• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
pri

சில ஞாபகங்கள் - 4

Recommended Posts

வெளியில் பனி கொட்டுகிறது.

பதினைந்து cm  வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது.
 
நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள்.
கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன்.
மிஞ்சி மிஞ்சி போனால்  10 பாகை குளிரை கண்டிருப்பேன்.
இங்கெல்லாம் அதை  குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
 
பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன்.
சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில்
கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது.
 
 
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம்.
கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம்.
படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.
 
அக்பர் விடுதி வாழ்கையும் முன்நூற்றம்பது ரூபாய் மகாபொல காசும் முடிந்து போனது.
இரண்டு ரூபாய் கன்டீன் சாப்பாடும் இல்லைஎன்றானது.
 
காசு கேட்டு வீட்டுக்கு கடிதம் அனுப்ப வெட்கப்பட்டவர்கள் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டார்கள்.
பாக்கியவான்களுக்கு கொழும்பிலும் கண்டியிலும் வேலை வாய்த்தது.
மற்றவர்களை வேலை எங்காவது ஒரு சிங்கள ஊருக்கு கொண்டுபோய் சேர்த்தது.
 
எக்கய்,தெக்கய் ,கொந்தய், நரக்கய் மட்டும் சிங்களத்தில்  தெரிந்தவர்கள் முழி பிதுங்கினார்கள்.
எங்காவது வெடிக்கிற குண்டுக்கும் கூடவேலை செய்தவர்கள் முறைத்து பார்த்தார்கள்.
 
பெடியளின் வெற்றி செய்திகள் வருகிற போது மனதுக்குள் மத்தாப்பு வெடிக்கும். வெளியில் காட்டி கொள்ள முடியாது.
அரசியல் பேச அருகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
போலி சிரிப்போடு வாழ்கை நகர்ந்தது.
கொஞ்சம் வேலை அனுபவம் வந்து சேர்ந்தது.
 
எங்களை போன்றவர்களுக்கும் கனடாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் குடிபெயர்கிற கதவுகள் திறந்தது.
கொஞ்சப்பேர் அவுஸ்ரேலியாவுக்கு போனார்கள். மற்றையோர கனடாவை பார்த்தார்கள்.
 
 
கனடாவுக்கு குடிபெயர்கிற நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். கொழும்பில் இருந்த கனடா தூதரகத்துக்கு போயிருந்தேன். வெள்ளைக்கார அதிகாரிக்கு முன்னால் போய் குந்தினேன்.
 
"ஏன் கனடாவில் போய் குடியேற ஆசைபடுகிறாய்"
 என்றார்.
 
"பேசுகிற மொழிக்கா தண்டிக்க படாத நாட்டில் எல்லா இனத்தவரோடும் கூடியிருக்க விருப்பம்" என்றேன்.
 
"நல்லது. அது மட்டுமா ?"என்றார்
 
"கனடாவின்  குளிர் காலம் பிடிக்கும் "என்றேன்.
 
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது எனக்கு சரியாக  புரியவில்லை.
 
பனி கொட்டும் குளிர் காலமொன்றில் மொன்றியலில் வந்து இறங்கினேன்.
 
கொழும்பில் அலைந்துதிரிந்து , house of fashion இல் வாங்கிய jacket கை கொடுத்தது.  
 
அந்த jacket  க்குள் என்னை விட இன்னுருவரும் புக முடியும். குளிர் பூந்து விளையாடியது.
சொண்டுகள் வெடித்தது. தோல் கரடு முரடாகி வெள்ளை படர்ந்தது. வெளியில் வந்து சருக்கி விழுந்தேன்.
 
புருவத்தை உயர்த்தி Really?  என்று கொழும்பில்   கேட்ட  அந்த அதிகாரியின் முகம் கண்ணுக்குள்  வந்து போனது.
 
சொர்க்கத்திலும் பனி கொட்டும் என்ற கனவும் கலைந்து.
 
இப்போது எல்லாம் பழகிப்போனது.
 
 
  • Like 12

Share this post


Link to post
Share on other sites

இப்போது பனியை மிகவும் பிடித்திருக்குமே உங்களுக்கு  ......!  நான் பிரான்சில் இருக்கிறன் என்று பேர்தான். நானிருக்கும் இடத்தில் பனி கொட்டுவது மிகவும் குறைவு....இந்த இடம் 5 கி.மீ ஒரு குழி கரண்டி மாதிரி.சுற்றிலும் மலைகள்.சுற்றிவர பனி கொட்டோ  கொட்டென்று  கொட்டும் . இங்கு கொட்டாது. இந்த மாதிரி நேரங்களில் எனக்கு பனி பிடிக்கும். நல்ல அனுபவப் பகிர்வு பிரி.......!  😂

Share this post


Link to post
Share on other sites

எனது முதல் பனிப்பொழிவு அனுபவம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமானதாகத்தான் உள்ளது😁 ஆனால் கையும் காலும் விறைத்துப்போனதென்னவோ உண்மைதான்!

 

Share this post


Link to post
Share on other sites

நானும் நகரமெங்கும் கொட்டிக்கிடக்கும் பனிமேல் நடக்க வாய்ப்பு கிட்டுமென காத்திருக்கிறேன்.. இன்னமும் அமையவில்லை..!

ski-dubai-mall-of-the-emirates4.jpg  Snow-Kingdom8.jpg

'ஸ்கி துபை' மற்றும் சென்னையிலுள்ள 'வி.ஜி.பி ஸ்னோ கிங்டம்' போன்ற உள்ளரங்க செயற்கை பனியில் சறுக்கியதோடு சரி.

அடுத்த மாதம் ஸ்விஸ் நாட்டில் பார்க்க வாய்பிருக்குமென எண்ணுகிறேன். 2 பாகை குளிரே தாங்க முடியவில்லை, பனியில் தினமும் வாழ்வது கடினம் தான்.

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

இயல்பான உங்கள் எழுத்து அருமை. முதன்முதலில் பார்க்கும் எல்லோருக்கும் பனிப்பொழிவு மட்டற்ற மகிழ்சி தான்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி suvy ,கிருபன் ,ராசவன்னியன் ,மெசொபோத்தேமியா  சுமேரியர் .

வெளியில் வேலை இல்லாத நாளில் வீட்டுக்குள் இருந்தபடி 
யன்னல் வழியாக பனி கொட்டுவதை பார்க்க இப்பவும் விருப்பம் .

Share this post


Link to post
Share on other sites
On 12/21/2019 at 4:50 PM, pri said:

பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன்.

வெளிநாடில் பனி மழைக்குள் எடுத்த முதல் திரைப்படம் சிவந்தமண். அந்தப் படத்தில் இருந்து இன்றுவரை நடிகைகள் எல்லாம் பனி மழைக்குள் ஜக்கெற் இல்லாமல் ஆடிப்பாடுவார்கள். நடிகர்கள் மட்டும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருப்பார்கள். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் pri 

பனியைப்பற்றிய உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே  எனக்கு குளிர் எடுக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

கனடா செல்வதற்கான நேர்முகத் தேர்வும். முதல் பனிப்பொழிவும் மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
அனைவரும்  முதல் பனிப்பொழிவை... என்றுமே மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.  

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, Kavi arunasalam said:

வெளிநாடில் பனி மழைக்குள் எடுத்த முதல் திரைப்படம் சிவந்தமண். அந்தப் படத்தில் இருந்து இன்றுவரை நடிகைகள் எல்லாம் பனி மழைக்குள் ஜக்கெற் இல்லாமல் ஆடிப்பாடுவார்கள். நடிகர்கள் மட்டும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருப்பார்கள். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் pri 

பனியைப்பற்றிய உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே  எனக்கு குளிர் எடுக்கிறது.

பெரும்பாலான தமிழ் படங்களில் நீங்கள் குறிப்பிடுவது போலவே
பாடல் காட்சி அமைந்திருக்கும் . நன்றி .

10 hours ago, தமிழ் சிறி said:

கனடா செல்வதற்கான நேர்முகத் தேர்வும். முதல் பனிப்பொழிவும் மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
அனைவரும்  முதல் பனிப்பொழிவை... என்றுமே மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.  

நன்றி தமிழ் சிறி .

Share this post


Link to post
Share on other sites
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது
 
எனக்கு சரியாக  புரியவில்லை.
 
எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, நிலாமதி said:
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது
 
எனக்கு சரியாக  புரியவில்லை.
 
எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து 

நன்றி நிலாமதி.

Share this post


Link to post
Share on other sites

ஞாபகம் நன்றாக இருக்கிறது பிரி 

Share this post


Link to post
Share on other sites
On 1/14/2020 at 1:25 PM, தனிக்காட்டு ராஜா said:

ஞாபகம் நன்றாக இருக்கிறது பிரி 

நன்றி தனிக்காட்டு ராஜா .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால்     By Mohamed Azarudeen     மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் இரண்டு ஒருநாள் பயிற்சிப் போட்டிகளில் ஆடுகின்றது.  இந்த பயிற்சிப் போட்டிகளின் முதல் மோதல் கடந்த திங்கட்கிழமை (17) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், இரண்டாவது பயிற்சிப் போட்டி நாளை (20) நடைபெறுகின்றது.   கட்டுநாயக்கவில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 14 பேர் அடங்கிய கிரிக்கெட் சபை பதினொருவர் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.  இலங்கை அணிக்காக கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒருநாள் போட்டியொன்றில் ஆடிய தினேஷ் சந்திமால், குறிப்பிட்ட கால ஓய்வுக்குப் பின்னர் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை காட்டியதன் மூலம் இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் ஒன்றும் சந்திமாலுக்கு கிடைத்திருக்கின்றது.  அதேநேரம், பானுக்க ராஜபக்ஷவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார். இலங்கை T20I அணி இனம் கண்ட அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகள் எதிலும் ஆடாத நிலையில்,  அவருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இலங்கை ஒருநாள் அணியில் இணைய வாய்ப்பு ஒன்று உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரர் மினோத் பானுக்கவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் ஆடவிருக்கின்றார். இதேவேளை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்ட லஹிரு திரிமான்ன, பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் தலைவராக செயற்படவிருக்கின்றார்.   அதேவேளை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வாய்ப்பினை பெற்ற பெதும் நிஷங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியில் தொடர்ந்தும் தமது இடத்தை தக்கவைக்க, வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்னாந்துவும் இணைக்கப்பட்டுள்ளார்.   இவர்கள் தவிர இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாந்து, சுழல் பந்துவீச்சாளர்களான அஷேன் பண்டார, புலின தரங்க ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது.  இலங்கை கிரிக்கெட் பதினொருவர் கிரிக்கெட் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான பயிற்சிப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (22) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 
    • லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி By Mohamed Shibly         ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு, லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளது.  கடந்த முறை இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணியை 2-0 என தோற்கடித்து கிண்ணத்தை வென்ற அட்லெடிகோவின் வன்டா மெட்ரோபொலிடானோ அரங்கு இந்த முறை லிவர்பூல் அணிக்கு சாதகமாக இருக்கவில்லை.    சொந்த ரசிகர்கள் முன் உற்சாகத்தோடு போட்டியை ஆரம்பித்த அட்லடிகோ, ஆரம்பத்திலேயே  ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது. போட்டியின் நான்காவது நிமிடத்தில் ஸ்பெயின் மத்தியகள வீரர் சாவுல் நிகுஸ் நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார். எனினும் அட்லடிகோ தனது வழக்கமான ஆக்கிரமிப்பு ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. பின்களத்தில் மொஹமட் சலாஹ், ரொபார்டோ பிர்மினோ மற்றும் சாடியோ மானே ஆகிய எதிரணி கோல் இயந்திரங்கள் உள்ளே வராமல் பொறுமையாக காத்திருந்தனர்.   முதல் பாதியில் சைம் விரலிஜ்கோவுடன் மோதலில் ஈடுபட்ட மானே அதிர்ஷ்டவசமாக மஞ்சள் அட்டையுடன் தப்பினார். சலாஹ்வுக்கு பதில் கோல் திருப்ப வாய்ப்புக் கிடைத்தபோது அவர் தலையால் முட்டிய பந்து வெளியே பறந்தது. பிற்பகுதியில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் வைத்து ஹென்டர்சனுக்கு கோல் பெறும் வாய்ப்பு ஒன்று நூலிழையில் தவறியது.   இந்நிலையில் சாடியோ மானே மற்றும் சலாஹ் ஆகியோருக்கு பதில் முறையே டிவொக் ஒர்கி மற்றும் அலெக்ஸ் ஒக்லாடே-சம்பர்லெயின் ஆகியோரை பயிற்சியாளர் ஜுர்கன் க்ளொப்ஸ் அனுப்பியபோதும் அதுவும் வெற்றி அளிக்கவில்லை.    ப்ரீமியர் லீக் தொடரில் 26 போட்டிகளில் 25 இல் வென்று கிண்ணத்தை நெருங்கி இருக்கும் லிவர்பூல் சம்பியன்ஸ் லீக்கில் அந்த திறனை வெளிப்படுத்த தவறி வருகிறது. இந்தப் பருவத்தில் அனைத்துப் போட்டித் தொடர்களிலும் லிவர்பூல் தோற்ற மூன்று போட்டிகளில் இரண்டு சம்பியன்ஸ் லீக் ஆட்டங்களாகும்.  சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டாவது கட்டத்தில் வரும் மார்ச் 11 ஆம் திகதி லிவர்பூல் தனது சொந்த மைதானமான அன்பீல்டில் அட்லடிகோ மெட்ரிட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற அதில் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது அவசியமாகும். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் பெருசியா டோர்ட்முண்ட் எர்லிங் ஹாலன்டின் இரட்டைக் கோல் மூலம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு எதிரான போட்டியில் பொருசியா டோர்ட்முண்ட் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.   வடமேற்கு ஜெர்மனியில் டோர்ட்முண்டின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாதபோதும் நோர்வே நாட்டின் 19 வயது ஹாலன்ட் மீண்டும் ஒருமுறை தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படத்தினார்.  69ஆவது நிமிடத்தில் கோல் பகுதிக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு இடையே பந்து தனது பக்கமாக வந்ததைப் பயன்படுத்தி டோர்ட்முண்ட் சார்பில் ஹாலன்ட் முதல் கோலை திருப்பினார்.  மறுபுறம் நான்கு போட்டிகளின் பின் மீண்டும் அணிக்குத் திரும்பிய நெய்மர் 75 ஆவது நிமிடத்தில் ம்பப்பே உதவே PSG சார்பில் பதில் கோல் திருப்பினார்.  ஒரு நிமிடம் கழித்து மீண்டும் செயற்பட்ட ஹாலன்ட் ஆபார கோல் ஒன்றை பெற்றார். கியோ ரெய்னெ வழங்கிய பந்தை நெய்மரை முறியடித்து பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து கோல் புகுத்தினார்.  இந்த கோல்கள் மூலம் ம்பப்பேவுக்கு அடுத்து சம்பியன்ஸ் லீக்கில் 10 கோல்களை எட்டிய இரண்டாவது இளம் வீரராக ஹாலன்ட் இடம்பிடித்ததோடு இந்தப் பருவத்தில் அவர் மொத்தம் 29 போட்டிகளில் பங்கேற்று 39 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.  சம்பியன்ஸ் லீக்கின் 16 அணிகள் சுற்றில் வைத்து கடந்த மூன்று பருவங்களிலும் வெளியேறிய PSG தனது சொந்த மைதானத்தில் வரும் மார்ச் 11 ஆம் திகதி இரண்டாம் கட்டப் போட்டியில் பெருசியா டோர்ட்முண்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற அந்த அணிக்கு கடைசி சந்தர்ப்பமாக அது இருக்கும்.  http://www.thepapare.com/champions-league-round-up-for-18th-of-february-2020-tamil/
    • இந்தியா தமிழர் பிரச்சனையை கைவிட்டாலே அரைவாசி பிரச்சனை தீர்ந்து விடும்.
    • யுத்தம் நடந்த காலத்தில் இந்து குருமார் மக்களுக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டதான எனக்கு ஞாபகம் இல்லை. ஒப்புக்கு சில சர்வமத பேரணிகளில் கலந்து கொண்டிருப்பார்கள். அதைக்கூட  ஒழுங்கு செய்தவர்கள் வேறு அமைப்புக்கள் தான். அதே வேளை யுத்த காலத்தில் ஐரோப்பிய பத்திரிகளில் புலிகளுக்கு எதிராகவும் தமிழரின் போராட்டதை கொச்சைப்படுத்தி  வந்த அத்தனை கட்டுரைகளுக்கும் மூலம் எது என்று பார்த்தால் அத்தனையும் டெல்லியில் இருந்து இந்து பார்பன பத்திரிகையாளர்களால் எழுத‍ப்பட்டவையாகவே இருந்தன.  இந்த லட்சனத்தில் தமிழர்களிடம் மத ரீதியான பிளவுகளை உருவாக்க  முனையும் இப்படியான மதகுருமார் என்ற விஷ செடிகளை தமிழ் மக்கள் இணைந்து தோற்கடிப்பதோடு நில்லாது வேரறுக்க வேண்டும்.