• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

நீதிமன்றத்துக்கு முன்னால் கத்திக்குத்து; பெண் உயிரிழப்பு

Recommended Posts

வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நதமனறததகக-மனனல-கததககதத-பண-உயரழபப/150-242545

நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம்

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை வழக்கு நடவடிக்கைகளுக்காக கொலைசெய்யப்பட்ட பெண் சென்ற  வேளையிலேயே உயிரிழந்த பெண்ணின் கணவரால் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/71276

Share this post


Link to post
Share on other sites

தாபரிப்பு - ( அறிந்த ஒரு புது தமிழ் சொல்) பிரித்தானிய சட்ட மூலத்தை கொண்ட பல நாடுகளில் திருமணம் முறியும்பொழுது நீதிமன்றத்தால் விதிக்கப்படும் உதவி தொகை என எண்ணுகின்றான். 

இதில் பிரிந்த ஒரு தரப்பிற்கு அடுத்த தரப்பு தரும் மாதந்த கொடுப்பனவும், மற்றும் பிள்ளைகள் இருக்கும் தருவாயில் அவர்களுக்கான மாதந்த கொடுப்பனவும் அடங்கும். 

வருமானத்திற்கு ஏற்ப, வாழும் இடத்திக்கிற்கு  ஏற்ப இந்த தொகை மாறுபடும். பலரும் தமது வருமானத்தை ஒளிப்பதும், கையில் பணத்திற்கும் வேலை செய்வதும் உண்டு. இவ்வாறான தந்தையர்களை 'டெட் பீட்' அப்பாக்கள் என காட்டமாக மேலை நாடுகளில் வர்ணிப்பார்கள். இதேவேளை, சில தாய்மார்கள் பிள்ளைகளை காட்டி அதிகளவு பணத்தை வேண்டுவதுடன் பிள்ளைகளை தந்தைக்கு காட்டாமலும் இழுத்தடிப்பதுண்டு. 

உறவுகள் என்பது ஒரு செடியை வளர்ப்பது போன்றது, தினமும் அதற்கு நேரமும் அக்கறையும் தேவை அதுவே கசப்பாக மாறும்பொழுது பெருந்தன்மையாக நடப்பதே சிறப்பு. மற்றையவரின் சுதந்திரத்தை மதித்தால் என்றும் வாழ்க்கை இன்பமே. 
     

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ampanai said:

தாபரிப்பு - ( அறிந்த ஒரு புது தமிழ் சொல்) பிரித்தானிய சட்ட மூலத்தை கொண்ட பல நாடுகளில் திருமணம் முறியும்பொழுது நீதிமன்றத்தால் விதிக்கப்படும் உதவி தொகை என எண்ணுகின்றான்.   

நானும்... இன்று தான், இந்தச்  சொல்லை, முதலில் கேள்விப் படுகின்றேன்.
அழகிய தமிழ்ச்  சொல்லாக உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த  மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து  இரண்டாவது தாக்குதலை அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Barகளும் ஒருவருக்கே சொந்தமானது. பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை
  • உங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள்। எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம்। அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால்। அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானே।நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்। எனவே உங்கள் வீடடை   சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்।
  • 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி! 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது. பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/
  • திருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனளிக்காது, மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பூர்-சாலையில்-கோர/