Jump to content

2019இல் தமிழ் சினிமாவின் நிலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019இல் தமிழ் சினிமாவின் நிலை!

22.jpg

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியானவுடன் அடுத்து வரும் நாட்களில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் பரவவிட்டு பரவசமடையும் மாய வலைக்குள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொள்ளும் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் இல்லாத ட்விட்டர் டிரெண்டிங் என்கிற போதைக்குத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்களும் அடிமையாகி அதுவே மிகப்பெரும் வெற்றி என்கிற மாய பிம்பத்துக்குள் சென்று விடுகின்றனர்.

 

சினிமா என்கிற வலிமையான ஊடகத்தின் வெற்றி தோல்வியை சினிமாவைப் பற்றியும், படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியும் பத்து வரி கூட எழுத தெரியாதவர்களால் படம் வெளியான அன்றே ‘சினிமா டிராக்கர்ஸ்’ என்பவர்களால் தீர்மானிக்கப்பட்டு அதுவே நிரந்தரம் என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முடிவுக்கு வருகின்றனர். இதன் நீட்சியாகவே வெள்ளிக்கிழமை வெளியாகும் படத்துக்குத் திங்கட்கிழமை வெற்றி விழாவைக் கொண்டாடுகிற போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது.

கொடுக்கிற கூலிக்குத் தகுந்தாற்போல் மதிப்பெண்ணையும் நட்சத்திரங்களையும் வழங்குகின்றனர் என்பது இன்றைக்குக் கடைக்கோடி ரசிகனுக்கும் தெரிந்த சிதம்பர ரகசியமாக ஆகிவிட்டது என்பதை சினிமாவில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.

 

ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி அறிந்துகொள்ள குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்கள், திரையிட்டத் திரையரங்கு உரிமையாளர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள்தான் ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதைப் புள்ளி விவரங்களோடு கூறுகின்ற தகுதி படைத்தவர்கள்.

இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் தமிழகத் திரையரங்குகள் மூலம் வசூல் செய்ததாக அந்தப் படத்தைத் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கிய கேஜேஆர் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்தது. அதற்குப் போட்டியாக வெளியான பேட்ட படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களிடம் கூறியது பெரும் விவாதத்தைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது.

 

முதல் மூன்று நாட்களில் அல்லது முதல் வாரத்தில் எந்த ஒரு தமிழ்ப் படமும் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையில் விற்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூலிப்பது என்பது குதிரைக்குக் கொம்பு முளைத்த கதைதான். இந்த உண்மை தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் சம்பந்தப்பட்ட நடிகரிடம் அடுத்த படத்துக்கு கால்ஷீட் வாங்குவதற்காக இப்படி ஒரு மாயாஜாலத்தை உருவாக்குகின்றனர்.

தமிழகத் திரையரங்குகள் மூலம் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வசூல் ஆன உண்மை தொகை எவ்வளவு, படத்தில் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கதாநாயகர்கள் படங்களுக்கான டிக்கெட்டுகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்று கேட்பார்களா, அப்படி செய்யப்படும் பட்சத்தில் ரஜினி முதல் சாதாரண ஹீரோ வரை நடித்த படங்கள் எடுக்கும் வசூல் எவ்வளவு என்று இப்போதுவரை யாரும் சொல்வதில்லை.

தமிழகத்தில் காஞ்சனா, பாகுபலி ஆகிய படங்களின் இரண்டு பாகங்களையும் பார்த்த பார்வையாளர் எண்ணிக்கை அளவுக்கு வேறு எந்த ஒரு முன்னணி தமிழ் நடிகர்களின் படத்தையும் ரசிகர்கள் பார்க்கவில்லை என்பதே வரலாறு. அதிலும் குறிப்பாக பாகுபலி 2 படத்துக்குத் தமிழக திரையரங்குகளில் சுமார் 1 கோடியே 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்தப் படத்தின் சாதனையை இதுவரை தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தல அஜித் என்று தமிழ் ஊடகங்களாலும் ரசிகர்களாலும் போற்றப்படுகின்ற நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு நேரடித் தமிழ்ப் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை என்கிற உண்மை ஆவணமாகப் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறது. ரஜினி விஜய் அஜித் போன்றவர்கள் நடித்த படங்கள், பாகுபலி படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கையை எட்ட முடியுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

 

இதற்குக் காரணம், படம் வெளியான முதல் வாரத்துக்குள் படம் விற்பனை செய்யப்பட்ட அசலை எடுக்க வேண்டுமென்ற அவசரம். அதற்காக முதல் மூன்று நாட்கள் அல்லது சில இடங்களில் முதல் வாரம் முழுமையும் இருமடங்கு, மும்மடங்கு விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால் முதல் மூன்று நாட்களில் 30 கோடி வசூல் என்பது தமிழகத்தில் சாத்தியமாகிறது. இது ஒருவகையில் ரசிகனின் ஆர்வத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் உத்தி என்று கூறலாம். மற்றொரு வகையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய முழுமையான வரி செலுத்தப்படாமல் ஏமாற்றுகிற செயலாகவும் இருக்கிறது. அதனால்தான் ஒரு படத்தின் வெற்றி நிகழ்ச்சிக்காக நடத்தப்படுகின்ற விழாக்களில் படத்தின் மொத்த வசூல் பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தடுமாறி மறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர்.

இப்படி ஒரு சட்டவிரோதமான நடைமுறையை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பின்பற்றி வருவது ஆளும் அரசாங்கத்துக்குத் தெரியும் என்றாலும் அதைக் கண்டும் காணாமல் கடந்து போய்விடுகின்றனர்.

சட்டவிரோதமான விலையில் சினிமா டிக்கெட்டை விற்கவேண்டிய கட்டாயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இல்லை. நியாயமான கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்த படங்களாக காஞ்சனா, பாகுபலி, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், கோமாளி மற்றும் கைதி போன்ற படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.

 

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் இதுபோன்ற டிக்கெட் விற்பனை ஏன் செய்ய முடியவில்லை என்கிற கேள்வி எழுகிறது.

நடிகருடைய சம்பளம் வசூலுக்குத் தகுந்த மாதிரி நிர்ணயம் செய்யாமல் அந்த நடிகரின் கால்ஷீட்டை வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் அதிகபட்சமாக சம்பளம் கொடுப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கிறது. அதற்கேற்ப விலை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளருக்கு ஏற்படுகிறது. ஒரு வருடத்துக்கு அதிகபட்சமாக பத்து படங்கள் வரை தான் அனைத்து தரப்பும் விரும்பிப் பார்க்கக் கூடிய நடிகருடைய படங்கள் தயாரிக்கப்படுவதால் திரையரங்குகள் அந்தப் படங்களை திரையிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

“தற்போதைய சினிமாவில் போட்ட முதலீட்டை குறுகிய நாட்களில் வசூல் மூலம் எடுக்க வேண்டிய கட்டாயம் திரையரங்குகளுக்கு உள்ளதால் மனசாட்சியை அடகு வைத்து விட்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நாங்கள் உடன்பட வேண்டியிருக்கிறது. இதற்காக அரசு அதிகாரிகளை சரிக்கட்ட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. முன்னணி நடிகர்கள் ரசனைக்கேற்ப தங்களது சம்பளத்தை நிர்ணயிப்பதும், எல்லா முன்னணி நடிகர்களும் வருடத்துக்கு இரண்டு படமாவது நடித்தால் தொடர்ச்சியாக வசூல் முக்கியத்துவம் உள்ள படங்கள் ரிலீஸாகும் சூழல் ஏற்படும். திரையரங்குகளும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனால் எல்லா தரப்பும் பலன் அடையக்கூடிய நிலை உருவாகும். ஆனால் அதற்கான எந்தவிதமான முயற்சியும் தயாரிப்பாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது” என்கிறார் திரையரங்கு உரிமையாளர் ஒருவர்.

சினிமாவைப் பொறுத்தவரை நான் போட்ட முதலீடு கிடைத்தால் போதும் என்ற சுயநலம்தான் அதிகமிருக்கிறது. இதனால் வெற்றி பெற்ற படங்களாக இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் யாராவது ஒருவர் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் இங்கு இருக்கிறது. ரஜினி முதல் அறிமுக நடிகர் நடிக்கும் படம் வரை இது பொதுவான விதியாகவே இருக்கிறது. இத்தனை சிக்கல், நெருக்கடி, நஷ்டம் அனைத்தையும் கடந்த தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 200 படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. இந்தப் படங்களைத் தயாரித்த 80 சதவிகிதத் தயாரிப்பாளர்கள் மறுவருடம் படம் தயாரிப்பதில்லை.

ஜனவரி 2019 முதல் டிசம்பர் மூன்றாம் வாரம் வரை 196 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் ஏழு படங்களும் பிப்ரவரி மாதம் 19 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இவற்றில் மூன்று படங்கள் மட்டுமே வணிக ரீதியாக நல்ல லாபத்துக்கு வியாபாரமாகின. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் இவை மூன்றும்தான். மற்ற அனைத்து படங்களும் முதலுக்கு மோசம் செய்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள்.

இதற்கு என்ன காரணம்?

ஜனவரி முதல் டிசம்பர் வரை... ஒவ்வொரு மாதமும் ரிலீஸான படங்கள் மற்றும் அவை மொத்தமாக தியேட்டரில் வசூல் செய்த விவரங்கள் குறித்த கட்டுரைகள் இன்று முதல் வெளியாகும். ஒவ்வொரு கட்டுரையிலும் இரண்டு மாதங்கள் ரிலீஸான படங்களைப் பட்டியலிட்டு அதன் வசூல் விவரங்கள் குறித்த பார்வை மின்னம்பலத்தில் மதியம் 1 மணி அப்டேட்டில் வெளியிடப்படும்.

- இராமானுஜம்
 

https://minnambalam.com/entertainment/2019/12/25/22/tamil-movies-box-office-record-in-2019

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: ஜனவரி பிப்ரவரி வசூல் ராஜா யார்?

36.jpg

 

ஜனவரி மாதம் மட்டும் தமிழ் சினிமாவில் 8 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவனிக்கப்பட்ட படங்கள் விஸ்வாசம், பேட்ட, சார்லி சாப்ளின் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே. மற்ற ஐந்து படங்களும் பெயரளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படங்களால் திரையரங்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வசூல் செய்ய முடியவில்லை.

ஒரு படத்தை தமிழகத்தில் குறைந்தபட்சம் 50 முதல் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு சுமார் 40 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு காட்சி, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் இதுபோன்ற படங்கள் ஓட்டப்படுகிறது. சில படங்கள் திரையரங்குகளில் முதல் நாளே தூக்கப்படுவதும் உண்டு. இதற்காக 40 லட்ச ரூபாய் ஏன் செலவு செய்ய வேண்டும் என்கிற சிந்தனை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுவதில்லை.

 

ரஜினிகாந்த் நடித்த படம் ரிலீஸ் செய்யப்படுகிற நாட்களில் வேறு எந்த நடிகருடைய படமும் அதற்கு போட்டியாக வெளியிடப்படுவது இல்லை. இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ஆம் தேதி ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம், பிரபுதேவா நடிப்பில் சார்லி சாப்ளின் 2, தேவகோட்டை காதல், மாணிக், சிகை, குத்தூசி, சிம்பா ஆகிய படங்கள் வெளியானது. இவற்றில் வசூல் ரீதியாக விஸ்வாசம் படம் முதலிடத்தையும், முதலில் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் ரஜினி நடித்த பேட்ட வசூல் ஓஹோ என்று இல்லை என்றாலும் சுமாரான வசூலை தக்க வைத்துக் கொண்டது. நடன இயக்குநர்-ஹீரோ-இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் முதல் வாரத்திலேயே முடங்கிப் போனது. ஜனவரி மாதம் முழுமையும் பெரும்பான்மையான திரைகளில் விஸ்வாசம், பேட்ட இரு படங்களும் ஓடியது. தமிழகத்தில் விஸ்வாசம் 140 கோடி ரூபாயும், பேட்ட சுமார் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தன.

பிப்ரவரி மாதம் மட்டும் தமிழ் சினிமாவில் 21 படங்கள் ரிலீஸாகின

பேய் எல்லாம் பாவம், பேரன்பு, சகா, சர்வம் தாள மயம், வந்தா ராஜாவாதான் வருவேன், தில்லுக்கு துட்டு, பொதுநலன் கருதி, அவதார வேட்டை, நேத்ரா, உறங்காப்புலி, வாண்டு, களவு, தேவ், சித்திரம் பேசுதடி-2, கோக்கு மாக்கு, காதல் மட்டும் வேணா, அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், கண்ணே கலைமானே, எல்.கே.ஜி, பெட்டிகடை, டூலெட் என 21 படங்கள் ரீலீஸ் ஆனது பிப்ரவரியில்.

மம்முட்டி நடித்த பேரன்பு, சிலம்பரசன் நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன், கார்த்தி நடிப்பில் வெளியான தேவ், உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2, R.J.பாலாஜி நடித்த LKG ஆகிய இரு படங்களும் பிப்ரவரியில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களாகும். தில்லுக்கு துட்டு 18 கோடி, LKG 11 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வசூல் செய்தன. பிற படங்கள் படங்கள் அனைத்தும் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு திரும்பிய படங்களாகிப் போனது.

இரு மாதங்களில் அனைத்து தரப்புக்கும் லாபகரமான படங்கள் என விஸ்வாசம் தில்லுக்கு துட்டு, LKG ஆகிய மூன்று படங்கள் மட்டுமே. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குரிய ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் வெளியான 30 படங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை சுமார் 400 கோடி ரூபாய் இதில் ரஜினி, அஜித், சிலம்பரசன், கார்த்தி, பிரபுதேவா, மம்முட்டி இவர்களது சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய். மொத்த முதலீட்டில் 40% நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாளை: மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெளியான திரைப்படங்கள் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.

 

https://www.minnambalam.com/entertainment/2019/12/25/36/tamil-cinema-2019-january-february-collection-king

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: வசூல் ராஜா யார்?

23.jpg

மார்ச் மாதம் தமிழ் சினிமாவில் வசூல் மந்தமாகவே இருக்கும். இருப்பினும் ஏற்கனவே தயாரித்து ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்கள் அதிகமாக ரிலீஸ் செய்யப்படும்.

2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் 31 நாட்களில் 26 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் அருண் விஜய் நடித்த தடம், நீண்ட நாட்களுக்கு பின்னர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த திருமணம், நயன்தாரா நடித்த ஐரா, விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், ஓவியா நடித்த 90 ML,பரத் நடித்த பொட்டு, படைப்பு ரீதியாக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நெடுநல்வாடை போன்றவை. இதில் நெடுநல்வாடை திரைப்படம் , இயக்குநரின் நண்பர்கள் 50 பேரின் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமைக்குரியது.

 

‘தமிழ் சினிமாவில் நயன்தாரா நடித்தால் அந்தப் படம் வெற்றி பெற்று விடும்’ என்கிற மாயவலை அறம் படத்திற்கு பின்னர் பலமான நம்பிக்கையாக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து வந்தது. அதனைப் பொய்யாக்கிய படம் ஐரா. ஒரு படத்தின் வெற்றி தோல்வி அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளைக் கொண்டு இல்லை, அப்படத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தது தான் என்பதை அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு உணர்த்தியது.

தமிழ் சினிமாவிற்கு தனது படைப்புகள் மூலமாகப் பெருமை சேர்த்தவர் இயக்குநர் சேரன். இவரது படைப்புகள் தமிழ் மக்களின் வாழ்வியலை சமரசம் இல்லாமல் பதிவு செய்யும். மனித ஊனத்தையும், சாதி வெறியையும் அப்பட்டமாகத் தனது திரைப்படங்களில் தோலுரித்துக் காட்டிய இயக்குநர் சேரன், படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் பல வருடங்களுக்கு பின்னர் இயக்கிய படம் ‘திருமணம்’. ஆடம்பரத் திருமணங்கள் மூலம் ஏற்படும் செலவுகளை, முன்னேற்றத்திற்கான முதலீடுகளாக மாற்றலாம் என்பதை கதைக் கருவாகக்கொண்டு உருவான திருமணம் இன்றைய நவீன சினிமாவில் நல்லதொரு படமாக பேசப்பட்டதே தவிர வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

 

‘பெண்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும், ஆணாதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டும்’ என்பதை மையக் கருத்தாகக் கொண்டு உருவான 90 ML திரைப்படம், ஓவியா நடித்திருந்ததால் பரபரப்புடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. படத்தின் மையக் கருவிலிருந்து மாறி இன்றைய நவீன சமூகத்தில் குறைந்த சதவீதத்தில் மட்டும் நடைபெறும் ஆண்-பெண் அத்துமீறலைப் பிரதானப் படுத்தியதால் இந்த படம் ஒரு தரப்பு மட்டும் விரும்பக்கூடிய திரைப்படமானது. வசூல் ரீதியாக இந்தப்படம் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை, வியாபார ரீதியாக தயாரிப்பாளருக்கு பிற உரிமைகளை விற்பனை செய்ததன் மூலம் லாபகரமான படமாக அமைந்தது.

 

தமிழ் சினிமாவின் தற்போதைய திரைக்கதை ஓட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டு தயாரிக்கப்பட்ட படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் வசூல் ரீதியாக இந்த எதிர்பார்ப்பு வெற்றியைத் தரவில்லை. தமிழக பாக்ஸ் ஆபீஸில் இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பட விழாக்கள், இணையதள உரிமை, தொலைக்காட்சி உரிமை இவற்றின் மூலம் சூப்பர் டீலக்ஸ் தயாரிப்பாளருக்கு முதலீட்டில் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

மார்ச் மாதத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றிக் கொடியை பறக்க விட்டது அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் மட்டுமே. சுமார் 20 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோ அந்தஸ்துக்காக போராடி வரும் அருண் விஜய், இப்படத்தின் மூலம் கோடிகளில் சம்பளம் கேட்கும் கதாநாயகனாக முன்னேற்றம் அடைந்தார். தமிழக திரையரங்குகளில் இந்த படம் சுமார் 13 கோடி ரூபாயை மொத்த வசூலாக அறுவடை செய்தது.

நெடுநல்வாடை திரைப்படம் கிராமத்து வாழ்வியல், நம்பிக்கை, வாக்கு தவறாமை போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. வணிக ரீதியாக இந்த படம் தோல்வி அடைந்தாலும், தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத

 

திரைப்படமாகத் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்திக் கொண்டது.

ஒரு படத்தில் நடிப்பதற்கு மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாகக் கேட்கும் அதர்வா நடிப்பில் வெளியான படம் பூமராங். தமிழகத்தில் இந்தப் படம் ஒரு கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூல் செய்யவில்லை. தான் நடிக்கும் படங்களுக்கு என்ன வசூல் என்பதை அறிந்து கொள்ளாமல், கோடிகளில் சம்பளம் கேட்கும் ஹீரோக்களுக்கு உதாரணமாக அமைந்தது பூமராங் படத்தின் தோல்வி.

பிற படங்கள் அனைத்தும் பெயரளவுக்கு தயாரித்து விட்டோம், கௌரவத்திற்காக ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற பிடிவாதத்தில் வெளியிடப்பட்ட படங்களாகும். இந்தப் படங்கள் ரிலீஸ் செய்வதற்கு செய்யப்பட்ட செலவுத்தொகை கூட

திரையரங்குகளில் வசூல் ஆகவில்லை. மார்ச் மாதம் வெளியான 26 திரைப்படங்களுக்காக செய்யப்பட்ட மொத்த முதலீடு சுமார் 100 கோடி ரூபாய். இவற்றில் பெரும்பாலான படங்களின் தொலைக்காட்சி உரிமை கூட

விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த முதலீட்டில் தமிழகத் திரையரங்குகள் மூலம் கிடைத்த வருவாய் சுமார் 35 கோடி ரூபாய்.

மார்ச் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1.90 ML

2. அடடே

3. தாதா 87

4. பின்விளைவு

5. தடம்

6. திருமணம்

7.விளம்பரம்

8. பூமராங்

9. கபிலவஸ்து

10. பொட்டு

11. சத்ரு

12. ஸ்பாட்

13. அகவன்

14. கில்லி பம்பரம் கோலி

15. இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும்

16. சூலை காற்றில்

17. நெடுநல்வாடை

18. அக்னிதேவ்

19. எம்பிரான்

20. மானசி

21. நீர் திரை

22. பட்டிபுலம்

23. சாரல்

24. சேட்டைகாரங்க

25. ஐரா

26. சூப்பர் டீலக்ஸ்

ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்

ஏப்ரல் மாதம் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டது. மார்ச் மாதத்தில் இறங்கு முகத்தில் இருந்த பாக்ஸ் ஆபீஸ் வசூல், காஞ்சனா -3 படத்தின் வெற்றி மூலமாக கல்லா நிரம்பி வழிந்தது என்று கூறலாம்.

படங்களுக்கு இசையமைக்க இவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில், ‘இசையும் நானே, நாயகனும் நானே’ என்று கூறி இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு இயந்திரமாக இயங்கி வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். 2019 ஆம் வருடம் அதிக படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஜி.வி பிரகாஷ். ஆனால் இவர் நடித்த எந்த படமும் இந்த வருடத்தின் வெற்றிப் பட்டியலில் இல்லை. குப்பத்துராஜா, வாட்ச்மேன் என இவர் கதாநாயகனாக நடித்து வெளியான படங்கள் இரண்டுமே வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியது.

 

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, வருடத்திற்கு ஒரு படமாவது கதாநாயகனாக நடித்து விடுவார். அப்படி வந்த படம் ‘நட்பே துணை’. மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சராசரி வசூல் படமாகக் கடந்து போனது.

படைப்பு ரீதியாக நிகழ்கால அரசியலை சமரசமின்றி தோலுரித்துக் காட்டிய திரைப்படம் உறியடி- 2. விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் கருத்து சொல்லும் படங்கள் வசூல் கட்டுவதில்லை. அதற்கு உறியடி- 2வும் விதி விலக்கு இல்லை என்பதை உறுதி செய்தது.

வள்ளி திருமண நாடகத்தில் காரசாரமான வாக்குவாதங்களைக் கவனிக்காமல் தூங்கி வழியும் பார்வையாளன், காமெடி செய்யும் பபூன் மேடையில் தோன்றிய உடன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்துவிடுவது வாடிக்கை. அதைப் போன்று காஞ்சனா - 3 வெளியான பின்னர் திரையரங்குகள் கூட்டத்தை எதிர்கொண்டது. படைப்பு ரீதியாக இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை காஞ்சனா-3

படம் பார்க்க திரையரங்குக்கு வந்து சென்றனர். இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் அரசு நிர்ணயித்த நியாயமான விலையில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது காஞ்சனா - 3 படத்திற்குத் தான். தமிழகத்தில் பாகுபலி படம் வெளியாகும் வரை அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக காஞ்சனா-1 இருந்து வந்தது. அந்த சாதனையை மொழிமாற்று படமான பாகுபலி -2 முறியடித்தது.

நேரடித் தமிழ் படங்களில் இன்றுவரை காஞ்சனா-1, காஞ்சனா -2, காஞ்சனா- 3 படங்களைப் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை ரஜினி, அஜித், விஜய் நடித்த படங்கள் இதுவரை முறியடிக்கவில்லை. இந்த சாதனையை இந்த படங்கள் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற படங்கள் அனைத்தும் முதலுக்கு மோசம் செய்த படங்களாகும். ஏப்ரல் மாதம் வெளியான 15 படங்களில் மொத்த முதலீடு சுமார் 150 கோடி ரூபாய். இதில் காஞ்சனா-3 மட்டும் அனைத்து தரப்புக்கும் லாபம் கிடைத்த படம். தமிழக திரையரங்குகளில் இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது.

ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. நட்பே துணை

2. கணேசா மீண்டும் சந்திப்போம்

3. குப்பத்து ராஜா

4. குடிமகன்

5. ஒரு காதல் சொல்லட்டுமா

6. உறியடி - 2

7. கேங் ஆப் மெட்ராஸ்

8. ராக்கி

9. வாட்ச்மேன்

10. சக்கரம்

11. காஞ்சனா-3

12. மெகந்தி சர்க்கஸ்

13. வெள்ளைப்பூக்கள்

14. அழகரும் 2 அல்லக்கைகளும்

15. முடிவில்லா புன்னகை

நாளை: மே-ஜூன் மாதங்களில் வெளியான திரைப்படங்கள் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.

 

https://minnambalam.com/entertainment/2019/12/26/23/tamil-cinema-march-april-collection-king

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: மே மாத வசூல் ராஜா யார்?

27.jpg

 

கோடை விடுமுறையான மே மாதம் திரைப்படங்கள் பார்ப்பது அதிகமாக இருக்கும். அதனால் புதிய படங்கள் அதிக அளவில் வெளிவரும். இந்த வருடம் மே மாதத்தின் 31 நாட்களில் 25 நேரடி தமிழ்ப்படங்கள் ரீலீஸ் ஆகியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்து வெளியான தேவராட்டம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. தமிழகத்தில் இப்படம் சுமார் 10 கோடி ரூவாய் வரை மொத்த வசூல் செய்து அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருந்தது. ஜீவா நடிப்பில் வெளியான ‘கீ’ படம், முதல் மூன்று நாட்கள் கூட திரையரங்குகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பியது. விஷால் நடிப்பில் வெளியான அயோக்கியா வந்த சுவடு தெரியாமல் சென்று வசூல் ரீதியாகத் தோல்வியைத் தழுவியது.

 

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் எலியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மான்ஸ்டர்’ குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு எந்த விதமான ஆடம்பர விளம்பரமும் இன்றி வெளியாகி கல்லாவை நிரப்பியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் அது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

பிரபுதேவா-தமன்னா நடிப்பில் தேவி படம் வெற்றிபெற்றதால் அதே கூட்டணியில் தேவி-2 தயாரிக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபீசில் இப்படம் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சூர்யா நடிப்பில் வெளியான NGK திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 25 படங்களில், மேற்குறிப்பிட்ட படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் பெயரளவில் திரைக்கு வந்து குறைந்தபட்ச வசூல் கூட செய்யாமல் திரும்பிய படங்களாகும்.

 

இந்த மாதத்தில் வெளியான படங்களில் தேவராட்டம், மான்ஸ்டார் ஆகியவை மட்டுமே லாபகரமான படங்கள். விஷாலின் அயோக்யா சுமார் 10 கோடி ரூபாய், மிஸ்டர்லோக்கல் சுமார் 30 கோடி ரூபாய், சூர்யா நடிப்பில் வெளியான NGK 28 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தன. இந்தபடங்களின் பட்ஜெட், வியாபாரம் ஆகியவற்றில் 50 சதவீதத்தைக் கூட மொத்த வசூலாக தமிழகத்தில் வசூலிக்கவில்லை.

மொத்தத்தில் மே மாதம் வசூல் மாதமாக இருப்பதற்கு பதில் வசூல் வறட்சியை ஏற்படுத்தியது என்றே குறிப்பிடலாம். இதற்குப் படங்களின் உள்ளடக்கமே காரணமாக இருந்தது.

மே மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. தேவராட்டம்

2. K-13

3. தனிமை

4. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

5. எங்கே சென்றாய் என் உயிரே

6. காதல் முன்னேற்ற கழகம்

7. கீ

8. உண்மையின் வெளிச்சம்

9. வேதமானவன்

10. 100

11. அயோக்கியா

12. ஜெயிக்கப்போவது யார்

13. மான்ஸ்டர்

14. Mr.லோக்கல்

15. நட்புனா என்னனு தெரியுமா

16. லிசா

17. நீயா 2

18. சீனி

19. ஒளடதம்

20. பேரழகி ISO

21. ருசித்துப் பார் என் அன்பே

22. வண்ணக்கிளி பாரதி

23. தேவி-2

24. என்.ஜி.கே

25. திருட்டு கல்யாணம்

மே மாதத்தில் 25 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதால் ஜூன் மாத வசூல் நிலவரம் அடுத்த கட்டுரையில் இடம்பெறும்.

நாளை: ஜூன்-ஜூலை மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.

 

https://minnambalam.com/entertainment/2019/12/27/27/may-month-tamil-movie-collection-king

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: ஜூன், ஜூலை மாத வசூல் ராஜா யார்?

26.jpg

ஜூன் மாதம் பன்னிரெண்டு நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இதில் குறிப்பிடத்தக்க படங்களாக, வியாபார ரீதியாக வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது மூன்று மட்டுமே.

யாரும் எதிர்பாராத வகையில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைப்படம் நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இருந்தபோதும் சுமாரான வசூல் பெற்றது. தொடர் தோல்விப் படங்களை எதிர்கொண்டு வந்த விஜய் ஆண்டனி, தான் நடித்த கொலைகாரன் படத்தை திட்டமிட்ட அடிப்படையில் மார்க்கெட்டிங் செய்து, ரிலீஸ் செய்ததால் முதலுக்கு மோசம் செய்யாத வசூல் பெற்றார்.

 

ஏராளமான பிரச்னைகளை சந்தித்து, விஜய் சேதுபதி நேரடியாகத் தலையிட்டு சில சமரச முடிவுகளை மேற்கொண்ட பின்னரும் பலமுறை அறிவிக்கப்பட்டும் வெளிவராமல் போன சிந்துபாத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியானது. ஆனாலும் இந்த படத்தின் வசூல் மிக மோசமாக, வந்த வேகத்திலேயே முடங்கி போனது.

வடிவேல் நடிப்பதை நிறுத்திக்கொண்ட பின்னர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்து வந்த எவராலும் முடியவில்லை. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அதிக படங்களில் காமெடியனாக நடித்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் யோகி பாபு. அவர் கதாநாயகனாக நடித்த தர்மபிரபு படம் வந்த வேகத்தில் திரும்பி விடும் என்று சினிமா வியாபாரிகளும், விமர்சகர்களும் கூறிக் கொண்டிருந்தனர். அந்த சூழலில் அனைத்து உரிமைகளையும் அவுட் ரேட் முறையில் விற்பனை செய்தனர். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வில்லை. ஜூன் மாதம் வெளியான பிற திரைப்படங்கள் அனைத்தும் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவியது.

ஜூன் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1.7

2. கொலைகாரன்

3. கேம் ஓவர்

4. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

5. சுட்டு பிடிக்க உத்தரவு

6. மோசடி

7. தும்பா

8. சிந்துபாத்

9. தர்மபிரபு

10. ஹவுஸ் ஓனர்

11. சிவி

12. நட்சத்திர ஜன்னல்

ஜூலைமாதம் 15 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் நட்சத்திர மற்றும் வியாபார அந்தஸ்து இருக்கக்கூடியவை 6 படங்கள் மட்டுமே.

களவாணி திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீசான போது எத்தகைய பிரச்னையை சந்தித்து வெளியானதோ, அதே போன்று களவாணி-2 படமும் டைட்டில் பஞ்சாயத்து, பைனான்ஸ் பஞ்சாயத்து என பல விஷயங்களில் சிக்கி தட்டுத்தடுமாறி வெளியானது. ஆனால் வசூல் இல்லாத காரணத்தினால் வந்த வேகத்திலேயே இந்தப் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.

 

ஜோதிகா நடிப்பில் இன்றைய கல்வி முறையில் நடைபெறும் அவலங்களை சுட்டிக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட ராட்சசி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக இந்தப் படத்தால் சாதனையை மட்டுமல்ல சாதாரண வசூலைக் கூட நிகழ்த்த முடியாமல் போனது.

ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா திரைப்படம் குரங்கு அளவுக்குக் கூட வசூலில் முன்னேற முடியாமல் முதல் வாரத்துடன் நின்று போனது. வசூலும், பட வெளியீட்டிற்குச் செலவழித்த சுமார் ஒரு கோடி ரூபாய் அளவு கூட தமிழகத்தில் இந்த படத்திற்கு வருவாய் கிடைக்கவில்லை.

 

தர்மபிரபு பெற்ற வெற்றியை வைத்து யோகிபாபு நடித்த கூர்க்கா படத்தை ரிலீஸ் செய்தனர். தர்மபிரபு அளவிற்கு இந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கிய வினியோகஸ்தர்கள் 15 லட்ச ரூபாய் லாபம் கிடைத்ததாகக் கூறினர்.

படைப்பு ரீதியாக தோழர் வெங்கடேசன், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான கொளஞ்சி ஆகிய இரு படங்களும் பாராட்டுகளைப் பெற்றாலும் வசூலில் தோல்வியைத் தழுவியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கடாரம் கொண்டான் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தது. படம் முழுக்க கதாநாயகன், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பேசிய முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை வாங்கி வியாபாரம் செய்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் கூறுகிறது.

பிற படங்கள் எல்லாம் சம்பிரதாய அடிப்படையில் வந்து போனது. இதில் சந்தானம் நடித்து வெளியான A1 படம் நகர்புறங்களில் கூட ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

2. களவாணி- 2

3. ராட்சசி

4. போதை ஏறி புத்தி மாறி

5. கொரில்லா

6. கூர்க்கா

7. தோழர் வெங்கடேசன்

8. வெண்ணிலா கபடிக்குழு-2

9. ஆடை

10. கடாரம் கொண்டான்

11. உணர்வு

12. A1

13. ஆறடி

14. சென்னை பழனி மார்ஸ்

15. கொளஞ்சி

மொத்தத்தில் ஜூன் ஜூலை மாதங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மந்தமாகவே இருந்தது.

நாளை: ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.

 

https://minnambalam.com/entertainment/2019/12/28/26/june-july-month-tamil-movie-collection-king

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: ஆகஸ்ட்-செப்டம்பர் மாத வசூல் ராஜா யார்?

33.jpg

 

ஆகஸ்ட் மாதம் 20 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இதில் வெகுஜன தளத்தில் கவனம் ஈர்த்தவை ஐந்து படங்கள் மட்டுமே. அதிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஹிட் அடித்த கோமாளிக்கு முதலிடமும், நேர்கொண்ட பார்வை படத்திற்கு இரண்டாம் இடமும் எனக் கூறலாம்.

ஜோதிகா நடித்த ஜாக்பாட் வெற்றிக்கான எந்தவித முகாந்திரமும் இல்லாமல் முடங்கிப் போனது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் வந்த சுவடே தெரியாமல் மறைந்துபோனது. தொடர்ந்து தோல்விப் படங்களை மட்டுமே சந்தித்து வந்த சசிகுமார் கபடி விளையாட்டை மையமாக வைத்து பாரதிராஜாவுடன் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடித்த கென்னடி கிளப் படம் வசூல் அடிப்படையில் கண்ணாடி போன்று நொறுங்கிப் போனது.

 

கழுகு முதல் பாகம் வெளியான போது குறைந்தபட்ச வெற்றி பெற்றது. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு கழுகு-2 தயாரிக்கப்பட்டு வெளியான போது வந்த வேகத்தில் திரும்பி சென்றது. தொரட்டி திரைப்படம், நாடோடிகளாக வாழ்க்கை நடத்தி ஆடு மேய்க்கும் கீதாரிகள் பற்றிய வாழ்வியல் சார்ந்த திரைப்படமாக இருந்தது. இந்தப்படம்

படைப்பு ரீதியாகப் பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாகத் தோல்வியைத் தழுவியது. பிற படங்கள் அனைத்தும் வந்த சுவடே தெரியாமல் தங்கள் கணக்கை முடித்துக்கொண்ட திரைப்படங்களாக அமைந்து போனது.

ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. ஜாக்பாட்

2. கழுகு-2

3. தொரட்டி

4. ஐ.ஆர். 8

5. நேர்கொண்ட பார்வை

6. கொலையுதிர் காலம்

7. ரீல்

8. சீமபுரம்

9. வளையல்

10. கோமாளி

11. மான்குட்டி

12. புலி அடிச்சான் பட்டி

13. கென்னடி கிளப்

14. பக்ரித்

15. மெய்

16. காதல் பிரதேசம்

17. குற்ற நிலை

18. மயூரன்

19. சஹோ

20. சிக்ஸர்

செப்டம்பர் மாதம் 14 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இவற்றில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி சுமாரான வசூலுடன் இருவாரங்களை தியேட்டர்களில் கடத்தியது.

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் தமிழகத்தில் சுமார் 25 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை இந்த ஆண்டு வெளியான படங்களில் அனைத்து தரப்புக்கும் லாபத்தைப் பெற்றுத்தந்த படமாகும்.

 

சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் விமர்சகர்கள் பாராட்டை பெற்றதுடன் சுமாரான வசூலையும் ஈட்டிய படமாக இருந்தது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் - 7’மிகப் பெரும் பாராட்டை பெற்றாலும் இந்த படத்திற்கு திரையரங்குகளை ஒதுக்கீடு செய்ய, மாநில அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும் வெகுஜன தளத்தில் வெற்றி பெறவில்லை. பிற படங்கள் அனைத்தும் வந்து சென்ற சராசரி படங்களாக மட்டும் இருந்தது.

செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. மகாமுனி

2. சிவப்பு மஞ்சள் பச்சை

3. ஜாம்பி

4. என் காதலி சீன் போடுறா

5. உங்கள போடணும் சார்

6. பெருநாளி

7. காப்பான்

8. ஒத்த செருப்பு சைஸ் 7

9. சூப்பர் டூப்பர்

10. என்றும் உன் நினைவிலே

11. கோலா

12. நமக்கு நாம்

13. நம்ம வீட்டு பிள்ளை

14. திட்டம் போட்டு திருடுற கூட்டம்

நாளை: அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.
 

 

https://minnambalam.com/entertainment/2019/12/29/33/august-september-month-tamil-movie-collection-king

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: அக்டோபர் மாத வசூல் ராஜா யார்?

21.jpg

தமிழ் சினிமாவுக்கு தீபாவளி மாதம் எப்போதுமே கல்லா கட்டும். தீபாவளி பண்டிகை அன்று புதிய படங்கள் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டியும் நிலவும்.

2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின்தொடக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் வசூலில் அசுரத்தனமாக சாதனையைப் புரிந்தது. அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி ரசித்து பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் அசுரன் படத்திற்கு முக்கிய இடம் உண்டு. குறைவான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அசுரன் திரைப்படம் தீபாவளி வரை கூடுதல் திரையரங்குகளை ஆக்கிரமித்து தமிழகத்தில் சுமார் 50 கோடியை கடந்து மொத்த வசூல் செய்தது.

 

இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் மட்டுமே வெளிவரும் என உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த கைதி வெளியாகாமல் தாமதமானதால் அதுவும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 950 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. அவற்றில் சுமார் 650 திரையரங்குகளில் பிகில், கைதி இரண்டு படங்கள் மட்டும் திரையிடப்பட்டது.

பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு முன்பாக கைதி காணாமல் போய்விடும் என்னும் பேச்சு தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. முதல்நாள் ஓபனிங்கை தனது பிரம்மாண்டத்தில் தக்கவைத்துக் கொண்ட பிகில் திரைப்படத்தின் வசூலுக்கு இணையாக கைதியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இருப்பினும் படைப்புரீதியாக பிகில் படத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது. பிகில் படத்திற்கு ஆயிரம் முதல் 300 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை கொடி கட்டிப் பறந்தது. முதல் மூன்று நாட்களுக்குரிய டிக்கெட்டுகள் இந்த அடிப்படையில் சட்டத்துக்கு விரோதமாக அதிக விலைக்கு விற்கப்பட்டது. கைதி படத்தின் டிக்கெட் தொடக்க நாள் முதல் அரசு நிர்ணயித்த விலையிலேயே விற்கப்பட்டது.

 

550 திரையரங்குகளில் திரையிடப்பட்ட பிகில், தமிழகம் முழுவதும் சுமார் 150 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. ஊடகம் மற்றும் வியாபாரத் தகவல்களை வெளியிடுபவர்கள் பிகில் திரைப்படம் 150 கோடி ரூபாய் சாதனை வசூல் என்று கூறி வருகின்றனர், ஆனால் இந்த 150 கோடி ரூபாய் எப்படி வசூலானது என்பதைக் கூறாமல் கடந்து செல்கின்றனர். பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. படத்தை வாங்கி வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. செங்கல்பட்டு, மதுரை, திருச்சி போன்ற ஏரியாக்களின் விநியோக உரிமையை வாங்கியவர்களுக்கும் அசலில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

 

அதே நேரம் 25 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட கைதி திரைப்படம் நூறு கோடி ரூபாய்க்கு உலக அளவில் வியாபாரம் செய்யப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் குறைந்தபட்சம் 20% முதல் அதிகபட்சமாக 40% வரை லாபத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு மபெரும் லாபத்தைப் பெற்றுத் தந்த படங்களில் கைதி தவிர்க்க முடியாத ஒன்று.

பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டு 185 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்ட பிகில் திரைப்படத்தின் மூலம் 15% லாபம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நஷ்டத்தை ஏற்படுத்திய அல்லது குறைந்தபட்ச லாபத்தை கொடுத்த படங்களின் பட்டியலில் பிகில் படத்திற்கு இடம் உண்டு.

அக்டோபர் மாதம் வெளியான படங்களில் மேற்குறிப்பிட்ட மூன்று படங்களைத் தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. 100% காதல்

2. அசுரன்

3.அருவம்

4. பெட்ரோமாக்ஸ்

5. பப்பி

6. பெளவ் பெளவ்

7. காவியன்

8. பிகில்

9. கைதி

நாளை: நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வெளியான திரைப்படங்களின் வசூல் நிலவரம்.

-இராமானுஜம்.

 

https://minnambalam.com/entertainment/2019/12/30/21/october-month-tamil-movie-collection-king

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா 2019: நவம்பர்-டிசம்பர் மாத வசூல் ராஜா யார்?

30.jpg

வருடத்தின் இறுதி மாதங்களில் எப்போதும் அதிகமான படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கும். இந்த வருடம் அந்த வரிசை சற்று அதிகமாகவே இருந்தது. நவம்பர் மாதம் 15 நேரடி தமிழ் படங்கள் வெளியிடப்பட்டது.

இதில் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தியேட்டர் கிடைக்காமல் ஒத்திவைக்கப்பட்ட ‘மிக மிக அவசரம்’ திரைப்படம், தமிழக அமைச்சர்களின் தலையீட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பெண் காவலர்கள் வேலை நேரங்களில் சந்திக்கும் சிரமங்களைப் பற்றி பேசிய இந்தப்படம் சிரமத்தோடு வெளிவந்தது. ஆனால் மக்கள் குடும்பங்களோடு வந்து பார்க்கக்கூடிய நேரங்களில் காட்சிகள் ஒதுக்கப்படாததால், படம் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர்கள் கூட பார்க்க முடியாமல் வசூல் ரீதியாகத் தோல்வியைத் தழுவிய முக்கியமான படமாக இருந்தது.

 

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து உருவான மதகஜராஜா படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக பல காலமாக முடங்கிக் கிடக்கிறது. அதற்குப்பின் ஆம்பள என்ற படம் இவர்கள் கூட்டணியில் வெளியானது. மீண்டும் மூன்றாவது முறையாக இருவரும் இணைந்த படம் ஆக்ஷன், 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட படம் தமிழகத்தில் ஏழு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூல் செய்து தோல்வி அடைந்திருக்கிறது.

பாரம்பரியம் மிக்க விஜயா வாகினி ஸ்டூடியோவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்த சங்கத்தமிழன் திரைப்படம், சுமார் 20 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட திரைப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாகப் படம் வாங்கியவர்கள் முழுமையாக பணத்தை செலுத்தாததால் ரீலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இரு வாரம் கழித்து ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் வெளியாவது தாமதமாகி சில இடங்களில் மறுநாள் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை விஜய் சேதுபதி நடித்த படங்கள் அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் மொத்த வசூல் செய்யும் சங்கத்தமிழன் சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திய படம் சங்கத் தமிழன்

நவம்பர் மாதம் வெளியான படங்களில் மற்றொரு முக்கியமான படம் நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ஆதித்ய வர்மா. சுமார் 7 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமை 7 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழக திரையரங்குகளில் ஆதித்ய வர்மா சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த வசூல் செய்துள்ளது.

 

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் திரைப்படமான என்னை நோக்கி பாயும் தோட்டா தயாராகி இரண்டு வருடங்களுக்குப் பின் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்தப்படம் பெறவில்லை. அசுரன் படம் பெற்ற வெற்றியின் ஈரம் காய்வதற்குள் என்னை நோக்கி பாயும் தோட்டா தோல்வியை சந்தித்தது யாரும் எதிர்பாராத ஒன்று.

பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் வெளியான மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்த படமாகும். வெளியான முதல் நாளே பார்வையாளர்கள் வராத காரணத்தினால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. சரண் இயக்கிய எந்தப் படத்திற்கும் இதுவரை இந்த நிலைமை ஏற்பட்டதில்லை.

அரசியல் சமூகக் கருத்துக்களை தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர் சமுத்திரக்கனி. அவரது நடிப்பில் வெளியான அடுத்த சாட்டை படம் படைப்பு ரீதியாக பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. சுமாரான வசூலுடன் படம் திரையரங்குகளில் இருந்து வெளியேறியது.

‘கேடி என்கிற கருப்பு துரை’ குடும்பத்தாரால் கைவிடப்பட்ட ஒரு தந்தையின் வாழ்வியலை பதிவு செய்த அற்புதமான படைப்பு. ஆனால் இந்த படத்திற்குத் தேவையான அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதுடன் திரையிட்ட திரையரங்குகளிலும் வசூல் ரீதியாகத் தோல்வியை சந்தித்தது.

 

மற்ற படங்கள் அனைத்தும் வழக்கம் போல் வந்த வேகத்தில் தியேட்டர்களில் இருந்து வெளியேறிய படங்களாக இருந்தது.

நவம்பர் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. பட்லர் பாலு

2. மிகமிக அவசரம்

3. தவம்

4. ஆக்ஷன்

5. சங்கத்தமிழன்

6. ஆதித்யவர்மா

7. கே.டி.@கருப்புதுரை

8. மேகி

9. பணம் காய்க்கும் மரம்

10. பேய் வாலை புடிச்ச கதை

11. அடுத்த சாட்டை

12. அழியாத கோலங்கள் - 2

13. எனை நோக்கி பாயும் தோட்டா

14. மார்கெட் ராஜா MBBS

15. தீமைக்கும் நன்மை செய்

ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் 24 படங்கள் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படம் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியானது. அவர் பேசிவரும் தலித் உரிமை சர்ச்சைப் பேச்சால் இவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்குத் திரையரங்குகள் கொடுக்கவேண்டாம் என்று தென் மாவட்ட உரிமையாளர்களுக்கு ஜாதி அமைப்புகள் அழுத்தம் கொடுத்தன. இதன் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு இப்படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. திரையிட்ட இடங்களிலும் ஓபனிங் கிடைக்கவில்லை என்பதோடு எதிர்பார்த்த வெற்றியைப் படம் தரவில்லை.

சுந்தர்.சி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதாநாயகனாக நடித்த படம் இருட்டு. படத்தில் முத்தக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது என பட வெளியீட்டுக்கு முன்பு பரபரப்புக்காக சுந்தர்.சி கூறியதால் குடும்பங்கள் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. வசூலும் மிகப்பெரிய அளவில் இல்லாமல் முதல் வாரத்திலேயே படத்தின் ஆயுள் முடிந்து போனது.

 

பொட்டு படத்தைத் தொடர்ந்து பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் படைப்பு ரீதியாக பாராட்டப்பட்டாலும் திரையரங்குகளில் பிக்கப் ஆவதற்கு தாமதமானது. அதற்குள் அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸ் ஆனதால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் காளிதாஸ் சுமார் இரண்டு கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படம், திரையரங்குகளில் ‘கல்லாவிற்கு ஹீரோவாக’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜஸ்ட் பாஸ் என்னும் அளவுக்குக் கூட படத்தின் வசூல் இல்லை. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மிக மோசமான வசூலை எதிர்கொண்ட படம் ஹீரோ.

கார்த்தி-ஜோதிகா-சத்யராஜ் கூட்டணியில் வெளியான தம்பி படம், முதல்நாளே தியேட்டர்களில் தடுமாறியது. 16 கோடி ரூபாய்க்கு படத்தின் தமிழக உரிமை வாங்கியவருக்கு சுமார் 8 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்பது முதல்கட்ட தகவலாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. பிறபடங்கள் அனைத்தும் வழக்கம்போல வந்து திரும்பிய திரைப்படங்கள்.

இந்த வருடத்தின் இறுதி நிலவரப்படி 209 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்கள் போன்றவை குறைந்தபட்ச லாபத்தைக் கொடுக்காமல் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்கள் 30% முதல் 50% வரை லாபத்தை கொடுத்து இருக்கிறது.

கடந்த காலங்களில் சாதனை படைத்த இயக்குநர்கள் இந்த வருடம் சரிவை சந்தித்து இருக்கிறார்கள்.

டிசம்பர் மாதம் வெளியான திரைப்படங்களின் படப்பட்டியல்

1. தனுசு ராசி நேயர்களே

2. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

3. இருட்டு

4. ஜடா

5. 50 ரூபா

6. கேப்மாரி

7. சாம்பியன்

8. சென்னை டு பாங்காங்

9. காளிதாஸ்

10. கருத்துக்களை பதிவு செய்

11. மெரினா புரட்சி

12. மங்குனி பாண்டியர்கள்

13. திருப்பதி சாமி குடும்பம்

14. விருது

15. ஹீரோ

16. தம்பி

17. கைலா

18. பரமு

19. சில்லுக்கருப்பட்டி

20. உதய்

21. பஞ்சாக்‌ஷரம்

22. நான் அவளை சந்தித்த போது

23.50/50

24.VI

-இராமானுஜம்.

 

https://minnambalam.com/entertainment/2019/12/31/30/november-december-collection-king-in-tamil-cinema

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.