தரவில்லை?

இதன் அளவீடுதான் என்ன?

இதைதான் அண்ணை unconscious bias என்பது, உங்களுகே தெரியாமல் உள்ளே ஊறியுள்ள யாழ் மையவாதம்.

அண்ணனும் மறந்துட்டார் தூசு தட்ட தட்ட லிஸ்டும் நீழும் கோசன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்கள் மோதியது அண்ண அரசியல் விவகாரம் அதான் ராசதுரையை கேட்க விடக்கூடாது தேர்தலில்  ஆனால் நின்று வெற்றி பெற்றார் 

பதவி, பெண் இந்த இரு விடயங்களை அமிர்தலிங்கத்தார் தக்க வைக்க வேண்டுமென்பதற்க்காக ராசதுரையை சீண்டி வெளியேற்றுனார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

அந்த புத்தகத்தின் விபரத்தை தரமுடியுமா ?

(நான் உண்மையாகத்தான் கேட்கிறேன்)

ம் சரியாக ஞாபகம் இல்லை கிடைக்கும் போது அறியத்தருகிறேன் எனது நண்பனிடம் இருக்கும் என நினைக்கிறன் நாளை விபரம் தருகிறேன்

என்னிடம் இருந்தது யாரோ கேட்க கொடுத்துவிட்டேன்

Just now, goshan_che said:

பதவி, பெண் இந்த இரு விடயங்களை அமிர்தலிங்கத்தார் தக்க வைக்க வேண்டுமென்பதற்க்காக ராசதுரையை சீண்டி வெளியேற்றுனார்கள்.

ஆனால் அமிர்தலிங்கத்தாரை மிகவும் நம்பினார் ஆனால் குழிபறித்தவர்கள் அவர் அருகில் இருந்தவர்கள் என சொன்னார் கோசான் அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ம் சரியாக ஞாபகம் இல்லை கிடைக்கும் போது அறியத்தருகிறேன் எனது நண்பனிடம் இருக்கும் என நினைக்கிறன் நாளை விபரம் தருகிறேன்

என்னிடம் இருந்தது யாரோ கேட்க கொடுத்துவிட்டேன்

மறக்க வேண்டாம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் சரியாக ஞாபகம் இல்லை கிடைக்கும் போது அறியத்தருகிறேன் எனது நண்பனிடம் இருக்கும் என நினைக்கிறன் நாளை விபரம் தருகிறேன்

என்னிடம் இருந்தது யாரோ கேட்க கொடுத்துவிட்டேன்

ஆனால் அமிர்தலிங்கத்தாரை மிகவும் நம்பினார் ஆனால் குழிபறித்தவர்கள் அவர் அருகில் இருந்தவர்கள் என சொன்னார் கோசான் அண்ண

பிரபா நல்லவர், பொட்டர்தான் போட்டுகொ(கெ)டுத்தார் என கருணா சொல்வது போலவும் இருக்கலாம் தனி.

இவரும் ஒண்டும் உத்தமரில்லை, ஆனால் கருணாவை விட இவரின் வெளியேற்றத்தில் பிரதேசவாதம் பாரிய வகிபாகம் வகித்தது.

ஆனால் கடைசிவரை இந்த பிரிவை இட்டு ராஜதுரை வருந்தினார் என்பதும் உண்மையே. கருணா அப்படி இல்லை. அவர் “லச்சன சிறிலங்காவே” யில ரொம்ப பிசி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஆனால் கடைசிவரை இந்த பிரிவை இட்டு ராஜதுரை வருந்தினார் என்பதும் உண்மையே. கருணா அப்படி இல்லை. அவர் “லச்சன சிறிலங்காவே” யில ரொம்ப பிசி 😂

எல்லாம் கால மாற்றம் என்று சொல்லலாம்  மிலேனியத்தில் புரண்டுவிட்டார்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராசா பத்மநாதன் பற்றி எம்மில் பலருக்குத் தெரியவில்லை. 2009 இனவழிப்புப் போரின்போதும் அதன்பின்னரும் இவரது செயற்பாடுகள் மக்கள் அழிவிற்கும் போராட்டத்தின் அழிவிற்கும் பாரிய பங்களிப்பைச் செலுத்தியிருந்தன. 

கருணாவிற்கு முதலே இவர் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிவிட்டார் என்பது நானறிந்தது. காஸ்ட்ரோ மற்றும் நெடியவன் சர்வதேச விவகாரங்களுக்காக தலைவரால் நியமிக்கப்பட்டபொழுது கடும் கோபமடைந்த கே பீ யை இலங்கை ராணுவ புலநாய்வுத்துறை இலகுவாக ஆட்கொண்டதென்றும், இறுதியில் 2008 இல் சர்வதேச விவகாரங்கள் கே பி யிடம் தலைவரால் மீண்டும் கொடுக்கப்பட்டபோது, கே பீ யை இலங்கை புலநாய்வுத்துறையே வழிநடத்தியதென்றும் சொல்கிறார்கள். ஆக, 2008 இலிருந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினராலேயே வழிநடத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே இறுதிப்பகுதியில் புலிகளுக்கென்று அனுப்பிவைக்கப்பட்ட ஆயுதக்கப்பல்கள் வேண்டுமென்றே வெற்றுக்கப்பல்களாக கொண்டுவரப்பட்டு, சர்வதேச கடற்பரப்பில் அவை வரும்போது இலங்கை விமானப்படையும், இந்திய கப்பற்படையும் சேர்ந்து அழித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியுத்தத்தில் ஏற்பட்ட கடுமையான ஆயுதப் பற்றாக்குறையும் யுத்தத்தில் புலிகள் தோற்றதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.  

இவ்வாறே, இவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட விதமும் பலரை வியப்பில் ஆள்த்தியிருந்தது. சுமார் 30 வருடங்கள் எவர் கண்ணிலும் படமால் ஒளிந்திருந்த கே பி, திடீரென்று வெளிப்படையாக வெளிவந்ததும், ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்ததும், தானே புலிகளின் தலைவர் என்று பிரகடனம் செய்ததும், தலைவர் இறந்துவிட்டார் என்று முதலிலும் பின்னர் இல்லையில்லை, அவர் நலமாக இருக்கிறார் என்று பின்னரும் மாறி மாறி அறிக்கை விட்டதும் இறுதியாக, நாடக பாணியில் தாய்லாந்தா அல்லது மலேசியாவா என்கிற தெளிவில்லாமல் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறை இவரது கைது நாடகத்தின் விவரத்தைப் போட்டுக் குழப்பியடித்ததும், தாய்லாந்து இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சத்தியம் செய்ததும், மலேசிய அரசுக்குத் தெரியாமல், இலங்கை ராணுவ கொமாண்டோ அணியொன்று மலேசியாவில் புகுந்து இவரைக் கடத்திக்கொண்டு எவருக்கும் தெரியாமல் சாதாரண பயணிகள் விமானத்தில் இலங்கை வந்ததும், 2012 இல் முற்றாக விடுவிக்கப்பட்டார் என்று காலையிலும் பின்னர் இல்லையில்லை அவர் இன்னும் கைதிதான் என்று மாலையிலும் அறிக்கைவிட்டதும்.....எல்லாமே ஒரு நாடகம் தான் என்பது தெளிவாகிறது.

கருணாவின் துரோகத்திற்கு ஒத்த , அல்லது அதையும் விட மோசமான துரோகம் கே பீ யினது. ஆனால், அவர்பற்றிய செய்திகள் வேண்டுமென்றே அடக்கி வாசிக்கப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.

தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஏனென்றால் கேபி அரசியல் பேசுவதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

ஏனென்றால் கேபி அரசியல் பேசுவதில்லை 

உண்மைதான். அவர் செய்ததன் தாக்கம் அதிகமென்றாலும் கூட, அவர் அரசியலிலோ, பொதுமேடைகளிலோ தோன்றுவதோ அல்லது பேசுவதோ கிடையாது. ஆகவே மக்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்து அவர் சிறிது சிறிதாக காணமல்ப் போய்விடுகிறார். ஆனால், கருணா தொடர்ச்சியாக பொதுமேடைகளில் அரசியல் பேசுவதும், தொடர்ந்தும் மகிந்த - கோத்தா சகோதரர்களை ஆதரித்து வருவதும் மக்கள் அவர்பற்றித் தொடர்ச்சியாக விமர்சிக்கக் காரணமாகிவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

செல்வராசா பத்மநாதன் பற்றி எம்மில் பலருக்குத் தெரியவில்லை. 2009 இனவழிப்புப் போரின்போதும் அதன்பின்னரும் இவரது செயற்பாடுகள் மக்கள் அழிவிற்கும் போராட்டத்தின் அழிவிற்கும் பாரிய பங்களிப்பைச் செலுத்தியிருந்தன. 

கருணாவிற்கு முதலே இவர் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிவிட்டார் என்பது நானறிந்தது. காஸ்ட்ரோ மற்றும் நெடியவன் சர்வதேச விவகாரங்களுக்காக தலைவரால் நியமிக்கப்பட்டபொழுது கடும் கோபமடைந்த கே பீ யை இலங்கை ராணுவ புலநாய்வுத்துறை இலகுவாக ஆட்கொண்டதென்றும், இறுதியில் 2008 இல் சர்வதேச விவகாரங்கள் கே பி யிடம் தலைவரால் மீண்டும் கொடுக்கப்பட்டபோது, கே பீ யை இலங்கை புலநாய்வுத்துறையே வழிநடத்தியதென்றும் சொல்கிறார்கள். ஆக, 2008 இலிருந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினராலேயே வழிநடத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே இறுதிப்பகுதியில் புலிகளுக்கென்று அனுப்பிவைக்கப்பட்ட ஆயுதக்கப்பல்கள் வேண்டுமென்றே வெற்றுக்கப்பல்களாக கொண்டுவரப்பட்டு, சர்வதேச கடற்பரப்பில் அவை வரும்போது இலங்கை விமானப்படையும், இந்திய கப்பற்படையும் சேர்ந்து அழித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியுத்தத்தில் ஏற்பட்ட கடுமையான ஆயுதப் பற்றாக்குறையும் யுத்தத்தில் புலிகள் தோற்றதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.  

இவ்வாறே, இவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட விதமும் பலரை வியப்பில் ஆள்த்தியிருந்தது. சுமார் 30 வருடங்கள் எவர் கண்ணிலும் படமால் ஒளிந்திருந்த கே பி, திடீரென்று வெளிப்படையாக வெளிவந்ததும், ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்ததும், தானே புலிகளின் தலைவர் என்று பிரகடனம் செய்ததும், தலைவர் இறந்துவிட்டார் என்று முதலிலும் பின்னர் இல்லையில்லை, அவர் நலமாக இருக்கிறார் என்று பின்னரும் மாறி மாறி அறிக்கை விட்டதும் இறுதியாக, நாடக பாணியில் தாய்லாந்தா அல்லது மலேசியாவா என்கிற தெளிவில்லாமல் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறை இவரது கைது நாடகத்தின் விவரத்தைப் போட்டுக் குழப்பியடித்ததும், தாய்லாந்து இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சத்தியம் செய்ததும், மலேசிய அரசுக்குத் தெரியாமல், இலங்கை ராணுவ கொமாண்டோ அணியொன்று மலேசியாவில் புகுந்து இவரைக் கடத்திக்கொண்டு எவருக்கும் தெரியாமல் சாதாரண பயணிகள் விமானத்தில் இலங்கை வந்ததும், 2012 இல் முற்றாக விடுவிக்கப்பட்டார் என்று காலையிலும் பின்னர் இல்லையில்லை அவர் இன்னும் கைதிதான் என்று மாலையிலும் அறிக்கைவிட்டதும்.....எல்லாமே ஒரு நாடகம் தான் என்பது தெளிவாகிறது.

கருணாவின் துரோகத்திற்கு ஒத்த , அல்லது அதையும் விட மோசமான துரோகம் கே பீ யினது. ஆனால், அவர்பற்றிய செய்திகள் வேண்டுமென்றே அடக்கி வாசிக்கப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.

தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்தால் நல்லது.

எங்களில் அனேகரின் உடம்பில் ஓடுவது இரத்தமல்ல துரோகம்.  துரோகதிற்கு சாதி மதம் பிரதேசம் எல்லாம் கிடையாது.

வாயை திறப்பவர் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். மற்றயவர் கவனிப்பாரில்லாமல் விடப்படுகிறார்.  அம்புட்டுதேன்.

துரோகத்திலும் பிரதேசவாதம் சமயவாதம் சாதிவாதம் பார்க்கப்படுகிரது என்று கூறுவோருக்கு என்ன பதிலை கூறமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

துரோகம், துரோகி ஒன்றுதான்  அதை நாம் தான் குழப்பிகொள்கிறோம் துரோகம் , துரோகி எங்கும் இருக்கிறார்கள் காலமும் , நேரமும் காட்டிக்கொடுக்கிறது அம்புட்டுத்தான்🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகம், துரோகி ஒன்றுதான்  அதை நாம் தான் குழப்பிகொள்கிறோம் துரோகம் , துரோகி எங்கும் இருக்கிறார்கள் காலமும் , நேரமும் காட்டிக்கொடுக்கிறது அம்புட்டுத்தான்🤨

இதிலுமா  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

மறக்க வேண்டாம். நன்றி.

11 minutes ago, Kapithan said:

இதிலுமா  ??

அந்த புத்தகத்தின் பெயர் விலகினேனா விலக்கப்பட்டேனா  கடைகளில் கிடைக்காது என நினைக்கிறன் 

80034808-2517637685228629-29793201191817

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த புத்தகத்தின் பெயர் விலகினேனா விலக்கப்பட்டேனா  கடைகளில் கிடைக்காது என நினைக்கிறன் 

80034808-2517637685228629-29793201191817

ஒரு பிரதியினை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் ? வழி ஏதேனும் உண்டோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பிரபா நல்லவர், பொட்டர்தான் போட்டுகொ(கெ)டுத்தார் என கருணா சொல்வது போலவும் இருக்கலாம் தனி.

இவரும் ஒண்டும் உத்தமரில்லை, ஆனால் கருணாவை விட இவரின் வெளியேற்றத்தில் பிரதேசவாதம் பாரிய வகிபாகம் வகித்தது.

ஆனால் கடைசிவரை இந்த பிரிவை இட்டு ராஜதுரை வருந்தினார் என்பதும் . கருணா அப்படி இல்லை. அவர் “லச்சன சிறிலங்காவே” யில ரொம்ப பிசி 😂

தூர நோக்கற்றவர்களை தலைவர்களாகக் கொண்டால், அவர்களால் வருந்த மட்டுமே முடியும். 

விளைவை என்னமோ அனுபவிப்பது நாம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

அதெப்படி அண்ணை,

ராசதுரை, கருணா, பிள்ளயானின் செயல்பாடுகள் மட்டும் தமிழர் போராட்டத்தை கருவறுத்த விடயங்கள்.

ஆனால், ஜிஜி, ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கம், வரதர், சுரேஸ், கேபி, மாத்தையா, டக்லஸ், சித்தர், ராஜன்,  (லிஸ்ட் ரொம்ப பெரிசி) செய்த விடயங்கள் அவ்வளவு பாதிப்புக்கள் தரவில்லை?

இதன் அளவீடுதான் என்ன?

இதைதான் அண்ணை unconscious bias என்பது, உங்களுகே தெரியாமல் உள்ளே ஊறியுள்ள யாழ் மையவாதம்.

மன்னிக்கவும்  சகோ

நாம் நேரத்தை  தேவையற்ற  வீணாக்குகின்றோம்  என  நினைக்கின்றேன்

என்னையே  யாழ்ப்பாண  மையவாதி  என்பவருடன் எதைப்பேச  முடியும்

நித்திரையாக  கிடப்பவரை  எழுப்புவதே நடக்கக்கூடியது

( நன்றி  சகோ  என்னையும் யாழ்ப்பாணத்தான்  என்றீர்களே.  இதுவரை  எந்த  யாழ்ப்பாணத்தானும்  இப்படி  என்னை  ஏற்றுக்கொண்டதில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

அண்ணை,

கடுப்பாக வேண்டாம். நான் மேலே சொன்னது unconscious bias பற்றி. அதாவது ஒரு விடயம் நமக்குள் உள்ளே ஊறி இருக்கும். நம்மில் அப்படி ஒரு விடயம் இருப்பது நமக்கே  தெரியாமல் இருக்கும். 

நீங்கள் conscious ஆக பிரதேசவாதத்தை, மதவாதத்தை, சாதியத்தை வெறுக்கலாம். 

ஆனால் எங்கேயும் உங்கள் மதம் மாற்று மதம் என கூறு பிரிந்தால், உங்களை அறியாமலே உங்களுக்கு உங்கள் மதத்தின் பக்கம் இருக்கும் நியாயம் மட்டும்தான் தெரியும்.

இச்சையின்றிய ( unconscious) பிரதேசவாதமும் இப்படித்தான். இங்கே நீங்கள் ஏனைய யாழ்பாணத்தவரின் பிழைகளை தூக்கி பிடிக்காமல் - கருணாவின் பிழையை தூக்கிப் பிடிப்பதற்கும்,

மேலும் சிலர் கருணாவை எந்த எல்லைக்கும் போய் காபாந்து பண்ணி எழுதுவதற்கும் ஒரே காரணம்தான்.

இச்சையின்றிய பிரதேசவாதம்.

Link to comment
Share on other sites

On 12/17/2019 at 11:55 AM, தனிக்காட்டு ராஜா said:

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

காசி ஆனந்தனை பகடைக்காயாக பாவித்த அமிர்தலிங்கம்- மனப்பதிவுகள் – பாகம் 5- இரா.துரைரத்தினம்!

IMG_1460-150x150.jpg

டுத்து வந்த நாட்களில் தமிழர்களை தமிழர்கள் கொன்று குவித்த சம்பவங்கள் மட்டக்களப்பை அதிர வைத்தன. அந்த சம்பவங்கள் பற்றி அடுத்த முறை பார்ப்போம் என கடந்த பாகத்தில் கூறியிருந்தேன். அந்த ரணமான நினைவுகளை மீட்டுவது அல்லது சில உண்மைகளை வெளிப்படுத்துவது அக புறகாரணிகள் இப்போதைக்கு இடம்கொடுக்காது சில நெருக்கடிகள் ஏற்படுவது ஒருபுறமிருக்க 30 வருடங்களுக்கு முதல் நடந்த சில சம்பவங்கள் பற்றி இந்த பாகத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்ற போது உதாரணமாக பேசப்பட்ட இன்னொரு விடயம் பற்றி எழுத இருக்கிறேன்.

கருணாவின் பிளவு பற்றி பேசுபவர்களில் சிலர் மட்டக்களப்பார் காலம் காலமாக துரோகம் செய்து வந்திருக்கிறார்கள். இராதுரை, கனகரத்தினம,; வரிசையில் இப்போது கருணாவும் துரோகம் செய்து விட்டார் என சிலர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.

கருணா தமிழீழ விடுதலைப்புலிகளிலிருந்து வெளியேற்றம், இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றம், இந்த இரண்டு காலப்பகுதியிலும் இந்த விடயங்களை நேரடியாக அவதானித்தவன் என்ற வகையில் இந்த இரண்டு பிளவுகளுக்கும் நிறைய வித்தியாசத்தை நான் காண்கிறேன்.

இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றதற்கான காரணம் என்ன என்பதை அறியாமல் இருப்பதும் கருணாவையும் இராசதுரையையும் ஒன்றாக இணைத்து பேசுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

சொல்லின் செல்வன் செல்லையா இராசதுரை என்று மட்டக்களப்பில் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் இராசதுரை 1956ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்கு முதல் 1950ஆம் ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலுக்கு பிரவேசித்திருந்தார்.

1956ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டுவரை 23ஆண்டுகள் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்த இராசதுரை பிரிந்து சென்றதற்கு உடனடியாக சில காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும் தந்தை செல்வநாயகம் அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையோடு இருந்த முரண்பாடுகளின் தொடர்ச்சியே அவர் பிரிந்து செல்வதற்கு காரணமாக அமைந்திருந்தது.

தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமாக தெரிவு செய்யப்பட்டவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், இராசதுரையும் அமிர்தலிங்கமும் 1956ஆம் ஆண்டில் சமகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அமிர்தலிங்கம் 1970ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியடைந்திருந்தார்.amirthalingham.jpg

இராசமாணிக்கத்திற்கு பின்னர் கிழக்கில் தமிழரசுக்கட்சியிலும், அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இராசதுரையே மூத்தவராக இருந்தார். தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவி தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இராசதுரைக்கு அமிர்தலிங்கம் அப்பதவியை பெற்றுக்கொண்டது முதல் கசப்புணர்வு வளர ஆரம்பித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர், அல்லது செயலாளர் பதவிகளில் ஒன்று கிழக்கை சேர்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது கசப்புணர்வுகள் வளர ஆரம்பித்தது.

அமிர்தலிங்கம் தன்னை ஓரங்கட்டுகிறார் என்ற உணர்வு இராசதுரைக்கு ஏற்பட்டிருந்தது. இராதுரைக்கு இணையாக மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை பதவிக்கு காசி ஆனந்தனை வளர்த்தெடுப்பதிலும், அமிர்தலிங்கம் ஈடுபட்டிருக்கிறார் என இராசதுரையின் ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட விடயம்.

இதன் உச்சக்கட்ட வெளிப்பாடு  1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெளிப்பட்டது. ஒரு தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்த இருவர் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட வரலாறும் மட்டக்களப்பில் தான் நடைபெற்றது. அந்த வரலாற்று சாதனையை செய்து முடித்ததில் பெரும் பங்கு அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கத்தையே சாரும்.

அந்த தேர்தலின் மூலம் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட வைத்து இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என அமிர்தலிங்கம் திட்டமிட்டார்.

தொகுதிவாரியான தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும். மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இராசதுரைக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி கிளைகளும், பொது அமைப்புக்களும் வலியுறுத்தி வந்தன. இதனை நிராகரிக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை இராசதுரைக்கு மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய அதேவேளை அவரை தோற்கடிப்பதற்கும் அமிர்தலிங்கம் திட்டம் தீட்டினார்.  அதேதொகுதியில் செயலிழந்து போய் இருந்த தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

ஒரே கட்சியை சேர்ந்த இருவரையும் ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து விட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர்நாயகம் அமிர்தலிங்கம் சொன்ன காரணம். மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி. எனவே இருவரும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என சொல்லியிருந்தார்.

இரண்டை அங்கத்தவர் தொகுதி என்றால் என்ன?
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கான காப்பீட்டு ஏற்பாடுகளுள் ஒன்றாக 1947ம் ஆண்டில் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இரட்டை அங்கத்தவர் அல்லது பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1959ல் அரசியலமைப்பின் புதுச்சேர்க்கை விதிகளுக்கமைய இலங்கையில் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின்போது பல அங்கத்துவ அல்லது இரட்டை அங்கத்துவ தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
விசேடமாக ஒரு தொகுதியில் அண்ணளவாக சிறுபான்மையினரும், பெரும்பான்மையினரும் அல்லது இரண்டு சிறுபான்மை இனத்தவர்கள் சமனாக வசிப்பார்களாயின் இவர்களுக்கு தத்தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இதன் முலம் வழங்கப்பட்டது.

இதன்படி இலங்கையில் 6 தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாக வகுக்கப்பட்டிருந்தது. பேருவளை, 2பேர் ( சிங்களவர் , முஸ்லீம்) மட்டக்களப்பு, 2பேர் (தமிழர், முஸ்லீம்) பொத்துவில் 2பேர் (தமிழர் முஸ்லீம்) ஹரிஸ்பத்துவ 2பேர் ( சிங்கள, முஸ்லீம்) கொழும்பு மத்தி 3பேர் ( சிங்கள, தமிழ், முஸ்லீம்) நுவரெலிய மஸ்கெலியா 3பேர் ( சிங்களவர், தமிழர், முஸ்லீம்) என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் இரட்டை அங்கத்தவர் அல்லது பல அங்கத்தவர் தொகுதி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த இரட்டை அங்கத்தவர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு விதி விலக்காக 1970ஆம் ஆண்டு மட்டக்களப்பு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் அமைந்திருந்தது. தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட இராசதுரை முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவும், சுயேச்சையாக போட்டியிட்ட ராசன் செல்வநாயகம் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தெரிவு செய்யப்பட்ட இருவருமே தமிழர்கள்.
1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. மட்டக்களப்பு தொகுதியில் இராசதுரை, ( தமிழரசுக்கட்சி) ராசன் செல்வநாயகம் (சுயேச்சை) ஆகியோரும், கல்குடா தொகுதியில் தேவநாயகமும், (ஐ.தே.க) பட்டிருப்பு தொகுதியில் தம்பிராசாவும் (ஐ.தே.க) தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

1970ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு முஸ்லீம் மக்கள் தங்களுக்கு கிடைத்த படிப்பினையை கருத்தில் கொண்டு அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தங்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மிக சாதுர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் கடந்த கால படிப்பினைகளிலிருந்து அனுபவங்களை பெற்று செயற்பட்டதாக தெரியவில்லை.

அமிர்தலிங்கம் கூறியது போல அப்போது மட்டக்களப்பு தொகுதியில் இருவரும் தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அது இன்னொரு இனத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை பறித்தெடுப்பதற்கு சமனானதாகும். இந்த விடயங்கள் அமிர்தலிங்கத்திற்கு சுட்டிக்காட்டிய போதிலும் இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

KasiAnanthan1.jpgதேர்தல் பிரசாரங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட காசி ஆனந்தனுக்காகவே பிரசாரம் செய்தனர். தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட காசி ஆனந்தனும், அவர்களது குழுவினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரைக்கு எதிராகவே பிரசாரங்களை மேற்கொண்டனர்.

வழமையாக தங்களை எதிர்த்து போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளும் மட்டக்களப்பு தொகுதியில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இராசதுரை, காசி ஆனந்தன் என பிரிந்து நின்று ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசினர்.

அக்காலத்தில் நான் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி என திரிந்த காலம். மட்டக்களப்பில் இந்த தேர்தல் திருவிழாவையும், ஒருவர் மீது ஒருவர் சேறு பூசி வெளியிடும் துண்டுப்பிரசுரங்களையும் நேரில் பார்;க்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் இராசதுரை தனது மேடையில் வெளிப்படையாக யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக பேசி வந்தார். மறுபுறத்தில் இராசதுரை தோற்கடிக்கப்பட வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு மிகத்தீவிரமாக காசி ஆனந்தனுக்காக பிரசாரம் செய்தது. அப்போது தமிழ் இளைஞர் பேரவை காசி ஆனந்தனுக்கே தேர்தல் பிரசாரம் செய்தனர்.

ஆனால் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என காலம் காலமாக இருந்த சுகுணம் யோசப் (பரராசசிங்கம்) , கலா தம்பிமுத்து ( கலா மாணிக்கம்) உட்பட பலர் இராசதுரையின் பக்கமே நின்றனர்.  (தமிழரசுக்கட்சியின் செனட்டர் மாணிக்கத்தின் மகள் கலா அவரது கணவர் சாம். தம்பிமுத்து ஆகியோர் ஒரு காலகட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தூண்களாக விளங்கியவர்கள். கலாவும், பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவும் 1989ல் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.)

இராசதுரையின் தேர்தல் பிரசார மேடைகளில் யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக மிக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண தலைமையின் கீழ் நாம் இருக்க கூடாது என்று கூட சிலர் பேசினர். மட்டக்களப்பில் இருந்த பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்கள் காசி ஆனந்தனுக்கே வாக்களித்தனர்.

தேர்தலில் இராசதுரை வெற்றி பெற்ற போதிலும் இராதுரைக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் வளர்ந்து கொண்டே சென்றது.AmirthalingamNSivasithamparam.jpg

இந்நிலையில்தான் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தை சூறாவளி முற்றாக அழித்திருந்தது. தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தில் வந்து தங்கி நின்று மீட்பு பணிகளிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டனர். அவர்கள் மீது கே.டபிள்யூ. தேவநாயகத்தின் ஆட்கள் தடிகள், இரும்பு கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் அரசடி மகாவித்தியாலயத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அப்போது தேவநாயகம் அமைச்சராக அதிகாரத்தில் இருந்தார். அரச கட்டிடம் எதிலும் அவர்களுக்கு இடம் வழங்க கூடாது என்ற கடுமையான உத்தரவும் போடப்பட்டிருந்தது.

அரசடி மகாவித்தியாலய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இளைஞர் பேரவை மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற மன்ற உறுப்பினராக இருந்த ராசன் செல்வநாயகம் அடைக்கலம் கொடுத்தார். மட்டக்களப்பு திருமலை வீதியில் இருந்த செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த விடயங்களில் இராசதுரை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினருக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சனங்களும் அப்போது எழுந்திருந்தது.

அக்காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அரசாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி,  பிரதமர், ஆகியோர் கலந்து கொள்ளும் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என அக்கட்சியின் தலைமைப்பீடம் கட்டுப்பாடு விதித்திருந்தது. 

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பை பார்வையிடுவதற்கும், புனரமைப்பு பணிகள் பற்றி ஆராய்வதற்குமாக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது பிரதமராக இருந்த பிரேமதாஸ மட்டக்களப்புக்கு வருகை தந்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் விசேட ஹெலிகொப்பரில் வந்து இறங்கிய பிரேமதாஸாவை மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை சென்று வரவேற்றார். மாவட்ட செயலகத்தில் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இராசதுரை கலந்து கொண்டார்.

இந்த விடயங்கள் அடுத்த நாள் தலைப்பு செய்தியாக வெளிவந்தன. கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் விளக்கம் கேட்டு இராசதுரைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அச்செய்தியும் வெளியாகியிருந்தது.
அழிந்து போன மட்டக்களப்பை மீட்டெடுப்பதற்காக அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமை. அந்த கடமையை செய்த என் மீது கட்சி தலைமை கேள்வி கேட்க முடியாது. விளக்கம் கேட்க முடியாது என இராசதுரை பதிலளித்திருந்தார்.

selva.jpgஇராசதுரை உரிய காலத்தில் சரியான பதிலை கட்சி தலைமைப்பீடத்திற்கு வழங்கவில்லை என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு கூறிக்கொண்டிருந்தது. அப்போது உயிருடன் இருந்த திருமதி செல்வநாயகம், திருமதி திருச்செல்வம், ஆகியோருக்கு இராசதுரை  உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் தான் இவ்வாறு பழிவாங்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும் தன்னை திட்டமிட்டு ஒதுக்கி ஓரங்கட்ட வைப்பதும், கட்சியிலிருந்து நீக்க நினைப்பதும் மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் துரோகம் என எழுதியிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உருவாகிய உள்கட்சி முரண்பாட்டை சிறிலங்கா சிங்கள தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இதில் முக்கியமாக அப்போது பிரதமராக இருந்த பிரேமதாஸ இராசதுரையை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கு முன்நின்றார். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி பறிபோகாத வகையில் சட்டத்திலும் திருத்தத்தை கொண்டு வந்தனர்.  1979ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இராசதுரை ஆளும் கட்சிக்கு மாறினார். அவருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இராசதுரை தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார் என ஒருதரப்பினர் கூறிவந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்த போதும் இராதுரை முதல் கருணாவரை கிழக்கில் உள்ளவர்கள் துரோகிகள் என்று சிலர் பிரசாரம் செய்தனர்.

இராசதுரை செய்தது சரி என்றோ அல்லது தவறென்றோ நான் வாதிட வரவில்லை. இராசதுரை துரோகி என்றால் அவர் அரசின் பக்கத்திற்கு செல்வதற்கு காரணமான அமிர்தலிங்கம் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களும் துரோகிகள்தான்.

இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவியை பெற்றது தவறுதான். அவர் வாக்களித்த மட்டக்களப்பு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என குற்றம் சாட்டுவதற்கு மட்டக்களப்பு மக்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக்கு உரிமை கிடையாது. ஏனெனில் இராசதுரை அமைச்சர் பதவி பெற்றதை விட மிகப்பெரிய துரோகத்தை தமிழ் இனத்திற்கு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தது.
1978ல் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் உறவாடி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு  ஆதரவாக வாக்களித்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு செய்த அநீதியை விடவா இராசதுரை தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார்?

அமிர்தலிங்கம், சிவசிதம்பரம்,  சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றோர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிய பயங்கரவாத தடைச்சட்டத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இன்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே வகை தொகை இன்றி தமிழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அமிர்தலிங்கம் போன்றவர்களின் இந்த மகா தவறை விடவா இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றது பெரிதாகிவிட்டது? IMG_1460.jpg

பயங்கரவாத தடைச்சட்டத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதை விடவா இராசதுரை அமைச்சர் பதவியை பெற்றதால் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். இராசதுரை அமைச்சர் பதவியை பெற்றதால் ஒரு தமிழர் கூட சித்திரவதை செய்யப்பட்டதாகவோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டதாகவோ நான் அறியவில்லை.
விடுதலைப்போராட்டம் ஆரம்பமான கால கட்டத்தில் அரச பக்கம் சேர்ந்து அவர்களுக்கு முண்டு கொடுப்பது விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தி விடும் என்பது உண்மைதான். ஆனால் அரசின் பக்கம் சேர்ந்த இராசதுரை போன்றவர்களுக்கு துரோகி பட்டம் வழங்கும் அதிகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்த அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு நிட்சயம் கிடையாது. என்னைப்பொறுத்தவரை இராசதுரையின் பிளவு என்பது அமிர்தலிங்கம் போன்ற யாழ்ப்பாண தலைமைத்துவங்களின் தவறான போக்கினால் ஏற்பட்டதே ஆகும்.

அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களின் செயல்பாடுகளால்தான் மட்டக்களப்பு மக்களுக்கு யாழ்ப்பாண மக்கள் மீது வெறுப்பு ஏற்பட காரணம் எனலாம்.

எனவே கருணாவின வெளியேற்றத்தையும் இராசதுரையின் வெளியேற்றத்தையும் ஒன்றாக கணித்து விட முடியாது.

இராசதுரையின் வெளியேற்றத்திற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.   அதேவேளை அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் சேர்ந்தது தான் தமிழ் மக்கள் அவரை வெறுக்க காரணமாக அமைந்தது.
இராசதுரை தான் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு செய்தது தவறு என்று எண்ணிய காரணத்தாலோ என்னவோ 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  அதேவேளை மட்டக்களப்பில் ஒருபோதும் தோல்வியடையாத மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக 33ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்த பெருமை இராசதுரைக்கு தான் உண்டு.

அரசுடன் சேராது இன்றும் தனித்துவமாக செயற்பட்டிருந்தால் தமிழ் சமூகத்தில் இராசதுரைக்கு இன்றும் தனியான இடம் இருந்திருக்கும்.

https://thinakkathir.com/?p=29603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை அறிந்திராத அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொடர்பான பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

அமிர்தலிங்கம் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு நல்ல எண்ணம் இருந்ததில்லை. இவரது உரையை இந்திய அமைதிப்படை காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒலிபரப்பாகிய வெற்றிமாலை வானொலியில் கேட்ட ஞாபகம். தமிழ்மக்களைக் காக்கப் போராடிவரும் இந்திய அமைதிப்படைக்குத் தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அமிர் கேட்டுக்கொண்டதாக நினைவு. இந்திய அரக்கர்கள் தமிழர்களைக் கொன்றுகுவித்துக்கொண்டிருக்க, தமிழகத்தில் விருந்தாளியாக இருந்துகொண்டு அமிர் செய்த பிரச்சாரங்கள் அருவருப்பானவை. அவர் இறந்ததுபற்றிச் சிறிதும் கவலையில்லை, ஆனால் நாம் காரணமாகிவிட்டதனால்த்தான் வருத்தம். 

Link to comment
Share on other sites

இதில் ஒரு முரன்னகை என்னென்றால்,  அமிர்தலிங்கம் கடைசியாக 1989 ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியிலயே போட்டியிட்டு தோற்றார், ஆனாலும் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

மனுசன் அந்த தேர்தலில் எங்காவது/ எப்படியாவது  தான் எம்பியாக வேண்டும் என்று  ஓடுப்பட்டு திரிஞ்சது வெறுப்பாக இருந்தது. இறப்பின் பின் உடல் திருமலை நகரசபைக்கு அஞ்சலிக்கு வந்தபோது குறிப்பிட்ட எதிர்ப்பும் இருந்தது, இந்தியனாமியில் முழுப்பாதுகாப்பில்தான் அஞ்சலியும் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர் தலைமையிலான யாழ்பாணத்தவர்கள் ராசதுரைக்கு செய்தது அநியாயம். 

ஆனால் இது எத்தனை யாழ்பாணத்தவருக்குத் தெரியும்? ஊரில் உள்ளவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் யாழ்பாணத்தவரும், ராசதுரை துரோகி என பட்டம் கட்டி இலகுவில் கடந்து போக என்ன காரணம் ?

அமிர் தரப்பு ராசதுரை பற்றி யாழ் மக்களிடயே பரப்பிய அவதூறு?

அப்படியாயின் பிரபாகரன் பற்றி அமிர் பரப்பிய அவதூறுகள் ஏன் யாழ் மக்களிடம் எடுபடவில்லை?

ஏனென்றால் பிரபாவும் ஒரு யாழ்பாணத்தவர். 

ஆனால் ராசதுரை அப்படி இல்லையே? ஆகவேதான் அவரை காலாகாதுக்கும், இன்றும் துரோகி என இலகுவில் முத்திரை குத்த முடிகிறது.

#இச்சையின்றிய பிரதேசவாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

சே,

யாழ் மைய வாதம் என்று மிகப் பொதுவாக கூறுவதன் நோக்கம் என்ன ?

எனக்கு  நீங்கள் மிக முக்கியமான விடயங்களை தவறவிடுவதாகத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

சே,

யாழ் மைய வாதம் என்று மிகப் பொதுவாக கூறுவதன் நோக்கம் என்ன ?

எனக்கு  நீங்கள் மிக முக்கியமான விடயங்களை தவறவிடுவதாகத் தோன்றுகிறது.

கப்பித்தான்,

அதை விட குறிப்பாக எப்படி சொல்லலாம்?

தவறவிடுவனவற்றை பட்டியல் இடுங்களேன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கப்பித்தான்,

அதை விட குறிப்பாக எப்படி சொல்லலாம்?

தவறவிடுவனவற்றை பட்டியல் இடுங்களேன்? 

1;  எல்லாவற்றையும் பபிரதேச மையவாதம் என்பதற்குள் பொதுமைப் படுத்துகிறீர்கள்

2; இங்கே கருத்தெழுதுவோரில் பெரும்பான்மையோரின் வயதை கருத்தில் கொள்ளவில்லை

3; பிரதேசவாதம் பேசிய அரசியல்வாதிகளின் பின்ணணியை கவனத்தில் கொள்ளவேண்டும்.

4; ஒருவர் தனது பின்புலத்தை பெருமையாக கூருவதில் தவறு இருப்பதாக கருதுகிறீர்களா ?

5; சுதந்திரத்தின் பின்னான இலங்கையில் தமிழருக்கு சனனாயக வழியில் தலைமையேற்ர அரசியல்வாதிகளின் கல்விப் பின்னணி

6; பிரதேசவாதம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டும் செல்லுபடியாகுமா அல்லது தென் தமிழீழத்திற்கும் பொருந்துமா.

உண்மையில் இதனைதோண்டத்தொடங்கினால், பல்லைத் தோண்டி மணக்க கொடுத்த கதையாக முடியுமென பயப்படுகிறேன்.

[அதுசரி புலவர் ஏன் மௌனமாக உள்ளார். அவருக்கு ஒரு தொகை விடயங்கள் தெரிய வேண்டுமே ?]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.