• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

Recommended Posts

4 hours ago, புலவர் said:

சிங்கக் கொடியோன் சம்பந்தன்இசுமத்திரன் குழு கலந்துகொள்ளுமா?இல்லையா?

நிச்சயமாக கலந்துகொள்வர். கொத்தாபயவிற்கு நல்லெண்ண சமிஞ்சை [Signal ] கொடுக்கவேண்டுமல்லவா ?

Share this post


Link to post
Share on other sites

 

80321671_1040684736290411_15235010195965

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, புலவர் said:

சிங்கக் கொடியோன் சம்பந்தன்இசுமத்திரன் குழு கலந்துகொள்ளுமா?இல்லையா?

See the source image

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, nunavilan said:

நானறிய  தேசிய கீதம் என்பது  பாடியதாக நினைவில் இல்லை. உங்களுக்கு நினைவில் உள்ளதா?

தமிழில் பாடப்படும் போது முணுமுணுப்பேன் வேலை செய்யும் இடம் அப்படி

இனி சிங்களத்தில் என்றால் மெளனமாக கடந்திடும் வாய் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

The most widely held view is that Sri Lankan composer Ananda Samarakoon wrote the music and lyrics to the song inspired/influenced by Bengali poet Rabindranath Tagore. A minority suggest that Tagore wrote the anthem in ful

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Matha

ஆக, சிங்கள நாட்டின் தேசிய கீதம் ஒரு இந்தியரால் உருவாக்கப்பட்டது. சிங்கள மொழியில் மொழிபெயர்த்து பாடுகிறார்கள். அவர்களுக்கே இது தெரியுமோ தெரியாது. ஆனால், தமிழில் பாடக்கூடாது என்பது அறியாமையும் அகங்காரமுமே. 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழில் பாடப்படும் போது முணுமுணுப்பேன் வேலை செய்யும் இடம் அப்படி

இனி சிங்களத்தில் என்றால் மெளனமாக கடந்திடும் வாய் 

தமிழனுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இதை பாட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு பாடசாலை நாட்களில் பாடிய ஞாபகம் இருக்குது. இப்போவென்றால் தமிழிலும் பாட தெரியாது சிங்களத்திலும் பாட தெரியாது.

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு பாடசாலைக்கு ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அவர்கள் தமிழில் பாடும்போது கேட்டுக்கொண்டிருக்க பழைய ஞாபகம் வந்தது. இருந்தாலும் பாட முடியவில்லை. அதட்காக முயட்சிக்கவும் இல்லை.

இந்த புதிய சடடப்படி இனி தமிழர்கள் சிங்களத்தில் பாட வேண்டுமா? இல்லாவிட்டால் சடட நடவடிக்கை எடுப்பார்களா?  மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்?

Share this post


Link to post
Share on other sites

Mano-Ganesan-1.jpg

தேசிய கீதத்தை தமிழில் மாத்திரம் கேட்கவில்லை – மனோ ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டில் வாழும் இரு மொழிகளைப் பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என கூறவில்லை என்றும் தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய கீதம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தாய்நாட்டை தமது தாய் மொழியில் போற்றும் தேசிய கீதத்தை அகற்ற வேண்டாம் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் செயற்படுவேன்’ என நாட்டுக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை இரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு அவர் ஜனாபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.

3 மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதிக்கு  தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்றுசேர்த்து, தமிழ், சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளைத் தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மொழியுரிமை என்பது 13ஆம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை என தெரிவித்த மனோ, 16ம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4ம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசில் இருக்கின்ற சிலர், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம், அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன. சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன என்றும் மனோ வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பதினைந்து தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தி மொழியில் இருக்கின்றதென சிலர் கூறுகின்றனர். இதுவும் பிழை. இந்தியாவின் தேசிய கீதம், இலங்கை தேசிய கீதத்தை எழுதிய அமரகோனின் குருவான ரபீந்திரநாத் தாகூரால் தாய்மொழி வங்காளியில் எழுதப்பட்டது.

வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும். அதற்காக இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என தாம் கூறவில்லை என்றும் தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மனோ மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தேசிய-கீதத்தை-தமிழில்-மா/

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்பது போலி செய்தி : டலஸ் அழகப்பெரும

(இராஜதுரை ஹஷான்)

73வது சுதந்திர நிகழ்வில்  சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெற்றவுள்ள சுதந்திர தின நிகழ்வில்   தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியும், அதனை  தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்களும் கவனத்திற்குரியது. 

இவ்விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது அவசியமாகும்.

 சுதந்திர தின நிகழ்வில்  தமிழ் மொழியை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்திற்கு மொழிகளின் முக்கியத்துவம் இன்றியமையாததாகும்.

 யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து  வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் முறையான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளன.

 இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அரசியல் ரீதியில் ஒருமித்த தீர்மானத்தை  எடுத்தார்கள் என்றும் குறிப்பிடவும் முடியாது. ஜனநாயக ரீதியிலே தேர்தல் இடம் பெற்றது.

தமக்கான  தலைவ்ர யார் என்பதை  தீர்மானிக்கும் உரிமை  அனைவருக்கும் காணப்படுகின்றன. அதனையே தமிழ் மக்கள் செயற்படுத்தினார்கள்.  நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் அனைத்து இன மக்களையும்  எவ்வித வெறுப்புக்களும் இன்றி பொதுவாக செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இல்லாத ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களின் மத்தியில் வன்மத்தை தூண்டும் செயற்பாடுகளே இடம் பெறுகின்றன.

நாட்டில் இரண்டு மொழி வழக்கில் உள்ளது. இரண்டு இனத்தவர்களும் இருமொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருத்தல் அவசியமாகும்.

மொழி ஆளுமையினை மேம்படுத்தவதற்கு பாடசாலை மட்டத்தில் இருந்து  புதிய திட்டங்களம், கடந்த அரசாங்கம் முன்னெடுத்த  செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும். அரசியல்  நோக்கங்கள் , மற்றும்  பழிவாங்கல்கள் என்பவற்றை கல்வித்துறையில் காண்பிப்பது எதிர்கால தலைமுறையினரின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரசாங்கம் எந்நிலையிலும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்காது.  தகுதி மற்றும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து செயற்பாடுகளிலும் தமிழ் மக்களை இணைத்துக் கொண்டே பயணிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/71910

Share this post


Link to post
Share on other sites

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன் காலம் காலமாக சிறீலங்காவின் சுதந்திர தினத்தி அதாவது கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடமாக தமிழர்தரப்பில் யாரும் சிங்களத்தின் சுதந்திர தின தேனீர் விருந்தில் கலந்துகொள்வதில்லை எனும் மரபை உடைத்தெறிந்து சுமந்திரனே அதில் கலந்துகொண்டார் இவ்விடையம் யாழ் களத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது நினைவிருக்கிறது. ஆகவே கூட்டமைப்பு எனும் தமிழர் விரோத தேசமாமிந்தியாவின் எடுபிடிகள் என்ன செய்தாலும் வியப்பதற்கு எதுவுமில்லை.

நமோ நமோ மதா அப்பே சிறீலங்கா நமோ நமோ மாதா 

நான் எழுதியது சரியா எனத்தெரியவில்லை சின்ன வயதிலிருந்து நான் சிறீலங்காவின் தேசிய கீதமாக சிங்களத்தில் இந்த இரண்டுவரிகளுக்கு மேல் கேள்விப்பட்டதாக நினைவில்லை என் வாழ்நாளில் அதை முழுமையாகக் கேட்டறியேன் அதாவது என் வயதொத்தவர்களும் எனக்கு வயதுக்கு மூத்தவர்களும் எனக்குப் பின்பு கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்குப் பின்புன் அதன்பின்பும் பிறந்தவர்களும் காதில் வாங்கிக்கொள்ளாத இந்தப் பாடலை என்ன் இவ்வளவு அக்கறையுடன் யாழ் களம் விவாதப்பொருள் ஆக்குகிறது.

எனது தந்தையாருடன் கூடப்பிறந்த எனது சித்தப்பா அவ்வேளையில் கொழும்பு தபால்துறையில் இலிகிதம் பார்த்தவர் சிங்களம் கற்றால்தான் பதவி உயர்வு இங்கிரிமென்ற் கனகாலத்துக்கு இப்படி இருக்க முடியாது சிலவேளை வேலையும் பற்போகும் எனகூற அந்தாள் வேலையை உதறிப்போடு வந்திட்டுது முண்டு பிள்ளைகள் தண்ணியில்லாக்காடு கரம்பன்  கடும் பஞ்சம் இதனால் குடும்பத்துக்க பிரச்சனை சின்னம்மா தனியாகப் பிறிந்து போயிட்டா இப்போதுபோல் சவூதி டோகாவெல்லாம் அப்போது போகமுடியாது  தோட்டக்காணியையும் வீட்டையும் அடமானம்வைத்தோ வித்துப்போட்டொ வெளிநாடுவந்து அசைலம் அடிக்க முடியாது சரி அப்படி இருந்தாலும் குடிதண்ணிக்கே இரண்டு கிலோ மீற்றர் நடந்துபோய் குடத்தில தண்ணீர் கொண்டுவந்து சமையலுக்கும் எடுத்து குடிக்கவும் பாவிக்கும் அந்த உவர்த்தண்ணீர் தறையையும் கொட்டில் வீட்டையும் எவன் வாங்குவான். சித்தப்புக்கு பென்சனும் இல்லை அந்த வயது வந்தால்தான் அதையும் கொடுப்பான்.

இவ்வளவுக்கும் மத்தியில் அவர்களும் வாழ்ந்தார்கள் ஆனால் சுமந்திரனுக்கு சுதந்திரத் தேநீர் தேவைப்படுகுது. என்னத்தைச் சொல்ல.

இப்போது யாழ்ப்பாணத்தில் ரியூட்டரிக் கொட்டில்களில் விசேடமாக சிங்களமும் கற்றுக்கொடுக்கினம் காரணம் இங்கிரிமென்ரும் பதவி உயர்வும்

Share this post


Link to post
Share on other sites
On 12/27/2019 at 9:10 AM, Vankalayan said:

தமிழனுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இதை பாட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு பாடசாலை நாட்களில் பாடிய ஞாபகம் இருக்குது. இப்போவென்றால் தமிழிலும் பாட தெரியாது சிங்களத்திலும் பாட தெரியாது.

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு பாடசாலைக்கு ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அவர்கள் தமிழில் பாடும்போது கேட்டுக்கொண்டிருக்க பழைய ஞாபகம் வந்தது. இருந்தாலும் பாட முடியவில்லை. அதட்காக முயட்சிக்கவும் இல்லை.

இந்த புதிய சடடப்படி இனி தமிழர்கள் சிங்களத்தில் பாட வேண்டுமா? இல்லாவிட்டால் சடட நடவடிக்கை எடுப்பார்களா?  மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்?

 

அரச ஸ்தாபனம் அனைத்துக்கும் அறிவுறுத்தல் வந்தால் சிங்களத்தில் பாடப்பட வேண்டும் அப்படி வரவில்லையென்றால் அது தேவையில்லை தமிழிலும் பாடலாம்  நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் 

Share this post


Link to post
Share on other sites

ஜனாதிபதி வெளிநாட்டில் ஒருகதை உள்நாட்டில் வேறொரு கதை. அண்ணன் ஜனாதிபதி ஆக இருந்தபோதும் இதேதான்.  அவர்களின் அரசியலில் உள்ள கோமாளிகளும் ஆளுக்கொரு கதை பிற்பாடு வேறொரு விளக்கம். என்னைப் பொறுத்தவரை இதற்காக நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இவனோடு சேர்ந்து வாழ முடியாது என்கின்ற முடிவுக்கு எப்பவோ வந்துவிட்டோம். இவன் தன்ர தேசிய கீதத்தை பாடினாலென்ன பாடாவிட்டாலென்ன? அலட்டிக்கொள்ளாமல் நாம் ஏன் இவர்களை விட்டு பிரிய நினைக்கிறோம் என்பதை ஆதாரமாக காட்ட இந்தச் செயற்பாடுகளை சேகரித்து எமது செயற்பாட்டுக்கு வலுவே சேர்க்க வேண்டும். இது எல்லாம் எமது பிரிவினை நிஞாயமானது என்பதை நிரூபிக்க உதவும். தமிழில்  பாடவேண்டும் என்று அடம் பிடிப்பதால் நாம் சுதந்திரமாக இவர்களுடன் வாழமுடியும் என்பதுமில்லை, அவர்கள் எம்மை சுதந்திர குடிமக்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்றுமில்லை.  சிங்களவனின் அடிமையாக தமிழனை ஏற்படுத்திய அந்த நாள், தமிழருக்கு கரி நாளே. இதில தேசிய கீதம் ஒரு கேடு.  சிங்களவரிடம் கைத்தட்டு வாங்கி வாக்குச் சேர்க்க ஒவ்வொரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுவான். நாங்கள் அதை  கடந்து எமது நோக்கத்திற்காய்  முழுமையாய் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

தாய் மொழியில் மட்டும் தேசிய கீதம் கோரிக்கை  நியாயமானது - பந்துல குணவர்த்தன

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர தின  நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது  69 இலட்ச பெரும்பான்மை பௌத்த மக்களின்  கோரிக்கையாக காணப்படுகின்றது.   நாட்டின்  தாய் மொழியில்   மாத்திரம்   தேசிய கீதம்  பாடப்பட வேண்டும் என்ற  கோரிக்கை  நியாயமானது  என   அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க   தகவல் திணைக்களத்தில் நேற்று   வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள  83 வது சுதந்திர தின நிகழ்வில்   தேசிய  கீதம்  சிங்கள மொழியில் மாத்திரம்  பாடுவதற்கு தீரமானிக்கப்பட்டதாகவும், தமிழ்மொழி  புறக்கணிக்கப்பட்டதாகவும் மாறுபட்ட கருத்துக்கள்  சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித நிலைப்பாட்டினையும்   எடுக்கவில்லை.

ஒரு நாட்டில்  எந்த சமூகம் அதிகமாக அதாவது பெரும்பான்மையினராக காணப்படுகின்றார்களே அவர்களது  மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது  சாதாரண விடயமாகும். எமது அயல்நாடான இந்தியாவிலும் இந்நிலைமையே  காணப்படுகின்றது.   இந்தியாவில் 18ற்கும் அதிகமான  மொழிகளை பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் ஆனால்   தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒருமொழியில் மாத்திரமே பாடப்படுகின்றது.  இவ்விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வித பிரச்சினைகளும் அங்கு தோற்றம் பெறவில்லை.

இலங்கையில்  பெரும்பான்மை  சமூகமாக   சிங்கள பௌத்தர்கள்  வாழ்கின்றமையினால்  தேசிய  கீதம் சிங்கள மொழியில் ஆரம்பத்தில் இயற்றப்பட்டு தேசிய , அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம்   பாடப்பட்டது , ஆனால் 2015ஆம் ஆண்டு   தொடர்ந்து பின்பற்றி வந்த விடயம் மாற்றியமைக்கப்பட்டன. இதுவே  இன்று   பலதரப்பு   சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தின நிகழ்வில்   தேசிய   கீதம் சிங்கள  மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது    69   இலட்ச பெரும்பான்மை மக்களின்  பிரதான கோரிக்கையாக காணப்படுகின்றது.  இவர்களின்  சாதாரண கோரிக்கைக்கு  கவனம் செலுத்துவது  புதிய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகவும் காணப்படுகின்றது.   ஆகவே   எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்  அரசாங்கம் உரிய   கவனம் செலுத்தும்   என்றார்.

https://www.virakesari.lk/article/72483

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.