Jump to content

மக்கட்பேறு


Recommended Posts

மக்கட்பேறு - என் அனுபவம்


‪#மக்கட்பேறு ‬

‪திருமணமாகி மக்கட்பேறு இல்லாததை பற்றிய ட்விட்கள் பார்க்க நேரிட்டது..‬ ஒவ்வொருவரின் genetics, உடல்வாகு பொறுத்து அடைத்தும் மாறுபடும்..‬ நான் மருத்துவர் இல்லை மற்றும் இது மருத்துவ ஆலோசனை த்ரெட் இல்லை. எங்களுடைய அனுபவங்களை பகிர்கிறேன் அவ்வளவே..

‪என்னுடைய pinned tweet-ல் இருக்கும் thread-ற்கு நேரெதிராக உணர்வு கொண்ட பதிவு இது..‬

‪பெண் பார்த்தது.. திருமணம் நடந்தது.. எல்லாம் வழக்கம்போல சந்தோசமாக நடந்து முடிந்தது.. இல்லற வாழ்க்கை தொடங்கியது..‬
‪திருமணம் முடிந்து மூன்றாவது மாதம்.. நாள் தள்ளிப்போவதாக மனைவி சொல்ல.. ஆனந்தத்தில் திளைத்தேன்..

‪உடனடியாக pregnancy test kit வாங்கி வந்து மறுநாள் விடியற்காலை சோதனை செய்தோம்..‬

‪இரண்டு கோடுகள்..‬

‪தலைகால் புரியல.. சந்தோசத்தில் மனைவியை தழுவி உச்சிமுகர்ந்தேன்..‬ விடிந்ததும் வீட்டில் அனைவருக்கும் சொன்னோம்.. புது வரவை எண்ணி எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்..‬ மருத்துவமனை சென்றோம்.. blood test எடுத்து pregnancy உறுதி செய்யப்பட்டது..‬

‪அடுத்து ultrasound..‬

‪முதலில் மனைவி மட்டும் அறையில் இருக்க ultrasound செய்து மருத்துவர் பாத்தாங்க.. பின்னர் என்னை உள்ள அழைத்தாங்க..‬ திரையில் ஒரு ஆப்பிள் விதை அளவிற்கு இருக்கும் 5 வார குழந்தையை பார்த்த தருணம்..‬ எல்லாம் திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர் கூற மனது நிம்மதி பெற்றது..‬

‪கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டிய அறிவுரைகளை மருத்துவர் கொடுக்க, கவனமாக கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம்.. வழக்கத்தை விட நான் கார் மெதுவாக ஓட்டுவது, மனைவியை அதிக பலு தூக்காமல் பார்த்துக்கொள்வது போன்ற அனைத்து அறிவுரைகளையும் அப்படியே செய்தோம்..‬ சத்தான உணவாக சாப்பிட்டு ஓய்வு எடுப்பதே மனைவியின் முக்கிய வேலையானது..‬

‪இரண்டு வாரம் கழித்து HCG level பார்க்க blood test மற்றும் குழந்தை வளர்ச்சியை பார்க்க ultrasound-க்கு வர சொல்லிருந்தாங்க..‬ மருத்துவமனை போனோம்..‬ Lab technician உணவு இடைவேளைக்கு சென்றதால் ultrasound பார்த்திடலாம்னு சொல்ல.. வழக்கம்போல நான் அறைக்கு வெளியே இருக்க மருத்துவர் ultrasound பார்த்தாங்க..‬

‪சிறிது நேரத்தில் என்னை அழைக்க, உள்ள போனேன்..‬ கலங்கிய கண்களுடன் என் மனைவி அமர்ந்திருக்க.. சட்டென்று எனக்கு ஏதும் புரியல‬..

‪மருத்துவர் - Sorry, we don’t see any heart beat in the baby (குழந்தைக்கு இதயத் துடிப்பில்லை) என்றார்..‬ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. நெஞ்சு அடைக்குது.. கலங்கிய கண்களுடன் அருகில் மனைவி..‬ நான் அழுதால் இன்னும் நிலைமை மோசமாகிடும்னு, அழுகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிட்டு மருத்துவரை பார்த்து.. அடுத்து என்ன செய்யனும் என்றேன்..‬

‪D&C procedure மூலமாக கருவை வெளியே எடுக்கனும் என்றார்..‬ வேற வழியில்லையா என்ற என் கேள்விக்கு இல்லையென்று தலையாட்டினார்..‬ அன்று மாலை அட்மிட் செய்ய சொன்னார்கள்.. மறுநாள் காலை operation theatre-ல் D&C procedure..‬

‪வீட்டிற்கு ஃபோன் செய்து சொல்ல.. பதறியடித்து அனைவரும் வந்தார்கள்.. அம்மா, அப்பா, அண்ணன், மாமனார் என்ற அனைவரும் ஆறுதல் சொல்ல.. ஏதும் பேச தோன்றாமல் சரி அல்லது சரி என்பது போல தலையாட்டி வைத்தேன்..‬

‪மாலை அட்மிட் ஆகி நான் கூட இருக்கிறேன், நீங்கல்லாம் நாளை procedure முடிஞ்ச பிறகு வாங்க என்று அனுப்பி வைத்தேன்..‬ anesthesia கொடுக்கனும்ன்றதால இரவு உணவிற்கு அப்புறம் தண்ணீர் உட்கொள்ளக் கூடாது என்பதால் மனைவி சோர்ந்துட்டாங்க..‬

அதுதான் வாழ்நாளில் நான் கண்ட மிக நீண்ட இரவு.. நொடிகள் அவ்வளவு மெதுவாக நகர்ந்து நான் பார்த்ததில்லை..

‪nurse வந்து operation theatre-க்கு மனைவிய கொண்டுபோனாங்க‬.. சிகிச்சை முடிந்து பின்பு அறையில் மெல்ல மெல்ல மனைவிக்கு கண்விழிப்பு வந்தது.. மயக்க மருந்து மற்றும் செய்த procedure-னால வந்த உடல்வலி முகத்தில் தெரிந்தது..‬

‪அருகில் அமர்ந்த என்னிடம்..‬ எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது, நான் யாருக்கும் எந்த கெட்டதும் நினச்சது கூட இல்லை என்று மார்பு மீது தலை வைத்து அழும் மனைவி..‬ அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டத்தை வெறித்தேன்.. என் கண்ணில் வர எத்தனித்த கண்ணீரை மனதிற்குள் விழுங்க..‬

‪கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்த என்னிடம் பேரக்குழந்தை பிறந்திருக்கு ஸ்வீட் எடுத்துக்கங்க என்றார் அந்த அறையின் சூழ்நிலை அறியாத அந்த புதுப் பாட்டி..‬ சிரித்தபடி வாழ்த்துக்கள் சொல்லி வழியனுப்பி மேசை மீது ஸ்வீட் வைத்துவிட்டு மனைவி மடி மீது நான் தலைவைக்க.. என் தலைமுடி கோதி ஆறுதல் தந்தார்..

‪discharge ஆகும்போது அடுத்த 6 மாசத்தற்கு குழந்தைக்கான முயச்சி செய்யவேண்டாமென மருத்துவர் சொல்லி அனுப்பினார்..‬ நாங்க ஒரு வருடம் பொறுத்தோம்..‬

‪அதன் பிறகு மனைவி கர்ப்பமானாங்க.. எல்லோருக்கும் சந்தோசம்.. மருத்துமனை சென்று blood test மற்றும் ultrasound செய்து எல்லாம் நல்லாருக்குன்னாங்க‬.. மூன்று வாரம் கழித்து, இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று மனைவி எழுப்பினாங்க..‬ படுக்கை நிறமற்ற ஒரு திரவத்தால் நனைந்திருக்க.. என்னவென்று புரியவில்லை..‬

‪அவசரமாக மருத்துவமனை செல்ல.. அங்கு ultrasound செய்து பார்க்க.. பனிக்குடம் உடைஞ்சிருச்சு.. No heart beat.. என்று மருத்துவர் சொல்ல..‬ நொறுங்கிவிட்டேன்.. என்ன சொல்லவென்று தெரியல..‬

‪மறுபடி அதே D&C procedure.. ஆறு மாதம் இடைவெளி வட சொன்னாங்க..‬

‪இந்த முறையும் ஒரு வருடத்திற்கு பிறகு முயன்றோம்..‬ மூன்றாவது முறை நல்ல செய்தி.. ஆனால் இந்த முறை 5வது வாரத்திலேயே அதுவாக கலைந்துவிட்டது..‬

‪அதன் பின் இரண்டு வருடம் ஆகியும் நல்ல செய்தியில்லை.. அதனால் IUI (Intra Uterine Injection) மூலம் முய்சிக்கலாம் என்று மருத்துவர் சொல்ல.. ‬

‪IUI - ஆண் விந்தினை கருவி மூலம் செயற்கை முறையில் பெண் உறுப்பு வழியாக உள்ளே செலுத்துவது‬.. அதற்கு ஆண் தன் விந்தினை சேகரித்து கொடுக்கவேண்டும்..‬ மருத்துவமனையில் அதற்கென்று அறை இருக்கும்.. அந்த மருத்துவமனையில் ஒதுக்குப்புறமாக இல்லாமல் நட்டநடுவில் இருக்கும்.. அந்த அறைக்கு எதற்கு போவார்கள் என்பது அந்த தளத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும்..

அந்த அறைக்குள் சுய இன்பம் அனுபவித்துத்தான் விந்தினை சேகரிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.. வெளியே 40-50 அமர்ந்திருக்க அவர்கள் பார்க்கும்போதே விந்து சேகரிக்கும் டப்பாவை எடுத்துக்கொண்டு பல கண்கள் மொய்க்க அந்த அறைக்குள் செல்வது மிக கொடுமையான தருணம்.. உள்ளே நாம் சுய இன்பம் செய்வோம் என்பது வெளியே அத்தனை பேருக்கும் தெரியும் என்ற சிந்தனையுடன் சுய இன்பம் செய்து விந்து எடுப்பது அதை விட கொடுமை..

ஒரு வழியாக விந்து சேகரித்து கொடுத்து IUI procedure முடிந்தது.. ஆனால் success ஆகல.. முதல் முறையே success ஆவது சாதாரணமாக நடக்கும் விசயமல்ல.. அடுத்த முறை IUI முயற்சி success ஆனது.. ஒவ்வொரு வாரமும் blood test and ultrasound செய்து குழந்தை சரியாக வளர்கிறதா என்று மருத்துவர் கண்காணிக்க வாரங்கள் நகர்ந்தது..

10-வது வாரம் spotting ஆக ஆரம்பித்தது.. மருத்துவர் பரிசோதித்துவிட்டு progesterone மாத்திரைகள் கொடுத்தார்.. இருந்தும் spotting முழுவதும் நின்றபாடில்லை.. ஒரு வாரம் மருத்துவமணையில் அட்மிட் செய்து ஓய்வு எடுக்க செய்து ட்ரிப்ஸ் ஏற்றினார்கள்.. சில supportive medicine-களுடன்.. பின்னர் discharge ஆகி வீட்டிற்கு வந்தோம்.. வந்த இரண்டாவது நாள் மனைவிக்கு chicken pox வந்துவிட்டது..

மருத்துவமனை சென்றோம்.. அட்மிட் செய்ய சொன்னார்கள்.. solid food சாப்பிட முடியாத்தால் 24 மணி நேரமும் ட்ரிப்ஸ்.. மனைவிக்கு அம்மை நோய்க்கு மருந்து மற்றும் spotting நிற்காத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஆகாமல் இருக்க என்று மருந்து ட்ரிப்ஸ் வழியே கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.. 3-4 நாட்களில் ட்ரிப்ஸ் இறங்காது.. எடுத்து இன்னொரு vein பார்த்து ஏத்தனும்.. ட்ரிப்ஸ் ஏறும் கையை அசைக்கமுடியாது 24 மணி நேரமும் அப்படியே வைத்திருக்கனும்.. ரொம்ப அசைக்கக்கூடாது..

அட்மிட்டான இரண்டாவது வாரம் scan report பார்த்தால் இன்ப அதிர்ச்சி.. இரட்டை குழந்தைகள் என்று இருந்தது.. முன்பு செய்த ஸ்கேன்களில் சரியாக தெரியவில்லை என்றனர்.. ஆனால் அந்த இன்பம் நிலைக்கவில்லை.. பின்னர் செய்த ஸ்கேனில் ஒரு கருவில் heart beat இப்போது இல்லை.. அந்த கரு தானாக கரைந்துவிடும் மற்றொரு கருவிக்கு பாதிப்பில்ஐ என்றனர்..

அந்த இரவுகள் முழுவதும் நான் உறங்கியதில்லை.. தூக்கத்தில் மனைவி கை வேகமாக அசைத்து ட்ரிப்ஸ் ஏதாவதாகிவிடுமோ என்று அதை கண்காணிக்க.. அந்த இரவுகளை எனக்கு நகர்த்தியது இசைஞானி இளையாராஜாவின் பாடல்கள்.. மறுநாள் காலை அம்மா வந்தவுடன் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் தூங்கி பின்பு refresh ஆகிவிட்டு மருத்துவமனை வந்துவிடுவேன்.. அங்கிருந்தே பகல் முழுவதும் மனைவியை கவனித்துக்கொண்டே remote work செய்தேன்.. இப்படியே 5-6 வாரங்கள் சென்றது.

வாழ்க்கையின் மிகக்கொடுமையான நாட்கள் அவை.. எதிரிக்கும் அந்த நிலை வரக்கூடாது..

பின்னர் discharge ஆகி வீட்டுற்கு வந்தோம்.. அடுத்த வாரம் எனக்கு chicken pox வந்தது.. 10 நாட்களுக்குப் பின் சரியானது.. அந்த சமயத்தில் மனைவிக்கு எந்த தொந்தரவுமல்லாததால் மருத்துவமனை செல்லவில்லை.. அடுத்து பார்க்க வேண்டியது 20th week anomaly scan.. பயந்து கொண்டே சென்றோம்.. முன்பு chicken pox வந்ததால்.. scan முடிந்தது.. மறுநாள் சென்று report வாங்கினேன்.. நல்லவிதமாகவே இருந்தது.. அனைவரும் சந்தோசபட்டோம்.. அது 2 நாட்கள் கூட நிலைக்கவில்லை..

அதிகாலையில் பனிக்குடம் உடைந்தது.. நிறைய தண்ணீர் வெளியேறிவிட்டது.. மருத்துவமனை சென்றோம்.. அட்மிட் செய்து பரிசோதித்தார்கள்.. நிறைய தண்ணீர் வெளியேறிவிட்டதால் குழந்தை இறந்துவிட்டது என்றார்கள்.. மனம் சுக்கு நூறாக உடைந்தது.. துக்கம் தாளாமல் மனைவி கட்டிப்பிடித்து கதறினாங்க.. எனக்கும் ஓவென்று கதறி அழவேண்டும் போல இருந்தது.. நானும் அழுது கொண்டிருந்தால் தேற்றுவது யார்.. மனதை இரும்பாக்கி கண்ணீரை அதனுள் அடக்கினேன்..

C section செய்யாமல் ஊசி போட்டு வலி வரவைத்து குழந்தையை வெளிய எடுக்க முயற்சித்தனர்.. பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறிவிட்டதால் அவ்வளவு எளிதில் குழந்தை வெளியே வரவில்லை.. இன்னும் சில ஊசிகள் போட்டு ஒரு வழியாக அடுத்த நாள் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.. முழுவதும் வெளியே வராத்தால் D&C procedure செய்து remnants செத்தம் செய்தார்கள்..

Operation theatre-க்கு வெளியில் பிறந்த குழந்தையை பார்க்க அமர்ந்திருந்தவர்களுக்கு மத்தியில் என் இறந்த குழந்தையின் வரவிற்காக காத்திருந்தேன்.. கண்ணாடி குடுவையில் இறந்த குழந்தையை போட்டு கொண்டு வந்து காட்டினார்கள்.. ஆண் குழந்தை.. 

கையில் ஏந்தி மகிழ வேண்டிய குழந்தையை ஒரு specimen போல கண்ணாடி குடுவையில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை..

இரண்டு நாட்களுக்குப்பின் discharge ஆகி வீட்டிற்கு வந்தோம்.. அன்றிறவு என் மனைவி என்னிடம் “தயவு செஞ்சு அழுதிடுங்க.. இந்த 5 மாசம் நான் எவ்வளவோ முறை அழுதிட்டேன்.. இந்த வாரம் நிறைய அழுதிட்டேன்.. ஆனா நீங்க அழுது ஏன் கண் கலங்கி கூட நான் பாக்கல.. மனசுக்குள்ளயே அழாதீங்க.. வாய்விட்டு அழுதிடுங்க ப்ளீஸ்” என்றார்.. மெல்லிய புன்சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு உச்சிமுகர்ந்து ஆறுதல் சொன்னேன்.. என் மனைவிக்கு நானும், எனக்கு என் மனைவியும் குழந்தையானோம்.. 

ஒரு வருடம் ஓடியது.. நல்ல செய்தி ஏதுமில்லை.. வீட்டில் மற்றவர் வற்புறுத்தலால் மருத்தவனை சென்று இருவரும் full checkup செய்துகொண்டோம்.. report எல்லாம் பார்த்துவிட்டு உங்க ரெண்டு பேருக்கும் உடல் அளவில் எந்த பிரச்சனையுமில்ல.. ஆனா ஏன் குழந்தை உண்டாவதில் தாமதம்/தங்கவில்லை என்று தெரியல.. நீங்க வழக்கம்போல இருங்க தானாக நடக்கும் என்றார்கள்.. நாங்களும் இதற்கென்று தனியே ஏதும் மெனக்கெடாமல் முடிந்தவரை சந்தோசமாக வழக்கம்போல இருந்தோம்..

இரண்டு மாதம் கழித்து நல்ல செய்தி.. இந்த முறையும் spotting இருந்தது.. ஆனால் குறைவாக.. gestational diabetes இருப்பது blood test-ல் தெரியவர insulin injection pen மூலம் regular-ஆக கொடுத்தோம்.. ஒவ்வொரு வாரமும் blood test மற்றும் ultrasound செய்தோம்.. 20th week anomaly scan result நன்றாகவே வந்தது..

ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல கடந்தது.. ஒரு வழியாக 37 வாரம் வந்தாயிற்று.. Past history-யை வைத்து normal delivery வேண்டாம் C section செய்துவிடலாம் என்றார்கள்.. அதுவும் சரியென்று பட.. அடுத்த வாரம் நாள் குறித்தோம்.. முந்தைய நாள் இரவு அட்மிட் ஆனோம்.. மறுநாள் காலை முதல் operation எங்களுடையது.. மறுநாள் காலை anesthesia கொடுக்கும் முன்பு வேறு ஒரு emergency வந்ததால் இரண்டாவதாக எங்களை மாற்றினார்கள்..

பின்னர் மனைவிக்கு anesthesia கொடுக்கப்பட்டு operation theatre கொண்டுசெல்லப்பட்டர்.. 15 நிமிடங்களில் மருத்துவர் வந்து நல்லவிதமாக முடிந்தது உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் என்றி சொல்லிட்டு மறுபடி உள்ளே சென்றார்.. அம்மா என்னை கட்டி அழுதபடி உச்சிமுகர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் குழந்தையை கொண்டு வந்து கையில் கொடுத்தார்.. இத்தனை வருடம் கிடைக்காத அப்பா என்ற பதவி கிடைத்த நாள் அது..

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் என் மனைவிக்கு நம்பிக்கை உண்டு.. இத்தனை வருடம் இவ்வளவு சோதனைகளை கடந்தபோதும் கடவுள் நம்பிக்கை குறைந்ததில்லை.. நானும் இதுதான் சாக்கு என்று மனைவியிடம் அவர் கும்பிடும் கடவுளை திட்டியதில்லை.. அது அவர் நம்பிக்கை..

இதில் முக்கியமான விசயம் நம்பிக்கை.. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை.. ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லாமல் இருப்பது.. நல்ல சத்தான உணவு சாப்பிட்டு ஆரோக்யமாக இருந்து முயற்சி செய்வது.. கூடவே மருத்துவர் சொல்லும் support medicines (prenatal) எடுத்துக்கொள்வது.. இவையெல்லாம் குழந்தை உருவாகும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்..

நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும்.. 

நன்றி,
பச்சக்கிளி(twitter)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு.......!    ஒரு பிள்ளையாவது வீட்டில் விளையாடவில்லை என்றால் அந்த சோகம் சொல்லி முடியாது.......பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைச் செல்வம் இல்லாமல் வேதனைப்படும் பல தம்பதியினர் உள்ளனர். ஆனால் மருத்துவம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்.

பச்சக்கிளியும் அவர் மனைவியும் பட்ட வேதனைகளை எழுத்தில் கொண்டுவருவது இலகுவானதல்ல.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 12/15/2019 at 4:52 PM, suvy said:

மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு.......!    ஒரு பிள்ளையாவது வீட்டில் விளையாடவில்லை என்றால் அந்த சோகம் சொல்லி முடியாது.......பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.....!   👍

 

On 12/15/2019 at 8:17 PM, கிருபன் said:

பிள்ளைச் செல்வம் இல்லாமல் வேதனைப்படும் பல தம்பதியினர் உள்ளனர். ஆனால் மருத்துவம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்.

பச்சக்கிளியும் அவர் மனைவியும் பட்ட வேதனைகளை எழுத்தில் கொண்டுவருவது இலகுவானதல்ல.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் பேறு இல்லாத வாழ்க்கையின் கொடூரத்தை, வெறுமையை வார்த்தையில் சொல்ல முடியாது.

அதே போல், பேரப்பிள்ளைகளை காணாத முதுமையும் வெறுமையே.

சுற்றி நாலைந்து குஞ்சு, குருமான்களுடன் லூட்டியடிக்கும் தாத்தா, பாட்டிகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

சுற்றி நாலைந்து குஞ்சு, குருமான்களுடன் லூட்டியடிக்கும் தாத்தா, பாட்டிகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..!

அனுபவித்திருக்கிறீர்களா ராசவன்னியன்?

எனக்கு அந்த மகிழ்சசி கிடைத்திருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

அனுபவித்திருக்கிறீர்களா ராசவன்னியன்?

எனக்கு அந்த மகிழ்சசி கிடைத்திருக்கிறது

tenor.gif?itemid=4438249

ஆமாம்.. ஒரு பேரன் இருக்கிறார். 

வீட்டிற்கு சென்றால், வெளியில் சென்றால் அவரோடுதான் எப்பொழுதும். பள்ளிக்கு, பார்க்கிற்கு விளையாட கூட்டி சென்று திரும்பி வருவது எல்லாம்.

பேரன் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுத்துவிட்டு, மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்குவது பழகிப் போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ராசவன்னியன் said:

பேரன் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுத்துவிட்டு, மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்குவது பழகிப் போச்சுது.

உங்களுக்குப் பரவாயில்லை. எனக்கு சும்மாவே திட்டு விழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  ஒரு குழந்தை கையில் கிடைக்க கடந்து வந்த வலிகள் ...கொடுமையானவை .பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.