• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இந்தியாவின் உசைன்போல்ட் என வர்ணிக்கப்படும் கர்நாடகாவின் எருதுகளுடன் ஓடும் ஓட்டப்பந்தய வீரர்சிறீனிவாஸ் கௌடா, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார். கம்பாலா என அழைக்கப்படும்  வயலிற்கு நடுவில் இரண்டு எருதுகளுடன் 142 மீற்றர் ஒடும்போட்டியில் சிறீனிவாஸ் கௌடா கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார். 28 வயது கௌடா துடிப்பாக செயற்பட்டு முதல் 100 மீற்றரை 9.55 வினாடியில் கடந்தார். மொத்த தூரத்தை இவர் 13.62 வினாடிகளில் கடந்தார் இதேவேளை இவர் உசைன் போல்டின் உலக சாதனையையும் முறியடித்தார் இதன் காரணமாகஇவரை இந்திய ஊடகங்கள்இந்திய உசைன் போல்ட்என கொண்டாடுகின்றன. கௌடாவின் வெற்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பரவி இந்தியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கௌடாவிற்கு புகையிரதம் மூலம் புதுடில்லி சென்று அங்குள்;ள இந்திய விளையாட்டு துறை அதிகாரசபையில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்கள் அவரிற்கு பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தன்னால் தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது எனது காலில் காயம் ஏற்பட்டுள்ளது நான் கம்பலாவில் மாத்திரம் அக்கறை செலுத்துகின்றேன் என கௌடா குறிப்பிட்டுள்ளார். எனக்கு  வயல்வெளிகளில் எருதுகளுடன்  ஒடுவதே பழக்கமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/75805
    • தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 தொடரை தனதாக்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரக்காவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது, இரண்டாவது இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 189 ஓட்டங்களினலும், மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினாலும், நான்காவது போட்டியில் 191 ஓட்டங்களினாலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3:1 என்ற கணக்கில் தனதாக்கியது. பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமான இவ்விரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற, 7 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது போட்டி மழை காரணாக கைவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து 2 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது. இதன் பின்னர் பெப்ரவரி 12 ஆம் திகதி ஆரம்பமான இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தனால் வெற்றி பெற்றது. 14 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. இந் நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, இருபதுக்கு - 20 தொடரையும் தனதாக்கியது. இருபதுக்கு - 20 போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்ட நாயகன் விருதினை இங்கிலாந்து அணித் தலைவர் ஈயன் மோகன் தனதாக்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75784
    • ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தேர்தல். ஐ.தே,க. வின் கதையையும் (இரண்டாக பிரித்து) மொட்டு முடிக்கலாம்.