Jump to content

யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.(15)jaffna-search-221219-seithy (3)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-இன்று-கா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக... வாள் வெட்டுக் காரரை காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்ச நாளாக... வாள் வெட்டுக் காரரை காணவில்லை.

நாங்க வெளியே வாருகிறோம்.

நீங்க உள்ளே இருங்கோ என்று முதலே சொல்லியிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் வருதெல்லோ😮 தேவாலயங்களில் குண்டு வெடித்திடும் என்ற பயமாம் 

Link to comment
Share on other sites

21 minutes ago, ரதி said:

நத்தார் வருதெல்லோ😮 தேவாலயங்களில் குண்டு வெடித்திடும் என்ற பயமாம் 

யாராம் இப்ப குண்டு வைக்கிறது?

Link to comment
Share on other sites

தள்ளாடும் உல்லாசத்துறைக்கு இது, அதிகரித்த இராணுவ பிரசன்னம், ஆப்பு வைக்கலாம்.

 

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

தள்ளாடும் உல்லாசத்துறைக்கு இது, அதிகரித்த இராணுவ பிரசன்னம், ஆப்பு வைக்கலாம்.

 

தள்ளாடைவில்லை....ஒவ்வொரு மாதமும் இலங்கை அரசு வெளியிடும் அறிக்கையில் கடந்த வருடம் (2018) நவம்பருடன் ஒப்பிடுகையில் 9% தான் வீழ்ச்சி அடைந்துள்ளது.....ஒவ்வொரு மாதமும் கடந்த வருடத்துடடன் ஒப்பிட்டதில் 70% வீழ்ச்சியை மே மாதம் கண்டிருந்ததுடன் ஒவ்வொரு மாதமும் இடைவெளி குறைந்து இப்பொழுது வெறும் 9% வித்தியாசமே உள்ளது, சுமூக நிலை நீடித்தால் பெப்ரவ்ரி மாதம் மட்டில் அதிகரிப்பை காட்ட தொடங்கி விடும்.

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

யாராம் இப்ப குண்டு வைக்கிறது?

இந்தியா? வைப்பது மூலம் கோத்தாவின் நான் தான் பாதுகாப்பின் காவலன் என்பதை உடைக்கலாம் 😎 ஆடசி மாற்றத்தை உருவாக்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

அனைத்து நிர்வாக மாவட்டங்களின் பாதுகாப்பு முப்படையினர் வசம் :  விசேட வர்த்தமாணியில் ஜனாதிபதி கைச்சாத்து  

நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கான விசேட வர்த்தமாணி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் அரசியலமைப்பின் 40 ஆம் அத்தியாசத்தின்பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தில் 12 ஆம் பிரிவின் பிரகாரம் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் நாட்டு மக்களின் அமைதியை பேணுவதங்கு அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பணியில் ஈடுப்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும் , கம்பஹா நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், களுத்துறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும் கண்டி நிர்வாக மாவட்டம், மாத்தளை நிர்வாக மாவட்டம், நுவரெலியா நிர்வாக மாவட்டம், காலி நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், மாத்தறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும்,அம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும்முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில்ஈடுப்படுவர்.

மேலும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டம், மன்னார் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், வவுனியா நிர்வாக மாவட்டம், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், அம்பாறை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும்,திருகோணமலை நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், குருணாகல் நிர்வாக மாவட்டம், புத்தளம் நிர்வாக மாவட்டமும் அதனை அண்மித்துள்ள ஆள்புல நிலப்பரப்புக்களும், அநுராதபுரம் நிர்வாக மாவட்டம்,பொலன்னறுவை நிர்வாக மாவட்டம், பதுளை நிர்வாக மாவட்டம்,மொனராகலை நிர்வாக மாவட்டம், இரத்தினபுரி நிர்வாக மாவட்டம், கேகாலை நிர்வாக மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் இராணுவம் , விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகள் இன்று முதல் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/71566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

யாராம் இப்ப குண்டு வைக்கிறது?

அவங்களே வைக்க கூடும்...ஆமியை இன்னும் அதிகமாய் நிறுத்தலாம்  

 

Link to comment
Share on other sites

On 12/22/2019 at 2:10 PM, தமிழ் சிறி said:

கொஞ்ச நாளாக... வாள் வெட்டுக் காரரை காணவில்லை.

எல்லாம் ராணுவ முகாம்களுக்கு உள்ளை முடங்கியிருப்பீனம்.

Link to comment
Share on other sites

சாதாரணமாக பொலிசைக்கொண்டு செய்யக்கூடியதை, அதிரடிபடை, ரானுவத்தை வைத்து செய்வது, ஜனாதிபதி இன்னும் ராணுவ அதிகாரி போல சிந்திப்பதை/ விரும்புவதை காட்டுது.

Link to comment
Share on other sites

14 hours ago, மலையான் said:

சாதாரணமாக பொலிசைக்கொண்டு செய்யக்கூடியதை, அதிரடிபடை, ரானுவத்தை வைத்து செய்வது, ஜனாதிபதி இன்னும் ராணுவ அதிகாரி போல சிந்திப்பதை/ விரும்புவதை காட்டுது.

இலங்கை பொலிஸில், இலங்கை அரசாங்கத்துக்கே இல்லாத நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதே? எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இலங்கை பொலிஸில், இலங்கை அரசாங்கத்துக்கே இல்லாத நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதே? எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது?😎

நாங்கள் ஜனநாயக பாரம்பரியம் கொண்டவர்கள் அதன் அடிப்படையில் இலங்கை பொலிசை கொண்டு இலங்கை அரசு செய்வதில் விருப்பம்😁

Link to comment
Share on other sites

11 hours ago, கற்பகதரு said:

இலங்கை பொலிஸில், இலங்கை அரசாங்கத்துக்கே இல்லாத நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதே? எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது

ஜனாதிபதி, ஜனநயக நடைமுறையில் நம்பிக்கை உள்ளவராக இதுவரை காட்டிக்கோள்ளவில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/22/2019 at 7:40 PM, தமிழ் சிறி said:

கொஞ்ச நாளாக... வாள் வெட்டுக் காரரை காணவில்லை.

அதுதான் கடத்தல் மன்னர் வந்துவிட்டார். இனி வாள்வெட்டுக்காரருக்கு ஓய்வு. அவர்கள் செய்த பணியை வெற்றிகரமாக தொடர்வார்.

Link to comment
Share on other sites

இராணுவ மயமாக்கல் நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்தும்

சாதாரண பாதுகாப்பு நிலைமைகளுக்கு முப்படைகளையும் ஈடுபடுத்துவதென்பது பலத்த சந்தேகங்களையும், அச்சமான உணர்வையும் எற்படுத்தக் கூடியது.

இங்கு அச்சமான மனநிலை என்பது சிங்கள மக்களுக்குப் பொருந்தாது.மாறாக யுத் தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே அச்சமான சூழ்நிலைக்கு ஆளாகப்போகின்றனர். 

அதாவது வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்த கொடும்போரும் அதற்கு பின்பான முப் படைகளின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களிற்கு எதிராகவே அமைந்து இருந்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டாலும் அது தமிழ் மக் களுக்கு எதிரானதாகவே நிகழ்த்தப்பட்டது. 

அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்வது, சிறையில் அடைத்து வைப்பது, தம்பாட்டில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என்பது போன்ற அனுபவிப்புக்களை தமிழ் மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

இது தவிர, யுத்தத்தின் பின்பான படையினரின் தேடுதல் நடவடிக்கைகள், கைதுகள், பயங்கரவாத தடைப் பிரிவின் விசாரணைகள், முன்னாள் போராளிகள் மீதான அவதானிப்புக்கள் என அனைத்தும் அச்சம் தருவதாக இருந்தன.

இதன் கரணமாக இராப்பொழுது என்றாலே ஏக்கம் நிறைந்த பொழுதாகவே கழிந்து போகும்.
எனினும் கடந்த ஆட்சியில் முப்படைகள் முகாம்களில் இருப்பதான ஏற்பாடுகள் அச்ச மற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது. 

ஆனால் இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ­ பதவியேற்ற கையோடு முப்படை யையும் பாதுகாப்பு நடவடிக்கையில்  ஈடுபடுத்துவது  என்ற தீர்மானத்தையடுத்து கடந்த இரு தினங்களாக படையினர் சுற்றிவளைப்புகளிலும் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

ஆவாக்குழு, வாள்வெட்டுக் குழுக்கள் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவே படைத் தரப்பின் சுற்றி வளைப்புக்களும், ரோந்துப் பணிகளும் நடப்பதாகக் கூறப்பட்டாலும், இந் நடவடிக்கைகள் முன்னாள் போராளிகளினதும் வன்னி யுத்தத்திற்குள் அகப்பட்டவர்க ளினதும் மனநிலையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். 

2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுற்ற பின்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், யுத்த த்திற்குள் அகப்பட்டவர்கள், உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் எனப் பெரியதொரு எண் ணிக்கையானவர்கள் உள நெருக்கடிக்கு ஆளாகினர் என்ற தகவலை உள வைத்திய நிபுணர்கள் உறுதி செய்து இருந்தனர். 

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்கள் மெய்ப்பாடு என்ற உளநெருக்கடியின் தாக் கத்திற்கு ஆளாகினர் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து உள மருத்துவர்களும் உள வள உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்பான பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர் களை ஆற்றுப்படுத்தி இருந்தனர்.

நிலைமை இதுவாக இருக்கையில், மீண்டும் தமிழர் தாயகத்தில் இராணுவ பிரசன்னம் இருப்பதானது நிம்மதியற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கப் போகின்றது. 

எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யப் பொலிஸாரை சேவையில் ஈடுப டுத்தி அவர்களூடாக வாள் வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதே பொருத்தமானதாகும்.
எனவே இது பற்றி உரியவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண் டும். இது விடயத்தில் உள மருத்துவர்களும் உண்மை நிலைமையை அறிக்கைப்படுத்து வது காலத்தின் அவசிய தேவையாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20195&ctype=news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.