Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முரளிதரனைமட்டும் குறை சொல்வது பிடிக்கல துரோகி என்றால் எல்லாம் துரோகிதான் 

எல்லாம் என்று கூறுகிரீர்கள் . யாரந்த எல்லாம் எனக் கூறலாமில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

எல்லாம் என்று கூறுகிரீர்கள் . யாரந்த எல்லாம் எனக் கூறலாமில்லையா ?

நீங்கள் தான் கண்டு பிடிக்கணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 
இது உங்கள் கொண்ணருக்கும் பொருந்தும். காட்டிக்கொடுத்துவிட்டு கொள்ளையிட்டவற்றோடு கொழும்புக்கு ஓடிப் பதுங்க.. கோத்தாவின் கள்ளப் பாஸ்போட்டில் லண்டனுக்குப் பாய.. எல்லாம்... முஸ்லீம்களின் அரசியல் தயவு தேவை..

இப்போ.. திடீர் என்று சீ சீ அந்தப் பழம்.. புளிக்கிறது.. எனும் இந்தக் குள்ள நரி.. நல்லது ஆகிவிட்டது. 

எல்லாம் காலக் கொடுமை. 

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

 இனத்தின் மேல் உள்ள தீராத பற்று, மண் பறிபோகிறதே என்கிற கவலை  பாருங்கோ. இவரின் நடிப்பை நம்பி வோட்டுப் போடுவார்கள் என்று நம்புகிறீர்களா? அவ்வாறு நம்பி இருந்தால் கோத்தாவுக்கு கணிசமான தமிழ் வாக்குகள் கிழக்கில் விழுந்திருக்க வேணுமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் தான் கண்டு பிடிக்கணும் 

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

Link to comment
Share on other sites

இன்று இருக்கும் தமிழ்க்கட்சிகளை  இணைத்து பயணிக்க எமக்கு ஒரு சாதுரியமான மக்களால் ஏற்க கூடிய சாரதி தேவை.

இல்லை, இருக்கும் சாரதிகளை இணைத்து பயணிக்க கூடிய ஒரு குதிரை தேவை.  

Link to comment
Share on other sites

On 12/14/2019 at 7:13 PM, ampanai said:

"கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." 

"அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்." 

இவை பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறியத்தராலம் !

கிழக்கை தமிழன் ஆள வேண்டுமாக இருந்தால் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். கிழக்கில் சிற்றூழியர்கள் மட்டுமல்ல உயர் பதவிகளிலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே இம்முறை எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் ஆதிக்கத்தை காடடவேண்டும்.

இந்த அரசுடன் அம்மானும் இருப்பதால் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கலாம். இல்லாவிட்ட்தால் சோனிகள் திருகோணமலை , அம்பாறையை பிடித்ததுபோல மட்டுவையும் அபகரித்துவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை.

கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும்.

சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து.

இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள்.

எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இது உங்கள் கொண்ணருக்கும் பொருந்தும். காட்டிக்கொடுத்துவிட்டு கொள்ளையிட்டவற்றோடு கொழும்புக்கு ஓடிப் பதுங்க.. கோத்தாவின் கள்ளப் பாஸ்போட்டில் லண்டனுக்குப் பாய.. எல்லாம்... முஸ்லீம்களின் அரசியல் தயவு தேவை..

இப்போ.. திடீர் என்று சீ சீ அந்தப் பழம்.. புளிக்கிறது.. எனும் இந்தக் குள்ள நரி.. நல்லது ஆகிவிட்டது. 

எல்லாம் காலக் கொடுமை. 

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

ஓம் அப்படித்தான்😂 இப்ப உங்களால் என்ன செய்ய முடியும் 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

***

இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள்.

ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

3 hours ago, ரதி said:

ஓம் அப்படித்தான்😂 இப்ப உங்களால் என்ன செய்ய முடியும் 🤣🤣

காலம் பதில் சொல்லும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார்.

முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி.

இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. 

ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை.

கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும்.

சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து.

இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள்.

எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.  
 
நாங்கள் முழுவதுமாக அழிந்துபோனோம் . இல்லையா ?  யாழ்பாணியால்தான் இனப்பிரச்சனையே ஆரம்பமானது என்று மட்டும்தான் கூறப்படவில்லை . 

மட்டக்களப்பானை கேட்டால் யாழ் மேலாதிக்கவாதம் என்கிறான். யாழ்ப்பாணத்தானை கேட்டால் தீவாராலதான் எல்லாமே என்கிரான். தீவானைக் கேட்டால் வடமராட்சியாராலதான் எல்லாமே என்கிரான் .

ஆனால் ஒருவனின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பையோ கல்வித் தகமையை கவனத்தில் எடுப்பதில்லை.

என்னுடய வெற்றி தோல்விக்கு பிறர்தான் காரணம் எனும் தவறான அணுகுமுறையே பிரதேசவாதத்திலும் காணக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்களுக்கு அப்படித்தான் புரிகிறது போல அதற்கு நான் என்ன செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு அப்படித்தான் புரிகிறது போல அதற்கு நான் என்ன செய்ய முடியும் 

ஒரு காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

இப்படியே சொல்லி திரிந்த கழுதையார் ஓர் நாள் புலியிடம் சொல்ல புலி  சிங்கத்தை போல  பதில் சொல்லாமல் ஓங்கி அறைஞ்சதாம் ஓவறா தண்ணியடிச்சிட்டு ஒளறப்படாது என😎😁😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள்.

ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

காலம் பதில் சொல்லும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார்.

முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி.

இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. 

ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 

நெடுக்கர்,அவர் தனக்கு பின்னால் அணி திரளுங்கள் என்று சொன்னவரா?...அந்தாள் தனக்கு ஏத்த மாதிரி ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்...அவருக்கு பின்னால் போக விரும்புபவர்கள் போகட்டும்...உங்களுக்கு அவரில் நம்பிக்கை இல்லையா/ பிடிக்கவில்லையா பேசாமல் இருங்கள் அல்லது உதறி தள்ளுங்கள் ...ஏன் கருணாவை பற்றி ஏதாவது திரி திறந்தாலே குத்தி முறிகிறீர்கள்?...பயப்பிடுகிறீர்கள்?

அவரும் மெளானாவும் பாடசாலையில் படிக்கும் காலத்தில் நண்பர்கள்...அந்த  மெளலானா சிங்களவராய் இருந்திருந்தாலும் அல்லது கிறிஸ்தவராய் இருந்திருந்தாலும் இந்த உதவியை கருணாவுக்கு செய்திருப்பார்...அங்கு எல்லோரும் மதம் ,இனம் கடந்து தனிப்படட ரீதியில் நண்பர்களாய்த் தான் பழகுவார்கள்...அதற்காக இனங்கள் ,மதங்களுக்களுக்கிடையே பிரச்சனையே இல்லை என்று சொல்லலாமா?... அந்த நட்பின் அடிப்படையில் தான் அவரை நம்பி கருணா போனவரே தவிர முஸ்லிம்களது முதுகில் ஏறி அவர் சவாரி செய்யவில்லை ...தனிப்பட்ட நற்புக்காய்  தன் பகுதி மக்கள் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை அவருக்கில்லை.

நீங்கள் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

நுணலையும் தன் வாயால் கெடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/15/2019 at 11:07 AM, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

நீங்கள் இன்று ஒரு கொலையை செய்தால் ..?
இவ்வளவு நாளும் நீங்கள் கொலை செய்யவில்லை என்ற வாதம் நீதிமன்றில் வேகுமா?

நேற்று நீங்கள் எப்படி என்பது நீதிக்கும் நியாயத்துக்கு தேவை இல்லை 
இன்று நீங்கள் செய்த  கொலைதான் .. உங்களை கொலைகாரன் என்று கொள்ளும். 

உங்களின் கேள்வியை பார்த்தால் துரோகி என்று ஒரு வார்த்தையே மொழிகளில் தேவை இல்லை 
துரோகி என்பவனே உடன் இருந்துவிட்டு  குழிபறித்தவன்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

கருணா துரோகி என்ற பதத்துக்குள்ள ஏன் மற்ற துரோகிகளை உள்ளடக்க மற்றவர்களால் முடியவில்லை என்பதுதான் எனது கேள்வி அப்போ துரோகி என்ற பதத்துக்குள்ள மற்றவர்கள் இல்லையா மருதர்

ஆக துரோகி என்ற பதத்துக்குள்ள எல்லோரையும் சேருங்க அப்பதான் நம்ம லிஸ்டு பெரிசாகும் அதைவிட்டுட்டு கருணா மட்டும் மட்டும் மட்டும் தான் துரோகி என்பதில் என்ன லாபம் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருணா துரோகி என்ற பதத்துக்குள்ள ஏன் மற்ற துரோகிகளை உள்ளடக்க மற்றவர்களால் முடியவில்லை என்பதுதான் எனது கேள்வி அப்போ துரோகி என்ற பதத்துக்குள்ள மற்றவர்கள் இல்லையா மருதர்

ஆக துரோகி என்ற பதத்துக்குள்ள எல்லோரையும் சேருங்க அப்பதான் நம்ம லிஸ்டு பெரிசாகும் அதைவிட்டுட்டு கருணா மட்டும் மட்டும் மட்டும் தான் துரோகி என்பதில் என்ன லாபம் ???

கருணாவின் திரிக்குள் ஏன் மற்றவர்களை உள்ளடக்க வேண்டும்.
நான் உங்களது கேள்விக்குத்தான் பதில் அழித்தேன் ....

துரோகம் செய்தவர்கள் 
கொலை செய்பவர்கள் 
கொள்ளை செய்பவர்கள் 

முன்பு என்ன செய்தார்கள் என்பது தேவையில்லாதது.
அதை செய்த பின்பு அவர்கள் துரோகி கொலையாளி கொள்ளையராகத்தான் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

கருணாவின் திரிக்குள் ஏன் மற்றவர்களை உள்ளடக்க வேண்டும்.
நான் உங்களது கேள்விக்குத்தான் பதில் அழித்தேன் ....

துரோகம் செய்தவர்கள் 
கொலை செய்பவர்கள் 
கொள்ளை செய்பவர்கள் 

முன்பு என்ன செய்தார்கள் என்பது தேவையில்லாதது.
அதை செய்த பின்பு அவர்கள் துரோகி கொலையாளி கொள்ளையராகத்தான் இருக்க முடியும்.

உங்க கதையை பார்த்தால் நல்ல கொலை கூடாத கொலை மற்ற து நல்ல துரோகம் கெட்ட துரோகம் என்பது போல் இருக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.