இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழிக்­க­வேண்டும் என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யி­ருப்­பது யதார்த்­த­மான கருத்­தாகும் என உலமாக் கட்சி தலைவர் மெள­லவி முபாறக் அப்துல் மஜீத் தெரி­வித்தார்.

 பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷவின் கருத்து பற்­றிய உலமா கட்­சியின் நிலைப்­பாடு குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு  விளக்­க­மளிக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், மஹிந்­தவின் மேற்­படி கருத்­துக்­கா­க ­முஸ்­லிம்கள் பதற்­றப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை. இதற்­காக தீவி­ர­வாதம் உள்­ளத்தில் உள்­ளோர்தான் பயப்­ப­ட­ வேண்டும்.

 தமிழ் மொழி பேசு­ப­வர்கள் பயங்­க­ர­வா­த­ செ­யல்­களில் ஈடுபட்­ட­போது அது தமிழ் பயங்­க­ர­வாதம் என்றே சொல்­லப்­பட்­டது. அதேபோல் பௌத்­த ­ம­தத்தின் பெயரால் பயங்­க­ர­வாத செயல்கள் அரங்­கே­றி­ய­போது அது பௌத்த பயங்­க­ர­வாதம் என நடு­நி­லை­யான பௌத்­த­ மக்­களும் கூறினர்.

virakesari.jpg

 இன்று இஸ்லாம் பற்­றிய அறி­யாமை கார­ண­மாக இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் உலகிலுள்­ளது என்­பது உண்மை. இதனை ஆப்­கா­னிஸ்தான், சிரியா, ஈராக், யேமன் என­ முஸ்லிம் நாடு­க­ளி­லேயே காண்­கிறோம்.இஸ்லாம் அன்­பையும், ஆத­ர­வையும், ஆலோ­ச­னை­யை­யுமே போதிக்­கி­றது. ஆயு­தத்தை வலி­யு­றுத்­த­வில்லை. ஆயுதம் தாங்­கியோர் தாக்க வந்தால் மட்­டுமே ஆயுதம் ஏந்­தலாம் என்­கி­றது. 

 இன்று முஸ்லிம் உலகில் நடப்­பது என்ன? முஸ்­லிம்கள் அறி­வற்று தமக்குள் தாங்­களே இயக்­கங்­க­ளாக பிரிந்து ஒரு­வரை ஒருவர் மறுத்து ஆயுதம் ஏந்தி சண்டை பிடிக்­கின்­றனர். அர­சாங்­கங்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம் என்றால் முஸ்லிம் நாடு­க­ளில்தான் அது ஆயு­த­ப்போ­ராட்­ட­மாக பரி­ண­மித்­துள்­ளது. இஸ்லாம் ஆட்­சி­யா­ள­ருக்­கெ­தி­ராக ஆயுதம் ஏந்­த­ச்சொல்­ல­வில்லை. ஆட்­சி­யா­ள­ருக்கு ஆலோ­ச­னையும் புத்­தி­ம­தி­யுமே சொல்­லச்­சொல்­கி­றது. ஆயு­தத்­தினால் எதையும் சாதிக்­க­மு­டி­யாது என­த்தெ­ரிந்த பல நா­டுகள் ஜன­நா­யக ரீதியில் மக்­களை திரட்டி ஆட்சி மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.   இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழித்து அஹிம்சை அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தையே இலங்கை உலமா கட்­சியும்  போதித்து வரு­கி­றது. முஸ்­லிம்கள் தமக்குள் எக்­கா­ரணம் கொண்டும் ஆயு­தத்தை தூக்­க­க்கூ­டாது என்றும் தம்­மோடு சண்­டைக்கு வராத அந்­நி­ய­ மக்­க­ளுக்­கெ­தி­ரா­க ­ஆ­யுதம் தூக்­க­க்கூ­டாது எனவும் சொல்­லி­வ­ரு­கி­றது.

 ஆகவே இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை ஒழிக்­க­வேண்டும் என்ற மஹிந்­த­ ராஜ­பக் ்ஷவின் கருத்து சரி­யா­னது என்­ப­துடன்  அனைத்து தீவி­ர­வா­தங்­க­ளையும் ஒழிக்க மஹிந்­த­வுடன்  உலமா கட்சி செயற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/71416