Jump to content

90ஸ் கிட்ஸ் பாவம் சும்மா விடாது.. பெண் கொடுக்க 100 நிபந்தனைகள்..!


Recommended Posts

சென்னையில் வசிக்கின்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையிருந்தும், சொந்தமாக வீடு இல்லாததால், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகின்றது. 30 வயதை எட்டிப்பிடிக்க இருக்கும் நிலையில் பெண் வீட்டாரின் நிபந்தனைகளால் விழிபிதுங்கி நிற்கும் "நைண்டீஸ் கிட்ஸ்"களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

திருமணம்.. பெற்றோர் ஆசியுடன் இருமனம் இணையும் மகிழ்ச்சி மிக்க வைபவம்..! உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின்  நேரடி வாழ்த்துக்களுடன் கெட்டிமேளச்சத்தை மண மேடையில் அமர்ந்து கேட்பது என்பதே  சென்னையில் நடுத்தர வர்க்க பட்டதாரி இளைஞர்களுக்கு சவாலான நிகழ்வாக மாறி வருகின்றது.

மதுபழக்கம் இல்லாமல், நல்ல வேலைக்கு சென்று வந்தாலும் ஜாதியில் தொடங்கி சென்னையில் சொந்தவீடு இருக்க வேண்டும், மார்க்கெட்டிங் மாப்பிள்ளையா வேலை நிரந்தரம் கிடையாது, குறைந்த பட்சம் மாப்பிள்ளை 1 லட்சம் சம்பளம் பெற வேண்டும், மத்திய மாநில  அரசுப்பணி என்றால் ஓகே என்று பெண் வீட்டார் போடும் பலவித கட்டளைகளால் தங்கள் திருமணம் தடைபட்டு நிற்பதாக வேதனை தெரிவிக்கின்றார் முகம் காட்ட வெட்கப்படும் இந்த முரட்டு சிங்கிள்..!

வரதட்சணையும் வேண்டாம், ஜாதியும் வேண்டாம், தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாக இருந்தால் போதும் என்று இறங்கி வந்தால், பெண்ணுக்கு சமைக்க தெரியாது, வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள், பையனையும் பெண்ணையும் தனிக்குடித்தனம் அனுப்பி விடுங்கள், என்று அடுத்த பட்டியல் நீள்வதால் இதுவரை 40 பெண்கள் பார்த்தும் தனது மகனுக்கு பெண் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றார் இந்த தாய்..

அதே நேரத்தில் நிரந்தமாக சொந்த வீடு கூட இல்லையென்றால் எப்படி பாதுகாப்பாக வசிக்க முடியும் ? என்று எதிர் கேள்வி எழுப்பும் பெண் ஒருவர், திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியை பணிக்கு அனுப்புவதில்லை அப்படி இருக்க நகரத்தில் ஒருவர் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை நல்லபடியாக நடத்த அதிக அளவு பணம் தேவைப்படும் அல்லவா ? அதனால் தான் நிரந்தர வேலையுடன் அதிக சம்பளம் பெறும் மாப்பிள்ளையாக பார்ப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் பெண்கள்
6 மாதத்திற்கு ஒரு வீடு என்று கையில் பொருட்களை தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் சொந்த வீடு இல்லாத மாப்பிள்ளைகளை பெற்றோர் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தான் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பு எகிறிவிட்டதாக தெரிவிக்கும் திருமண தரகர்கள், முன்பு போல அல்லாமல் அனைத்து பெண்களும் படித்தவர்களாக இருப்பதால், 5 சிறப்பான வரன்களின் விவரம் கையில் இருந்தாலும் அதற்கு மேல் ஒரு நல்ல மாப்பிள்ளை தங்கள் மகளுக்கு அமையவேண்டும் என்பதே இந்த நிலைக்கு காரணம் என்கின்றனர்.

இந்த நிலைமையை பார்த்து சில நைண்டீஸ் கிட்ஸ், ஏதாவது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முயன்றால், காலம் கடந்து விட்டதால் காதலிக்க நேரமோ, பெண்ணோ கிடைப்பதில்லை என்பது தான் பரிதாபத்தின் உச்சம்..!

நைண்டீஸ் கிட்சை வேடிக்கையாக பார்ப்பதை விட, நைண்டீஸ் கிட்ஸ்சோடு வாழ்ந்து பாருங்க அப்ப தான் அவங்க படுற கஷ்டம் புரியும் ..!

https://www.polimernews.com/dnews/93420/90ஸ்-கிட்ஸ்-பாவம்-சும்மாவிடாது..-பெண்-கொடுக்க-100நிபந்தனைகள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.