Jump to content

இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை! - மகிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை! - மகிந்த

_22806_1576393955_629EC442-EB6E-420A-B0AB-8A50902FB4EB.jpeg

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஸ்ரீலங்கா மிக மோசமான புதிய பயங்கரவாதமொன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

இந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்கொண்டது போல் ஆயுத தளபாடங்களோ, அல்லது பாரிய இராணுவ நடவடிக்கைகளோ சாத்தியப்படாது என்று கூறும் ஸ்ரீலங்கா பிரதமர், அதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பே அவசியப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் படை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு கலாசாலையில் படை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்துப்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அங்கு உரையாற்றுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகளினால் எழுந்த சவால்களை வெற்றிகொள்ள எமக்கு ஆயுதங்கள் மற்றும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக் தேவைப்பட்டன. ஆனால் நாம் இன்று முகம்கொடுத்துள்ள புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பொன்றே தேவைப்படுகின்றது. சர்வதேச புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் மிக நெருங்கிய உறவைப் பேணிக்கொள்வதற்கு தேவையான வகையில் எமது வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். இறைமையுள்ள ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் உள்ளிட்ட அரச படைகளுக்குத் தேவையான தலைமைத்துவத்தை அரசியல் தலைமைகள் என்ற ரீதியில் நாம் முழுமையாக பெற்றுக்கொடுப்போம். அதுதான் நாம் இந்த நாட்டு மக்களுக்கும், இராணுவம் உட்பட அரச படையினருக்கும் வழங்கும் வாக்குறுதியாகும்” என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முகம்கொடுத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதம் ஸ்ரீலங்காவிற்கு மாத்திரமன்றி அது தெற்காசிய வலையத்திற்கும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தையும் கடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றார்.

இதனால் இந்தியா உட்பட அயல் நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மஹிந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பாய் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை. எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய அனைத்து தீவிரவாதிகளும் ஸ்ரீலங்கா பிரஜைகள். இந்த அச்சுறுத்தல் எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. இந்த பிராந்தியத்தின் இருப்பிற்காக நாம் இந்த பயங்கரவாதத்தை அழிக்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டு இரண்டு தடவைகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஸ்ரீலங்கா ஊடாக இந்தியாவிற்குள் படகுகளில் நுழைவதற்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எம்மால் இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்தியா மாலைதீவு பங்களாதேஷ் மாத்திரமன்றி மியன்மார் தாய்லாந்து மலேசியா அதேபோல் அதற்கு அப்பால் இருக்கும் நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால் இந்த பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிக்க வேண்டியது அவசியம். எம்மை சூழவுள்ள நாடுகளும் இந்த அச்சுறுத்தலை புரிந்துகொண்டிருப்பதால், அவர்களிடமிருந்தும் இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்
 

http://www.battinaatham.net/description.php?art=22806

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ அவங்களும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டி இருக்கு நடக்கட்டும் மகிந்த மாத்தயா

Link to comment
Share on other sites

முதலில் இவர்களது தலைமைகளை விசாரிக்க வேண்டும். ரிசார்ட், ஹரீஸ், ஹிஸ்புல்லா  போன்றவர்கள் இதட்கு ஆதரவு வழங்குபவர்கள்.

இந்த அமைப்புக்கள் மூலமாக பல்கலைக்கழகங்களில் கல்வி கட்கும் சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கப்படுகிறது. இஸ்லாமிய மதரஸாக்களில் மூளை சலவை செய்யப்படுகிறது, பணம் வழங்கப்படுகிறது.

இந்த அரசியல்வாதிகள் தங்கள் பெயர்களில் பவுண்டஷன்களை (Foundation ) உருவாக்கி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணத்தை கொண்டு வருகிறார்கள். எனவே அரசாங்கம் இதனை சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

1. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்

2. ஜனாதிபதி செயலக முன்னாள் இராணுவ அதிகாரியான கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டிருக்கிறார்

3. தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்

4. பிரிகேடியர் சுரேஷ் சாலே, எஸ் ஐ எஸ் எனப்படும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

5. துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருக்கிறார் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.