• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அபராஜிதன்

பெண்களுக்கு வரும் ரத்தசோகை

Recommended Posts

Dr.Aravindha Raj.

வீட்ல நம்ம அம்மாவோ/ மனைவியோ/ அக்காவோ/தங்கச்சியோ

~உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு டா....முடில

~மேல் மூச்சு அதிகமா வாங்குது.

~அடிக்கடி குளிருது... முடில

இது மாதிரி நிறைய சொல்லிருப்பாங்க....நாம பல சமயங்கள்ல இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுவோம்.

ஒரு நாள் அவங்க மயக்கம் போட்டு கீழ விழுந்தா, ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனதும் டாக்டர் ரத்த பரிசோதனை செஞ்சு உங்க கிட்ட சொல்லுற விஷயம்..!

அம்மாவுக்கு ஒடம்புல இரும்புச்சத்து கம்மியா இருக்கு....அதனால அனீமியா (ANAEMIA) என்னும் ரத்தசோகை வந்திருக்கு என்பது தான்.

~ரத்தசோகை ன்னா என்ன டாக்டர் ?

பெண்களுக்கு HEMOGLOBIN எனப்படும் ரத்தத்தின் முக்கிய மூலக்கூறு நார்மலா 12-14 grams/dl இருக்கணும்.
ஆனா, இவங்களுக்கு 6 gm/dl தான் இருக்கு.

அதனால, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கு-ன்னு சொல்லிட்டு அட்மிட் பண்ணி ரத்தம் ஏத்தி, வீட்டுக்கு போறப்ப; இந்தாங்க...இது இரும்புச்சத்து அதிகரிக்க உதவும் மாத்திரை...இந்த மாத்திரைகளை ஒரு மாசம் போடுங்க, அப்புறம் வந்து பாருங்க-ன்னு சொல்லி அனுப்பி விடுவார்.

நம்ம ஆளுங்க 3 நாளைக்கு மட்டும் மாத்திரை வாங்கிட்டு, ரத்தம் ஏறனும்-ன்னா பேரிச்சம் பழம் சாப்பிட்டா போதும், தேன் குடிச்சா போதும் ன்னு அறிவாளி மாதிரி அவங்களே முடிவு பண்ணிடுவாங்க.

இந்த பேரிச்சம்பழத்தோட லட்சணத்த இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன்.

அதுக்கு முன்னாடி ..!!

இந்தியா ல இருக்க 3 இல் 2 பங்கு பெண்களுக்கு ரத்தசோகை இருக்கு.

இதுக்கு முக்கியமான காரணம் 2

1.மாதவிடாய்(MENSTRUATION) சமயத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு.

2.பெரும்பாலான வீடுகள்ல நம்ம சாப்பிட்டு மிச்சம் வெச்ச உணவை தான் நம்ம அம்மா சாப்பிடுவாங்க.... அது காய்கறியோ/கறிசோறோ ; அம்மாவுக்கு கிடைக்குறதெல்லாம் மிச்சமும் மீதியும் தான்...சிலருக்கு ரசம் சோறு தான். நமக்கு அதெல்லாம் என்னைக்கு கண்ணுல படுது !!!

சரி வாங்க பாப்போம் !!

தினசரி இரும்புச்சத்து தேவை நம்ம உடலுக்கு இருக்கு.

அதை RDA ன்னு சொல்லுவாங்க !! (RECOMMENDED DAILY ALLOWANCE)

இரும்புச்சத்துக்கான அந்த RDA ஆண்களுக்கு ஒரு நாளைக்கு

RDA(Men)- 8mg/day.

பெண்களுக்கு அது அப்டியே இரண்டு மடங்கு.

RDA(Women) - 16mg/Day.

காரணம் நான் சொன்ன மாதவிடாய் விஷயம் தான்.

~சரி.... இரும்பு சத்து அதிகமா இருக்கணும் ன்னு நான் எங்க அம்மாவுக்கு தினமும் 5 பேரிச்சம் பழம் குடுக்குறேன் டாக்டர்... எப்டி...செம்ம ல ??

செம்ம லாம் இல்ல சார்...
ஒரு பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து வெறும் 0.07mg.

நம்ம அம்மா ஒரு கிலோ பேரிச்சம் பழம் சாப்பிட்டாலும் அவங்களோட தினசரி தேவை பூர்த்தி அடையாது.

அவ்ளோ இனிப்பு சாப்பிட்டா சுகர் வந்து நிலைமை இன்னும் மோசமா ஆகும்...இந்த பேரிச்சம் பழம் அதிக கலோரிகள் கொண்ட ஒரு குப்பை உணவு. இது யார் சாப்பிடுவாங்க தெரியுமா ?? பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் செய்யும் மக்கள், தங்களுக்கு கலோரி குறைபாடு ஏற்பட கூடாதுன்னு சாப்பிடும் பொருள் தான் இது.

ஆனா, அதுவே ஆட்டு ஈரல்/ ரத்தம்/ சுவரொட்டி/மீன்/முட்டை இதெல்லாம் இரும்புச்சத்து அதிகம் உள்ள பொருட்கள்.

வெறும் 75 கிராம் ஆட்டு ஈரல்ல ஒரு நாளைக்கு தேவையான 100% இரும்புச்சத்து இருக்கு.

ஒரே ஒரு முட்டைல மட்டும் 1.2 mg இரும்புச்சத்து இருக்கு.

லயன் டேட்ஸ் சிரப் குடுக்குறது, நல்லா இருக்க அம்மாவுக்கு வாண்டடா சுகர் வர்ற வெச்சு இன்சுலின் போட வெக்குறதுக்கு சமம்...உங்க வீட்ல லயன் டேட்ஸ் சிரப் இருந்தா அப்டியே தூக்கி தூர போடுறது சிறப்பு.

கீரை ல இரும்புச்சத்து ஜாஸ்தி ...ஆனா,கீரை ல இருக்க OXALATE என்னும் பொருள் இந்த இரும்புச்சத்து உரிஞ்சப்படுவதை தடுக்கும்.

தேங்காய் நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு. ஒரு தேங்காயில் 12mg இரும்புச்சத்து உண்டு.

அதனால இறைச்சி சாப்பிடும் அசைவ நபர்கள் நான் மேல சொன்ன எல்லாத்தையும் சாப்பிட்டு இரும்புச்சத்தை கூட்டுங்க.

சைவ உணவு சாப்பிடுறவங்க, உணவுல அதிகமா இரும்புச்சத்து கிடைக்க கொஞ்சம் கஷ்டம் என்பதால, தயவுசெஞ்சு மருத்துவரை அணுகி இருப்புச்சத்து சப்ளிமெண்ட் மாத்திரைகளை உட்கொள்ளவும்.

கர்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிக மிக முக்கியம். உள்ள இருக்க குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஏனைய சத்துக்கள் அம்மாவின் உடலில் இருந்து தான் செல்லும். இந்த இரும்புச்சத்து தான் நம்ம உடலின் ரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உண்டாக மிக முக்கிய காரணம். இந்த RBC தான் உடலெங்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும்.

குறைவாக இரும்புச்சத்து இருந்தால், RBC குறைவாக உற்பத்தி ஆகும். அதனால் ஆக்சிஜன் ஒழுங்காக கடத்தப்படாது. குழந்தைக்கு தேவையான ஆற்றல் தடைபடும். அதனால் கண்டிப்பா மருத்துவர் அறிவுரை செய்யும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது மிக மிக முக்கியம்.
(பாப்பா முக்கியம் பிகிலே !!!)

இன்னொரு முக்கியமான விஷயம்...கண்ட குப்பை உணவுகள், பாஸ்ட் புட் எல்லாத்தையும் கம்மி பண்ணுங்க... அந்த மாதிரி சுத்தமற்ற முறையில் சமைக்குறப்ப 'WORM INFECTION' ஏற்பட்டு உடலில் இரும்புச்சத்து நுகர்வு கம்மியாகும். முடிஞ்ச வரைக்கும் வீட்ல சமைச்சு சாப்பிடுதல் நல்லது...

உங்க கழிவறையை மிக சுத்தமா வெச்சுக்கோங்க... இந்த WORM INFECTION சுத்தமற்ற கழிவறை மூலமாகவும் ஏற்படும்.

ரத்தசோகை இல்லாத சமூகம் கூடிய சீக்கிரம் அமையட்டும்.

நன்றி.❣️

Dr.Aravindha Raj.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this