Jump to content

2017இல் காணாமல் போன சிறுவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சம்பந்தமாக பொலிஸார் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில்  யேர்மனியில் Recklinghausen என்ற நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்ற போது அவர்களுக்கு கிடைத்தது ஆபாசப் படங்களும் வீடியோக்களும் மட்டுமல்ல. ஒரு அதிசயமும் சேர்ந்தே கிடைத்தது.

அந்த வீட்டில் உள்ள ஒரு அலுமாரியை சோதனைக்காக பொலீஸார்  திறந்த போது அந்த அலுமாரிக்குள் ஒரு சிறுவன் ஒளித்து  வைக்கப் பட்டிருந்ததைக் கண்டார்கள்.

அந்தச் சிறுவனை விசாரித்த போது  அவனது பெயர் Marvin என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

11.06.2017இல் காணாமல் போன Marvin Konsog என்ற பதினைந்து வயதான சிறுவன்தான் அவன் என்பதைப் பொலீஸார் அறிந்து கொண்டார்கள். இனி தனது மகன் கிடைக்க மாட்டான். அவன் இறந்து விட்டிருப்பான் என்ற கவலையில் வாழ்ந்து கொண்டிருந்த  Marvinஇன் தாயான Manuela Bock க்கு தாள முடியாத மகிழ்ச்சி. எப்படி பொலிஸாருக்கு நன்றி தெரிவிப்பது என்று தெரியாமல் வார்த்தைகளை அந்தத் தாய் தேடிக் கொண்டிருக்கிறார்.

உடல் ரீதியாக பாதிப்பு இல்லை என்றாலும் Marvin உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பான் என்பதால் அவனுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

Marvin மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்த இரண்டு ஆண்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.