Jump to content

பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்

December 26, 2019

பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்திருந்த போதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“இரு கிராமங்களுக்கு இடையே மோதல் நிலமைகள் நீடித்ததால் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இதன் பின்னர் மோதல் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பழைய பகை ஒன்று இருந்ததாகவும் மதுபோதையில் சிலர் அதனைப் பெரிதுபடுத்தியதால் இந்த மோதல் இடம்பெற்றது” என்றும்   காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  #பருத்தித்துறை  #கிராமங்களுக்கு  #மோதல் #இராணுவத்தினர்   #கொட்டடி  #முனை

http://globaltamilnews.net/2019/135280/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

அமோகமான நத்தார் கொண்டாட்டம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kavi arunasalam said:

அமோகமான நத்தார் கொண்டாட்டம் என்று நினைக்கிறேன்.

விடுமுறை என்றால் பழைய கறளைத் தட்டி அடிபடுவது வழமைதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இழப்புகளுக்கு பின்பும் மக்கள் திருந்தியமாதிரி தெரியவில்லை.குரங்கு அப்பம் பங்கிட்டது போல் முடியப்போகுது.மக்கள் வாழ்வு........! 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 minutes ago, suvy said:

இவ்வளவு இழப்புகளுக்கு பின்பும் மக்கள் திருந்தியமாதிரி தெரியவில்லை.குரங்கு அப்பம் பங்கிட்டது போல் முடியப்போகுது.மக்கள் வாழ்வு........! 🤔 

இனிச்சிங்களம்  நன்றாக ஊதிவிட்டு  குளிர்  காயும்  நிலை  மட்டும்  தான்

Link to comment
Share on other sites

அமைதிக்கு பேர் போன ஊர் இப்பிடி ஆயிட்டே!

எல்லாம் கிறிஸ்துமஸ் கால போதை தான் காரணமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2019 at 8:39 PM, விசுகு said:

இனிச்சிங்களம்  நன்றாக ஊதிவிட்டு  குளிர்  காயும்  நிலை  மட்டும்  தான்

இதில சிங்களத்தை குற்றம் சாட்டமல் (.....நாம தான் முன்னேற வேண்டும் ....இப்படியான பிரச்சனைகள் எமது காலத்திலும் நடந்தது....பொலிஸ் தலையிட்ட  வரலாறுகள் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

இதில சிங்களத்தை குற்றம் சாட்டமல் (.....நாம தான் முன்னேற வேண்டும் ....இப்படியான பிரச்சனைகள் எமது காலத்திலும் நடந்தது....பொலிஸ் தலையிட்ட  வரலாறுகள் உண்டு. 

முடிகிற  விடயமாக  இருந்தால்  சிங்களத்தை  இழுப்பேனா??

புத்தர்  ஒரு  விடயத்தை சொல்லலாம்  என  நினைக்கின்றேன்

புலிகள்  தடி  எடுத்தது சிங்களத்தை விரட்ட  மட்டுமல்ல......????

(தலைவர்  என்று  எழுதக்கூடாது  என்று  ஒரு  தம்பியின்  வேண்டுகோள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

முடிகிற  விடயமாக  இருந்தால்  சிங்களத்தை  இழுப்பேனா??

புத்தர்  ஒரு  விடயத்தை சொல்லலாம்  என  நினைக்கின்றேன்

புலிகள்  தடி  எடுத்தது சிங்களத்தை விரட்ட  மட்டுமல்ல......????

(தலைவர்  என்று  எழுதக்கூடாது  என்று  ஒரு  தம்பியின்  வேண்டுகோள்)

உண்மை தான்..அந்த வேலையை செய்ய..  சில நல்ல தமிழ் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் ....அதற்கு மத்திய அரசின் (சிங்கள ) துணை தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

On 12/26/2019 at 3:09 PM, விசுகு said:

இனிச்சிங்களம்  நன்றாக ஊதிவிட்டு  குளிர்  காயும்  நிலை  மட்டும்  தான்

ஊருக்கு பிரச்சினை வாரது யாராவது ஒருத்தனால் தான் இருக்கும் அவந்தான் மற்றவர்களை  இழுத்து விடுவது  எப்ப பாரு சிங்களவனை இழுத்து விட்டு நாம் குளிர்காயிறம்  ஆளாளுக்கு தண்ணிய போட்டு அடித்துகொள்வதில்  தான் பிரச்சினை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கும் குளிர் காய இது நல்ல சந்தர்ப்பம்.   நத்தாருக்கு முன்னமே  பாதுகாப்பு என்று வெளிகிட்டினம்!  அப்போ அடிதடி காரருக்குத்தான் பாதுகாப்போ? எங்களுக்கும் அவனின் பாதுகாப்புதான் தேவைப்படுகுது. எல்லாம் பழக்க தோஷம். நத்தார் கொண்டாட்டம் இவர்களோடதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.