Jump to content

மக்களின் எதிர்ப்பால் புகுந்த கோபுரங்கள் வௌியேறின

Recommended Posts

5ஜி தொழில்நுட்ப கோபுரம் அமைப்பதற்கு, கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் அனைத்தும், குருநகர் மக்களின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம், இன்று (17) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், பரிச்சயமாக சேவை வழங்கும் நடவடிக்கைக்கு, மாநகர சபையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுன்னக்கட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (17) குருநகர் கிழக்கில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில், 5ஜி தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கென கொழும்பிலிருந்து தொலைத்தொடர்பு கோபுரங்கள் கொண்டுவரப்பட்டன.

இதையறிந்த பிரதேச மக்கள், அப்பகுதியில் ஒன்றுகூடி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, கொழும்பு இருந்து கொண்டுவரப்பட்ட கோபுரங்கள் அனைத்தும் மீண்டும் திரும்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களின்-எதிர்ப்பால்-புகுந்த-கோபுரங்கள்-வௌியேறின/71-242598

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடர் மோடர் சீவியகாலமும் மோடர் 

(மோடர் - மூடர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் 5ஜி கோபுரங்கள் இயக்கப்பட்ட இடங்களில் பல நூறு பறவைகள் திடீர் என்று இறந்து வீழ்ந்துள்ளன.

இது இங்கிலாந்து.. நெதர்லாந்து.. பின்லாந்து என்று பல நாடுகளிலும் நிகழ்ந்துள்ளது.

எனவே 5ஜி மின்காந்த அலைகளின் தாக்கம் பற்றிய முழுமையான ஆய்வின் பின்னர் தான்.. இதனை மக்கள் அடர்த்தி உள்ள இடங்களில் நிறுவ முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட வியாபார விரும்பிகள்..அவசரப்படாது இருக்க.. மக்கள் இவ்வாறான எதிர்ப்புகளை தெரிவிப்பது வரவேற்கத்தக்கது. 

Unexplained Mass Bird Deaths During Dutch 5G Experiment. About a week ago at The Hague, many birds died spontaneously, falling dead in a park. You likely haven’t heard a lot about this because it is being kept quiet. However, when about 150 more suddenly died – bringing the death toll to 297 – people started to notice.

https://principia-scientific.org/unexplained-mass-bird-deaths-during-dutch-5g-experiment/

Link to comment
Share on other sites

42 minutes ago, nedukkalapoovan said:

அண்மையில் 5ஜி கோபுரங்கள் இயக்கப்பட்ட இடங்களில் பல நூறு பறவைகள் திடீர் என்று இறந்து வீழ்ந்துள்ளன.

நெடுக்ஸ் இது தவறான செய்தி அல்லது புரளி (conspiracy) என ஏற்கனேவ Wired என்ற பிரபல சஞ்சிகையில் எழுதப்பட்டிருந்தது. அதோடு புரளிகள் உண்மை தன்மை பற்றி ஆராய்ந்து எழுதும் snopes.com இது பொய் என்று 2018இல் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தது.

இப்படியான புரளியை முகநூலில் பரப்பி பின்னர் அவற்றை இணையதளங்கள் பரப்பி பொய்யை உண்மையாக்குவது நாம் தொழிநுட்பத்தை பிழையாக பாவிடப்பதட்கு ஒரு உதாரணம். இந்த புரளி  பரப்பும் முறைமை இன்று காலநிலை மாற்றத்தில் (climate change) இருந்து அரசியல் (fake news) மற்றும் மருத்துவம் (anti-vaccination) என்று பரந்து மக்களை குழப்புவதில் முன்னிக்கின்றன. குறிப்பாக முகநூல் இதில் முக்கிய பங்குவகிக்கின்றது.

The test of a 5G cellular network is the cause of unexplained bird deaths occurring in a park in The Hague, Netherlands.

rating-false.pngFalseAbout this rating 

https://www.snopes.com/fact-check/5g-cellular-test-birds/

5G health risks are the internet's new favourite conspiracy theory

https://www.wired.co.uk/article/5g-health-risks-concerns

 In November 2018, a viral Facebook post blamed a 5G test mast for the mysterious death of 300 birds in the Netherlands (the test actually took place months earlier), while people in anti-5G groups share tips on how to smash down telephone masts. But how did an incremental upgrade in mobile networks turn into the internet’s favourite new conspiracy theory?

Perhaps the most prominent lynchpin in the anti-5G movement is John Kuhles – a Dutch UFO researcher who founded the “Stop5G” Facebook group in 2018. The group, which now has more than 20,000 members, was the ground zero of the bird death myth, and other theories, including one suggesting that the Californian wildfires in November 2018 were a punishment by the “ruling elite” because of the state’s failure to roll out “mass 5G”.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்ப்ப வேகம்  தொழில் நுட்ப்பத்தை தின்று தொலைக்குது மக்களை இப்படி யான விடயங்களுக்கு தூண்டி விடுபவர்கள் பழைய அப்டேட் பண்ணாத தொழில் நுட்ப்பத்தில்  கண்ணை மூடிக்கொண்டு மோட்டு தனமாய் அதிகளவு முதலீடு செய்திருப்பவர்கள்.

Link to comment
Share on other sites

இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலத்தில் இருப்பதால் அதன் பாதகங்கள் பற்றி தெரியாது. உலகின் மிகவும் பெரிய பணக்கார நிறுவனங்களாக இவ்வாறான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன, அவை வெள்ளையை கறுப்பென விற்கும் பலமும் கொண்டவை. 

தாயக மக்கள்  இன்று இது வேண்டாம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ampanai said:

இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலத்தில் இருப்பதால் அதன் பாதகங்கள் பற்றி தெரியாது. உலகின் மிகவும் பெரிய பணக்கார நிறுவனங்களாக இவ்வாறான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன, அவை வெள்ளையை கறுப்பென விற்கும் பலமும் கொண்டவை. 

தாயக மக்கள்  இன்று இது வேண்டாம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.  

பகிடி விடாதேயுங்கோ அம்பனை. 

முதலில் அவர்களிடம் 5G என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்.

ஒரு படத்த ஐ போனில பதினைந்து செக்கனில டவுண்லோட் செய்யலாம் என்று சொன்னால் தூணைபோட ஓம் எண்டு சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

பகிடி விடாதேயுங்கோ அம்பனை. 

முதலில் அவர்களிடம் 5G என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்.

ஒரு படத்த ஐ போனில பதினைந்து செக்கனில டவுண்லோட் செய்யலாம் என்று சொன்னால் தூணைபோட ஓம் எண்டு சொல்லுவினம்.

அவர்களுக்கு கேட்க்கும் / பயப்படவைக்கும் ஒரே கேள்வி : இதனால் புற்றுநோய் வராது என உறுதி தரமுடியுமா ?, என்பதே. அந்த பயமே இதை எதிர்க்கவைக்கும் காரணி. 

Link to comment
Share on other sites

23 minutes ago, ampanai said:

அவர்களுக்கு கேட்க்கும் / பயப்படவைக்கும் ஒரே கேள்வி : இதனால் புற்றுநோய் வராது என உறுதி தரமுடியுமா ?, என்பதே. அந்த பயமே இதை எதிர்க்கவைக்கும் காரணி. 

ஊரில் ஓடும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் புற்று நோயும், இதய நோயும் வருவது நன்கு அறியப்பட்ட விடயம். ஆகவே இந்த வாகனங்களை முதலில் தடை செய்து விட்டு, சைக்கிள், சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டி ஆகியவற்றிலேயே மக்கள் பயணம் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

11 minutes ago, கற்பகதரு said:

ஊரில் ஓடும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் புற்று நோயும், இதய நோயும் வருவது நன்கு அறியப்பட்ட விடயம். ஆகவே இந்த வாகனங்களை முதலில் தடை செய்து விட்டு, சைக்கிள், சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டி ஆகியவற்றிலேயே மக்கள் பயணம் செய்ய வேண்டும்.

இதுவரை உள்ள செல்லிடை தொலைபேசி கோபுரங்களை விட 5ஜி அதிகமான கோபுரங்களை நெருக்கமான இடங்களில் கொண்டுள்ளது. 

புதிதாக ஒரு மருந்தை அறிமுகப்படுத்தும் பொழுது, முழு உலகுமுமே பார்த்து நிற்பது அமெரிக்காவின் எப்.டி.ஏ. காரணம், அவர்களிடம் தான் அது பற்றிய ஆய்வுகளை நடாத்தும் திறமையும், பண வலிமையும், வியாபார நுணுக்கங்களும் உள்ளன. 

அந்த அமெரிக்காவிலேயே, பல ஊர்களில் 5ஜி இனை தடை செய்ய கேட்கிறார்கள் மக்கள். நீதிமன்றங்கள் வரை சென்றுள்ளார்கள். 
 
cellphones_RADIATION.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

நாங்கள் மாட்டு வண்டியில் போகப்போகிறோமா அல்லது உலகுடன் சேர்ந்து பறக்கப் போகின்றோமா ?

தெரிவு உங்களது.

Link to comment
Share on other sites

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருக்க அடிப்படை வசதியுடைய வீடுகள் இல்லை. வீதிகள் நிர்வடிகால்கள் இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை போணக் கூடிய உணவில்லை. மலசல கூட வசதியில்லை. மலேரியா டெங்கு காய்சலால் அவதிப்படுகின்றார்கள். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா இல்லை 5 ஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா ? பாதிக்கப்பட்ட  மக்கள் வறுமையும் கூடவே நுண்கடனுக்குள் அகப்பட்டு அன்றாட உணவுக:கு போராடி அடிமை வாழ்க்கை வாழ்கின்றார் . 5 ஜி தொழில் நுட்பத்தை அனுமதிப்பதும் விடுவதும் விரட்டியடிப்பதும் அந்தந்த் மக்களின் வாழ்க்கை சூழுலுக்கு ஏற்ப அவர்கள் எடுக்கும் முடிவு. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வியாபாரம் லாபம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குபவை.  சில வருடங்களுக்கு முன்பு சிகரெட்டுக்கு பதிலாக எலக்ரோனிக் சிகரெட் கொண்டுவந்தார்கள். இப்போது எலக்ரோனிக் சிகரெட்டின் சாவு எண்ணிக்கை 50தை தாண்டிவிட்டது. முன்னை விட பலமடங்கு அதிகமாக படசாலை மாணவர்கள் எலக்ரோனிக் சிகரெட்டுக்கு அடிமையாகிவிட்டார்கள்.  இப்போது தடைசெய்வது குறித்து  பேசுகின்றார்கள். இந்த 5ஜிக்கு என்ன விழைவு என்பதை அதனால் எதிர்காலத்தில் ஐநூறு ஆயிரம் பேர் மண்டையை போட்டால் தானே தெரியவரும்.  இந்த தொழில் நுட்ப வியாபார கார்பரேட் கிரிமினல்கள் சொல்வதக்கு ஆமாம் சாமி போட்டு  5ஜி என்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று நாம் வக்காலத்து வாங்க முடியாது. 

Link to comment
Share on other sites

தமிழீழத்தைக் கூட  சிங்கள அரசு தாங்களாக தந்தால் இது சிங்களவனின்  சதி  என்று ஏதேதோ காரணங்களை சொல்லி எதிர்தது போராட்டம் செய்ய ஒரு கூட்டம் தாயகத்தில் உண்டு. அதற்கு ஆதரவளித்து ஊக்கம் கொடுக்க புலம் பெயர் நாடுகளில் ஒரு கூட்டமும் இருக்கும். 

இராஜ இராஜ சோழன் கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்றும் முப்படைகளை வைத்தருந்த பிரபாகரன் என்றும்  பழம் பெருமை சொல்லி facebook ல் பதிவுகள் போட்டே அடுத்த ஒரு சில ஆயிரம் வருடங்களை கடத்தி விடலாம். 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

அந்த அமெரிக்காவிலேயே, பல ஊர்களில் 5ஜி இனை தடை செய்ய கேட்கிறார்கள் மக்கள். நீதிமன்றங்கள் வரை சென்றுள்ளார்கள். 

அமெரிக்காவிலே தான் இருக்கிறேன், இங்கே பொதுவான செய்திகளில் வராத சங்கதி உங்களுக்கு தெரிந்து இருக்கிறது. எந்த ஊர்களில் தடை செய்ய கேட்கிறார்கள் என்று சொன்னால் நானும் இந்த அபூர்வமான செய்தியை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். எந்த நீதிமன்றங்களில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது?

இங்கே உலகம் தட்டையானது, மனிதன் குரங்கில் இருந்து வரவில்லை, கடவுள்  உருவாக்கிய ஆதமில் இருந்து தான் மனிதர்கள் பிறந்தார்கள் என்று படிப்பிக்க வேண்டும் என்று வழக்கு போடுபவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்கா மிகப்பெரிய நாடு. பலரிடம் பெருமளவு பணம் இருக்கிறது, அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் கண்டதுக்கும் வழக்கு போடும் பொழுதுபோக்கும் இருக்கிறது. நீங்கள் சொன்னால் இந்த ஐந்து ஜி வழக்கு பற்றியும் அறியலாம். மற்றும்படி இது பற்றி இங்கு எவரும் அலட்டி கொள்வதில்லை. 

2 hours ago, ampanai said:

cellphones_RADIATION.jpg

செல் போன் கதிர் வீச்சு ஆபத்தில்லாத கதிர்வீச்சு என்றுதானே இந்த படத்தில் காட்டி இருக்கிறது? கண்ணால் பார்க்கும் ஒளியிலும் பார்க்க மிகவும் குறைவான அதிர்வை கொண்டதாக இருக்கும் செல் போன் பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை என்று தானே இந்த படம் காட்டுகிறது? நன்றி படத்தை போட்டதற்கு.

Link to comment
Share on other sites

1 hour ago, சண்டமாருதன் said:

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருக்க அடிப்படை வசதியுடைய வீடுகள் இல்லை. வீதிகள் நிர்வடிகால்கள் இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை போணக் கூடிய உணவில்லை. மலசல கூட வசதியில்லை. மலேரியா டெங்கு காய்சலால் அவதிப்படுகின்றார்கள். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா இல்லை 5 ஜிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா ? பாதிக்கப்பட்ட  மக்கள் வறுமையும் கூடவே நுண்கடனுக்குள் அகப்பட்டு அன்றாட உணவுக:கு போராடி அடிமை வாழ்க்கை வாழ்கின்றார் .

இவர்களது வறுமையை போக்கவும், உணவை வாங்கவும், மலசகூடம் கட்டவும், வீடு கட்டவும் இவர்களுக்கு பணம் தேவை. பணத்தை உழைக்க இவர்களுக்கு வேலை வாய்ப்பு தேவை. அதுவும் நல்ல சம்பளம் தரும் வேலை தேவை. 

5 ஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அந்த 5 ஜிக்கு கோபுரம் கட்டும் வேலை வரும். கோபுரம் கட்டுபவர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலை வரும். 5 ஜிக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் பல தேவை. அவற்றில் வேலை செய்யவும், அந்த நிறுவனங்களை பராமரிக்கவும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் 5 ஜியை பயன்படுத்தி விடியோக்கள், முப்பரிமாண படங்கள் தயாரிப்போரும் பெருமளவில் உருவாகுவார்கள். அவர்களும் பெருமளவு பணத்தை கொண்டுவரும் வேலைவாய்ப்புகளை கொண்டுவருவர்.

வறியவர்கள் அனைவரும் நல்ல சம்பளத்தில் வேலை பெறுவர். அவர்களுக்கு சத்துள்ள உணவு வாங்க பணம் வரும். வீடு கட்டவும், மலசலகூடம் கட்டவும் நிறைய பணம் கிடைக்கும். 

இவற்றுக்கு மாறாக, 5 ஜி வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணினால், வறுமை நிரந்தரம். உணவுக்கு பணம் இல்லை. டெங்கு அப்படியே காவு கொள்ளும். 

மக்களின் தெரிவு, அவர்கள் வாழத்தக்க மக்களா இல்லையா என்பதை காட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, puthalvan said:

நெடுக்ஸ் இது தவறான செய்தி அல்லது புரளி (conspiracy) என ஏற்கனேவ Wired என்ற பிரபல சஞ்சிகையில் எழுதப்பட்டிருந்தது. அதோடு புரளிகள் உண்மை தன்மை பற்றி ஆராய்ந்து எழுதும் snopes.com இது பொய் என்று 2018இல் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தது.

இப்படியான புரளியை முகநூலில் பரப்பி பின்னர் அவற்றை இணையதளங்கள் பரப்பி பொய்யை உண்மையாக்குவது நாம் தொழிநுட்பத்தை பிழையாக பாவிடப்பதட்கு ஒரு உதாரணம். இந்த புரளி  பரப்பும் முறைமை இன்று காலநிலை மாற்றத்தில் (climate change) இருந்து அரசியல் (fake news) மற்றும் மருத்துவம் (anti-vaccination) என்று பரந்து மக்களை குழப்புவதில் முன்னிக்கின்றன. குறிப்பாக முகநூல் இதில் முக்கிய பங்குவகிக்கின்றது.

The test of a 5G cellular network is the cause of unexplained bird deaths occurring in a park in The Hague, Netherlands.

rating-false.pngFalseAbout this rating 

https://www.snopes.com/fact-check/5g-cellular-test-birds/

5G health risks are the internet's new favourite conspiracy theory

https://www.wired.co.uk/article/5g-health-risks-concerns

 In November 2018, a viral Facebook post blamed a 5G test mast for the mysterious death of 300 birds in the Netherlands (the test actually took place months earlier), while people in anti-5G groups share tips on how to smash down telephone masts. But how did an incremental upgrade in mobile networks turn into the internet’s favourite new conspiracy theory?

Perhaps the most prominent lynchpin in the anti-5G movement is John Kuhles – a Dutch UFO researcher who founded the “Stop5G” Facebook group in 2018. The group, which now has more than 20,000 members, was the ground zero of the bird death myth, and other theories, including one suggesting that the Californian wildfires in November 2018 were a punishment by the “ruling elite” because of the state’s failure to roll out “mass 5G”.

இது ஒரு கதை கிடையாது. தொடர்ந்து நிகழ்கிறது.. 5ஜின் வரவோடு என்பதால்..

வலுவான சந்தேகங்கள் 5 ஜியின் பக்கமும் திரும்பி உள்ளன.

Hundreds of Common Starlings found dead along a road in North Wales are to be tested to discover how they succumbed.

Speculation on what triggered the mass death has been the subject of much conversation on social media, with suggestions ranging from poisoning and gassing, to lighting strikes, disturbed roost and 5G.

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

அமெரிக்காவிலே தான் இருக்கிறேன், இங்கே பொதுவான செய்திகளில் வராத சங்கதி உங்களுக்கு தெரிந்து இருக்கிறது. எந்த ஊர்களில் தடை செய்ய கேட்கிறார்கள் என்று சொன்னால் நானும் இந்த அபூர்வமான செய்தியை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். எந்த நீதிமன்றங்களில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது?

https://www.wsj.com/articles/cities-are-saying-no-to-5g-citing-health-aestheticsand-fcc-bullying-11566619391

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

செல் போன் கதிர் வீச்சு ஆபத்தில்லாத கதிர்வீச்சு என்றுதானே இந்த படத்தில் காட்டி இருக்கிறது? கண்ணால் பார்க்கும் ஒளியிலும் பார்க்க மிகவும் குறைவான அதிர்வை கொண்டதாக இருக்கும் செல் போன் பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை என்று தானே இந்த படம் காட்டுகிறது? நன்றி படத்தை போட்டதற்கு.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது 5ஜி கட்டமைப்பை, அதாவது முன்னைய தொழில்நுட்பங்களை விட அதிகளவில் சிறிய தொலைத்தொடர்பு கோபுரங்களை நெருக்கமாக வைக்கப்படுகின்றது. அதனால், கதிர்வீச்சு அதிகமாக இருக்கும், எனவே பாதிப்பும் அதிகரிக்கும். 

சில இடங்களில் பலரும் அதிக நேரம் காதுக்கு அருகில் வைத்து கதைக்க வேண்டாம் எனவும் கூறுகிறார்கள். 

தொழில்நுட்பம், வளர்ச்சி என்பன நன்மையே. ஆனால், நாங்கள் பரிசோதனைக்கு ஆளாகும் எலிகளாகவோ இல்லை பன்றிகளாகவோ இருந்துவிடகூடாது. ஏனெனில், எம்மிடம் இழக்க முடியாது நிலை.  

Link to comment
Share on other sites

8 hours ago, கற்பகதரு said:

ஊரில் ஓடும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் புற்று நோயும், இதய நோயும் வருவது நன்கு அறியப்பட்ட விடயம். ஆகவே இந்த வாகனங்களை முதலில் தடை செய்து விட்டு, சைக்கிள், சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டி ஆகியவற்றிலேயே மக்கள் பயணம் செய்ய வேண்டும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை 🙂 

பணம் தேடி அலையும் உலகில் இருந்ததையும் தொலைக்கும் மக்களே அதிகம். அதிகம் பணம் சேர்த்தவன் தேடுவது இயற்கையை, அங்கே அவன் நிம்மதியை காணுகின்றான்.  

நீங்கள் வாழும் நாட்டில் கூட மோர்மன் என்ற ஒரு ஜேர்மனிய வழி மக்கள் உள்ளார்கள். இவர்கள் கூட இவ்வாறு தான் வாழுகிறார்கள். அவரக்ளின் மத வழிபாட்டு முறையை நான் குறிப்பிடவில்லை.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இக்கரைக்கு அக்கரை பச்சை 🙂 

பணம் தேடி அலையும் உலகில் இருந்ததையும் தொலைக்கும் மக்களே அதிகம். அதிகம் பணம் சேர்த்தவன் தேடுவது இயற்கையை, அங்கே அவன் நிம்மதியை காணுகின்றான்.  

நீங்கள் வாழும் நாட்டில் கூட மோர்மன் என்ற ஒரு ஜேர்மனிய வழி மக்கள் உள்ளார்கள். இவர்கள் கூட இவ்வாறு தான் வாழுகிறார்கள். அவரக்ளின் மத வழிபாட்டு முறையை நான் குறிப்பிடவில்லை.  😎

உலகம் முழுவதும் வேகமாக 5G தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் நாங்கள்மட்டும் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம்.

இந்த அணுகுமுறை சரிதானா. ?

Link to comment
Share on other sites

9 minutes ago, Kapithan said:

உலகம் முழுவதும் வேகமாக 5G தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் நாங்கள்மட்டும் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம்.

இந்த அணுகுமுறை சரிதானா. ?

ஆம், என்பது எனது எண்ணம். இந்த 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணி வகிப்பது சீன அரசு. அவர்கள் பற்றிய நியாமான சந்தேகங்கள் பொதுவாக உண்டு. பல மேற்குலக நாடுகள் தம்மை அவர்கள் உளவு பார்த்துவிடுவார்கள் என பயப்படுகின்றனர். சிலர் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். அமெரிக்கா இந்த சீன தொழில்நுட்பத்தை வாங்காதீர்கள், என்னிடம் உள்ளது ஆனால், நாளைக்குத்தான் கிடைக்கும் என்கிறார்கள்.

அடுத்தது, உங்கள் செல்லிடை தொலைபேசி 5ஜி தொழில்நுட்பம் உடையதாயும் அந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் அதை ஒட்டிய தொழில்நுட்பத்தை உடையதாயும் இருக்கவேண்டும். அவ்வாறான நிறுவனங்கள் பணத்தை செலவழிக்கவேண்டும், செலவழித்த பணத்தை மீள பெறவேண்டும், கொழுத்த இலாபத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நீங்கள் கூறியதற்கும் மக்களின் கரிசனைக்கும் இடையே பாரிய இடைவெளி ஒள்ளதே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 5ஜி தொழில்நுட்பம் வருவதால் யாழ் குடாநாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் எனக் குத்திமுறியும் கள உறவுகளே. முதலில் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது இணயத்தளத்தை விரைவாக்கொடுப்பதால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குடாநாட்டில் வரும் என நீங்கள் ஆணித்தரமாகக் கருதினால் பிரச்சனை இல்லை ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடைவிரித்து நல்ல காசுபாத்திட்டினம் யாழ் குடாநாட்டு மக்களது உழைப்பில் கணிசமான தொகையை இணையத்தளத்துக்கும் தொலிபேசிக்குமே செலவுசெய்யவேண்டிய ஒரு துர்ப்பாக்கியம் எப்போதோ வந்துவிட்டது ஐரோப்பிய நாடுகளில் வரையறை இல்லாத தடையில்லாத மிகவேகமான இணையத்தள இணைப்பு மிகவும் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றது அதுவும் இரோப்பிய நாடுகளின் வாடிக்கையாளர்களது வருமானத்துடன் ஒப்பிடும்போது நியாயமான விலையே நீங்கள் கூறும் 5ஜி இணையத்தள வசதியுடனான இணைப்பு மாதம் ஒன்றுக்கு முப்பது யூரோக்களே அதுவும் வரையறை அற்ற இணைப்பு அதாவது பின்லாந்து நட்டில் இப்போ யோசியுங்கள் எப்படியாக குடாநாட்டு மக்களது மடியில் இவர்கள் கடைவிரிக்கிறார்கள் என. 

குடாநாட்டில் அனைத்தும் சரிவந்து அதன்பின் இணையத்தளம் முன்னேற்றம் அடைவதென்றால் காக்கா குருவி என்ன அண்டங்காக்காவும் செத்துப்போகட்டும் பருவாயில்லை. 

ஆனால் அங்கு என்ன தீமைகள் நடந்தாலும் எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை காரணம் ஒரு ஊழிப்போரவலம் நடந்தபோது விஜை ஆண்டனியில் குத்துப்பாட்டுக்கு குதூகலமாக நடனமாடி மகிழ்ந்தவர்கள்தான் அங்குள்ள மக்கள்.

ஒரு அரை வேக்காடு என்னிடம் கேக்குது

நாட்டைப்பிறுத்தால் கபொத உயர்தர சாதாரண தர பரீட்சைகளை யார் நடத்துகிறது நான் கண்டி காலியென கன இடங்கள் போனனான் எனக்கு இதுவரை எந்தப்பிரச்சனையும் இல்லை சும்மா நீங்கள் ஏன் நாட்டைப்பிரிக்கவேணும் எண்டுறியள் கேக்குது.
 
Link to comment
Share on other sites

உலகமயமாதலும் தகவல்தொழில்நுட்பமுந்தான் நம்மை சர்வதேசபடுத்தி, சர்வதேசத் தமிழரோடும் புலம்பெர்ந்த தமிழரோடும் இணைத்து, அவர்களை நமது வலுப்பெருக்கி (FORCE MULTIPLIER)  ஆக்கி நம்மை நம் சுதந்திர இருப்பைக்  காப்பாற்றி வருகிறது. இதுதான் நம் அடிபடை இருப்பின் கோட்படு.  

ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னம் 4ஜி சேவை தொடர்பாகவும் அச்சுறுத்தினார்கள். 5ஜி தொடர்பான விஞ்ஞானபூர்வமான  தேடலுடன்  5ஜி தொழில் நுட்பத்துக்கு நாம் வழிதிறக்கிறது அவசியம். இல்லையேல் ஈழத் தமிழர்  இருப்பின் பலமான உலக தமிழ் வலைப்பின்னலே உடைந்துபோகும்.    

கண்மூடித்தனமான 5ஜி எதிர்ப்பை நிராகரிப்போம்.  விஞ்ஞான பூர்வமான எச்சரிக்கைகளுடன்  5ஜி தொழில் நுட்பத்தை  அனுமதிப்பது தொடர்பாக இனி நாம் விவாதிக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.