• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

வீரியமிக்க வலி நிவாரணிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரிப்பு- அமெரிக்க ஆய்வில் தகவல்

Recommended Posts

அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் சேர்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வலி நிவாரணியை தேவையின்றி எடுத்து கொள்ளுதல்,சுய-தீங்கு விளைவித்து கொள்ளுதல் போன்ற செய்கையால் பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க குழந்தை மற்றும் இளைஞர்களை எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்  என்பது இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Clinical Toxicology இதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி கடந்த 2005ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால் ஒட்டு மொத்த சம்பவங்கள் குறைந்து விட்டன. ஆனால் வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவதால் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிக வீரியம் மிக்க வலிநிவாரணிகள் "ஓப்பியாய்டு" எனும் போதை பொருள் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. இந்த ஆய்வில் "ஓப்பியாய்டு" தொற்றுநோய் தொடர்ந்து குழந்தை நோயாளிகளுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை சமாளிக்க சுகாதார வளங்கள் இன்னும் தேவைப்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது

கடந்த 2005 முதல் 2018 வரை 55 அமெரிக்க விஷக் கட்டுப்பாட்டு மையங்களில் 2,07,543 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே ஓப்பியாய்டு உட்கொண்ட குழந்தைகளை கவனிக்கும் குழந்தை மருத்துவர்கள், இந்த நெருக்கடியைத் தணிக்க பயனுள்ள கொள்கை மாற்றங்களுக்கு தொடர்ந்து முயற்சிக்க ஆய்வில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/93823/வீரியமிக்க-வலிநிவாரணிகளால்-குழந்தைகள்பாதிக்கப்படுவதுஅதிகரிப்பு--அமெரிக்கஆய்வில்-தகவல்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நீங்க உப்புடிச் சொல்ல சுமந்திரன் ஓடிப்ப்போய் குய்யோ முறையோ என்டு குளறி சொறிலங்காவை காப்பாத்திடுவார்.
    • உங்க கீழ்த்தரமான கேள்விகள் உங்க கீழ்த்தரமான மனநிலையை வழமை போல காட்டி நிக்குது.
    • ஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: 1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள். 2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.  3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும். 4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். 5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள். 7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும். 8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். 9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும். 10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.   http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567796
    • ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செல்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567697