Jump to content

தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TNA-1.jpg

தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தீர்மானம் குறித்த இறுதி முடிவுகள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தேர்தலில்-கொழும்பிலும்-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DzMf0tlVYAALjq2.jpg☺️

Link to comment
Share on other sites

எங்க 1, 2 வாக்கு கிடைச்சாலும் பிச்சையெடுக்க கூட்டமைப்பு ரெடி.
அப்பிடியாவது போனஸ் சீட் 1 கிடைக்கும் என்ற நப்பாசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gowin said:

எங்க 1, 2 வாக்கு கிடைச்சாலும் பிச்சையெடுக்க கூட்டமைப்பு ரெடி.
அப்பிடியாவது போனஸ் சீட் 1 கிடைக்கும் என்ற நப்பாசை.

மனோ கணேசனுக்கும், மற்றைய மலையக தமிழருக்கும்... 
கிடைக்க வேண்டிய வாக்குகளை,  சிதறடிக்க  திட்டம்  போடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மனோ கணேசனுக்கும், மற்றைய மலையக தமிழருக்கும்... 
கிடைக்க வேண்டிய வாக்குகளை,  சிதறடிக்க  திட்டம்  போடுகிறார்கள்.

இது தான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தான் உண்மை.

கூட்டமைப்பு..... வடக்கு, கிழக்கில்... செய்து கிழித்தது, காணாது என்று...
இனி.. கொழும்பில்,  செய்து கிழிக்கப்  போகிறார்களாம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு..... வடக்கு, கிழக்கில்... செய்து கிழித்தது, காணாது என்று...
இனி.. கொழும்பில்,  செய்து கிழிக்கப்  போகிறார்களாம்.   :grin:

செய்வதற்கில்லை.

இனி வடக்கு கிழக்கில் வெற்றி உறுதி இல்லை.கொழும்பு வத்தளை போன்ற இடங்களில் கேட்டால் சிங்களவனுக்கு போடுறதை விட ஒரு தமிழனுக்கு போடலாமே என்று எமது மக்கள் சிந்தித்து போடலாம்.

வேறு தமிழர்களின் போட்டியும் இந்த தொகுதிகளில் இருக்காது என்று கணக்குப் போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தி said:

அப்போ, மனோகணேசன் வடகிழக்கில் கேட்கக்கூடிய சூழல் உருவாகலாம் எனத் தோண்றுகிறது.

மனோ கணேசனுக்கு என்று... வடக்கு, கிழக்கில்...  குறிப்பிடக் கூடிய, வாக்குகள்  உள்ளது.
அப்படி அவர்...  கேட்டால், கூட்டமைப்பின்... முழி பிதுங்கும். :grin:

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

மனோ கணேசனுக்கு என்று... வடக்கு, கிழக்கில்...  குறிப்பிடக் கூடிய, வாக்குகள்  உள்ளது.
அப்படி அவர்...  கேட்டால், கூட்டமைப்பின்... முழி பிதுங்கும். :grin:

மனோ கணேசனும் தனது அரசியலை வடக்கு நோக்கி நகர்த்துவது நல்லம்;அவருக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கும்; மக்களுக்கு நன்மை நடக்கும்....!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

த.தே.கூ. ஏனைய இடங்களை எமக்கு விட்டுத்தர வேண்டும்- இராதாகிருஷ்ணன் பகிரங்க வேண்டுகோள்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா சாம்பல்தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தமுண்டு. ஏனெனில் இன்று வந்திருக்கின்ற ஜனாதிபதியும் கூட மதத்தை வைத்து அதுவும் பௌத்த மதத்தின் தலைவராகவே வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

பௌத்தர்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர். அவ்வாறெனில் மதம் இங்கு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது.

அதேபோலவே இந்தியாவிலும் மோடி மதத்தின் சார்பில் பிரதமராக வந்துள்ளார். எனவே மதம் என்பது மிக முக்கியமாக செயற்படும் விடயமாக காணப்படுகின்றது. அடுத்ததாக இனம் முக்கியமாகின்றது. நாம் சிறுபான்மை இனமாக இந்த நாட்டிலே வாழ்கின்ற நலையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆகவே எங்களுக்குள் உள்ள பிரிவினைகளை அகற்ற வேண்டும்.

சிறுபான்மை இனத்தவரைப் பொறுத்தவரை நாங்கள் வடக்கைச் சார்ந்தவர்கள், கிழக்கை சார்ந்தவர்கள், மலையகத்தை சார்ந்தவர்கள் என்ற பேதத்தை மறந்து தமிழினம் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.

இப்பகுதியில் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் உள்ள பல பாகங்களில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகக் கூறுகின்றது. ஆகவே நாங்கள் ஓரே இனம் என்ற அடிப்படையிலே வடக்கு கிழக்குப் பகுதிகளில் நீங்கள் போட்டியிடுங்கள். ஏனைய பகுதிகளை எங்களுக்கு விட்டுக்கொடுங்கள்.

அதாவது அப்பகுதியில் இருக்கின்ற சமூகங்களுக்காக விட்டுக்கொடுத்து அதன் மூலமாக உங்களுடைய பெருந்தன்மையைக் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதேபோல், நீங்களும் நாங்களும் ஒரே இடத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்டால் நாம் இருவரும் தோற்றுப்போவோம். அப்போது மூன்றாவது மனிதர் அங்கு வந்துவிடுவார். இது நாங்கள் எங்களுடைய இனங்களுக்கு செய்கின்ற அழிவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே நாங்கள் ஒன்றாக கலந்துபேசி எங்கே யார் போட்டிபோட வேண்டும்? யார் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு அதனை செயற்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

http://athavannews.com/த-தே-கூ-ஏனைய-இடங்களை-எமக்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.