Sign in to follow this  
ampanai

அடுத்த வருடம் அறிமுகமாகும் "நூடுல்ஸ் செருப்பு"- நெட்டிசன்கள் செம்ம கலாய்

Recommended Posts

157736193194470.jpg

இன்றைய பேஷன் உலகில் நாம் அணியும் ஆடைகள் முதல் காலணிகள் வரை புதுப்புது டிசைன்களில் வெளிவந்து காசை இறைக்க வைக்கின்றன.

அந்த வகையில் போட்டெகா வெனிட்டா (Bottega Veneta) என்ற இத்தாலிய பேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள காலணி குறித்த புகைப்படம் வெளியாகி, உலக அளவில் பெரும் கேலிக்கும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

போட்டெகா வெனிட்டா நிறுவனம் தனது அடுத்த வருட வெளியீடாக இந்த காலணிகளை விற்பனைக்கு கொண்டு வர போவதாக சமீபத்தில் இரு புதுடிசைன்கள் அடங்கிய செருப்புகளின் படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று closed-toe design எனப்படும் மூடிய கால் வடிவமைப்பில் உள்ளது. இந்த காலணியை பார்த்தால் கூட அவ்வளவாக கமெண்ட் அடிக்க தோணவில்லை. எனினும் இந்த மாடல் செருப்பு கூட ஏதோ ஒயர் கூடை பின்னலை போல தான் காட்சியளிக்கிறது.

மற்றொரு மாடல் செருப்பின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களுக்கும், போட்டெகா வெனிட்டாவின் வாடிக்கையாளர்களுக்கும் பேச்சே வரவில்லை. ஏனென்றால் நூடுல்சை கொண்டு செய்தது போல செருப்பை டிசைன் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதை பார்த்த பலரும் பெரும்பாலும் போட்டெகா வெனிட்டா நிறுவனத்தை கேலி செய்தே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பார்க்க மலிவான செருப்பை போல தெரிவதாகவும், பசித்தால் செருப்புகளை சாப்பிட்டுக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ளீர்களா என்றும், நூடுல்ஸ் காலணியை பதப்படுத்தி வைக்கும் பாக்கெட்டுகளையும் சேர்த்துதானே விற்பீர்கள் என்று சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

image

https://www.polimernews.com/dnews/94470/அடுத்த-வருடம்-அறிமுகமாகும்-"நூடுல்ஸ்-செருப்பு"-நெட்டிசன்கள்-செம்ம-கலாய்

 

 

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für இடியப்பம்

இதைப்பார்த்து... நம்ம ஊரில்... இடியப்பத்தில்  செருப்பு வராமல் இருக்க வேண்டும். :grin:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நான் பிரித்தானியாவுக்கு வந்த சில நாட்களில் ஒரு பேக்கரியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். French sticks 🥖 உம் baguettes 🥖 🥖 தயாரிக்கும் பகுதியில்தான் வேலை. இது மெயின் பேக்க்கரி இருந்த கட்டடத்தில் இருந்து தள்ளி வீதிக்கப்பால் இருந்தது.  Production பகுதியில் நான் மட்டும்தான் தமிழன். ஒரு நைஜீரிய இளைஞனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஐரிஷ்காரர்கள். ஒன்று இரண்டு ஐரிஷ்காரர்களுக் சாதுவாக நட்டு லூஸாகவும் இருந்தது.   நான் ஊரில் படித்த ஆங்கிலம், spoken English என்று private ஆக ஐயரிடம் படிக்கப்போயிருந்தாலும் அது என்னவே grammar உம் vocabulary உம் மட்டும்தான்! என்னுடைய முதலாவது translation சேவை இந்திய இராணுவத்திற்கும், அவர்களால் பனையோலை வெட்டுவதற்காகப் பிடித்து வைக்கப்பட்டு தன்னைச் சுடப்போறாங்களாக்கும் என்று பயந்து உதறிக்கொண்டிருந்த மரமேறி ஒருவருக்கும் இடையில் நடந்தது. அவருடைய பயத்தைத் தெளிவித்து campஐச் சுத்தி வேலி அடைக்க பனையோலை வெட்டிக்கொடுக்கவேண்டும் என்று இந்திய இராணுவம் சொன்னதை தமிழில் சொல்லி விளங்கப்படுத்தினேன். நாலா பக்கமும் துவக்குகளுக்கு மத்தியில் செய்த அந்த translation இல் வந்த துணிவுதான் உலகமெல்லாம் செல்லும்போது பயப்படாமல் ஆங்கிலத்தில் கதைக்க எப்போதும் உதவுகின்றது! பேக்கரியில் வாரத்தில் ஆறு நாட்களில் , சனிக்கிழமை தவிர, பன்னிரண்டு மணிநேர ஷிப்ட் வேலை காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிக்கு முடியும்! நான் ஐரிஷ்காரர்களுடனும், நைஜீரியனுடனும்தான் அதிக நேரத்தைப் பகல்பொழுதுககளில் செலவழித்தேன். ஐரிஷ்காரர்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த சொல்லாக F word ஐப் பாவிப்பார்கள். நல்லதுக்கும் கூடாததுக்கும், கோபத்திற்கும் அன்புக்கும் எப்படி ஒரு சொல்லையே பாவிக்கின்றார்கள் என்று வியந்ததுண்டு. ஐரிஷ் மனேஜர், மற்றைய ஐரிஷ்காரர்கள் சொல்லுவது எனக்குப் புரியாதபோதெல்லாம் மனேஜர் நைஜீரியனை கூப்பிட்டு ஐரிஷ் ஆங்கிலத்தை நைஜீரியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லுவான். நைஜீரியன் சொல்லுவதை விளங்குவதில் எனக்குப் பிரச்சினை இருக்காது. இப்படியாக அந்த நைஜீரியன், ஐரிஷ் ஆங்கிலத்தையும், தமிழ் ஆங்கிலத்தையும் தனது நைஜீரியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கதைப்பதற்கு ஒரு பாலமாக இருந்தான். இவர்களுடன் பேசித்தான் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொண்டேன். கற்றல் இன்னமும் முடியவில்லை!    
    • அப்படி காட்டத்தக்கதாக ஏதாவது இருந்தால் ஏன் இப்படி எள்ளிநகையாடுவதில் கவனம் செலுத்துகிறார்? ஒன்றும் இல்லாத ஆற்றாமையில் தனக்கு முடிந்ததை செய்கிறார் - பாவம், விட்டுவிடுங்கள், ஏதோ ஒரு சந்தோசமாவது கிடைக்கட்டும்.
    • தெரியாமல்தான் கேட்கிறேன், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறீங்கள்.....!  இங்க பிரச்சினை இல்லையென்றால் தூக்கமும் வருகுதில்லை....!  😁