Jump to content

வடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த வரைதல் செயற்பாடுகளை தன்னார்வலர்களாக இளைஞர்கள் முன்வந்து செய்தனர்.அது போல வடக்கிலும் அதற்கான அடித்தளம் போடப்படுகிறது..

FB_IMG_1576333667891.jpg

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இந்த நடவடிக்கைகளை தமிழ் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து சுவரோவியங்கள் வரைவதற்கு சுவர்களை தூய்மைப்படுத்துதல் செயற்பாடுகளை செய்து வரைதலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் தயாராக உள்ளனர்.

FB_IMG_1576333662018-1.jpgFB_IMG_1576333616694.jpg

இந்த முயற்சி நிறைய திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு சமூக பொறுப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது..

FB_IMG_1576333657913.jpg

அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் செல்லும் வழியிலேயே இப்படியான நிகழ்வுகளை காணும் போது அவர்களோடு பேசி உங்கள் ஆதரவுகளை வழங்குதல் சிறப்பானது.

FB_IMG_1576333662018.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பக்கம் தேவையான ஆணிகளை மட்டும் புடுங்கினல் போது டெங்கு நோயினால பல பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்கள் முதலில் செவத்துக்கு பெயின்ட் அடிக்கிறத விட்டுட்டு கால்வாய்களையும் காண்களையும் துப்பரவாக்கினால் நோய் இல்லாமல் வாழலாம் 

Link to comment
Share on other sites

25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம பக்கம் தேவையான ஆணிகளை மட்டும் புடுங்கினல் போது டெங்கு நோயினால பல பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்கள் முதலில் செவத்துக்கு பெயின்ட் அடிக்கிறத விட்டுட்டு கால்வாய்களையும் காண்களையும் துப்பரவாக்கினால் நோய் இல்லாமல் வாழலாம் 

ஒரு நல்ல விடயத்தை இளைய சமூகம்  செய்ய எத்தனிக்கும் போது 'நீ ஏன் அதை முதலில் செய்யவில்லை இதை முதலில் செய்யவில்லை" என்று கேட்டு இப்ப செய்வதை மட்டம் தட்டுவது சரியான அணுகுமுறையா தனி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

ஒரு நல்ல விடயத்தை இளைய சமூகம்  செய்ய எத்தனிக்கும் போது 'நீ ஏன் அதை முதலில் செய்யவில்லை இதை முதலில் செய்யவில்லை" என்று கேட்டு இப்ப செய்வதை மட்டம் தட்டுவது சரியான அணுகுமுறையா தனி?

78949591-2692224317535710-78330248389092

79829795-2692224457535696-82225922325159

இதுதான் அவர்கள் கீறி திரிகிறார்கள் நாம் நம்ம சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சொறீலங்கா இராணுவத்தின் பெருமைகளை இந்த முட்டாள் சிங்களவர்கள்.. ஹெயிட்டியில் தேடிப் பார்த்தால் தெரியவரும்.

ஏன் ஹெயிட்டு.. எப்பிலிப்பிட்டியவில் தேடினாலே போதும்.

முட்டாள்.. மாதனமுத்தாக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

சொறீலங்கா இராணுவத்தின் பெருமைகளை இந்த முட்டாள் சிங்களவர்கள்.. ஹெயிட்டியில் தேடிப் பார்த்தால் தெரியவரும்.

ஏன் ஹெயிட்டு.. எப்பிலிப்பிட்டியவில் தேடினாலே போதும்.

முட்டாள்.. மாதனமுத்தாக்கள். 

நீங்கள் என்னதான் சொன்னாலும் அவங்க இங்க ஹீரோக்கம் அதாவது யுத்த வீர்ர்கள் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் என்னதான் சொன்னாலும் அவங்க இங்க ஹீரோக்கம் அதாவது யுத்த வீர்ர்கள் நெடுக்ஸ்

எம்மவர்களின் காட்டிக்கொடுப்பால்.. சுயநலத்தால்.. அந்த முட்டாள்கள்.. ஹீரோக்கள் ஆகிவிட்டனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

எம்மவர்களின் காட்டிக்கொடுப்பால்.. சுயநலத்தால்.. அந்த முட்டாள்கள்.. ஹீரோக்கள் ஆகிவிட்டனர். 

காட்டிக்கொடுப்பால்தான் கன சாம்ராஜ்ஜியங்கள் சரிந்தன 

பின்லேடன், சதாம் ,கடாபி இவர்களையும் அமெரிக்க பிடிக்க காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடியிலும் கெளம்பீட்டாங்க.அங்கை தாங்கள் புலிக்கு எதிரான போரில் உதவி செய்த்ததை கீறிக்காட்டப் போகினமாம்...யாழ்பாணத்து மூனா கட்டாயம்//ஜாவா கச்சேரி தான்னோடதென்னு படம் போடும் ...மன்னார் வவுனியாவில் தமிழன் சிறுபான்மயின்னு படம் கிறுக்கும்... 

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஓவியம் வரைந்த முதியவர் தவறி விழுந்து மரணம்

என் ஜெயரட்னம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,  மத்துகமை- யட்டதொல, பயாகல  வீதிக்கு குறுக்காக அமைந்துள்ள பாலத்தின் கீழ் உள்ள  சுவர்களில், சித்திரங்களை வரைந்துகொண்டிருந்த 75 வயதுடைய நபரொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  (04) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், யட்டதொல-நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த டீ.எம். விஜேரத்ன என்பவரே, இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சித்திரம் வரைதல் மற்றும் மரச் சிற்ப வேலைப்பாடுகளுக்கான  ஜனாதிபதி விருது பெற்ற இவர்,  இப்பகுதியை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து  தன்னார்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டி இரும்புக் குழாய்களை ஊன்றி, அவற்றின் மேல் பலகைகளைப் பரப்பி உருவாக்கப்பட்ட  தளத்திலிருந்து, (சாரம்) நேற்று  (04)  சுவரோவியங்களை வரைந்துக்கொண்டிருந்தபோது,  கால் தவறி அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து,  கட்டுகஹாஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக, களுத்துறை- நாகொட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/ஓவயம-வரநத-மதயவர-தவற-வழநத-மரணம/95-246446

டிஸ்கி : இவ்வாறான ஓவியங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவு பற்றி சித்தரித்தால் ... மகிழ்ச்சி

image_b7f10d8d51.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.