Jump to content

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

இரா.சம்பந்தன்படத்தின் காப்புரிமைவிடுதலைப் புலிகள்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது ஒரு சர்வதேச ஒப்பந்தம். தன்னிச்சையாக ஒரு நாடு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு சர்வதேசக் கடமை.

1988ஆம் ஆண்டு 13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் அரசியல் சாசன ரீதியாக ஏற்பட்ட முதல் ஆட்சி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு திருத்தம். அது இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படுமென்ற பல வாக்குறுதிகளைப் பல அரசாங்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவற்றை அவர்கள் இன்னமும் நிறைவேற்றவில்லை.

அரசாங்கம் சர்வதேச ரீதியாக வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதைப் பாரதப் பிரதமருக்கும் கொடுத்திருக்கிறது.

ஜனாதிபதியாக இருந்த போது மகிந்த ராஜபக்ஷசவும் அவருடைய வெளி விவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீசும் இந்திய அரசாங்கத்திற்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோம். அதற்கு மேலதிகமாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் வழிசெய்வோம் என்று. அது நடைபெற வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

இந்த விடயம் சம்பந்தமாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை வெளி விவகார அமைச்சர் இந்திய வெளி விவகார அமைச்சின் பேச்சாளர்கள் பல முறைகளில் பேசியிருக்கின்றார்கள். பல வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்ல விடயம்' - இரா.சம்பந்தன்

இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவினுடைய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு கூறிய செய்தி என்னவெனில் இங்கு எதிர்பார்க்கின்றதை இந்தியப் பிரதமர் எதிர்பார்க்கின்றார் நீங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் கௌரவத்தின் அடிப்படையில் சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று. இது சாதாரணமான சொற்கள் அல்ல.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது ஒரு கூட்டாக ஊடக சந்திப்பு நடைபெற்றது.அந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதி இவ்விதமான ஒரு தீர்வை ஏற்படுத்தி தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக் கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம் அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூறியிருக்கின்றார்.இவை நடைபெற வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதுதான் எங்களது கடமை. இவற்றை எவராலும் நிறைவேற்ற முடியாது என்றில்லை. கற்பனையில் வாழ்கின்றவர்களால் நிறைவேற்ற முடியாது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம்.

இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த பொழுது உதவிய நாடுகள் நோர்வே, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஜப்பான், போன்ற நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கின்றது.

அதிகார பகிர்வின் ஊடாக நாட்டில் சமத்துவமாக மக்கள் வாழக் கூடிய வகையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என்று. அந்த நாடுகளும் தங்களுடைய கருத்தகளைக் கூறியிருக்கின்றார்கள். அமைப்பு ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்விதமான மாற்றங்களின் ஊடாக ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

அமெரிக்கா தனிப்பட்ட முறையிலும் இலங்கைக்குக் கூறியிருக்கின்றது.உங்களுடைய பழைய நிலைமைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள், அதியுச்ச அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசியிருக்கின்றீர்கள்.

விடுதலைப் புலிகள்படத்தின் காப்புரிமைSTR

ஆனபடியால் அந்த அடிப்படையில் ஒரு தீர்வு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.இவை நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் திட்டங்களை வகுத்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் என்ன விதமாகச் செயற்படப் போகின்றோம் என்பதை முடிவெடுத்து அதைச் செய்ய வெண்டும். அது தான் எங்களுடைய கடமை. அது தான் எங்களுடைய எதிர்காலம்.

அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் பல தேவையான அதிகாரங்களை நாங்கள் பெற்று எமது மக்கள் சமத்தவமாக நீதி பெற்றவர்களாக சமாதானமாகக் கௌரவமாக வாழக் கூடிய நிலைமை ஏற்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான சர்வதேச சமூகம் விசேசமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்தார்கள். அதுவொரு நிபந்தனையின் அடிப்படையில் தான்.தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை காண்போம் என்று. ஆனால் தற்பொழுது அந்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முயல்கின்றார்கள்.அதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக் கூடாது. அதற்கு சர்வதேச சமூகம் இடமளித்தால் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களும் உதவுகின்றார்கள் என்று தான். அந்த நிலைமை இருக்க முடியாது. அந்த நிலைமை இருக்கக் கூடாது.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானங்கள் சிவில் அரசியல் உரிமைகள் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் அதற்கு வெளியக சுயநிர்ய உரிமையுண்டு. இதைச் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. பகைமை எங்களுக்கு வேண்டாம். ஆனால் எமது மக்களின் உரிமைகளைக் கடைசி வரையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50843057

Link to comment
Share on other sites

46 minutes ago, ஏராளன் said:

இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம்.

சொறிலங்காவின் சிங்கள அரச கொலைகாரர்களுக்கு செம்பு தூக்கி, அவங்க வீசுற எதையாவது பொறுக்கிக்கொள்ள சொதப்பல் சம்பந்தன் துடியா துடிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட் டவர்களுக்கு... இனியும் வாக்களிப்பவர்களை, தமிழினம் மன்னிக்காது.
இவர்களை  அரசியலிருந்து, ஒதுக்கி வைப்பதே ... இப்போதைய அவசரத் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலமா எச்சரிக்கைப்புள்ளி எடுக்கல இந்நாள் அதைச் செய்யாமல் *** போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யார் சார்பாகப் பேசுகிறார்?

இந்தியா சார்பாகவா அல்லது சிங்களவர் சார்பாகவா?

தமிழர் சார்பாக இவர் பேசுகிறார் என்றால், எந்த அடிப்படையில் புலிகள் அழிக்கப்பட்டது ஒரு நல்லவிடயம் என்று சொல்கிறார்? புலிகள் இல்லாத வெற்றிடத்தில் தமிழரின் நலன் என்பது ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லையென்பதும், தமிழரின் உரிமைகளுக்காகவே புலிகள் போராடினார்கள் என்பதும் இவருக்குப் புரியவில்லையென்றால், இவர் செய்யும் அரசியல் யாருக்காக? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

இல்லை தன்னிலை விளக்கம் , இனி சிறுபான்மையினரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதாகவுள்ளது எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதே அர்த்தம் , இந்த பேச்சில் தொனிக்கிற சிறுபான்மை மக்களில் உள்ள கரிசனை உண்மயாகவே புரிகிறது , ஏதோ மனதில் உள்ளவற்றை சொல்லிவிடவேண்டும் என்பதாகவே உள்ளது நாங்கள் அதனை தவறாக எடுத்து கொள்வது போல் உள்ளது

He showed his hand

Image result for vadivel showing pocket"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரிவுபடுத்தப்பட்ட தலைப்பு.

தலைப்பு  மிகத் தவறான செய்தியை தருகிறது.  சம்பந்தர் சொல்ல வந்த விடயத்திற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை. 

இதனை கூறுவதற்காக என்னை திட்ட வேண்டாம். தயவுசெய்து கட்டுரையை முழுவதுமாக வாசியுங்கள். வார்த்தைபிரயோகம் விரும்பத்தகாததாக இருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட விடயம் வேறு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

பிபிசி தமிழ் தான் போடுதுங்கோ மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன் Kapithan

50 minutes ago, ரஞ்சித் said:

இவர் யார் சார்பாகப் பேசுகிறார்?

இந்தியா சார்பாகவா அல்லது சிங்களவர் சார்பாகவா?

தமிழர் சார்பாக இவர் பேசுகிறார் என்றால், எந்த அடிப்படையில் புலிகள் அழிக்கப்பட்டது ஒரு நல்லவிடயம் என்று சொல்கிறார்? புலிகள் இல்லாத வெற்றிடத்தில் தமிழரின் நலன் என்பது ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லையென்பதும், தமிழரின் உரிமைகளுக்காகவே புலிகள் போராடினார்கள் என்பதும் இவருக்குப் புரியவில்லையென்றால், இவர் செய்யும் அரசியல் யாருக்காக? 

கோத்தாவிடம்  இருந்தும் கொழும்பில் வீடு வாங்க திட்டம் போடுது வயசான காலத்திலும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, vasee said:

இல்லை தன்னிலை விளக்கம் , இனி சிறுபான்மையினரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதாகவுள்ளது எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதே அர்த்தம் , இந்த பேச்சில் தொனிக்கிற சிறுபான்மை மக்களில் உள்ள கரிசனை உண்மயாகவே புரிகிறது , ஏதோ மனதில் உள்ளவற்றை சொல்லிவிடவேண்டும் என்பதாகவே உள்ளது நாங்கள் அதனை தவறாக எடுத்து கொள்வது போல் உள்ளது

இதைச்சொல்லித்தானே நல்லிணக்க அரசுடன் ஒட்டி உறவாடினவை  கடைசியில் அரசியல் கைதிகள்  காணாமல் போனோர் தீர்வு ஒன்றுமேயில்லையே யுத்த விசராணைகள் அதுவும் இல்லையே இவர்கள் கணக்கில் பணம் வீடு சேர்ந்தது தான் ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இதைச்சொல்லித்தானே நல்லிணக்க அரசுடன் ஒட்டி உறவாடினவை  கடைசியில் அரசியல் கைதிகள்  காணாமல் போனோர் தீர்வு ஒன்றுமேயில்லையே யுத்த விசராணைகள் அதுவும் இல்லையே இவர்கள் கணக்கில் பணம் வீடு சேர்ந்தது தான் ஒன்று .

இவ்வாறான தன்னிலை விளக்கம் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமம் , ஒர் பழுத்த அரசியல்வாதியாகவுள்ள சம்பந்தர் இது புரியாதவர்ல்ல , ஆனால் இது வரை இதோ தீர்வு அதோ தீர்வு என்று ஏமாற்றியவர் திடீரென உண்மைய ஒத்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை பிரயோகம் ஒரு பழுத்த அரசியல்வாதியின் நாவில் இருந்து வரும் சொற்களாக தெரியவில்லை. இது அடி நுனி அற்ற வெறும் பிதற்றல் இருப்பினும் சம்பந்தரிடமிருந்து பெரிதாக எதையும் இப்போது எதிர்பார்க்கவும் முடியாது. செய்தியாளர் சம்பந்தரின் கருத்துக்களை திரிபுபடுத்தி எழுதியும் இருக்க வாய்ப்புண்டு.

குறிப்பாக விடுதலை புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை சம்பந்தர் ஐயா புரிந்துகொண்டு இந்த கருத்துக்களை முன்வைத்திருந்தால் புலிகளை அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிநின்ற  இந்தியா சிறிலங்கா மற்றும் நாடுகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி அவர்களின் இரகசிய திட்டத்தில் சம்பந்தரும் ஆரம்பம் முதலே பங்குகொண்டிருந்தார் என்பது வெளிப்படை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் என்பவர் சொன்னார் ஹிந்திய இராணுவம் இரப்பர் செல் அடிக்கிறது என்று.

இவர் சொல்கிறார் ஹிந்தியாவும் சொறீலங்காவும் இன்னும் பலரும் கூட்டுச் சேர்ந்து அச்சொட்டாக விடுதலைப்புலிகளை அழித்தது நன்மை என்று.

இடையில் தமிழ் மக்களுக்கு ஒன்றுமே நிகழவில்லை. மக்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களுக்குள்ள ஒரே பிரச்சனை ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களவரோடு சமனாக வாழ்வது தான். 

அடிப்படையில் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் தான் செய்த... தன் துரோகத்தனத்தை சாவுக்கு முன்னர் ஒத்துக்கொண்டிருக்கிறார் அவ்வளவே.

இது ஒன்றும் புதிதல்ல. இறுதிப் போர் நடந்த காலத்தில்.. இவர் ஹிந்தியாவில் போய் பதுங்கிக்கிடந்தவர்.. என்பது குறிப்பிடத்தக்கது. அப்பவே இவரின் துரோகத்தனம் வெளிப்பட்டு விட்டது. 

புலிகளை அழித்து.. கடந்த 10 ஆண்டுகளில் இந்த வெங்காயங்கள் சாதித்தது எதை..????!

இருந்த தமிழ் தேசிய.. அரசியல் பலத்தையும் சிதைத்தது மட்டுமே.

இதில் தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தருவினமாம் என்று கதை வேற. 

Link to comment
Share on other sites

திட்டமிட்ட தமிழின அழிப்புகளை மேற்கொள்பவர்களை  மகிழ்ச்சிப்படுத்தியேனும் எங்குதனினும் ஏதாவது எலும்புத்துண்டுகள் தம்மை நோக்கி வீசப்படாதா என்ற நோக்கத்தில் சம்மந்தன் போன்ற கைக்கூலி அரசியல்வாதிகள் அவ்வப்போது இது போன்ற எடுபிடி வேலைகளில் ஈடுபடுவது வழமை.

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

திரிவுபடுத்தப்பட்ட தலைப்பு.

தலைப்பு  மிகத் தவறான செய்தியை தருகிறது.  சம்பந்தர் சொல்ல வந்த விடயத்திற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை. 

இதனை கூறுவதற்காக என்னை திட்ட வேண்டாம். தயவுசெய்து கட்டுரையை முழுவதுமாக வாசியுங்கள். வார்த்தைபிரயோகம் விரும்பத்தகாததாக இருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட விடயம் வேறு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 

எனக்கும் அவ்வாறே தெரிகின்றது. தலைப்பை போட்டவர் விடயத்தை Out of context ஆக்கி உள்ளார். இப்படி பல இடத்திலும் நடப்பதால் தான் ட்ரம்ப் போன்றவர்கள் fake news media என சொல்வது 😯

Link to comment
Share on other sites

மேற்படி பேச்சின் ஒலிப்பதிவை வெளியிட்டு உதவுமாறு யாழிணையத்திடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, poet said:

மேற்படி பேச்சின் ஒலிப்பதிவை வெளியிட்டு உதவுமாறு யாழிணையத்திடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மக்களின் ஆணையில் ஒரு பகுதி கூட வேறு யாருக்கும் போகக்கூடாது – சம்பந்தன் கோரிக்கை!

 In ஆசிரியர் தெரிவு      December 18, 2019 11:36 am GMT      0 Comments      1301      by : Vithushan

எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஆணையை முழுமையாக தங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மக்களின் ஆணையில் ஒரு பகுதி கூட வேறு யாருக்கும் போகக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

மேலும் கடந்த காலங்களில் எமக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிரகாரமே நாம் செயற்ப்பட்டு வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் நாம் நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காணுவோம் என அரசாங்கம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே விடுதலை புலிகளை அழிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்கியது.

ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த வாக்குறுதிகளில் இருந்து தப்பிச்செல்ல அர்சனத்தில் உள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டிய இரா.சம்பந்தன் இதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்க கூடாது என வலியுறுத்தினார்.

அத்தோடு நாம் சிங்கள மக்களையும் சிங்கள தலைவர்களையும் பகைக்க விரும்பவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

நன்றி ஏராளன். சம்பந்தர் எந்த இடத்திலும் “விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது” என்று கூறவில்லையே. ஏன் இத்தனை வதந்திகள்? சம்பந்தரின் பேச்சை வெளியிட்ட ஆதவன் ஊடகத்துக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனின் காணொளி முழுமையானதாக இல்லை. நேரம் 1:41 இல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ம்.....தலைபோகிற அரசியல் பேச்சு தொடர்பாக ஊடக செய்திகளை நம்பி  ஒலிப்பதிவு ஆதரங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அவசரம் அவசரமாக  குற்றம்சாட்டுவது தவறு.

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

ம்.....தலைபோகிற அரசியல் பேச்சு தொடர்பாக ஊடக செய்திகளை நம்பி  ஒலிப்பதிவு ஆதரங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அவசரம் அவசரமாக  குற்றம்சாட்டுவது தவறு.

சில பேர் குற்றம் பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதுவும் சம் , சும் எங்கே என்ன பேசுவார்கள் எண்டு நாயாய் பேயாய் அலைகிறார்கள். நல்லதை பேசுகிறார்களா , கெடடதை பேசுகிறார்களா என்பதல்ல. அவர்களுக்கு எதிராக எழுதவேண்டும் என்ற எண்ணத்தைத்தான் காண முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Vankalayan said:

சில பேர் குற்றம் பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதுவும் சம் , சும் எங்கே என்ன பேசுவார்கள் எண்டு நாயாய் பேயாய் அலைகிறார்கள். நல்லதை பேசுகிறார்களா , கெடடதை பேசுகிறார்களா என்பதல்ல. அவர்களுக்கு எதிராக எழுதவேண்டும் என்ற எண்ணத்தைத்தான் காண முடிகிறது. 

நல்லதை செய்தால் மக்கள் ஏன் திட்டுகிரார்கள் தங்கள் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள் 

2 hours ago, poet said:

ம்.....தலைபோகிற அரசியல் பேச்சு தொடர்பாக ஊடக செய்திகளை நம்பி  ஒலிப்பதிவு ஆதரங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அவசரம் அவசரமாக  குற்றம்சாட்டுவது தவறு.

Link to comment
Share on other sites

51 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லதை செய்தால் மக்கள் ஏன் திட்டுகிரார்கள் தங்கள் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள் 

மக்கள் திட்டுகிறார்களா இல்லை நீங்கள் திட்டுகிறீர்களா எண்டு வரும்  தேர்தலில் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இந்தக் கட்டிங் யார் வெளியிட்டது. சம்பந்தருக்கு  நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். தயவு செய்து முழுப்பேச்சையும் வெளியிடுங்கள். யாருக்கு நல்லவிடயமாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார்? பொதுவாகவா? சிங்களவருக்கா? சர்வதேசத்துக்கா? இந்தியாவுக்காகா?  இந்தியாவும் சர்வதேசமும்  “உதவினோம் வென்றீர்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” என்றுதான் சொல்கிறார்கள். அப்படி   இந்தியா இலங்கை அரசுக்கு சொன்னதை மேற்கோளாக குறிபிடுபிடுகிறாரா. தெளிவாக இல்லை.   முழுப்பேச்சும் எங்கே கிடைக்கும்?

.

போர்காலத்துக்கு முந்திய அரசியல் போர்கால அரசியல் போருக்கு பிந்திய அரசியல் என மூன்று கால அரசியலையும் கடந்து வந்த ஒருவர். தெளிவாக பேச முடியாத வயசாளி   நிதானமாக ஆராய்ந்தே முடிவு எடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

மக்கள் திட்டுகிறார்களா இல்லை நீங்கள் திட்டுகிறீர்களா எண்டு வரும்  தேர்தலில் பார்க்கலாம்.

மக்களுக்கு  வேறு தெரிவுகள் இருந்திருந்தால் இவர்களை எப்போதோ வீட்டுக்கு அனுப்பி இருப்பார்கள். ஆனால் இனியும் இவர்களால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டமுடியாது. மக்கள் இனியாவது சரியான முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

34 minutes ago, poet said:

போர்காலத்துக்கு முந்திய அரசியல் போர்கால அரசியல் போருக்கு பிந்திய அரசியல் என மூன்று கால அரசியலையும் கடந்து வந்த ஒருவர். தெளிவாக பேச முடியாத வயசாளி   நிதானமாக ஆராய்ந்தே முடிவு எடுக்க வேண்டும். 

தெளிவாக பேசவே முடியாதவர்களெல்லாம் என் இன்னும் அரசியலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இள வயதினருக்கு இடம்விட்டு ஒதுங்க வேண்டியதுதானே!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.