Jump to content

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Meeting.jpg

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் சுமார் 12.30 மணிவரை நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

அதில் குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பொலிஸ் தரப்பில் உள்ள சில குறைகளை சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய பலர் பயப்படுவதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து சட்டவிரோத செல்கள் மற்றும் மணல் அகழ்விற்கு எதிராக ரோந்து நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு கருத்துக்களை பரிமாறியதுடள், சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கும், சட்டவரோத செயல்கள் நடைபெறும் போதும், மணல் கடத்தல்கள் மணல் அகழ்வுகள் இடம்பெறும் போதும், அவற்றைத் தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்றும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த இலக்கத்தின் ஊடாக சட்டவிரோத செயல்கள் தொடர்பாக பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியுமென்றும் அந்த கலந்துரையாடலிலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/யாழில்-சட்டவிரோத-செயல்கள/

Link to comment
Share on other sites

"யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது."

பயங்கரவாத தடைச்சட்டத்தின் தாக்கம் தெரிந்தவர்கள் இப்படி சொல்ல மாட்டார்கள். யார் இந்த சட்டத்தரணி ? இவர் உழைப்பிற்காக இப்படி சொல்கிறாரா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

அந்த இலக்கத்தின் ஊடாக சட்டவிரோத செயல்கள் தொடர்பாக பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியுமென்றும் அந்த கலந்துரையாடலிலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்தவர் பொலிஸாரால் தாக்கப்பட்ட வரலாறுகளே அதிகம்.

Link to comment
Share on other sites

22 hours ago, தமிழ் சிறி said:

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

இது உண்மையானால் வட மாகாணத்தில் இருக்கும், இருந்த அனைத்து சிங்கள-பௌத்த போலீஸ் அதிகாரிகளும் சிங்கள-பௌத்த முப்படை அதிகாரிகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் முதலாவதாக கைது செய்து அடைக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.