• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்

Recommended Posts

யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்…

December 25, 2019

 

Srikanthalaxmi1.jpg?resize=552%2C414

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் (chief Librarian), இலங்கை நூலகசங்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்தலைவர் (SLLA-Srilanka Library Association) திருமதி சிறிகாந்தலட்சுமி அருளானந்தம்    தனது 59அவது வயதில் இன்று (25.12.19) மாரடைப்பு ( Heart Attack) காரணமாக காலமானார்.

இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பெங்களுரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்ட பின்படிப்பினை மேற்கொண்டுள்ளார்.

பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர், என பலதுறைகளில் சிறந்து விளங்கிய அவர் பெண்ணியல் சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருந்தார்.

நூலகத்துறைசார்ந்து

  • தகவல் வளங்களும் சேவைகளும் (குமரன் புத்தக நிலையம்)
  • தகவல்வள முகாமைத்துவம் (குமரன் புத்தக நிலையம்)
  • நூலக அபிவிருத்தி : ஒரு பயில்நோக்கு (சேமமடு)
  • அகரவரிசை-பகுப்பாக்கக் கலைச்சொற்தொகுதி (குமரன் புத்தக நிலையம்)
  • சொற்கருவூலம்: உருவாக்கம் பராமரிப்பு பயன்பாடு (நூலக விழிப்புணர்வு நிறுவகம்)
  • நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்
  • நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை

உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

அத்துடன் தமிழர் பாரம்பரிய பாவனைப்பொருட்களை சேமித்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக் காப்பகத்தையும் பேணிவந்ததாககவும், பாரம்பரிய ஆவணங்களை சிறார்களுக்கு கண்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்துவதிலும் அக்கறை காட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும், அவர்களின் படைப்பியல் சார் துறை வளர்ச்சியிலும் பங்காற்றியவர்களில் ஒருவராகவும் விளங்கிய சிறீகாந்தலட்சுமி வானதி பதிப்பகத்தின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/135273/

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள். 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

கு. சரவணன்

அப்போதுதான் சாப்பிட்டு முடிய தொலைபேசியை எடுத்து பார்த்தன் பல அழைப்புக்கள்.திரும்ப ஒருவருக்கு எடுக்க,ஒரு துக்கமான செய்தி நூலகருக்கு மாரடைப்பு, இறந்துவிட்டதாக தகவல்.வைபர் குறூப்பைப்பாருங்கள் .நெஞ்சமெல்லாம் துயரம்பரவிட செய்தி உண்மைஎன்பதனை அறிந்தன்.கிட்டத்தட்ட இன்னும் ஆறு ஆண்டுகள் சேவைப்புரியக்கூடிய வயதெல்லையை உடையவர்.இப்படி இடைநடுவில் எம்மையெல்லாம் விட்டுச்செல்லுவார் என நினைக்கமுடியவில்லை.

செய்திகேட்ட அடுத்த முக்கால்மணிநேரத்தில் யாழ்.போதனாமருத்துவமனையில் அவரது பூதவுடலுக்கு முன் வெறுமையாக வாழ்வையே வெறுத்துநின்றேன். சே வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது.
விதி எவ்வளவு கொடுமையானது .விதியை நோவதை விட எம்மால் வேறென்ன செய்யமுடியும்.

நத்தாரை முன்னிட்டு நேற்றும் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு விடுமுறை.நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அவரோடு இறுதியாக இருந்துள்ளோம். எத்தனைவிதமான உயர்ந்த சிந்தனைகள், மனதிலே நல்ல செயற்றிட்டங்கள் ..
கடந்த புதன்கிழமை பின்னேரம் என்னையும் நாகேந்திரம் அண்ணையையும் அழைத்து நூலகவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.

பின்வெள்ளிக்கிழமை காலைநேரம் என்னை அழைத்திருந்தார். ஓய்வுபெறவுள்ள கல்விசார்நூலகர் திருமதி ராஜன்கூல் அவர்களின் சிறப்பு மலரில் என்னை நூலகவியல் சார்பான ஒருகட்டுரை வரையுமாறு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
இதற்குமுதல் நூலக நிறுவன தசாப்தநிறைவு மலரான கருத்தூணில் நான் வரைந்த கட்டுரை தன்னைக்கவர்ந்ததாகவும்அதனைப்போன்ற எழுத்துநடையில் அக்கட்டுரை அமையவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். உள்ளூராட்சி மன்றங்களும் நூலகசேவையும் .இதுதான் தலைப்பு உன்னால் முடியும் கட்டாயம் எழுது என்று சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

திங்கட்கிழமை மதியம் நூலக்கவனிப்பாளர்களுக்கென ஒருகூட்டத்தை.ஒழுங்குசெய்திருந்தார். யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்சாராத வெளியாளர்களின் நூலக்கப்பாவனை தொடர்பில் சில விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு எமக்கு கண்டிப்பான உத்தரவுகளைப்பிறப்பித்தார்.நூல்களை நூலகர் எவ்வளவுதூரம் நேசிக்கின்றார்.என்பதனை அதிலிருந்து அறியக்கூடியதாகவிருந்தது. அனைத்துப் பல்கலைக்கழக நூலக்ககவனிப்ளாளர்களின் வருடாந்த ஒன்றுகூடல் பதுளையில் நடைபெறவுள்ளது.அங்கு செல்ல விரும்புபவர்கள் போகலாம்.ஒருநாள் முன்னதாக சென்று கொண்டாடிமகிழுங்கள் என மகிழ்ச்சியாக கூறினார். இந்த மாதம் இறுதிவரை தனக்கு சாஸ்திரமுறைப்படி காலம் கூடாதெனவும் ,பயணங்களை தவிர்க்கசொல்லி இருப்பதாகவும் ,தன்னால் எம்மோடு வரமுடியாது எனவும் ,எனினும்
இளம்யுவதிகளின் நலனினைக்கருத்தில்கொண்டு தான் எம்மோடு வருதற்குதயார் எனவும் ஒருதாயாக அன்புமேலிட கூற எமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. பதுளை செல்வதற்கு ஏதுவாக நூலகத்தில் வார இறுதிநாட்களில் நடைபெறும் நூற் சரிபார்ப்புப்பணியினை (book verification) தான் ஒத்திவைப்பதாகவும் எமக்கு உறுதிகூறினார்.

திங்கட்கிழமை மாலை ஐந்தரைமணி இருக்கும்.நான் ரீ குடிப்பதற்காக மேலே இருந்து இறங்கிவருகின்றேன்.நூலகர் தன்னலுவலக வாசலிலே நிற்கின்றார்.என்னை அழைக்கின்றார். பதுளையில் பார்க்கவேண்டிய இடங்களைக் கூறுகின்றார்.தொலைபேசியூடாக பல்கலைக்கழக வாகனத்தை
எமக்காக ஒழுங்குசெய்கின்றார். பலவிடயங்கள் தொடர்பில் என்னோடு கதைக்கின்றார்.அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்வதற்காக அவரது துணைவர் வாசலிலே வந்துதொலைபேசியில் அழைக்கின்றார்.சசி அண்ணா வந்து மிஸ் அவர்நிக்கிறார் என்று சொல்லுகின்றார்.
அவருக்கு கையை காட்டிவிட்டு என்னோடு உரையாடுகின்றார்.நூலகத்தை உயிராக நேசிக்கின்ற, முப்பது வருடகால நூலகப்பணியனுபவம் நிரம்பப்பெற்ற , நூலகரின் நூலகத்துறை சார்ந்த இறுதி உரையாடலை, இச்சிறியேனுடன் நிகழ்த்துகின்றார் என்பதனை நான் அறியவில்லை. இன்று இதனை நினைக்க நெஞ்சம் அடைக்கின்றது.

எமக்கும் நூலகருக்கும் இடையில் முரண்பாடுகள் நிறைந்து இருக்கும்.கோபத்தில் எவரையும் நேருக்கு நேர் பேசுவது தான் மிஸ்ஸின் பலமும்,பலவீனமும்.ஆனால் எவ்வளவு பிழை என்றாலும் பேச்சுதான்.personal file க்கு கடிதம் எழுதுவதில்லை. உண்மையில் உதட்டில் தேனும் உள்ளத்தில் நஞ்சும் உடையவர்கள் உலவும் இவ்வுலகில்,மிஸ்ஸின் உதட்டில் நஞ்சும் உள்ளத்தில் தேனும் தான் இருக்கும்.ஒருவரை எவ்வளவு தூரம் பேசுறாவோ,அவ்வளவு தூரம் அவர்மீது அன்பு உடையவர்.

ஒருநாள் ஏதோகோபத்தில் தன்ர கதவுக்கு நேரே ஒருகோட்டைக்காட்டி, இதுக்குள்ளே நீ இனி வரவேண்டாம்.ஏதும் தேவை என்றா உன்ர துறைத்தலைவர் ஊடாகவோ,அல்லது உதவிப்பதிவாளர் ஊடாகவோ என்னைத்தொடர்பு கொள்ளலாம் .நீ இனி இங்கு வராதே..எனக்கோபத்தில் திட்டிவிட்டார். இச்செய்தி நூலகம்முழுதும் பரவிவிட்டது. என்னைப்பலரும் ஆற்றுப்படுத்துகின்றனர். அடுத்த முப்பதாவது நிமிடம் ..சரவணனை லைபிறறியன் வரட்டாம்..என்ற செய்தி என்னை அடைகின்றது. நான்.செல்லுகின்றேன்.

வாரும் பிள்ளை என தன் முன்உள்ள ஆசனத்தைக்காட்டி இதிலை உட்காரும் என்றுவிட்டு, இரண்டு பல்கலைக்கழக மாணவிகளின் பெயர் முகவரி எழுதப்பட்ட ஒருதாளை நீட்டுகின்றார்.வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிள்ளைகள் என உதவிகோரி,எனது தொண்டுநிறுவனத்துக்கு விண்ணப்பம் வந்துள்ளது.வடமராட்சிப்பிள்ளைகள்.நீர் தான் விசாரித்து நாளை காலை இங்கே வந்து சொல்லவேண்டும்.உனது உறுதிப்படுத்தலில் தான் இந்த திட்டம் தங்கியுள்ளது. இவ்வாறு கோபம்வரும்போது திட்டுவதும்,பின் கோபம் சென்றபின் அரவணைப்பதும் மிஸ்ஸின் உடைய உயர்ந்தகுணம்.

நூலகவியல்துறை சார்ந்த உயர்ந்த.எண்ணங்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பெரும் புகழுடன் திகழ்ந்தவர்.நூலகப்பணி தொடர்பில் எம் நூலகத்தை மற்றையப்பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக விளங்கவைத்தவர்.
மிஸ்ஸின் வாயிலிருந்து எவ்வாறு ஆங்கிலம் அருவியாக்கொட்டுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு யாழ்ப்பாணத்துக் கிராமியப்பேச்சுத்தமிழும் தவழும். மிஸ்ஸின் தமிழ்எழுத்து நடை அற்புதமானது அழகானது. நூலகரின் தமிழ்ப்பற்றுக்கு அப்பால் அவர்ஒரு தமிழ்த்தேசியவாதி.இதற்காக பல்லாண்டுகாலம் உழைத்துள்ளார்.போரில்காயமடைந்த பெண்போராளிகளின் உள ஆற்றுப்படுத்துநராக செயற்ப்பட்டுள்ளார்.
சிறந்த ஒரு பெண்ணியவாதி.ஆளுமையின் உச்சத்தில் நின்று அனைவரையும் நிர்வகித்தவர்.

தனது கண்டிப்பாலும்,அன்பாலும் நூலகப்பணியாளர்களை நூலகப்பணியில் புடமிட்டுவைத்துவிட்டுத்தான் மிஸ் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை உறுதியாக நம்புகின்றோம்.
நூலகத்தின் அன்னையே அமைதியாக உறங்குங்கள்.உங்கள் பணியினை நாம் தொடர்வோம்.

  • Sad 2

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். 

அன்னாரின் தமிழின பங்களிப்பு பல விழுதுகளை உருவாக்கி நிற்கும். 

7 hours ago, Ahasthiyan said:

இதற்காக பல்லாண்டுகாலம் உழைத்துள்ளார்.போரில்காயமடைந்த பெண்போராளிகளின் உள ஆற்றுப்படுத்துநராக செயற்ப்பட்டுள்ளார்.


சிறந்த ஒரு பெண்ணியவாதி.ஆளுமையின் உச்சத்தில் நின்று அனைவரையும் நிர்வகித்தவர்.

 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this