Jump to content

கிளிநொச்சியில் செந்தூரனின் 'மனப்பாரம்' நூல் வெளியீடு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இனிதே அரங்கேறிய செந்தூரனின் ’மனப்பாரம்’ சிறுகதை நூல்.!

79350866_1269959723187632_23212986208270

ஈழத்தின் இளம் எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் எழுதிய மனப்பாரம் சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2019) சிறப்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி கண்ணகைநகர் இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கனகபாரதி செந்தூரன் கொட்டகல ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கல்வியை பயின்று வருகிறார். கிளிநொச்சி பரந்தனை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனகரத்தினம் செந்தூரன் என்ற இயற்பெயரை கொண்டவர்.

இவர் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுதியே மனப்பாரம். இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரனும் சிறப்பு விருந்தினர்களாக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ அருணாசலம் வேழமாலிகிதனும் மாசார் அ.த.க பாடசாலையின் அதிபர் திரு க.கருணானந்தனும் கலந்து கொண்டனர்.

தாமரைச்செல்வி போன்ற ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகள் உருவாகிய பரந்தன் மண்ணிலிருந்து இளைய எழுத்தாளனாக செந்தூரனின் இலக்கிய வருகை தமக்கு பெரிதும் உவப்பு அளிப்பதாகவும் தமிழ் தேசிய தடத்தில் இவர் சிறப்பாக பயணித்து வருபவர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் புகழாரம் சூட்டினார்.

79543304_582260359227670_294826487281667

    “சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், தீபச்செல்வன், செந்தூரன் முதலிய தமிழ் ஆசிரியர்கள் பெரும் தலைமுறை இடைவெளியின் பின்னர் கிளிநொச்சி மண்ணை வளப்படுத்தும் புதிய தலைமுறையாக தோற்றம் பெற்றுள்ளனர்..“

    கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன்

கிளிநொச்சி கல்வி வலய தொழில் வழிகாட்டல் அதிகாரி பிரேமா மதுரநாயகம், துணுக்காய் வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் மற்றும் கவிஞர் தீபச்செல்வன் ஆகியோர் நூல் மற்றும் ஆசிரியர் குறித்து விதப்புரைகளை ஆற்றியிருந்தனர்.

நூலினை திரு க.கருணானந்தன் வெளியிட்டு வைக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  பெற்றுக்கொண்டார். நூல் மதிப்பீட்டு உரையினை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மடுவலய திரு ஆனந்தன் லோகேஸ்வரன் நிகழ்த்த கதாசிரியர் ஏற்புரையை நிகழ்த்தினார்.

79856611_448058686134812_810477960884440

இளம் எழுத்தாளர் ஒருவரின் முதல் நூல் வெளியீட்டுக்கு அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவினை நல்கியமை சிறப்பம்சமாகும். கிளிநொச்சியை சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் இளைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கு நிறைந்திருந்தமை மற்றொரு அம்சமாகும்.

-வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்

http://www.vanakkamlondon.com/senthuran-16-12-2019/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.