• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’

Recommended Posts

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றின் விழுதுகள் என்கிற நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

“அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும்  அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். அதனை எவராலும் தடுக்க முடியாது.

சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. சிங்கள மக்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.

சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால் தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகில் உள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வழ்கிறார்கள். இது இலங்கைக்கு புதிமையான விடயமல்ல. சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டியக் காலம் விரைவில் வரும்.

இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காக, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் எப்போதும் உதவத் தயாராகவே இருக்கிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலத்தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவுக்கு சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாக வாழ வேண்டுமெனவும், அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.

தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகள் 70 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குக்கு அப்பால் சில மாவட்டங்களிலும் போட்டியிடும். மலையக மக்களின் பிரதிநிதிகளுடன் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்களது ஒத்துழைப்பு காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா உருவாக்குவதற்கு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம். மலையகத்துக்கு வடக்குக்குமான தொடர்பு ஆழமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எந்தவிமானப் பிளவுகளும் இல்லை. ஐ.தே.க அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், ஒற்றுமையின்மை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிப்பதற்கு எடுத்துக்கொண்டத் காலத்தாமதமே, ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் தோல்விக்கு காரணம்.

புதிய அரசியலமைப்பு கொண்டவருவதில் ஏற்பட்டத் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவுகளே காரணம்.” எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இநதயவ-சநதகக-கண-கணடப-பரககககடத/150-242447

Share this post


Link to post
Share on other sites

யாரை ஐயா  சந்தேககண்கொண்டு பார்த்தது. எங்கள் கண்கள்தான் நொள்ழை கண்கலாச்சே. எப்படி ஐயா சந்தேகப்படுவது  ?

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, ampanai said:

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாக வாழ வேண்டுமெனவும், அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.

எந்த  ஒரு நாடுமே  தமிழருக்கு உதவப் போவதில்லை தாத்தா. தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கும், தனது கைக்குள் இலங்கையை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கும் கையாளும் தந்திரமே இப்படிப் பட்ட கூற்றுகள். அதற்கு மேல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. இலங்கைக்கும் அது தெரியும். இப்போ அவர்களின் தந்திரத்தை தாமரா அமெரிக்காவுக்கு எதிரா சுமத்துகிறா. இன்னும் கொஞ்ச நாளில் இதே வார்த்தைகளை இலங்கை தன் மீது குற்றம் சுமத்தும் அந்த நாடுகளுக்கு எதிராக சத்தமாய் பிரயோகிக்கும். முன்பும் தன் நாட்டில் மட்டும் சொல்லிச்சு. இனி பகிரங்கமாய் சொல்லும். அவனது தேவை முடிந்து விட்டது. அவனை எந்த நாடும் ஒன்றும் செய்ய முடியாது.  "நாங்கள் இந்தியாவின் போரையே கொண்டு நடத்தினோம்" என்று பகிரங்கமாக பொன்சேகா கூறியபோது இந்தியா சத்தமில்லாமல் இருந்தது. "சர்வதேசத்தின் உதவியில்லாமல் நாம் இந்தப் போரை வென்றிருக்க முடியாது". எனப் பலதடவை மகிந்தா சொன்ன போது அத்தனை நாடுகளும் மௌனம் காத்தன. இலங்கையும் இவ்வளவு காலத்தை சும்மா வெறும் வார்த்தைகளோடு எப்படி கடத்தியது? இது கூடப் புரியாமல் இவரெல்லாம்  ஒரு ராஜ தந்திரி.

Share this post


Link to post
Share on other sites

tenor.gif

எல்லா கிந்திய செம்புகளையும் சந்தேக கண் கொண்டுதான் பார்ப்பம் ..👍

  • Like 2
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 12/14/2019 at 2:34 PM, ampanai said:

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

வாற கோவத்துக்கு.....

Bildergebnis für angry boxing gif"

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தியா காரன் எப்பவோ இலங்கை பிரச்சினையை முடித்திருக்கலாம். இனி பேசி பலன் இல்லை. இப்போது சீன,அமெரிக்கா, இங்கிலாந்து எண்டு உலகமே இலங்கையை பார்த்துக்கொண்டு இருக்குது தங்களுக்கு ஏதும் புடுங்கலாமா எண்டு. இந்தியாவை எல்லாம் ஸ்ரீ லங்கா காரன் கணக்கிலேயே எடுக்க மாடடான். அப்புறம் எதுக்கு அவனை சந்தேக கண்கொண்டு பார்க்கவேண்டும். 

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தமிழர் பிரச்சனை  அரசியல் தொடர்பாக சிறந்த தெளிவான சிந்தனை கொண்டவர்கள்  யாரும் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்க  மாட்டார்கள்.  அப்படி இந்தியாவை சந்தேகப்படுவதே தவறு. ஈழத்தமிழ்மக்களுக்கு சுதந்திர நாடு அல்ல சிறு அளவிலான தன்னாட்சியுடன் கூடிய  கெளரவமான தீர்வு கூட கிடைக்கக் கூடாது என்பதில் இந்தியா மிக உறுதியுடன் கடந்த பல ஆண்டுகளாகவே வெளிப்படையாக தெரியும் வண்ணம்  செயற்பட்டு வருகையில் அவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ககாது அவர்கள் உதவவும் மாட்டார்கள் வேறு யாராவது உதவினாலும் அதை கெடுக்கும் வகையில் தான் நடந்து கொள்வார்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்ப வேண்டும்.  

 

  • Like 4

Share this post


Link to post
Share on other sites
On 12/14/2019 at 2:34 PM, ampanai said:

இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக் கூடாது.

இறைவனையும் நாம் சந்தேக கண் கொண்டுப் பார்க்கக் கூடாது என்பார்கள் ஆன்மிகவாதிகள்.சக்தி கொண்டவர்களை நாம்  சந்தேக கண் கொண்டு பார்பது எமது தவறு.இறைவனையோ, இந்தியாவையோ நாம் சந்தேக கண் கொண்டுப் பார்க்கும் போதே அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this