Jump to content

சென்னை ஒருநாள் போட்டி


Recommended Posts

சென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா 36 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோசப் வீசிய பந்தில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளித்தார்.

இதன்பின்னர் சிரேயாஸ் ஐயரும், ரிசப் பந்தும் ஜோடி சேர்ந்தனர்.

https://www.polimernews.com/dnews/92927/சென்னை-ஒருநாள்போட்டி...இந்திய-அணிபேட்டிங்...!

Link to comment
Share on other sites

இந்தியா  

மட்டைவீச்சு                                                     RB4s6sS/R
ரோஹித் ஷர்மாஸி கைரான் போலார்ட் பி அல்ஜார்ரிஜோசப்   3656 6 064.28
கே.எல். ரஹூல்ஸி சிம்ரான் ஹெட்மீர் பி ஷெல்டன் கோட்ரெல்  615 1 040
விராத் கோலிபி ஷெல்டன் கோட்ரெல்                                                        44 1 0100
ஷ்ரேயாஸ் அய்யர்ஸி கைரான் போலார்ட் பி அல்ஜார்ரிஜோசப்7088 5 179.54
ரிஷாப் பந்த்ஸி சிம்ரான் ஹெட்மீர் பி கைரான் போலார்ட்           7169 7 1102.89
கேதர் ஜாதவ்ஸி கைரான் போலார்ட் பி கீமோ பால்                         4035 3 1114.28
ரவீந்திர ஜடேஜாரன் அவுட் (ரோஸ்டன் சேஸ்)                                        2121 2 0100
 
ஷிவம் துபேஸி ஜேசன் ஹோல்டர் பி கீமோ பால்                                 96 1 0150
தீபக் சஹார்நாட் அவுட்                                                                                  78 0 087.50
முகம்மது ஷமிநாட் அவுட்                                                                              01 0 00

எக்ஸ்டிராஸ்:24 ரன்                                                         288/8 (50.0)     ரன் ரேட்: 5.76

 
Link to comment
Share on other sites

வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்

பவுலிங்                                                                                       OMRWNBW/DE/R
ஷெல்டன் கோட்ரெல்                                                         103462044.60
ஜேசன் ஹோல்டர்                                                                 80450115.62
ஹேடன் வால்ஷ்                                                                    50310006.20
கீமோ பால்                                                                               70412235.85
அல்ஜார்ரிஜோசப்                                                                  91452035
ரோஸ்டன் சேஸ்                                                                      70420006
கைரான் போலார்ட்                                                             40281007

விக்கெட் சரிவு :
21/1 (கே.எல். ரஹூல் 6.2 ஓவர்), 25/2 (விராத் கோலி 7 ஓவர்), 80/3 (ரோஹித் ஷர்மா 18.1 ஓவர்), 194/4 (ஷ்ரேயாஸ் அய்யர் 36.4 ஓவர்), 210/5 (ரிஷாப் பந்த் 39.4 ஓவர்), 269/6 (கேதர் ஜாதவ் 47.3 ஓவர்), 269/7 (ரவீந்திர ஜடேஜா 47.4 ஓவர்), 282/8 (ஷிவம் துபே 49.3 ஓவர்)

Link to comment
Share on other sites

வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியா வை வென்றது

மட்டைவீச்சு                                                RB4s6sS/R
 
ஷாய் ஹோப்நாட் அவுட்                                                                       102151 7 167.54
  
சுனில் அம்பிரஸ்எல்பிடபுள்யு பி தீபக் சஹார்                               98 2 0112.50
 
 சிம்ரான் ஹெட்மீர்ஸி ஷ்ரேயாஸ் அய்யர் பி முகம்மது ஷமி  139106 11 7131.13
 
 நிக்கோலஸ்பூரன்நாட் அவுட்                                                                      2923 4 0126.08

எக்ஸ்டிராஸ்: 12                                               ரன்291/2 (47.5)                    ரன் ரேட்: 6.08

இந்தியா பவுலிங்

பவுலிங்
OMRWNBW/DE/R
தீபக் சஹார்
101481004.80
 
முகம்மது ஷமி
91571006.33
 
குல்தீப் யாதவ்  100450034.50
 
ஷிவம் துபே        7.50680008.68
 
கேதர் ஜாதவ்           101100011
 
ரவீந்திர ஜடேஜா 100580105.80

விக்கெட் சரிவு :
11/1 (சுனில் அம்பிரஸ் 4.1 ஓவர்), 229/2 (சிம்ரான் ஹெட்மீர் 38.4 ஓவர்)

Link to comment
Share on other sites

ஹெட்மயர், ஹோப் அதிரடி சதம்: விண்டீஸ் வெற்றி

சென்னை: விண்டீஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஹெட்மயர் சதம் விளாச, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே அறிமுக வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. காட்ரெல் 'வேகத்தில்' ராகுல் (6) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 4 ரன்களில் போல்டானார். ஜோசப் பந்தில் ரோகித் (36) ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தபோது, ஸ்ரேயாஸ் (70) ஆட்டமிழந்தார். போலார்டு பந்தில் ரிஷாப் (71) அவுட்டானார். ஜாதவ் (40) அணிக்கு கைகொடுத்தார். ஜடேஜா (21), ஷிவம் துபே (9) விரைவில் திரும்பினர்.

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்தது. ஷமி (0), தீபக் சகார் (7) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் காட்ரெல், கீமோ பால், ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஹெட்மயர் சதம்

விண்டீஸ் அணிக்கு சுனில் அம்ப்ரிஸ் (9) ஏமாற்றினார். ஷாய் ஹோப், ஹெட்மயர் ஜோடி மிரட்டியது. இந்திய பந்துவீச்சை சிதறடித்த ஹெட்மயர் ஒரு நாள் அரங்கில் ஐந்தாவது சதம் விளாசினார். இவர் 139 ரன்களில் அவுட்டானார். தன் பங்கிற்கு ஹோப் சதம் அடித்தார். ஷிவம் துபே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பூரன் வெற்றியை உறுதி செய்தார். விண்டீஸ் அணி 47.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப் (102), பூரன் (29) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாவது போட்டி வரும் 18ல் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2434676

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெட்மயர் விளையாட்டு சூப்ப‌ர் , ஹெட்மயர் அடிச்ச‌ ப‌ந்து மைதாண‌த்துக்கு வெளியில் விழுந்த‌து , கிரிக்கேட்டில் வெஸ்சின்டீஸ் அணி வீர‌ர்க‌ளால் தான் உப்ப‌டி சிக்ஸ் அடிக்க‌ முடியும் 💪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.