• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
pri

சில ஞாபகங்கள் - 4

Recommended Posts

வெளியில் பனி கொட்டுகிறது.

பதினைந்து cm  வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது.
 
நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள்.
கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன்.
மிஞ்சி மிஞ்சி போனால்  10 பாகை குளிரை கண்டிருப்பேன்.
இங்கெல்லாம் அதை  குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
 
பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன்.
சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில்
கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது.
 
 
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம்.
கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம்.
படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.
 
அக்பர் விடுதி வாழ்கையும் முன்நூற்றம்பது ரூபாய் மகாபொல காசும் முடிந்து போனது.
இரண்டு ரூபாய் கன்டீன் சாப்பாடும் இல்லைஎன்றானது.
 
காசு கேட்டு வீட்டுக்கு கடிதம் அனுப்ப வெட்கப்பட்டவர்கள் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டார்கள்.
பாக்கியவான்களுக்கு கொழும்பிலும் கண்டியிலும் வேலை வாய்த்தது.
மற்றவர்களை வேலை எங்காவது ஒரு சிங்கள ஊருக்கு கொண்டுபோய் சேர்த்தது.
 
எக்கய்,தெக்கய் ,கொந்தய், நரக்கய் மட்டும் சிங்களத்தில்  தெரிந்தவர்கள் முழி பிதுங்கினார்கள்.
எங்காவது வெடிக்கிற குண்டுக்கும் கூடவேலை செய்தவர்கள் முறைத்து பார்த்தார்கள்.
 
பெடியளின் வெற்றி செய்திகள் வருகிற போது மனதுக்குள் மத்தாப்பு வெடிக்கும். வெளியில் காட்டி கொள்ள முடியாது.
அரசியல் பேச அருகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
போலி சிரிப்போடு வாழ்கை நகர்ந்தது.
கொஞ்சம் வேலை அனுபவம் வந்து சேர்ந்தது.
 
எங்களை போன்றவர்களுக்கும் கனடாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் குடிபெயர்கிற கதவுகள் திறந்தது.
கொஞ்சப்பேர் அவுஸ்ரேலியாவுக்கு போனார்கள். மற்றையோர கனடாவை பார்த்தார்கள்.
 
 
கனடாவுக்கு குடிபெயர்கிற நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். கொழும்பில் இருந்த கனடா தூதரகத்துக்கு போயிருந்தேன். வெள்ளைக்கார அதிகாரிக்கு முன்னால் போய் குந்தினேன்.
 
"ஏன் கனடாவில் போய் குடியேற ஆசைபடுகிறாய்"
 என்றார்.
 
"பேசுகிற மொழிக்கா தண்டிக்க படாத நாட்டில் எல்லா இனத்தவரோடும் கூடியிருக்க விருப்பம்" என்றேன்.
 
"நல்லது. அது மட்டுமா ?"என்றார்
 
"கனடாவின்  குளிர் காலம் பிடிக்கும் "என்றேன்.
 
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது எனக்கு சரியாக  புரியவில்லை.
 
பனி கொட்டும் குளிர் காலமொன்றில் மொன்றியலில் வந்து இறங்கினேன்.
 
கொழும்பில் அலைந்துதிரிந்து , house of fashion இல் வாங்கிய jacket கை கொடுத்தது.  
 
அந்த jacket  க்குள் என்னை விட இன்னுருவரும் புக முடியும். குளிர் பூந்து விளையாடியது.
சொண்டுகள் வெடித்தது. தோல் கரடு முரடாகி வெள்ளை படர்ந்தது. வெளியில் வந்து சருக்கி விழுந்தேன்.
 
புருவத்தை உயர்த்தி Really?  என்று கொழும்பில்   கேட்ட  அந்த அதிகாரியின் முகம் கண்ணுக்குள்  வந்து போனது.
 
சொர்க்கத்திலும் பனி கொட்டும் என்ற கனவும் கலைந்து.
 
இப்போது எல்லாம் பழகிப்போனது.
 
 
  • Like 12

Share this post


Link to post
Share on other sites

இப்போது பனியை மிகவும் பிடித்திருக்குமே உங்களுக்கு  ......!  நான் பிரான்சில் இருக்கிறன் என்று பேர்தான். நானிருக்கும் இடத்தில் பனி கொட்டுவது மிகவும் குறைவு....இந்த இடம் 5 கி.மீ ஒரு குழி கரண்டி மாதிரி.சுற்றிலும் மலைகள்.சுற்றிவர பனி கொட்டோ  கொட்டென்று  கொட்டும் . இங்கு கொட்டாது. இந்த மாதிரி நேரங்களில் எனக்கு பனி பிடிக்கும். நல்ல அனுபவப் பகிர்வு பிரி.......!  😂

Share this post


Link to post
Share on other sites

எனது முதல் பனிப்பொழிவு அனுபவம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமானதாகத்தான் உள்ளது😁 ஆனால் கையும் காலும் விறைத்துப்போனதென்னவோ உண்மைதான்!

 

Share this post


Link to post
Share on other sites

நானும் நகரமெங்கும் கொட்டிக்கிடக்கும் பனிமேல் நடக்க வாய்ப்பு கிட்டுமென காத்திருக்கிறேன்.. இன்னமும் அமையவில்லை..!

ski-dubai-mall-of-the-emirates4.jpg  Snow-Kingdom8.jpg

'ஸ்கி துபை' மற்றும் சென்னையிலுள்ள 'வி.ஜி.பி ஸ்னோ கிங்டம்' போன்ற உள்ளரங்க செயற்கை பனியில் சறுக்கியதோடு சரி.

அடுத்த மாதம் ஸ்விஸ் நாட்டில் பார்க்க வாய்பிருக்குமென எண்ணுகிறேன். 2 பாகை குளிரே தாங்க முடியவில்லை, பனியில் தினமும் வாழ்வது கடினம் தான்.

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

இயல்பான உங்கள் எழுத்து அருமை. முதன்முதலில் பார்க்கும் எல்லோருக்கும் பனிப்பொழிவு மட்டற்ற மகிழ்சி தான்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி suvy ,கிருபன் ,ராசவன்னியன் ,மெசொபோத்தேமியா  சுமேரியர் .

வெளியில் வேலை இல்லாத நாளில் வீட்டுக்குள் இருந்தபடி 
யன்னல் வழியாக பனி கொட்டுவதை பார்க்க இப்பவும் விருப்பம் .

Share this post


Link to post
Share on other sites
On 12/21/2019 at 4:50 PM, pri said:

பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன்.

வெளிநாடில் பனி மழைக்குள் எடுத்த முதல் திரைப்படம் சிவந்தமண். அந்தப் படத்தில் இருந்து இன்றுவரை நடிகைகள் எல்லாம் பனி மழைக்குள் ஜக்கெற் இல்லாமல் ஆடிப்பாடுவார்கள். நடிகர்கள் மட்டும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருப்பார்கள். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் pri 

பனியைப்பற்றிய உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே  எனக்கு குளிர் எடுக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

கனடா செல்வதற்கான நேர்முகத் தேர்வும். முதல் பனிப்பொழிவும் மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
அனைவரும்  முதல் பனிப்பொழிவை... என்றுமே மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.  

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, Kavi arunasalam said:

வெளிநாடில் பனி மழைக்குள் எடுத்த முதல் திரைப்படம் சிவந்தமண். அந்தப் படத்தில் இருந்து இன்றுவரை நடிகைகள் எல்லாம் பனி மழைக்குள் ஜக்கெற் இல்லாமல் ஆடிப்பாடுவார்கள். நடிகர்கள் மட்டும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருப்பார்கள். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் pri 

பனியைப்பற்றிய உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே  எனக்கு குளிர் எடுக்கிறது.

பெரும்பாலான தமிழ் படங்களில் நீங்கள் குறிப்பிடுவது போலவே
பாடல் காட்சி அமைந்திருக்கும் . நன்றி .

10 hours ago, தமிழ் சிறி said:

கனடா செல்வதற்கான நேர்முகத் தேர்வும். முதல் பனிப்பொழிவும் மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
அனைவரும்  முதல் பனிப்பொழிவை... என்றுமே மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.  

நன்றி தமிழ் சிறி .

Share this post


Link to post
Share on other sites
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது
 
எனக்கு சரியாக  புரியவில்லை.
 
எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, நிலாமதி said:
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது
 
எனக்கு சரியாக  புரியவில்லை.
 
எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து 

நன்றி நிலாமதி.

Share this post


Link to post
Share on other sites

ஞாபகம் நன்றாக இருக்கிறது பிரி 

Share this post


Link to post
Share on other sites
On 1/14/2020 at 1:25 PM, தனிக்காட்டு ராஜா said:

ஞாபகம் நன்றாக இருக்கிறது பிரி 

நன்றி தனிக்காட்டு ராஜா .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this