செய்தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் டிஏபி-யை மட்டும் தனியே பிரித்துக் குற்றம் சாட்டுவது ஏன்?- கிள்ளான் எம்பி
  •  
  •  
  •  
  •  

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு எல்டிடிஇ விவகாரத்தில் வழக்குரைஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா டிஏபி-யை மட்டும் தனியே குற்றஞ்சாட்டுவது ஏன் என்று வினவுகிறார்.

டிஏபி தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் போலீஸ் விசாரணையைக் குறைசொல்லுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் , அது அரசாங்கமே விசாரணையில் குறுக்கீடு செய்வதாகக் கருதப்படலாம் என்று ஹனிப் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக சந்தியாகு அவ்வாறு வினவினார்.

“என் சகாக்கள் தவிர்த்து வேறு யாரும் 2012 பாதுகாப்புக் குற்ற(சிறப்பு நடவடிக்கை) சட்ட(சொஸ்மா)த்தை அல்லது எல்டிடிஇ-தொடர்பான கைதுகளைக் குறைசொல்லவில்லையா?

“இது என்ன டிஏபி மேற்கொள்ளப்படும் ம்ற்றொரு பலி வேட்டையா? இதுவரை நடந்தது போதாதா? ”, என்று சந்தியாகு இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“சொஸ்மா ஒரு கொடிய சட்டம். அதன்கீழ் ஒருவரைத் தடுத்து வைப்பது அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்பதை ஒரு வழக்குரைஞரான ஹனிப் உணர்ந்தே இருப்பார்.

“அதேபோன்று ஹனிப் டிஏபி தலைவர்களை வாயை மூடிக்கொண்டிருக்கச் சொல்வதும் அவர்களின் பேச்சுரிமையை மீறும் செயல் என்பதை உணர வேண்டும்”, என்றாரவர்.

https://malaysiaindru.my/180399