• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
கிருபன்

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்: சின்மயி எதிர்ப்பு!

Recommended Posts

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்: சின்மயி எதிர்ப்பு!

51.jpg

 

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பாக நடக்கும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் வழங்குகிறார். இதற்கான விழா வரும் டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் இருக்கும் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

திமுகவின் உதயசூரியன் சின்னம் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றிருக்கிற எஸ்.ஆர். எம். பல்கலை வேந்தரான பாரிவேந்தர், இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங்கை அழைத்திருப்பது அரசியல் ரீதியாக கவனிக்கப்படுகிறது.

 

இதேநேரம் இந்த விழாவுக்கான அழைப்பிதழை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ள பின்னணிப் பாடகி சின்மயி, தனது கடுமையான கருத்துகளை வைரமுத்து மீது பதிவு செய்துள்ளார். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப் பற்றி மனம் திறந்து சொல்லும் மி டூ என்ற ஹேஷ்டாக் இந்தியாவில் கடந்த ஆண்டு பிரபலமானபோது, வைரமுத்து மீது பாலியல் புகார்களை அடுக்கினார் சின்மயி.

இந்நிலையில் இந்த விழா குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், “இதுவரை ஒன்பது பெண்கள் யார் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார்களோ அவருக்கு கௌரவ பட்டம் வழங்க வருகிறார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர். பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அதற்கு பதிலாக நான் வேலை செய்வதற்குத்தான் தடை விதிக்கப்பட்டது.

51a.jpg

இந்த முனைவர் பட்டம் மொழியில் நிரூபிக்கப்பட்ட அவரது திறமைக்காக என்று எனக்குத் தெரியும். அதேநேரம் பெண்களை தொடர் துன்புறுத்துவதிலும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.

எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தாரே... உங்கள் மாணவர்களுக்கு இவரை விட சிறந்த ரோல் மாடலை நீங்கள் தேர்வு செய்திருக்க முடியாது

நான் புகார் கூறியதற்குப் பிறகு வைரமுத்து பெரிய நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். உலகம் முழுவதும் பயணம் செய்தார், அரசியல் மற்றும் கலையுலகில் பெரியவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் என் புகாரை புகாரை விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நல்ல நாடு நல்ல மனிதர்கள்” என்று தொடர் ட்விட்டுகளில் சீறியுள்ளார் சின்மயி.

 

https://minnambalam.com/politics/2019/12/26/51/doctor-degree-for-vairamuthu-chinmayi-oppose-srm-me-too-rajnath-singh

Share this post


Link to post
Share on other sites

காசுக்கு விலை போகும் கூட்டம் இங்கு ஒப்பாரி  வைக்குது . 

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, கிருபன் said:

எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பாக நடக்கும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் வழங்குகிறார்.

அமைச்சர் வரமாட்டார் போல இருக்குது

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Kavi arunasalam said:

அமைச்சர் வரமாட்டார் போல இருக்குது

ஒரு சின்மயிக்காக... அமைச்சர்  வராமல் இருந்தால்,
ஊரிலை, அமைச்சரை பற்றி,,, தப்பாக பேசுவார்களே....  :grin: 😝

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்து டாக்டர் பட்டம் பெறும் நிகழ்ச்சி ரத்து.. இது சரியில்லை.. மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்

சென்னை: தனியார் பல்கலைக்கழகம், கவிஞர் வைரமுத்துவிற்கு இன்று கவுரவ டாக்டர் வழங்கவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள ஒரு தனியார், பல்கலைக்கழகத்தில், இன்று சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக, அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின

சர்ச்சைகள் ஆழ்வார்களில் ஒருவரான, ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து, அதற்கு, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அந்த விஷயத்தை, ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் நினைவுபடுத்தியதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தவிர்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, வைரமுத்து மீதான பாடகி சின்மயி சுமத்தியிருந்த பாலியல் குற்றச்சாட்டு விஷயமும், ராஜ்நாத்சிங்கின் சென்னை வருகை ரத்தாக காரணமாம்.

https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-doctorate-function-cancelled/articlecontent-pf425081-372631.html

Share this post


Link to post
Share on other sites

யார்... இந்த, சின்மயி....?

வைரமுத்துவை.... கேவலப் படுத்திய இவர்,
இன்னும்...  தமிழ் நாட்டில், தான், குப்பை கொட்டுகிறாரா? 

Share this post


Link to post
Share on other sites
On 12/28/2019 at 5:19 AM, தமிழ் சிறி said:

ஒரு சின்மயிக்காக..

தமிழ் சிறி  ஒன்பது என்பது வெளியே வந்தது

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Kavi arunasalam said:

தமிழ் சிறி  ஒன்பது என்பது வெளியே வந்தது

 

Share this post


Link to post
Share on other sites

ஒன்பது கோள்கள் அல்ல Paanch ஒன்பது கேர்ள்ஸ்😏

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஆண் எவ்வளவு கேவலமானவனாய் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை 
 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

ஒரு ஆண் எவ்வளவு கேவலமானவனாய் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை 
 

யாரையேனும் குறிப்பாக சுட்டுகிறீர்களா ?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

ஒரு ஆண் எவ்வளவு கேவலமானவனாய் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை 
 

ஒரு பெண் எழுந்தமானமாக குற்றம் சாட்டினால் உடனே மறு  கேள்வி இல்லாமல் நம்புவது மடத்தனம் .

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

ஒரு பெண் எழுந்தமானமாக குற்றம் சாட்டினால் உடனே மறு  கேள்வி இல்லாமல் நம்புவது மடத்தனம் .

அதுவும் ஒன்றாக சேர்ந்து பாடிவிட்டு 13 வருடத்துக்கு முன்பு நடந்தது என்று சொல்கிறதை.

Share this post


Link to post
Share on other sites

சின்மயி உத்தமி இல்லை  என்பதால் வைரமுத்து ஒழுக்கசீலர் ஆகி விட மாட்டார் 

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

சின்மயி உத்தமி இல்லை  என்பதால் வைரமுத்து ஒழுக்கசீலர் ஆகி விட மாட்டார் 

 

வைரமுத்து சேட்டை விட்டவுடனை  வெளியிலை சொல்லியிருந்தால் சின்னமயி உத்தமிதான்..தங்கடை காரியம் நிறைவேற வேணுமெண்டவுடனை முந்தானை விரிக்கிறது.காரியம் முடிஞ்சவுடனை நாக்கூத்தை வழிக்கிறது.😎

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ரதி said:

சின்மயி உத்தமி இல்லை  என்பதால் வைரமுத்து ஒழுக்கசீலர் ஆகி விட மாட்டார் 

 

வைரமுத்து ஒழுக்க சீலர் இல்லை என்பதற்கு தாங்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? 

Share this post


Link to post
Share on other sites

தேவதாசி முறையை... ஒழித்த , பெரியாரை மன்னிக்க மாட்டேன். - சின்மயியின் அம்மா.- 

Share this post


Link to post
Share on other sites
On ‎12‎/‎31‎/‎2019 at 12:31 AM, குமாரசாமி said:

வைரமுத்து சேட்டை விட்டவுடனை  வெளியிலை சொல்லியிருந்தால் சின்னமயி உத்தமிதான்..தங்கடை காரியம் நிறைவேற வேணுமெண்டவுடனை முந்தானை விரிக்கிறது.காரியம் முடிஞ்சவுடனை நாக்கூத்தை வழிக்கிறது.😎

சின்மயியும் அவரை யூஸ் பண்ணிக்க கொண்டார் ....அவ செய்தது 100க்கு 100% பிழை தான் .இல்லை என சொல்லவில்லை.ஆனால், வைரமுத்துவும் பாட சான்ஸ் தாறன் படுக்க வா என்று கூப்பிட்டது எவ்விதத்தில் நியாயம்?...அவர் செய்ததும் 100க்கு 100% பிழை தான் ...பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ப்பவர்களுக்கும்,வைரமுத்துவுற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

Share this post


Link to post
Share on other sites
On 12/29/2019 at 11:37 AM, Kavi arunasalam said:

ஒன்பது கோள்கள் அல்ல Paanch ஒன்பது கேர்ள்ஸ்😏

சினிமா உலகம்பற்றி மீடியாக்களில் வரும் செய்திகளின்படி.... ஒன்பது என்றால்.... அது ஒன்றுமில்லை. 😆

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, Paanch said:

ஒன்பது என்றால்.... அது ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை என்றுதான் பட்டினத்தாரும் சொன்னார்

Edited by Kavi arunasalam

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

அனைத்து செயல்களுக்கும் ஒரு பதில் வினையிருக்கும்

Edited by vasee

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.