Jump to content

பரோட்டா போட பயிற்சி மையம்: பொறியியல் பட்டதாரிகளையும் கவர்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக
 
  •  
புரோட்டா போடுவதற்கு பயிற்சி மையம்படத்தின் காப்புரிமை Getty Images

வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம் என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. இந்த வரிசையில் மதுரையில் பரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையின் தெருவோர உணவுகள் தனி கவனம் பெற்றவை. அவற்றிலும் விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் பெயர் பெற்றவை.

பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது பரோட்டா.

புரோட்டா போடுவதற்கு பயிற்சி மையம்

இதனால் கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பரோட்டா மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 800 முதல் 1200 வரை ஊதியம் பெறுகின்றனர். சிலர் பகலில் ஒரு கடையிலும் இரவில் ஒரு கடையிலும் வேலை செய்து தினசரி 3 ஆயிரம் வரை சம்பாதித்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று பரோட்டா மாஸ்டராக வேலை செய்கின்றனர்.

இப்படி பரோட்டா மாஸ்டர்களுக்கு உலகெங்கும் தேவை உள்ளதால் மதுரையை சேர்ந்த முகமது காசிம் என்பவர் மதுரை நகரில் பரோட்டா தயாரிப்பதற்கு என்று பிரத்தியேமாக செல்பி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார்.

30 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் தினமும் காலையும் ,மாலையும் பரோட்டா தயாரிக்க செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மைதா மாவை தட்டி, வீசுவதுதான் பிரதான பயிற்சி.

புரோட்டா போடுவதற்கு பயிற்சி மையம்

சாதாரண பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு பரோட்டா என அனைத்து வகையாக பரோட்டாகள் தயாரிக்கவும் சால்னா தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பொறியியல் படித்தவர்கள் உள்பட வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்கள் பலரும் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கின்றனர்.

பரோட்டா மாஸ்டர்களுக்கு ஒரு நாளுக்கு 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதால் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே வேளையில் பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். புரோட்டா எதிர்ப்பு இயக்கமும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.

பட்டதாரி சகோதர்கள்

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மகன்களான பெரிய மருது மற்றும் லெனின் ஆகிய இரண்டு பட்டதாரி சகோதரர்கள் பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பெரிய மருது ஹோட்டல் மேலாண்மை படிப்பும், லெனின் பொறியியல் படிப்பும் முடித்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் பேஸ்புக்கில் பரோட்டா மாஸ்டர் கோச்சிங் சென்டர் குறித்து தெரிந்து பயிற்சி மையத்தில் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது குறித்து பட்டதாரி இளைஞர் லெனின் பிபிசி தமிழிடம் பேசுகையில் "நான் பொறியியல் படிப்பு முடித்து விட்டு ஓராண்டாக வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பை விட பரோட்டா மாஸ்டருக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது அதே போல் உள்ளுர் மற்றும் வெளி நாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றேன்" என்றார் லெனின்.

புரோட்டா போடுவதற்கு பயிற்சி மையம்

பரோட்டா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் பட்டதாரி இளைஞர் ராஜசேகர் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'நான் பி.எஸ்.சி விலங்கியல் படித்துள்ளேன். லேப் டெக்னீசியனாக பணியாற்றினேன். பின்னர் அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிந்துள்ளேன்.

சரியான வேலை கிடைக்காததால் தற்போது ஒரு உணவகத்தில் காசளர் வேலை செய்து வருகிறேன்'.'மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் ஆனால் நான் வேலை செய்யும் ஹோட்டல் பரோட்டா மாஸ்டருக்கு என்னை விட அதிக சம்பளம்.

நான் வாங்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை என்பதால் நான் பணிபுரியும் உணவகத்தில் பரோட்டா போட கற்று தரும்படி கேட்டேன் ஆனால் அவர்கள் கற்றுத் தர மறுத்ததால் நான் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து படிக்கிறேன்" என்றார்.

புரோட்டா போடுவதற்கு பயிற்சி மையம்

பரோட்டா பயிற்சி மையம் குறித்து ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம், பிபிசி தமிழிடம் பேசுகையில், ''முதலில் நான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும் போது பொது மக்கள் நகைச்சுவையாக பார்தார்கள். சிலர் கேலி, கிண்டல் செய்தனர். அது எனக்கு வருத்தத்தை தந்தது. ஆனால், என் மீது நான் வைத்த நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி அளிக்க தொடங்கினேன்'' என்றார்

"பரோட்டா மாஸ்டர்களுக்கு உள்ளூரிலும், வெளியூரிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதன் தேவையறிந்து பயிற்சி அளித்து வருகிறேன்.

60 கிலோ மீட்டர் பயணம் செய்துகூட இங்கே பயிற்சி பெறுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியும் இங்கே பயிற்சி எடுக்கிறார்கள். ஓராண்டில் 200 பேருக்கும் மேல் பயிற்சி அளித்துள்ளோம்" என்றார்.

https://www.bbc.com/tamil/india-50744283

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.